போன மாதம் சென்னை கடற்கரையில் சுண்டல் சாப்பிட்டு கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு கூட்டம் அரசியல் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தது. அட, நம்ம சப்ஜெட் என்று பக்கத்தில் போய் சுண்டல் சாப்பிட ஆரம்பித்தேன். அப்போது பேச்சு திசை மாறி இட்லிவடைக்கு வந்தது எனக்கு கொஞ்சம் ஆச்சரியத்தை கொடுத்தது. சரி, நானும் கவனிக்கப்படுகிறேன் என்று உடனே நடுநிலைக்கு மாறினேன் :-)
பாஸ்டன் பாலா அவர்கள் தேர்தல் பதிவுகளில் இட்லிவடைக்கு முதல் மார்க் கொடுத்துள்ளார். ( நிச்சயம் இது சன் டிவி டாப் டென்னை விட உயர்ந்து ) அவருக்கு என் நன்றி. சமிபத்திய பதிவில் தேர்தல் நிலவரம் இன்னும் நன்றாக கொடுத்திருக்கலாம் என்ற கருத்தும் சரியே!. நிச்சயம் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். ( தேர்தல் செய்திகள் அப்டேட் செய்யும் போது கரண்ட் கட் , அதைவிட நேற்று டிவிக்கள் செய்த குழப்பம் என்னை கொஞ்சம் கலங்கடித்துவிட்டது. தேர்தல் நிலவரம் பற்றிய என்னுடைய நேற்றைய குறிப்புக்கள் பார்த்தால் நீங்களே புரிந்துக்கொள்வீர்கள் :-)
பிரகாஷ் கில்லியில் இட்லிவடை பற்றி கொஞ்சம் ஓவரக புகழ்ந்திருக்கிறார். அவருக்கும் என் நன்றி.
அதேபோல் Lazygeek.net, prabhukrish.net, hotmachihot.com, sambharmafia பதிவுகளில் என்னை பாராட்டி குறிப்பிட்டதற்கு நன்றி.
மேலும், DNA.com, Deccan Cronicle, CNN-IBN ஆகிய பதிவுகளில் தேர்தல் வலைப்பதிவுகளில் இட்லிவடையை பற்றி குறிப்பு வந்துள்ளது. அவர்களுக்கும் என் நன்றி.
இன்று தேன்கூட்டில் என் பதிவை இரண்டாவது முறையாக வாசகர் பரிந்துரையில் கவரேஜ் செய்ததற்கு மிக்க நன்றி.
தமிழ்மணத்தில் என்னை நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த நிர்வாகிகளுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. ( இன்னும் இரண்டு நாள் இருக்கு அதற்குள் நன்றியா ? பின்ன இந்த இரண்டு நாள் கரண்ட் இல்லை என்றால் ? )
பல பின்னூட்டங்களில் என்னை பாராட்டி கருத்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றி. தனியாக ஒவ்வொருவருக்கும் பின்னூட்டத்தில் நன்றி சொல்ல ஆசை தான், ஆனால் மாயவரத்தானை நினைத்தால் பயமாக இருக்கிறது.
தினமும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக்கொண்ட படத்தில் உள்ளஅரசியல் தலைவர்களுக்கு ஒரு மிக பெரிய நன்றி.
( போன மாதம் எடுத்த படம். சென்னை தி.நகரில் உள்ள பிரின்ஸ் ஜுவல்லரி பனகல் பார்க் எதிரில் உள்ள டிஜிடல் பேனர்)
கொஞ்சம் தலைகிறுக்கு ஏறி வலைப்பதிவு தேர்தலில் நிற்கலாம் என்று இருக்கிறேன். தேர்தல் அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கிறேன். அது நாளை..
ஒரு அல்ப சந்தோஷம். என்னை பற்றி குறிப்புக்களை கீழே தொகுத்திருக்கிறேன். படிக்கணும் என்று அவசியம் இல்லை.
பாஸ்டன் பாலா....
இட்லி-வடை: அலுவல் சம்பந்தமான க்ளையண்ட் விசிட்டில் தமிழ் நண்பரை முதன்முதலாக சந்தித்தேன். வழக்கமான வானிலை, போக்குவரத்து உசாவலுக்குப் பின் தமிழகத் தேர்தல் குறித்து பேச்சு திரும்பியது. என்னுடைய வலைப்பதிவு(கள்) குறித்தும் சிறிது கோடிட்டேன். 'எனக்கு இந்த ப்ளாக் எல்லாம் தெரியாது... இண்ட்ரெஸ்ட் கிடையாது. நீங்க இட்லி-வடை வெப்சைட் படிப்பது உண்டா?' என்று பேச்சை முடித்துக் கொண்டார்.
தேர்தல் 2006-இல் தமிழ்ப்பதிவுகளின் வலைத்துடிப்பு.
கில்லியில்...
வலையுலகைப் பொறுத்த வரை, நடந்து முடிந்த தேர்தலிலே, வெற்றி பெற்றது திமுக கூட்டணியுமல்ல, அதிமுக கூட்டணியுமல்ல. இட்லிவடைதான்!
கடந்த நூறு நாட்களாக, தேர்தல் குறித்த செய்திகள் அனைத்தையும், ஒன்று விடாமல், வலைப்பதிவு வாசகர்களுக்கு சுடச்சுட அளித்து, வலைப்பதிவு என்கிற தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை பிற ஊடகங்களுக்கும் எடுத்துச் சொல்லி, கலக்கோ கலக்கென்று கலக்கிய
இட்லிவடைக்கு,
கில்லியின் மனமார்ந்த பாராட்டுக்கள்
தேன்கூட்டில்....
மூன்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் வலைப்பதிவுலகில் தனது நகைச்சுவை எழுத்தால் பலரை கவர்ந்து வருகிறார் இவர். 'தமிழர்கள் சாப்பாட்டு பிரியர்கள். எனவே தான் எனது வலைப்பதிவிற்கு 'இட்லி வடை', என்று பெயரிட்டுள்ளேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இட்லி வடை - எழுதும் வலைப்பதிவர் யார் என்பது நீண்டகாலமாகவே இருந்து வரும் சுவாரசியமான ஒரு கேள்வி. சமீபகாலமாக இன்னமும் அதிகமாகவே!
நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் நேரத்தில் இவரது வலைப்பதிவைப் பார்க்காதவரே இல்லை என்று சொல்லலாம். செய்திகளை முந்தித் தருவதில் இணையத்தின் அனைத்து ஊடகங்களையும் பின்னுக்குத் தள்ளியவர். தமிழ் இணைய வாசகர்கள் பலரையும் வேறு இணையதளங்கள் பார்க்கும் தேவையில்லாமல் செய்து விட்டவர்!
தமிழ் வலைப்பதிவுகளைப் பொறுத்த வரை தேர்தல் வலைப்பதிவுகளில் இட்லி வடை ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
முடிந்தவரை சார்பு நிலை கொள்ளாமல் செய்திகளை மட்டும் கொடுத்ததுடன், முடிவுகளை அறிவிப்பதிலும் இட்லி வடை சுட சுடத்தான்! அச்சு மற்றும் செய்தி ஊடகங்களிலும் கவனம் பெற்று வலைப்பதிவுகளின் பக்கம் ஏராளமான வாசகர்களை கவர்ந்து இழுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த முறையில் 'தேர்தல் 2006'-ஐ கவரேஜ் செய்த 'இட்லி வடை'-க்கு, வாழ்த்துகளும், பாராட்டு்களும்!
மூக்குகண்ணாடி...
வலைப்பூவை பொறுத்த வரை இட்லி வடை எகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அடுத்த தேர்தலில் கட்சிகள் பிரத்யோக வலைப்பூவை ஆரம்பித்தால் கூட இட்லி வடையின் கவரேஜை பீட் பண்ண முடியாது போல. முடிந்தவரை சார்பு நிலை கொள்ளாமல் செய்திகளை மட்டும் கொடுத்தற்கும் ஒரு ஷொட்டு. Hats off இட்லிவடை! முடிவுகளின் கவரேஜையும் எதிர் பார்க்கிறோம்.Lazygeek.net....
For the superb minute by minute un-biased reporting /analysis on Tamil Nadu Elections 2006, Idly Vadai Weblog should be awarded a mid-term Indibloggies.prabhukrish.net....
Atleast I suggest we create a Tamil Bloggies and award the first one to Idly Vadai.
The winner in this election is IdlyVadai by a big margin. Not just the speed in which he/she updated the results. Interviews/manifesto details, defection gossip etc. You name it, IdlyVadai had it.DNA.com....
IdlyVadai. May your good work continue :)
Kerala blogs like Newkerala.-blogspot.com crank up the spice quotient by detailing political scandals, investigations against politicians, strikes and developments like pay revision of employees.Deccan Cronicle....
Serving up piping hot political news, Idlyvadai.blogspot.com and Hotmachihot.blogspot.com gives information on the latest deserters, newcomers and campaigning gaffes like the politician who used Hindi handbills to campaign in Tamil Nadu.
But the most interesting is Idlyvadai. blogspot.com and Hotmachihot. blogspot.com, which gives information on the latest deserters, newcomers and campaigning gaffes like the politician who used Hindi handbills to campaign in Tamil Nadu.“CNN-IBN....
"The Tamil Nadu elections are not just being discussed at tea shops and bus stands. For the first time ever in Indian politics, blogs might just have a say in the final results.
Sambharmafia, Idlyvadai and Hotmachihot - these are just some of the over 20 blogs that have come up in the last two months and are dedicated to the Tamil Nadu elections.
From serious analysis on seat sharing to poking fun at free colour TVs in English and Tamil, these blogs have them all. "


நன்றி: தினமணி










41 Comments:
கலக்கீட்டீங்க!!
மிக்க நன்றி!!
சிவபாலன் - முதல் நன்றிக்கு நன்றி :-)
சார், இன்னும் நிறைய இட்லி வடை போடுங்க. இப்ப எலக்ஷன் ஓவர். அடுத்து என்ன?
மீண்டும் வாழ்த்துக்கள் இட்லிவடை.
இந்த வாரம் முடிவுலே சொல்லலாமுன்னு தள்ளிப்போட்டது தப்பாப் போச்சு.
இப்படி எல்லாரும் முந்திக்கிட்டாங்களே, உங்களைப் பாராட்ட.
எலக்ஷன் செய்திகளையெல்லாம் 'சுடச்சுட' தந்தீங்க. அதுக்கே முதல்லே நன்றி சொல்லிக்கறேன்.
Hats off Friend!
.:dYNo:.
இட்லிவடை நானும் கொஞ்சம் அசந்துபோயிட்டேன், உங்க கவரேஜ் பாத்துத்தான். ஒவ்வொரு வலைப்பூவும் நூறு, இருநூறு பேஜ்வியூ தாண்டவே கஷ்டப்படும் சமயத்தில் ஒங்க வலைப்பதிவு அன்னைக்கு ஒரே நாளில் 13,000 பேஜ்வியூக்கு மேலே, யப்பா... தமிழ்வலைப்பதிவுக்கு எவ்வளவு பெரிய வாசகர் வட்டம் இருக்குதுன்னு அப்பதான் தெரிஞ்சது. அசத்திட்டீங்க.
//பல பின்னூட்டங்களில் என்னை பாராட்டி கருத்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றி. தனியாக ஒவ்வொருவருக்கும் பின்னூட்டத்தில் நன்றி சொல்ல ஆசை தான், ஆனால் மாயவரத்தானை நினைத்தால் பயமாக இருக்கிறது.//
ஆஹா... இது என்ன கலாட்டா?!
//கொஞ்சம் தலைகிறுக்கு ஏறி வலைப்பதிவு தேர்தலில் நிற்கலாம் என்று இருக்கிறேன். // இதற்கு பிறகு 'மாயவரத்தானை நினைத்தால் பயமாக இருக்கிறது' என்று சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்....ஹிஹி.. :D
'வலைப்பதிவு என்றால் தெரியாது; ஆனால், இட்லி-வடை போன்ற தமிழ் வெப்சைட்கள் தெரியும்' என்று தமிழ்ப்பதிவுகளுக்கு புதிய வாசகர் வட்டத்தைத் தேடித் தந்த உங்களுக்கு நன்றிகள்.
vaazhthukkal. thodarattum ungal narpani.
இட்லிவடை,
உங்கள் தேர்தல் பதிவுகள் அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்.
-ஷங்கர்.
பாஸ்டன் பாலா,
இட்லிவடையை என்ற இந்த பதிவை உங்களுக்கு நீங்களே பாராட்டிக் கொள்கிறீர்கள்! வெக்கமா இல்லை?
மண்டையில் முடியும் மூளையும் இல்லாத பிரகாஷ் கில்லியில் உங்களைப் பாராட்டியது நீங்கள் அவரின் நண்பர் என்பதால்.
தேன்கூட்டில் உங்களை இருமுறை வாழ்த்தியது உங்களுக்கும் தேன்கூட்டுக்கும் உள்ள நட்பு. நீங்கதானே தமிழோவியத்துடன் கட்டுரைப் போட்டிக்கு முன்னே நின்று இணணப்பு பாலம் செய்தீர்கள்!
தமிழ்மணம் காசி உங்களைக் கூப்பிட்டிருக்க வாய்ப்பு இல்லை. மதியால் நீங்க நட்சத்திரம் ஆனீர்கள்!
எது எப்படியோ நடுநிலையான அரசியல் பதிவுகளைக் கொடுத்தீர்கள். வாழ்த்துக்கள்@!
அதிமுக தோற்றபின்னரும் குலைத்துக் கொண்டிருக்கும் மாயவரத்தான் ரமேஷ்குமாருக்கு எல்லாம் பயப்படாதீங்க சார். பேயோட்ட நாங்கள் இருக்கிறோம்.
வாழ்த்துக்கள் இட்லி வடை
You deserve it :-)
மீண்டும், மீண்டும், மீண்டும் வாழ்த்துகள்!!
Idlyvadai was really OK. Hotmachi hot was plain pro-ADMK urban-machi congregation - what\'s the big deal about it?
தொடர்ந்து சூடான இட்லிவடைகளைப் பறிமாறிக்கொண்டே இருங்கள்..
சின்ன Suggetion (பரிந்துரை?!!): ஒருமுறை Proof Reading (எழுத்துப் பிழை திருத்தம்) செய்து போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்...
அடுத்து பதவியேற்பு இருக்கே.. கவர் பண்ணப் போகலையா?? இப்போவே நன்றின்னு போட்டுட்டீங்க?!!!
ஆங், சொல்ல மறந்துட்டேனே, வாழ்த்துக்கள் :).. சூப்பரா இருக்கு, இன்னும் ரெண்டு இட்லி வைங்க :)
பொன்ஸ் - தூக்க கலக்கத்தில் எழுதியது. பிழைகளை சொல்லுங்கள் உடனே திருத்துகிறேன். நன்றி
முத்து,
நீங்கள் சொல்லுவது சரிதான். தினமும் 1000 - 2000 ஹிட் வரும். தேர்தல் முடிவு அன்று 14500 ஹிட் வந்தது எனக்கே கொஞ்சம் ஆச்சரியம் தான்.
Also blogger enabled spam control automatically since there was minute by minute update :-)
வாழ்த்துக்கள்
//தினமும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக்கொண்ட படத்தில் உள்ளஅரசியல் தலைவர்களுக்கு ஒரு மிக பெரிய நன்றி.// கூடவே மாயவரத்தானையும், ஜெயகுமாரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
முடிந்தவரை நடுநிலையாக இருந்தீர்கள்.இன்றைய சூழ்நிலையில் அது கடினம்.அதை அழகாக செய்தீர்கள்.
ரிசல்ட் நாளில் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம்.ஆனால் பல பிரச்சினைகளையும் சொன்னீர்கள்.
ஓவர் ஆல் கிரேட் ஜாப்.
வெங்காயம்,
உங்கள் பதிவு(களி)ல் நீங்கள் (பற்)பல பெயர்களில்(அங்கு வேறு யார் பின்னூட்டப்போகிறார்கள்) பின்னூட்டிக்கொண்டிருப்பது அடிக்கடி மறந்துவிடுகிறதோ?.
ஆட்சி அமைக்கவே வாய்ப்பு குறைவு என்பது ஆரம்பத்தில் இருந்த நிலை. இன்றோ ஆட்சி அமைக்கிறார்கள். ஆனாலும் அவ்வளவாக மகிழ்ச்சி இல்லை அவர்களிடத்தில், தனிப் பெருமான்மை கிடைக்கவில்லையல்லவா. என்ன காரணம். அதிகம் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டது.
நன்றி நவிலல்ல, இதென்னடா அபத்த பின்னூட்டம், தேர்தல் முடிவுகள்ல, இந்த ஆளுக்கு ஏதாவது ஆயிடுச்சான்னு பார்க்கறீங்களா, இருங்க விஷயத்துக்கு வர்றன்.
ஆரம்பத்திலிருந்தே அற்புதமா, அதிரடி செய்திகளையும், ஆச்சர்ய செய்திகளையும், வலைப்பதிவுகளிலேயே முதலாவதாக எனும் செய்திகளையும், சூடாகவும், சுவையாகவும், நகைச்சுவையாகவும் தந்து கொண்டிருக்கும் வடையாரது வாரம் இந்த தேர்தல் வாரம் என்றவுடன், நாங்கள் அதிக எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டுவிட்டோம். ஆதலாலேயே, இயற்கை சதியையும் மீறி (அதாங்க, கரெண்ட் கட்டும், டிவிக்களின் லொள்ளும்), நீங்கள் சிறப்பாக செயல்பட்டும் கூட, இன்னும் நன்றாகச் செய்திருக்கலாமென நினைக்கிறோம். (லிங்க் ஓகேவா?)
விஜி ஜெயித்ததை, நீர் மாற்றி, சரியாகப் போடும் வரை, அதை நம்பாத தீவிர விஜி ரசிக நண்பர்கள், உமது வீச்சுக்கு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதங்கள்.
குமுதம்;துக்ளக் கருத்துக் கணிப்பிடையே!;ஆழும் கட்சியை மீண்டும் அமர்த்தும் பழக்கம் நமக்கதிகமில்லை. அதனால் மேற்கூறிய இரு பத்திரிகைகள் கணக்கை தள்ளி வைத்துவிட்டு.உங்கள் தகவல்களைக் கொண்டு; திமுக கூட்டணி வருமேனும், முடிவுக்கு வரக்கூடியதாக இருந்தது.வெகு சிறப்பாகத் தகவல்களை உடனுக்குடன் தந்தீர்கள். எங்களைப் போல் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு மிக உதவியாக இருந்தது. நன்றியுடன் வாழ்த்துக்கள்.
யோகன்
பாரிஸ்
great job! welldone!!
what is the nezt project??
Election சூப்பர் ஸ்டார் விஜயகாந்த்..
But
Election Coverage சூப்பர் ஸ்டார் இட்லி வடை..
Excellent and unbiased election coverage...!! Keep it up. Expecting many more such wonderful posts from you..
Thank you..!!!
//
Hotmachi hot was plain pro-ADMK
//
I would not agree with this. Have you read the post, which Mikeset Munusamy posted about Jayalalitha's interview in Jaya TV by Ravi Bernard..??
வாழ்த்துக்கள் இட்லி-வடை.
பல உபயோகமான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி....
அருமையான, அசத்தலான சேவை, கலக்கிபுட்டீங்கய்யா. வாழ்த்துகள், வாழ்த்துகள், வாழ்த்துகள்.
அப்படியே விட்டுவிடாமல்,தொடரட்டும்
தங்கள் அரசியல் ஆய்வு.
அன்புடன்
துபாய் ராஜா.
இட்லிவடை,
சிறப்பான தேர்தல் பதிவுகளுக்குப் பாராட்டுக்கள்.
தமிழ்மண நட்ச்ச்த்திரமாக ஒத்துக்கொண்டத்ற்கு நன்றி.
மேலும் தொடர்ந்து சுடச்சுட தகவல்களை வழங்கிவர வாழ்த்துக்கள்.
//வெங்காயம்:தமிழ்மணம் காசி உங்களைக் கூப்பிட்டிருக்க வாய்ப்பு இல்லை. மதியால் நீங்க நட்சத்திரம் ஆனீர்கள்!//
படித்தேன் ரசித்தேன்:-))
காசி - மிக்க நன்றி.
துபாய் ராஜா, மாயவரத்தான், பரஞ்சோதி, ஸ்ருசல், ஸ்ரீராம், தருமி, johan-paris, krishna, மிளகாய், முத்து, sk, ramesh, குமரேஷ், இலவசக்கொத்தனார், கால்கரி சிவா - உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
எல்லோரும் சொல்லிவிட்ட பிறகு கடைசியாக நன்றி நவில வந்திருக்கிறேன். ஆனாலும் இட்லிவடை செம ஹாட்மச்சிஹாட்:))
உங்கள் செய்தி சேகரிப்பும் மெலிதான நக்கலும் சிறப்பாக இருந்தது. இந்தவார நட்சத்திரம் மட்டுமல்ல, தமிழ்மணத்தின் சிறப்பு நட்சத்திரமாக விளங்கினீர்கள். ஒருவையொருவர் அடித்துக் கொள்ளும் இவ்வலையுலகில் அனைவரும் பாராட்டும்படியான நடுநிலையான செய்தியளித்தல் ஒரு சாதனையே.
மணியன் - மிக்க நன்றி.
இட்லி வடை! மணியன் சொன்னதை வழி மொழிந்து விடுகிறேன். சன் டீவி மட்டுமே பார்க்க கிடைக்கும் எனக்கு, உங்களுடைய பதிவுகள் சுட சுட சரியாக கிடைத்தது. மிக்க நன்றி
சரியான நேரத்தில் உங்களை நட்சத்திர பதிவாளர் ஆக்கிய தமிழ் மண நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள்.
உஷா - நன்றி. வந்து கொண்டிருக்கிறது என்னுடைய தேர்தல் அறிக்கை. பெண்களுக்கு ஸ்பெஷலாக ஒரு பாயிண்ட் உண்டு.
உங்கள் நட்சத்திர வாரத்தில் என் வேண்டுகோளை ஏற்று ஒரு நகைச்சுவை பதிவு போட்டதற்கு நன்றி!
(பின்ன?! இந்த தேர்தல் களேபரத்துல என் பின்னூட்டத்தையும் கண்டுக்கிட்டீங்கன்னு நான் வேறெப்படி வெளிய சொல்லிக்கறதாம்! :) )
இளவஞ்சி - வேறு ஏதாவது வேண்டுகோள் இருந்தால் சொல்லுங்கள் :-)
Post a Comment