பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 29, 2006

எதிர்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு

சட்டசபையில் கடந்த புதன்கிழமை அடிதடி ரகளை ஏற்பட்ட பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 60 பேரும் சட்டசபை கூட்டத்தொடர் முழுவ தும் "சஸ்பெண்டு'' செய்து சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தர விட்டார். அதை தொடர்ந்து ஜெயலலிதா தனது முடிவை அதிரடியாக மாற்றிக் கொண் டார்.

கடந்த சனிக்கிழமை அவர் சட்டசபைக்கு தன்னந்தனியாக சென்றார். கவர்னர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். இடை இடையே தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர் களுக்கு சளைக்காமல் பதில் சொன்னார்.

குறிப்பாக 2 ஏக்கர் நிலம், விவசாய கடன் தள்ளுபடி, மதமாற்ற தடை சட்டம் ஆகிய வற்றின் மீது ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தார். முதல்-அமைச்சர் கருணாநிதியுடனும் நேருக்கு நேர் விவாதம் செய்தார். துணிச்சலாக அவர் எழுப்பிய கேள்விக்கணைகள் அ.தி.மு.க. வினரிடம் அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் சட்டசபைக்கு சென்றதன் மூலம் "புதிய இமேஜ்'' உருவாகி இருப்பதை ஜெயலலிதாவும் உணர்ந்துள்ளார். எனவே தொடர்ந்து சட்டசபைக்கு சென்று அதிரடியாக கேள்விகள் கேட்க தீர்மானித்துள்ளார்.

எம்.எல்.ஏ. ஆக இருப்பவர்களுக்கு சட்டசபையில் பேச குறிப்பிட்ட நேரம்தான் கிடைக்கும். ஆனால் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தால் சபையில் நடக்கும் எல்லா விவாதங்களிலும் குறுக்கீடு செய்து பேச முடியும்.

இத்தகைய கூடுதல் வாய்ப்பை ஜெயலலிதா பெற, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை தன் வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர் களும், கூட்டணி கட்சியினரும் வலியுறுத்தினார்கள். இதை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படுகிறார். தற்போது எதிர்க்கட்சித்தலைவராக உள்ள ஓ. பன்னீர் செல்வம் துணைத்தலைவர் ஆவார் என்று தெரிகிறது.

சட்டசபையில் நாளை (செவ்வாய்க்கிழமை) கவர்னர் உரை மீது எதிர்க்கட்சித் தலைவர் பேச கணிசமான நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் சஸ்பெண்டு ஆகி இருப்ப தால் அவரால் பேச இயலாது.

இந்த நிலையில் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராகி, சட்டசபைக்கு சென்றால், நாளை அவர் பேசுவதற்கு கூடுதல் நேரம் கிடைக்கும்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சருக்கு உரிய அந்தஸ்து உண்டு. அவர் சபை விவாதத்தில் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத் திக்கொள்வதற்காக ஜெயலலிதா நாளை சட்டசபைக்கு வர உள்ளார்.

எதிர்கட்சித்தலைவராக ஜெயலலிதா பொறுப்பு ஏற்கக்கூடும் என்ற தகவல் வெளியானதும் ஆளும் கூட்டணி கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வாதத்திறமையை எவ்வாறு எதிர்கொள்வது என்று அவர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

ஜெயலலிதா பேட்டி

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்துகொண்டார்.

ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், சேகர்பாபு, பதர் சயீத், கலைராஜன், செந்தமிழன், சீனிவாசன் உள்ளிட்ட 60 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

இதில் சட்டசபை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவருக்கு ஓ. பன்னீர் செல்வம் பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினார்.

கூட்டம் முடிந்ததும் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி:- சட்டசபை அ.தி.மு.க. தலைவராக நீங்கள் "செலக்ட்'' ஆகி இருக்கிறீர்களா?

பதில்:- செலக்ட் செய்யப்படவில்லை. ஒருமனதாக "எலக்ட்'' ஆகி இருக்கிறேன்.

கே:- உங்கள் மீது சட்ட சபையில் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்பட்டுள்ளதே?

ப:- அதை சட்டசபையில் நாளை சந்திப்பேன்.

கே:- நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்று விட்டீர்களா?

ப:- இப்போதே நான் எதிர்க்கட்சித் தலைவர்தான். சட்டசபையில் அ.தி.மு.க. பிரதான எதிர்க்கட்சி. அ.தி.மு.க. சார்பில் சட்டசபைக்கு தலைவராக யார் தேர்ந்து எடுக்கப்படுகிறரோ அவர் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார்.

20 Comments:

மணியன் said...

விடுமுறை முடிந்ததா ? மீண்டும் வருக!

Idly Vadai said...

விடுமுறை எல்லாம் கிடையாது. சும்மா கொஞ்ச நாள் வலைப்பதிவில் நடக்கும் அரசியலை வேடிக்கை பார்த்தேன் :-)

முத்து(தமிழினி) said...

நாகரீகமாக மாற ஜெயலலிதா முயற்சி செய்வதை நாம் வரவேற்க வேண்டும்.

இதை ஜெ.வின் சாதனை போலவும் கலைஞருக்கு இதனால் பிரச்சினை போலவும் சிலர் கட்டமைக்க முயல்வது நகைப்பிற்கு உரியது.

தான் கெடுத்த சூழலை தானே சரிசெய்வதுதான் ஜெயலலிதா செய்வது.வாழ்த்துகிறென்

Idly Vadai said...

முத்து - வருகைக்கு நன்றி. நல்லா யோசித்து பார்த்தால் இது எல்லாமே ஒரு அரசியல் நாடகம் என்பது தெரியும். கடந்த 2 நாட்களாக தலைப்பு செய்திகளில் ஜெ வந்துள்ளார். கவர்னர் உரை விவாதங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை கலைஞரே எதிர்பார்த்திருக்க மாட்டார் என்பது என் யூகம்.

அப்பாவித்தமியன் said...

//குறிப்பாக 2 ஏக்கர் நிலம், விவசாய கடன் தள்ளுபடி, மதமாற்ற தடை சட்டம் ஆகிய வற்றின் மீது ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தார். முதல்-அமைச்சர் கருணாநிதியுடனும் நேருக்கு நேர் விவாதம் செய்தார். துணிச்சலாக அவர் எழுப்பிய கேள்விக்கணைகள் அ.தி.மு.க. வினரிடம் அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.//

இது உங்கள் கருத்தா அல்லது நமது எம்ஜிஆர் பேப்பரில் இருந்து வெட்டி ஒட்டியதா?

உங்கள் கருத்து என்றால் 'ஆணித்தரமாக' என்ன சொன்னார் என்றும் 'அளவற்ற' மகிழ்ச்சியை நீங்கள் எப்படி கண்டு கொண்டீர்கள் என்றும் சொன்னால் தன்யனாவேன்

Idly Vadai said...

அப்பாவித்தமிழன் - இது மாலைமலரில் வந்த செய்தி. கொஞ்சம் edit செய்துள்ளேன். என் கருத்து என்று இதில் எதுவும் இல்லை.

Idly Vadai said...

ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். நேற்று சில அதிமுகவினரை பார்த்து பேசிக்கொண்டிருந்தேன் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி யாக இருக்கிறார்கள். அதே போல் நேற்று கோடம்பாக்கத்தில் அதிமுக MLA வீடு வீடாக சென்று நன்றி சொன்னார். ஒரே பட்டாசு வெடி சத்தம். அங்கும் சில அதிமுகவினரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களும் மகிழ்ச்சியாக தான் இருந்தார்கள்.

Hamid said...

இட்லிவடை..எலெக் ஷன் முடியர வரைக்கும் ரொம்ப வேகமா செய்தி சொன்னிங்க.. அப்புரம் DMK ஆட்சி வந்ததும் காணாம போய்ட்டிங்க.. இப்ப அம்மா பத்தி செய்தியொட வந்து இருக்கிங்க..தொடர்ந்து இருப்பிங்கன்னு நம்பலாமா?

சரி... அம்மா சட்டசபைக்கு பொறது நிச்சயமாக நல்ல விஷயம்..அரோகியமான விஷயம்..கொஞ்ச நாள் எப்படி சட்டசபையில் நடந்துக்கராங்கன்னு பார்க்கலாம்..அப்புறம் விமர்சிக்கலாம்.. இப்பொதைக்கு ஜெயாவின் செயலுக்கு பாராட்டுக்கள்.

Idly Vadai said...

Hamid - ரொம்ப நாள் ஆகிவிட்டதே என்று ஒரு சின்ன சோதனை பதிவு போட்டேன். ஹிஹி.
அரசியல் பதிவுகளை குறைத்து சில நகைச்சுவை பதிவுகளை போடலாம் என்று எண்ணம். பார்க்கலாம்.

Hamid said...

அரசியல் பதிவ விட நகைச்சுவையா பதிவு இருக்க முடியுமா?

Idly Vadai said...

Hamid - நீங்கள் சொல்லுவது சரி :-)

நாகை சிவா said...

அவர் எதிர்க்கட்சி தலைவியாக வந்துவிட்டால், கண்டிப்பாக தி.மு.கவுக்கு தலைவலி தான்.

அவர் கேட்ட எந்த கேள்விக்கும் அவர்க்களால் நேரடியாக பதில் கூறவில்லை. அல்லது முடியவில்லை. கலைஞரே கூட திணறி தான் போனார்.

G.Ragavan said...

முத்து தமிழினி சொன்னது போல ஜெயலலிதா எடுத்துள்ள முடிவு மிகச்சரியானது. இதை வரவேற்பதே நல்ல செயல். அதைச் செய்வோம்.

மதமாற்றத்தடைச் சட்டத்திற்கு ரெட்டைத்தாழ்ப்பாள் என்றெல்லாம் கருணாநிதி அவர்களும் வீண் பொழுது போக்காமல் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

விவசாயக் கடன் தொடர்பாகவும் ஜெயலலிதா கேட்ட கேள்வி எனக்கு நியாயமானதாகவே தெரிகிறது. அதற்கும் முறையான பதிலை அரசு தெரிவிக்க வேண்டும்.

சட்டசபை நிகழ்ச்சிகள் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் வரும் வகை செய்ய வேண்டும்.

Idly Vadai said...

ஜெ - பேட்டி - அப்டேட்

முத்துகுமரன் said...

ஜெயலலிதாவின் முடிவிற்கு பாராட்டுகள். சட்டசபை எதிர்கட்சி தலைவரானதிற்கு வாழ்த்துகள்..

ஆனா யாரும் ஓ.பன்னீர்செல்வத்தோட தியாகத்தை கண்டுக்கவே மாட்டேங்கிறீங்களே:-). இதில் ஏதும் செண்டிமெண்ட் உள்குத்துகள் உண்டா???? :-)

(துபாய்) ராஜா said...

/"ஜெயலலிதாவின்வாதத்திறமையை"/

இரண்டெழுத்து விட்டுவிட்டீர்.
பிடிவாதத்திறமை என்பதே சரியாகும்.

luckylook said...

///// அவர் எதிர்க்கட்சி தலைவியாக வந்துவிட்டால், கண்டிப்பாக தி.மு.கவுக்கு தலைவலி தான். ////

ஜிங்குசாக்..... ஜிங்குசாக்..... ஜிங்குசாக்.....

நாகை சிவா காது வலிக்குது... கொஞ்சம் மெதுவா அடிங்க..... :-)

neo said...

>> மதமாற்றத்தடைச் சட்டத்திற்கு ரெட்டைத்தாழ்ப்பாள் என்றெல்லாம் கருணாநிதி அவர்களும் வீண் பொழுது போக்காமல் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். >>

பார்ப்பனர்களின் சதிச்செயலை வெளிப்படையாக கலைஞர் இடித்துரைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

மதமாற்ற விவகாரத்தில் இந்துத்துவ ஒற்றர் கழகத் தலைவியின் இரட்டை நிலைப்பாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

>> விவசாயக் கடன் தொடர்பாகவும் ஜெயலலிதா கேட்ட கேள்வி எனக்கு நியாயமானதாகவே தெரிகிறது. அதற்கும் முறையான பதிலை அரசு தெரிவிக்க வேண்டும். >>

இந்த ஜல்லியை மற்ற அம்மா விசுவாசிகள் அடிப்பதால் ஒன்றும் கெட்டுப்போகப்போவதில்லை. ஆனால் ராகவன்?

தேர்தல் வாக்குறுதி என்ன? 'சிறு குறு விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன்கள் அறவே ரத்து செய்யப்படும்'

Its simple and straightforward.

ப.சியும் மிக விளக்கமாக இதைப் பற்ரி பல பிரச்சாரக் கூட்டங்களில் சொன்னார். நீங்கள் சன் பார்த்திரூக்க வாய்ப்பு உண்டல்லவா?

உப்பு விவசாயிகளின் கடன், விவசாயமல்லாத மற்றவற்றுக்கு வாங்கிய கடன்கள், தேசிய வங்கிக் கடன்கள் பற்றி - திமுக-வின் தேர்தல் அறிக்கையிலோ அல்லது கலைஞரின் கூட்டணியினரின் பேச்சிலோ சொன்னார்களா?

வைகோ ஓடிப்போய் அம்மாவிடம் சேர்ந்த காலகட்டத்திலிருந்து - திமுக வெறுப்புக் கருத்துகளை நீங்கள் அவ்வப்போது உமிழ்ந்து வருவது இப்போதும் வெளிப்பட்டுள்ளது.

>> சட்டசபை நிகழ்ச்சிகள் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் வரும் வகை செய்ய வேண்டும்.>>

முதலில் அதிமுக-வினரின் காட்டுமிராண்டித்தனத்தை, கலைஞரை நோக்கிப் பாய்ந்த கொலைவெறியை, இடஒதுக்க்கீட்டுப் பிரச்சனையில் ஜெ.வின் சதிகாரப் மெளனப் பேச்சுகளை, இந்த Context--இலான அதிமுக-வினரின் நடத்தையை - எல்லாம் பற்ரியும் கருத்து சொல்ல நீங்கள் முன்வரலாம்.

இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களும், அவர்களின் மறைமுக ஆதரவாளர்களும் - ஜெ. அதிமுக-வின் - பல்லக்குத் தூக்கிகளாக - வலையுலகில் உலா வருவது தற்செயலான நிகழ்வுதானா?

நாகை சிவா said...

//ஜிங்குசாக்..... ஜிங்குசாக்..... ஜிங்குசாக்.....

நாகை சிவா காது வலிக்குது... கொஞ்சம் மெதுவா அடிங்க..... :-) //
Lucky Look!

நான் ஜெயலலிதாவிற்கு ஜிங்குசாக் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கும் அவருக்கும் என்ன இருக்கு, நான் அ.தி.மு.க. அனுதாபியும் கிடையாது. அப்படியே இருந்தாலும் உங்களுக்கு என்ன வந்துச்சு. கலைஞராலோ, மற்றவர்க்களோ அன்று அவர் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் கூறி அவரின் வாயை அடைக்க முடிந்தா? அன்பழகன் சொன்னாரே, மாமன், மச்சான் கடனை எல்லாம் அடைக்க முடியாது என்று, அது போல குதர்க்கமாக பேச தானே முடிந்தது. நாளைக்கு சட்டசபைக்கு எதிர்க்கட்சி தலைவியாக வருகிறார், அவரிடம் காட்டுங்கள் உங்கள் திறமையை. அவரை திறம்பட சமாளிக்க உங்கள் தலைவருக்கு வாழ்த்துக்கள்.

Idly Vadai - sorryma.

Anonymous said...

வீரத்திருமகன் கருணாநிதி வாழ்க!

தன் உயிரே போனாலும் அதைப்பற்றி கவலைப்படாமல், சட்டமன்றம் வந்து மக்கள் பிரச்ச்சனைகள் குறித்து வாதிட்டு, தன் தொண்டர்களுக்கு முன்னோடியாக இருந்த தானைத்தலைவன் வாழ்க!

விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்து, கடனை திருப்பிசெலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் முன் ("நான் அப்பவே சொன்னேன் திருப்பி கட்டதேவையில்லைனு, கேட்டியா!") அவமானப்படவைத்த, கொடைவள்ளல் வாழ்க!.

இனி எல்லோரும் விவசயாக கடன்( கடன் என்றால் திருப்பிக்கொடுப்பது தானே?) இலவசமாகத் தரப்போகிர புண்ணியவான் கலைஞர் வாழ்க!

அரசுப் புறம்போக்கு, தரிசு நிலமில்லாத பகுதிகளில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு, பல மைல்களுக்கு அப்பால் ஒன்றுக்கும் உபயோகமில்லாத தரிசு நிலங்களை இலவசமாக வழங்கப்போகும் தரும பிரபு வாழ்க!

நியோ மற்றும் லக்கிலுக்கிற்கு மனசு குளிர்ந்திருக்கும். இதற்கு மேல் குளிர்வித்தால் ஜன்னி வந்துவிடும் என்பதால் இத்தோடு விட்டு விடுகிறேன்.