பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 16, 2006

எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் !

சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் பதவியில் நியமிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. இதுதொடர்பாக முறையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

சென்னை கடற்கரையில் நிறுவப்பட்டு கடந்த ஜெயலலிதா ஆட்சியால் அகற்றப்பட்ட கற்புக்கரசி கண்ணகி சிலை இன்னும் 15 நாட்களில் அதே இடத்தில் நிறுவப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி ஏழை, எளிய மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப்படும். அதற்கான செயலாக்கத் திட்டம் விரைவில் தொடங்கும். திட்ட வரைவு இறுதியானவுடன் டிவி வழங்குவது தொடர்பான விரிவான விவரங்கள் வெளியிடப்படும்.

தமிழ் நாட்டில் எவ்வளவோ வளர்ச்சி பணிகள் இருக்க.. சரி நான் இதற்கு மேல் பேசவில்லை.

- * -

ரோசாவசந்த் எழுதிய லோக் பரித்ரன் உடைகிறது படித்து பார்க்கவும்.

Welcome to Politics, என்று சொல்ல தோன்றுகிறது.

- * -
Update:
கி.விரமணி.
முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அமைந்த ஆட்சியின் சாதனைகள் ஒரு சரித்திர தொடராக, என்றென்றும் வரலாற்றின் வைர வரிகளால் எழுதப்படுபவையாக தொடர்ந்து கொண்டே உள்ளன. அமைச்சரவை கூட்டத்தின் முதல் கூட்டத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழிவகை செய்யும் ஆணை நிறைவேற்றப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டது. அதனைப் பார்த்து பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுப்பது தான் எனது ஆட்சியின் முதல் குறிக்கோள் என்று அறிவித்த கருணாநிதியின் ராக்கெட்வேக முடிவு கேட்டு, அவர்கள் தொண்டர்கள் மகிழ்ச்சிக் கண்ணீரில் மிதந்து கொண்டுள்ளனர். கருணாநிதிக்கும், அவரது அமைச்சரவைக்கும் நிரந்தர நன்றி என்ற சொல்லைத்தவிர வேறு சொற்களை அகராதியில் தேடிப்பார்க்கிறோம். பார்த்துக்கொண்டே இருக்கிறோம். உலகத் தமிழர்களின் பாராட்டு மழையில் கருணாநிதி ஆட்சி குளித்துக் கொண்டுள்ளது. இந்த துணிந்த முடிவுக்காக திராவிடர்கழகம் பாராட்டு நன்றித் திருவிழாக்களை நாடெல்லாம், தமிழர் வீடெல்லாம் நடத்தும்.


விசுவ இந்து பரிஷத்

விசுவ இந்து பரிஷத்தின் இளைஞர் அணி மாநிலத்தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தங்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவை முடிவு செய்து ஒரு உத்தரவு பிறப்பித்து இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி நடந்த இந்து சமுதாய பாதுகாப்பு மாநில மாநாடு மற்றும் கிராமகோவில் பூஜாரிகள் 5-வது மாநில மாநாடு தீர்மானத்தில் இதே கோரிக்கையை தமிழக அரசுக்கு வலியுறுத்தியிருந்தோம். தாங்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்து விசுவஇந்து பரிஷத் கோரிக்கையை நிறைவேற்றியதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இதற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


அர்ச்சகராக விரும்பும் இந்து இளைஞர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க ஆலய வழிபாட்டு முறை பயிற்சிக்கல்லூரி ஒன்றை அமைக்க அரசு முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் 2001-ம் ஆண்டு தாங்கள் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது, கிராம கோவில் பூசாரிகளின் நலனுக்காக நலவாரியம் ஒன்றை அமைத்தீர்கள். தற்போது முடங்கிக்கிடக்கும் அந்த நலவாரியத்தை மீண்டும் செயலாக்கம் பெறச்செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

65 Comments:

rajkumar said...

இட்லிவடை,

மேற்கண்ட உத்தரவுகளை போட்டதனால் வளர்ச்சி பணிகள் ஸ்தம்பித்து நின்றுவிட்டன என்று அர்த்தமா? அரசின் முதல் பெரிய பணி நிதிநிலை அறிக்கை தயாரிப்பதுதான். அதற்கான ஆயத்தங்கள் துவங்குவதற்கு நிதிசெயலர் போன்ற புதிய நியமனங்கள் முடிவடைய வேண்டும்.ஒரு புதிய அரசிடமிருந்து வளர்ச்சித் திட்டங்களின் உறுதியான அறிவிப்பை நிதிநிலை அறிக்கையில்தான் எதிர்பார்க்க முடியும்.

அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பில் உங்களுக்கு ஆட்சேபம் இருந்தாலேயொழிய, இவ்வறிப்பை திமுக அரசாங்கம் அறிவித்ததைக் குறித்து குறைசொல்ல முடியாது.

நீங்களும் அர்ச்சகராகலாம் என்று வாசகர்களை முன்னிலை படுத்தி எழுதியுள்ளீர்களே? அப்படியென்றால் உங்களுக்கு அந்த உரிமை ஏற்கனெவே உண்டா?

கோவி.கண்ணன் said...

//அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் பதவியில் நியமிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு//
இதற்கு சிலர் பூக்கொண்டுவருவார்கள், சிலர் தங்களின் பங்கான அர்சனையை செய்யவருவார்கள் என்று நினைக்கிறேன்.

Muse (# 5279076) said...

யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்பது வரவேற்பிற்குரியதே. ஆனால் அதை நடைமுறை படுத்த உண்மையிலேயே அரசியல் கட்ஷிகளுக்கு ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. ரிஸர்வேஷன் மாதிரி இது ஒரு ஸ்டண்டாக முடிய வாய்ப்புகள் அதிகம்.

அர்ச்சகர் ஆவதற்கு சில தகுதிகள் உள்ளன. மிக பெரிய கோயில்களுக்கு அர்ச்சகராக வேண்டுமென்றால் நீங்கள் அதிக புலமை உடையவராகவிருக்க வேண்டும். சாதாரண கோயில்களில் அர்ச்சகர் ஆவதற்கும் தகுதிகள் தேவைப்படும்.

இந்த தகுதியை அனைவரும் அடைய முதலில் வழி செய்ய வேண்டும். இதற்கு அனைவரும் கற்பதற்குத் தேவையான வேத பாட சாலைகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.

தகுதியில்லாமல் பதவி பெறுவது அவமானத்தை தரும், கசப்புணர்வை வளர்க்கும்.

Idly Vadai said...

ராஜ்குமார் - நான் எந்த உள் நோக்கத்துடன் எழுதவில்லை. ஒரு அரசு பதிவி ஏற்றவுடன், பல விஷயங்கள் செய்யலாம். இது அவ்வளவு முக்கியமான பிரச்சனை இல்லை என்பது என் கருத்து. மற்றவர்களுக்கு வேறு கருத்துகள் இருக்கலாம்.

கோவி.கண்ணன் said...

//தேவையான வேத பாட சாலைகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.//
தேவாரம், திருவாசகத்தை தானே சொல்கிறீர்கள் ?

Idly Vadai said...

GoviKannan - ஜெ ஆரம்பித்தார் பிறகு நைசாக கைவிட்டார்.

துளசி கோபால் said...

இதுக்குன்னு படிச்சுட்டு வர்றவங்க குறைஞ்சபட்சம் பயபக்தியோடு பூஜை செய்வாங்க,இல்லீங்களா?

தி.நகர், திருப்பதி தேவஸ்தானம் பெருமாள் கோயிலில் பூஜை செய்யர பட்டர்களுக்கு இவுங்க எவ்வளவோ
மேலாத்தான் இருப்பாங்க.

Muse (# 5279076) said...

>>>தமிழ் நாட்டில் எவ்வளவோ வளர்ச்சி பணிகள் இருக்க.. சரி நான் இதற்கு மேல் பேசவில்லை.<<<

தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் பல வளர்ச்சிப் பணிகளில் முக்கியமான ஒரு பணி இது. ஹிந்து மத கருத்துக்களுக்கு எதிராக உள்ள ஹிந்து சமூகக் கருத்துக்களை களைய இது உதவும். ஒரு மனிதனை அவன் பிறப்பினால் இழிவு செய்யும் மடமை அகலும். சமுதாய முன்னேற்றத்திற்கு இது முக்கியம் என உங்களுக்குத் தோன்றவில்லையா?

ஒவ்வொருவருக்கும் அவரவர் பிரச்சினை முக்கியம். ஒரு பாவமும் செய்யாத என் சகோதரன் பிறந்துவிட்ட பாவத்திற்காக அவமானப்படுத்தப்படுவது இனி குறையும் (இத்திட்டம் ஒழுங்காக நிறைவேறினால்).

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

இட்லி வடை,
சதி,தேவதாசி முறை ஒழிப்புக்குச் சட்டம் தேவையா என்றும எதிர்த்தவர்கள் உண்டு.சட்டத்தால் மட்டுமே அதை இந்த அளவுக்காவது நீக்க முடிந்தது.நீங்கள் இதையும் மறக்கக்கூடாது.அனைவரும் அர்ச்சகர் ஆவதால் தாழ்த்தப்பட்ட மக்கள் உடனடியாக முன்னேறிவிடப் போவது இல்லை.அதனால் பாப்பாபட்டி ,கீரிப்பட்டி போன்ற கிராமங்களும் மாறிவிடப்போவது இல்லை.ஆனால் இந்தச் சட்டம் தேவை .இது ஒரு அடையாளம் அவ்வளவே.

//தேவையான வேத பாட சாலைகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்.//
***தேவாரம், திருவாசகத்தை தானே சொல்கிறீர்கள் ? ***

:-)))))))))
வேதததால் இந்த நிலமை தமிழனுக்கு அதை வேறு சொல்லித்தர வேண்டுமா என்ன?

அருண்மொழி said...

Muse,

//ரிஸர்வேஷன் மாதிரி இது ஒரு ஸ்டண்டாக முடிய வாய்ப்புகள் அதிகம்//

இட ஒதுக்கீடு முறையில் என்ன Stunt நடந்தது என்று விளக்க முடியுமா?.
நீங்கள் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் உள்ளது.

Muse (# 5279076) said...

>>>தேவாரம், திருவாசகத்தை தானே சொல்கிறீர்கள் ? <<<

தேவாரம், திருவாசகங்கள் பண் எனும் வகையைச் சேர்ந்தவை. இவையும் கோயில்களில் ஓதப்படுகின்றன. இப்பண்ணிணை இசைப்பவர்கள் "ஓதுவார்கள்" என அழைக்கப்படுகின்றனர்.

அர்ச்சகராவதற்கு சொல்லித்தரும் பாடங்கள் வேறு. "அவையும்" அனைவருக்கும் சொல்லித்தரப்பட வேண்டும்.

எந்த காரணத்தாலும் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டுமுறை அழிக்கப்படக்கூடாது.

கிருத்துவர்கள் லத்தீன் மொழியிலும், இஸ்லாமியர்கள் அரபி மொழியிலும் வணங்க அனுமதிக்கப்பட வேண்டும்.

ஒரு பிரச்சினைக்கான முடிவை நடைமுறைபடுத்தும்போது, அப்பிரச்சினையால் பலன் பெறுபவர்கள் பிரச்சினை தீராமலிருக்க காலம் காலமாக பின்பற்றிவரும் ஒரு மெதாட் வேறு ஒரு பிரச்சினையை தேவையில்லமல் நுழைத்து பிரச்சினை தீராமலிருக்கச் செய்வதுதான்.

வேறு ஒரு முறையில் வழிபட விரும்புபவர்கள் தங்களுக்கென்று தனியாக ஒரு கோயில் கட்டி வழிபடலாமே.

Muse (# 5279076) said...

>>>வேதததால் இந்த நிலமை தமிழனுக்கு அதை வேறு சொல்லித்தர வேண்டுமா என்ன? <<<

உங்களுக்கு வேதம் பற்றி எதுவும் தெரியாது என்பது இதிலிருந்து தெரிகிறது.

sivagnanamji(#16342789) said...

அணைவரும் என்றால்,தகுதி படைத்த
அனைவரும் என்றுதானே பொருள்?
IIT, IIME IIM போன்றவற்றில் "தகுதி,திறமை" பற்றி
பேசுபவர்கள் இதில் மட்டும் எதிர்ப்பு காட்டுவது ஏன்?

3Signs said...

Well said Idlyvadai !!

Muse (# 5279076) said...

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தமிழ் வரலாறும் தெரியாது.

Muse (# 5279076) said...

>>>IIT, IIME IIM போன்றவற்றில் "தகுதி,திறமை" பற்றி
பேசுபவர்கள் இதில் மட்டும் எதிர்ப்பு காட்டுவது ஏன்? <<<

அந்த "தகுதி,திறமை" பற்றி பேசுபவர்களில் நானும் ஒருவன். எதிர்ப்பு தெரிவிப்பவர் பற்றிய உங்கள் கற்பனை உண்மையிலிருந்து வெகுவாக விலகியிருக்கிறது.

Muse (# 5279076) said...

என்னுடைய வலைப்பதிவில் என் பதில்களை தொகுத்துள்ளேன்.

D The Dreamer said...

//ராஜ்குமார் - நான் எந்த உள் நோக்கத்துடன் எழுதவில்லை. ஒரு அரசு பதிவி ஏற்றவுடன், பல விஷயங்கள் செய்யலாம். இது அவ்வளவு முக்கியமான பிரச்சனை இல்லை என்பது என் கருத்து. மற்றவர்களுக்கு வேறு கருத்துகள் இருக்கலாம். //

Idly Vadai: Your title is very misleading. Let me put it straight. Do you have objections to the Govt's stand? If so, put forward your arguments and let us see the merits.

Anonymous said...

புதிய அரசும்,அமைச்சரவையும்
'இட்லி வடை' போன்று சூடாக ந்டைபெறுவதை பாராட்டுவோம்.

அன்புடன்,
துபாய் ராஜா.

Muse (# 5279076) said...

>>>இட ஒதுக்கீடு முறையில் என்ன Stunt நடந்தது என்று விளக்க முடியுமா?.
நீங்கள் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் உள்ளது. <<<

இல்லை. தொழிற்கல்விகூடங்களிலும், உயர்கல்விகூடங்களிலும் ரிஸர்வேஷன் காரணமாக ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. காரணம் எம்மக்கள் பள்ளியிறுதியைகூட எட்ட முடியாத நிலையை உடையவர்களாக உள்ளனர்.

இதற்கு பதிலாக பொருளாதார அடிப்படையிலும், ஸ்பெஷல் கோச்சிங் முறைகளாலும் அவர்களால் மற்ற உயர் சாதி ஆட்களோடு தகுதி அடிப்படையில் போட்டி போட முடியும். சுய பெருமிதம் கொள்ளவும் முடியும்.

ரிஸர்வேஷன் என்பது ஜாதி அழியாமலிருக்க சில உயர்சாதி மக்களால் செய்யப்பட்ட ஏமாற்று வேலைதான்.

Bala said...

ஒரு சீர்திருத்த முடிவு. இத்துடன் இந்த இரு முடிவுகளையும் சேர்த்து எடுத்து இருக்கலாம்.

1) அர்ச்சகர்கள் அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியத் தொகை நிர்ணயம்.(சில பெரிய கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்களைத் தவிர மற்றவர்கள் மிகச் சொற்ப ஊதியம் - 200-300 ரூபாய் - மட்டுமே பெறுகிறார்கள்).

2) முடிந்தால், இவர்களும் அரசு ஊழியர்களாக ஆக்கப் பட்டிருக்கலாம்.

Idly Vadai said...

Dreamer -

A small joke - A Wife comes late to her house. She sees her husband with another girl. The husband looks at his wife and shouts at her "Why are you late? Do you know what time it is ?"

Wife angrily shouts "How can you sleep with another women?"

Husband says "Dont change the topic, answer to my question"

I just gave a title. My point was clear - this is not a very important thing a goverment should do it as a first thing.

Anonymous said...

கோயில் என்றால் சர்ச் மற்றும் மசூதிகளும் அடங்குமா ?

குழலி / Kuzhali said...

//இல்லை. தொழிற்கல்விகூடங்களிலும், உயர்கல்விகூடங்களிலும் ரிஸர்வேஷன் காரணமாக ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
//
எங்கே காலியென்று சொல்லுங்கள் எனக்கு தெரிந்தவர்களை விண்ணப்பிக்க சொல்கிறேன்...

எத்தனை பேருப்பா இப்படி கிளம்பியிருக்கிங்க....

அனைவருக்கும் அர்ச்சகராகலாம் என்று மதம்/ஆத்திகம் தராத உரிமையை நாத்திக கலைஞர் தந்ததற்கு நன்றி

கருப்பு குதிரை said...

உங்கள் தலைப்பு இச்சட்டத்தை ஏளனம் செய்யும் தொனியில் இருப்பதை மறுக்க முடியது.....

ravi srinivas said...

DMK cannot take any credit for this. The credit should go to Supreme Court(SC) and to the person who filed the case in Kerala High Court on this issue.In 2002 itself SC had declared that any qualified and trained HINDU can be appointed as archaka.
But you cannot appoint anyone just like that.That person has to be a trained and qualified person.
I have written umpteen no. of
times that SC gave the verdict
in 2002 itself.

Idly Vadai said...

I have changed the title. As I dont want the topic to get diverted.

ravi srinivas said...

The temple rituals are performed as per agamas and tradition.So mere thevaram or thiruvasakam wont
do.

தயா said...

மாரியம்மன் மற்றும் கிராமங்களில் உள்ள கோயில் அர்ச்சகராக சில சமூகத்தினர் பரம்பரையாக இருக்கிறார்கள்(இவர்கள் பிராமணர்கள் இல்லை). பெருமாள் மற்றும் சிவன் கோயில்களில் ஐயங்கார் மற்றும் ஐயர்கள் இருக்கிறார்கள். சிதம்பரத்தில் தீட்சிதர்கள் இருக்கிறார்கள். இது போதாதென்று சிலர் மடங்கள் தியான மையங்கள் என திறந்து ஓரு வழிமுறையை வளர்த்திருக்கிறார்கள்!! :)

இந்த சட்டத்தினால் என்ன சாதித்து விடுவார்கள் என்று புரியவில்லை.

தெய்வம் இல்லை அது கல் என நம்புபவர்கள் (திக மற்றும் திமுக) இந்த கோரிக்கையை எழுப்பி சட்டமும் நிறைவேற்றியிருப்பது அவர்களின் வெறியை காட்டுகிறது.

ஏற்கனவே ஆலயங்களில் கட்சிக்காரர்களை அறங்காவலர்களாக நியமித்து சொத்துக்களை சுரண்டியாகிவிட்டது.

அவர்களின் பாணியிலேயே குறிப்பிடவேண்டுமென்றால் "பரம்பரை பகை"! தீர்த்துக்கொள்கிறார்கள் போலிருக்கிறது.

"கட்டாய" மதமாற்றச் சட்டம் மட்டுமே என்று சொன்னால் கூட கோபப்படுகிறார்கள். ஆனால் இங்கே சட்டமே கொண்டுவரப்படுகிறது. நியதியில் நிர்வாகத்தில் தலையிடாதே என யாரும் கோபப்படுவதில்லை.

G.Ragavan said...

இது வரவேற்கத்தக்க முடிவு. செயல்படுத்திய கருணாநிதி அவர்களுக்கு நன்றி.

என்னென்ன புலமைத் தகுதிகள் தேவை என்று பார்த்து அந்தத் தகுதிகளை வளர்த்துக் கொள்ள அனைவருக்கும் வாய்ப்பளிப்பது மிகச்சரியாகும். நல்ல முடிவு.

ravi srinivas said...

He could have passed this order in the previous term (1996-2001).Why he did not pass it then.Why only now.The reason is obvious, the verdict came in 2002.The
Kerala highcourt gave a similar verdict in 2000 itself.Based on that he could have done so.He did not want to take any risk then.But now he acts as the verdict of SC is
clear.This is like beating a dead snake to death.

Muse (# 5279076) said...

அன்பு அனானி,

>>>எங்கே காலியென்று சொல்லுங்கள் எனக்கு தெரிந்தவர்களை விண்ணப்பிக்க சொல்கிறேன்...<<<

தயவு செய்து உங்களுக்கு தெரிந்தவர்களை விண்ணப்பிக்க சொல்லுங்கள்.

ஆதாரம் கேட்டிருந்தீர்கள். என் வாழ்க்கையில் நடந்ததை சொல்லுகிறேன். பி எஸ் ஸி முடித்து விட்டு பெரும்பாலானோர் எம் ஸி ஏவிற்கு விண்ணப்பித்த காலம். கூட்டத்தோடு கோவிந்தா போட நானும் போட்டிருந்தேன். என்னுடன் படித்த சில மாணவர்களுக்கு அவர்களுடைய உயர்சாதியின் காரணமாக கிடைக்கவில்லை.

என்னுடன் கல்லூரிக்கு வந்த (அவர் படித்ததே இல்லை)ஒரு தலித் நண்பரை வலிந்து வலிந்து எம் ஸி ஏ இண்டர்வ்யூவிற்குக் கூப்பிட்டிருந்தார்கள். இன்டெர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விகளாக அவர் என்னிடம் கூறியதும், அதற்கு அவர் சொன்ன பதில்களும்:

நியூட்டனின் மூன்றாவது விதி தெரியுமா?

தெரியாது.

சரி விடு. பாரதிதாசன் தெரியுமா?

........ [பதிலில்லை]

தமிழ்தாய் வாழ்த்தின் முதல் இரண்டு வரிகளை சொல்லுப்பா.

அதெல்லாம் ஸ்கூல்ல சொன்னது. இப்போ ஞாபகம் இல்லை.

சரி. சரி. யூ ஆர் ஸெலெக்டட்.

ஏனென்றால் அந்த துறையில் அப்ளை செய்திருந்தது அவர் ஒருவர் மட்டுமே. ஸீட்டை நிரப்ப அவர்களுக்கும் வேறு வழி தெரியவில்லை.

இந்த நண்பர் கல்லூரியில் நடந்த அத்தனை போராட்டங்களிலும் கலந்து, கல்லெறி குழுவிற்கு தலைமை தாங்கினார். எம் ஸி ஏ முடிக்கவேயில்லை.

அதே சமயத்தில் என்னோடு எட்டாம் வகுப்பில் படித்த பக்கத்து வீட்டு மகேசுவரி என்னும் தலித் பெண் ஞாபகம் வருகிறார். அவருடைய வீட்டில் எல்லாருமே நன்றாக படிக்கிற பெண்கள். இந்த பெண் எப்போதுமே கணக்கில் 100 % மதிப்பெண்கள் எடுப்பவர்.

அருணும் ஞாபகத்திற்கு வருகிறார். தலித் மாணவரான இவர்தான் எங்கள் வகுப்பில் முதல் மதிப்பெண் எப்போதும் எடுப்பார். அன்பானவர். தொழிற் கல்விக்கான நுழைவுத் தேர்வில் ரிஸர்வ்ட் குழுவில் போட்டியிடாமல் பொது குழுவில் போட்டியிட்டார். கேட்டதற்கு இங்கனம் செய்வதன் மூலம் வேறு ஒருவருக்கு வாய்ப்பு அளிப்பதாகக் கூறினார்.

மேலே சொன்ன மூவருமே ஒரே மாதிரியான குடும்ப பிண்ணணி உள்ளவர்கள்.

Badri said...

Ravi Srinivas: In today's news bit, Karunanidhi quoted the 2002 SC judgement and said the current order is based on that.

My question is - once the Supreme Court has given its verdict, why is a GO, or law or ordinance needed?

Second question: Did non-brahmins try for the job post 2002 verdict and were they denied jobs?

That said, it is important for the Government to promote this information and help enable more people from across the various communities to become priests in temples.

soft tester said...

/* கோயில் என்றால் சர்ச் மற்றும் மசூதிகளும் அடங்குமா ? */

சர்ச் மற்றும் மசூதியில் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்.

அதற்குரியதை படித்தால் போதும்.

இப்படி சட்டம் கொண்டுவந்துதான் செயல்படுத்தவேண்டும் என்றில்லை

G.Ragavan said...

// தேவாரம், திருவாசகங்கள் பண் எனும் வகையைச் சேர்ந்தவை. இவையும் கோயில்களில் ஓதப்படுகின்றன. இப்பண்ணிணை இசைப்பவர்கள் "ஓதுவார்கள்" என அழைக்கப்படுகின்றனர்.

அர்ச்சகராவதற்கு சொல்லித்தரும் பாடங்கள் வேறு. "அவையும்" அனைவருக்கும் சொல்லித்தரப்பட வேண்டும். //

ஆமாம். கண்டிப்பாக.

// எந்த காரணத்தாலும் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டுமுறை அழிக்கப்படக்கூடாது. //

என்ன சொல்ல வருகிறீர்கள்? புரியவில்லையே அருள்மொழி.

// கிருத்துவர்கள் லத்தீன் மொழியிலும், இஸ்லாமியர்கள் அரபி மொழியிலும் வணங்க அனுமதிக்கப்பட வேண்டும். //

அது அவர்கள் விருப்பம்.

// ஒரு பிரச்சினைக்கான முடிவை நடைமுறைபடுத்தும்போது, அப்பிரச்சினையால் பலன் பெறுபவர்கள் பிரச்சினை தீராமலிருக்க காலம் காலமாக பின்பற்றிவரும் ஒரு மெதாட் வேறு ஒரு பிரச்சினையை தேவையில்லமல் நுழைத்து பிரச்சினை தீராமலிருக்கச் செய்வதுதான்.

வேறு ஒரு முறையில் வழிபட விரும்புபவர்கள் தங்களுக்கென்று தனியாக ஒரு கோயில் கட்டி வழிபடலாமே. //

எனக்குத் தெரிந்து திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கிடா வெட்டிக் கொண்டாடியதாக திருமுருகாற்றுப்படை சொல்கிறது. மற்ற கோயில்களைப் பற்றியும் பழைய நூல்கள் சொல்கின்றன. ஆனால் இப்பொழுது இல்லை. இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள். எல்லாரும் திருமுருகாற்றுப்படை காலத்திற்குப் போகலாம். வேறு மாதிரி வணங்க விரும்புகிறவர்கள் வேறு கோயில்கள் கட்டிக் கொள்ளலாம். சரிதானா?

மு. சுந்தரமூர்த்தி said...

Ravi Srinivas says:
//DMK cannot take any credit for this.//

and goes further:

//He could have passed this order in the previous term (1996-2001).Why he did not pass it then.Why only now.The reason is obvious, the verdict came in 2002.The
Kerala highcourt gave a similar verdict in 2000 itself.Based on that he could have done so.He did not want to take any risk then.But now he acts as the verdict of SC is
clear.This is like beating a dead snake to death.//

For everyone's information,
Mu.Ka. is getting old and can beat only a dead snake now. But, way back in 1972, when he was young and brave, he held that live snake by hand. He amended Hindu Religious and Charitable
Endowments Act during his second term in office so that any qualified person irrespective of the caste could become a priest in the government managed temples.

The amendment was swiftly challenged by Brahmins in the Supreme court with a dozen petitions. The apex court ruled against the amendment. In this scenario Mu.Ka. would not have dared to try again in 89-90 or 96-2001. Now that the situation is favorable, he swiftly acted to fulfill yet another poll promise.

We got to wait for few days and see if this is going to be challenged again, and then decide whether the snake is dead is alive.

The 1972 Supreme court case against Mu.Ka.'s action was argued by none other than "eminent jurist" Nani Palkiwala, who not surprisingly also was against the implementation of Mandal report in 90s.

It doesn't matter how many times Ravi tells this, but the fact remains that Mu.Ka. was the first to beat the snake before Keralites or anyone else. THE CREDIT SHOULD GO TO KALAIGNAR.

அருள் செல்வன் கந்தசுவாமி said...

>>>
The temple rituals are performed as per agamas and tradition.So mere thevaram or thiruvasakam wont
do.
-----------------------
Sure. It will be a good idea if D'Maran makes a few tens of multimedia cd-s and distributes them free of charge among general population. Will equalise the playing turf and *then* we discuss the merit behind who could be among god's chosen children . This should be a simple task - after all this 'knowledge' could not be more than a couple of GB material. what?

arul

H.Selva said...

அப்டியா?

ARCHBISHOP ARULAPPA CONDEMNS VATICAN FOR PROMOTING A DALIT BISHOP AS HIS SUCCESSOR IN HYDERABAD, INDIA
http://www.dalitchristians.com/Html/arulappa.htm

H.Selva said...

Out of 156 Catholic bishops in India, 150 bishops belong to the upper caste community. Only 6 bishops belong to dalit community. Out of 12,500 Catholic priests, only 600 are from dalit community. 75% members of the Indian Christian community are from dalit community . 25% of the Upper caste Christians (clergy, religious and laity) have complete control over the dalit or untouchable Christians.

Anonymous said...

Badri,
Q:once the Supreme Court has given its verdict, why is a GO, or law or ordinance needed
A:not necessary.All the govt. need to do is to mention in any advt. for the post that as per the verdict there is no caste bar.

Q:Did non-brahmins try for the job post 2002 verdict and were they denied jobs?
A:I dont know.But had anyone been
denied on account of caste only
that would have amounted to
disrespect for the verdict of SC
and is punishable.The state govt. would not dare to disregard the verdict.So they might have quietly
implemented that.My understanding
is (i may be wrong) the previous
govt. might have given effect
in practice without any order.
The important thing is that a person should be a trained person and obviously should be a Hindu to be appointed so. What sort of training facilities
are available and how students are
chosen - i dont know answer to such
questions.
MK is beating a dead snake to death.This is my view.If i say this
i would be offending the sentiments
of many 'rationalists'.For them ignorance is
bliss :)
ravi srinivas

Idly Vadai said...

"2002ம் ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் இந்த அரசு சட்டத் துறையின் கருத்துரையை ஆய்வு செய்துமேலும் அரசு தலைமை வழக்கறிஞர் (அட்வகேட்ஜெனரல்) கருத்துரையையும் பெற்று அதன்படி உரிய பயிற்சியும், தகுதியும் உள்ள அனைத்துச் சாதியினரும் இந்து சமய திருக்கோயில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையைப் பிறப்பிப்பது.

இது தந்தை பெரியாரின் நெஞ்சில் உள்ள முள்ளை அகற்றும் அரும் பணி என இந்த அமைச்சரவை கருதுகிறது" - கலைஞர்

மு. சுந்தரமூர்த்தி said...

Ravi,
//For them ignorance is
bliss :)
//

Thinking others ignorant can be even more blissful :-)

Please read my previous comment and hope at least now you will stop parroting the same thing over and over again. :-))

ravi srinivas said...

Sure. It will be a good idea if D'Maran makes a few tens of multimedia cd-s and distributes them free of charge among general population. Will equalise the playing turf and *then* we discuss the merit behind who could be among god's chosen children . This should be a simple task - after all this 'knowledge' could not be more than a couple of GB material. what?

arul

I am for it.I had written that knowledge should be open to all
and so vedas etc should be taught to all irrespective of caste or gender.I had also supported the
move by JJ's govt to appoint women as archakas.I have no problem in
any Hindu male or female, trained
and qualified in becoming an Archaka.In my post I had given link to an organisation which has
demanded that women should be permitted to get trained in Vedas.
I have cited Radhakrishnan and
Ambedkar too in this regard.

ravi srinivas said...

A comment by me has not appeared here.I had stated that MK brought an Act in 1970s on this.While SC did not strike it down the net effect was only those trained and deemed to be qualified by Agamas to perform Poojas can become archakas.In other words govt. had no power to overrule agamic principles and practices.The MGR govt appointed
a committee headed by Justice Maharajan.But DMK govt. did not
try again in 1989-1991 by way
of another bill or act, nor did
they try in 1996-2001 although
the Kerala HC gave a verdict
in 1996 that was favorable to
this casuse.The SC gave verdict
in 2002.In fact there is no
need for any order on this as
the verdict is binding.I dont know
the contents of the order.But as long as it is in conformity with
the verdict in 2002 it will hold
good even if challenged.In any case
I will write an article soon on this.I credit MK for what he did in the 1970 and I appreciate that step.But the inaction or
indifference after 1976 to this
issue also has to be taken into
account.

ravi srinivas said...

The Kerala HC verdict was in 1996 not 2000 as mentioned.I apologise for the wrong information.

வழிப்போக்கன் said...

ஆனால் ஒன்று மட்டும் தெளிவு. பார்பனர்களும் மற்ற அறிவு ஜீவிகளும் இதை வெகுவாக வரவேற்பார்கள் என்பது கலைஞருக்கு நன்றாகத் தெரியும் ஆதலால், அவர்களை குஷிப்படுத்தவும், அவர்களின் ஆதரவைப் பெறவும்தான் இதைக்கொன்டுவந்துள்ளார் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?

ravi srinivas said...

As early as in 1969 the Travancore Dewasom Board started a school to train students irrespective of caste or community , for the purpose of training Santhikarans.On getting trained and after successfully completing
course they underwent upanayanam and sadosha karama.they wore sacred thread and were appointed
in temples.So Kerala had been
a pioneer in this.

G.Ragavan said...

ரவி ஸ்ரீநிவாஸ், என்ன சொல்ல வருகிறீர்கள்? இந்தச் சட்டம் தவறென்றா? அதைக் கருணாநிதி கொண்டு வந்தது தவறென்றா?

better late than never. இதை இந்தக் கோணத்தில் பார்க்கிறேன். இதில் அவருக்கு உள் நோக்கம் இருக்கிறதோ இல்லையோ....இந்தத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தினால் நன்றே.

Anonymous said...

அய்யா வழிபோக்கன்
சற்று முன்னர் சன் தொலைக்காட்சியில் செய்தி பார்த்தேன். திக வீரமணி இதைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசி தந்தை பெரியாரின் கனவு நிறைவேறி இருப்பதாகச் சொன்னார். அப்போ எல்லோரும் அர்ச்சகராகி மணியாட்ட வேண்டும் என்பதுதான் பெரியாரின் கனவா?
விளங்காமண்டை

கால்கரி சிவா said...

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக சட்டம் தேவையில்லை மனம் தான் வேண்டும். மதுரையில் ராமகிருஷ்ண மடம் மற்றும் சில சமுதாய அமைப்புகள் அனைத்து வகுப்பினருக்கும் அர்ச்சகர் ஆக வகுப்பு எடுகின்றனர். அதில் சேர்ந்து தேறுவதற்க்குத் தான் ஆட்கள் இல்லை. இதை என்னுடைய பதிவில் சவால் விட்டிருந்த்த சுவாமி ரெட்புல் என்பவருக்கு பதில் சொல்லியிருந்தேன். இதைக் கேட்டதும் அவர் பின்னங்கால் பிடறியில் பட ஓடி விட்டார்

கால்கரி சிவா said...

பிராமணர் குலத்தை சாராத மதுரையில் உள்ள சௌராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்த பலர் பல நூற்றாண்டுகளாக அர்ச்சகர்களாகவும் புரோகிதர்களாகவும் உள்ளனர். அவர்களை பிராமணர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

உ.ம் : ஸ்ரீவெங்கட்ரமண பாகவதர், கர்நாடக இசைத் தந்தை தியாகராயரின் பிரதம சீடர்

தமிழ் திரைஇசையில் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் பிண்ணணி பாடிய திரு டி.எம். சௌந்தராஜன் அவர்கள். இவரின் குடும்பம் பல நூற்றாண்டுகளாக புரோகிதம் செய்து வருகிறார்கள்.

ஆகையால் திரு கருணாநிதி ஒன்றும் பெரிய சீர்திருத்தம் செய்யவில்லை. ஏற்கனவே வழக்கத்தில் உள்ளதை விளம்பரப் படுத்தி பகுத்தறிவு பகலவன் பட்டத்தைத் தக்கவைத்துள்ளார்.

Anonymous said...

What is the urgency in delivering these? Is there any motive in these actions?

Sudesh

D The Dreamer said...

//I just gave a title. My point was clear - this is not a very important thing a goverment should do it as a first thing//
Idly Vadai: You are a famous blogger. With the fame comes responsibility. I only pointed out that your topic is misleading and that might lead to an unwanted argument in this post. I also feel that I said the right thing as you had urself changed the topic.

Cheers
D the D

Anonymous said...

இது மிகவும் வரவேற்புக்குறியது,

இந்த முயற்சி எப்படியென்றால் "அனைவருக்கும் பூணூல் இடுவதை விட, இருக்கும் பூணூல்களை அறுத்தெரிவது போன்றதாகும்".


வழிப்போக்கன்

Idly Vadai said...

D-the-D, ok, no hard feelings :-)

அருண்மொழி said...

Muse,

ஏற்கனவே சொன்னது போல ஒரே amuse தான்.

//தொழிற்கல்விகூடங்களிலும், உயர்கல்விகூடங்களிலும் ரிஸர்வேஷன் காரணமாக ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.//

இதற்கான ஆதாரங்களை தர முடியுமா?. அவை உண்மையாக இருப்பின் ஏராளமான மாணவர்கள் நீங்கள் குறிப்பிட்ட கல்விக்கூடங்களை அனுக வசதியாக இருக்கும்.

//காரணம் எம்மக்கள் பள்ளியிறுதியைகூட எட்ட முடியாத நிலையை உடையவர்களாக உள்ளனர். இதற்கு பதிலாக பொருளாதார அடிப்படையிலும், ஸ்பெஷல் கோச்சிங் முறைகளாலும் அவர்களால் மற்ற உயர் சாதி ஆட்களோடு தகுதி அடிப்படையில் போட்டி போட முடியும். சுய பெருமிதம் கொள்ளவும் முடியும்.//

ஒன்னுமே புரியவில்லை. பள்ளியிறுதியை எட்டாத மாணவர்கள் எப்படி பொருளாதார அடிப்படையான இடஒதுக்கீட்டில் பயன் பெற முடியும்?

+2 தேர்வெழுதி, நுழைவுத்தேர்வும் எழுதி இட ஒதுக்கீட்டில் உயர்கல்வி நிறுவனத்தில் நுழைவதே தவறு என ஒரு கூட்டம் வாதிடும் போது இது எப்படி சாத்தியமாகும்.

அருண்மொழி said...

தயா,

//தெய்வம் இல்லை அது கல் என நம்புபவர்கள் (திக மற்றும் திமுக) இந்த கோரிக்கையை எழுப்பி சட்டமும் நிறைவேற்றியிருப்பது அவர்களின் வெறியை காட்டுகிறது. //

தி.க - சரி.
தி.மு.க - சரியா??. அண்ணாவே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லிவிட்டாரே!!!. SUN TV பார்தீங்களா, தமிழரசி என்று ஒருவர் அமைச்சர் பதவி ஏற்ற போது எப்படி இருந்தார்???

//ஏற்கனவே ஆலயங்களில் கட்சிக்காரர்களை அறங்காவலர்களாக நியமித்து சொத்துக்களை சுரண்டியாகிவிட்டது. //

இதுவும் சம உரிமையே. ஒரு கூட்டமே எப்போதும் ஏமாற்றி தின்பது சரியல்ல.

//அவர்களின் பாணியிலேயே குறிப்பிடவேண்டுமென்றால் "பரம்பரை பகை"! தீர்த்துக்கொள்கிறார்கள் போலிருக்கிறது. //

பரம்பரை பகை என ஆரம்பித்தவர் இவர்கள் இல்லை.

எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதால் உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறி வருகிறது?

Murthi said...

கருணாநிதியின் அறிவிப்பை திறமையுள்ள எவரும் அர்ச்சகர் ஆகலாம் என எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, எவர் வேண்டுமானாலும் என அர்த்தம் கொள்ளக்கூடாது.

அதற்கான படிப்பும் திறமையும் இருந்தால், சாதி தடையாக இருக்கக்கூடாது என்பதே அவரது நோக்கம். இதில் தவறில்லை என்பது எனது கருத்து.

Taste the Bajji Soji !!! said...

//ஒன்னுமே புரியவில்லை. பள்ளியிறுதியை எட்டாத மாணவர்கள் எப்படி பொருளாதார அடிப்படையான இடஒதுக்கீட்டில் பயன் பெற முடியும்?/

Instead of going for reservation, Govt. can promote those people by supporting them by providing necessary resources and make them to compete with other people. This is very clear. People claiming for reservation simply closing their eyes for these alternatives.

//+2 தேர்வெழுதி, நுழைவுத்தேர்வும் எழுதி இட ஒதுக்கீட்டில் உயர்கல்வி நிறுவனத்தில் நுழைவதே தவறு என ஒரு கூட்டம் வாதிடும் போது இது எப்படி சாத்தியமாகும்.//

People getting seats thru the reservation are blocking some one who has better prospectus. Thats why they are shouting. But, if the govt. ready to provide resources to those backward people, nobody will shout for this. Money is never a constraint here, since Govt ready to provide costly things like TV, Computer etc.,

Taste the Bajji Soji !!! said...

//தி.க - சரி.
தி.மு.க - சரியா??. அண்ணாவே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லிவிட்டாரே!!!. SUN TV பார்தீங்களா, தமிழரசி என்று ஒருவர் அமைச்சர் பதவி ஏற்ற போது எப்படி இருந்தார்???
//

It says, DMK is deviated from its policy far away.

Also, non-brahmins are presists is most of the temples in TN. So, this rule is to point to savegaurd their vote bank. Nothing special going to happen because of this rule!!!

திருவாளர் பொதுஜனம் said...

Did you see this shocking expose of Lok Paritran?
http://purohitexposed.blogspot.com/

Sriram said...

//
//தொழிற்கல்விகூடங்களிலும், உயர்கல்விகூடங்களிலும் ரிஸர்வேஷன் காரணமாக ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.//

இதற்கான ஆதாரங்களை தர முடியுமா?. அவை உண்மையாக இருப்பின் ஏராளமான மாணவர்கள் நீங்கள் குறிப்பிட்ட கல்விக்கூடங்களை அனுக வசதியாக இருக்கும்.
//

Do you know that 2 years back nearly 20000 seats in various engineering colleges in Tamil Nadu could be filled because there weren't enough people for that. I don't know the numbers for last year. You must note that Tamil Nadu has 69% reservation and more than 1 lakh people take up the Entrance exam each year.

Sriram said...

//
//அவர்களின் பாணியிலேயே குறிப்பிடவேண்டுமென்றால் "பரம்பரை பகை"! தீர்த்துக்கொள்கிறார்கள் போலிருக்கிறது. //

பரம்பரை பகை என ஆரம்பித்தவர் இவர்கள் இல்லை.
//
All this enmity started the day when MGR was expelled from the DMK as Karunanidhi feared that he could grow into a bigger leader among the people than him. And Karnanidhi was the one, who expelled MGR and started all this enmity.

மு. சுந்தரமூர்த்தி said...

//As early as in 1969 the Travancore Dewasom Board ..... So Kerala had been
a pioneer in this. //

Ravi,
You started in 2002 and are going fast back in time to 1969. Now Travancore Devaswom Board gets credit for the new law in Tamil Nadu. I am amazed at your determination that MuKa doesn't get credit :-)

Travancore Devaswom Board's decision was restricted to only temples under its adminstration, not the entire State of Kerala. Besides, nobody from Kerala went to court to seek a ban on that. On the other hand what MuKa did was to bring the change in 10,000+ temples under HR&CE in entire Tamil Nadu. Of course, 6 Tamil Brahmins filed 12 petitions within a week and got the ban by Supreme court. With Supreme court ruling against TN government how do you expect MuKa implement it again in 1989 or 1996? Doesn't it become a contempt of court?

Pardon my ignorance. Is it possible to appeal against Supreme court's ruling? What is the mechanism and where does one appeal?

macmohan said...

Is it very important for DMK government to announce it within a week of forming government?