பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 29, 2006

ஜயேந்திரர் - கோ.சி. மணி சந்திப்பு - கலைஞர் அதிர்ச்சி!

காஞ்சி சங்கராச்சாரியாரின் பாதுகா பட்டாபிஷேக மஹோத்சவ வைபவம் கும்பகோணம் ஸ்ரீசங்கர மடத்தில் மே 27, 28 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன. நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக ஜயேந்திரர் மே 26-ம் தேதி இங்கு வந்தார்.

சனிக்கிழமை நடைபெற்ற விழா மற்றும் பாதுகா பட்டாபிஷேக ஊர்வலத்தில் கலந்து கொண்டு அருளாசி வழங்கிப் பேசினார் ஜயேந்திரர்.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை ஆயுஷ்ய, நவக்கிரக, ஸ்ரீசுக்த, ஸ்ரீபுருஷ ஸýக்த ஹோமங்கள், சஹஸ்ர போஜனம், வேதபாஷ்யம், வேதாந்த விசாரம் உள்ளிட்ட வேத வைபவங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள், வேத விற்பன்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை கும்பகோணத்துக்கு வந்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி. மணி மற்றும் திமுகவினர் மடத்துத்தெருவில் உள்ள சங்கர மடத்துக்கு சென்றனர். அங்கு அமைச்சரை மகாசுவாமிகளின் மஹோத்சவ வைபவ விழாக் குழுவினர் வரவேற்றனர்.

மாமுனிவரின் பாதுகா பட்டாபிஷேக ஹோம நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தொடர்ந்து மடத்தில் தங்கியிருந்த ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறைக்குச் சென்றார். அங்கு ஜயேந்திரருக்கு கோ.சி. மணி மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்தார். ஜயேந்திரரும் விழாக் குழு சார்பில் அமைச்சர் கோ.சி. மணிக்கு சால்வை அணிவித்து பழங்களைப் பிரசாதமாக வழங்கினார்.

அங்கு அமைச்சரும் ஜயேந்திரரும் சிறிது நேரம் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அமைச்சர் கோ.சி. மணி புறப்பட்டுச் சென்றார்.

ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது - கலைஞர்

காஞ்சி ஜெயேந்திரரை, திமுக அமைச்சர் கோ.சி.மணி சந்தித்தது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி, "எனக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இதுபற்றி அமைச்சரிடம் விளக்கம் கேட்கப்படும்' என்றார்.

கீ.விரமணி அறிக்கை:

வெட்கப்படுகிறோம் - வேதனைப்படுகிறோம்!

தமிழக அமைச்சர் கோ.சி. மணி அவர்கள் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்தித்துச் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான மாண்புமிகு கோ.சி. மணி அவர்கள் திடீரென்று அரசியலுக்கு வந்தவரல்லர்; திராவிடர் கழகத்திலிருந்து திமுகவுக்குச் சென்றவர்! அடிப்படையில் தன்னை ஒரு சுயமரியாதைக்காரர் என்று சொல்லிக் கொள்பவர்; அத்தகைய ஒருவர் சற்றும் எதிர்பாராத ஒரு செயலில் ஈ டுபட்டு இருப்பது வெட்கத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

அமைச்சர் கோ.சி. மணி சங்கராச்சாரியாரைச் சந்திக்கலாமா?

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சர°வதியின் ``பாதுகா பட்டாபிஷேகம்’’ கும்பகோணத்தில் மே 27, 28 தேதிகளில் நடைபெற்றிருக்கிறது. கும்பகோணம் தான் காஞ்சி மடத்துக்கு முன்னோடி; அந்தக் கும்பகோணம் மடமும் ஒரு காலத்தில் சிருங்கேரி மடத்தின் கிளையாக இருந்தது. பின்னர் பல தில்லுமுல்லு நடவடிக்கைகளின் காரணமாக காஞ்சிமடம் ஆதி சங்கரால் தோற்றுவிக்கப்பட்டது என்றும் கும்பகோணம் மடம் காஞ்சி மடத்தின் கிளை மடம் என்றும் கற்பிக்கப்பட்டது அந்த மடத்தில் மறைந்த சங்கராச்சாரியாருக்குப் பாதுகா பட்டாபிஷேகமாம். பாதுகா என்றால் மிதியடி அதாவது செருப்பு. அதற்கு ஒரு அபிஷேக விழாவாம் - அது எப்படியோ போய்த் தொலையட்டும்!

அந்த விழாவுக்கு வந்திருந்த, முதல் கொலை குற்றவாளியாக நீதிமன்ற முன் நிறுத்தப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சர°வதியாரை அமைச்சர் கோ.சி. மணி அவர்கள் சந்தித்துச் சால்வை அணிவித்து மரியாதை செய்தாராம்.

பதிலுக்கு அமைச்சர் கோ.சி. மணி அவர்களுக்குச் சங்கராச்சாரியார் சால்வை அணிவித்து, பிரசாதமாக பழங்களை வழங்கினாராம்.

(அதைக்கூட நேரிடையாக சங்கராச்சாரியார் செய்ய மாட்டார் - தன் சீட கோடி ஒருவர் மூலம்தான் செய்திருப்பார்)

அதன்பின் ஜெயேந்திரரும் அமைச்சரும் சிறிது நேரம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தனர் என்று இன்றைய `தினமணி’ ஏடு (29.5.2006) இரண்டு பத்தி செய்தி வெளியிட்டுள்ளது. `இந்தியன் எக்°பிர°’ ஏடு புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

கொலை வழக்கில் குற்றவாளியல்லவா?

சின்ன காஞ்சிபுரம் தெற்கு மாட வீதியைச் சேர்ந்த ஆனந்த சர்மாவின் மகனும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளருமான சங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளிதான் இந்த காஞ்சி ஜெயேந்திரர். இவர்மீது இ.பி.கோ 302, 120-பி, 34, 201 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கின் காரணமாக இதே சங்கராச்சாரியார் 61 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டும் இருந்தார்.

இத்தகைய கிரிமினலை அரசு பொறுப்பில் உள்ள ஒரு அமைச்சர் சந்தித்துச் சால்வை அணிவிப்பதும், தனியாக உரையாடுவதும் சரியானது தானா? மக்கள் மத்தியில் தேவையில்லாத சந்தேகங்களையும், யூகங்களையும் அவ நம்பிக்கைகளையும் பெரும் அளவில் இது உருவாக்காதா? இந்த ஆட்சிக்கே இது களங்கத்தை உருவாக்காதா?

புதிய ஆட்சி உருவானதற்குப் பிறகு, சங்கராச்சாரியார் வழக்கு சரியாக நடத்தப்படுமா என்கிற `புரளிகள்’ ஒரு பக்கம் காற்றில் கலந்து வந்து கொண்டு இருக்கின்றன. அண்ணா திமுக ஏடேகூட சந்தேகங்களைக் கிளப்பி இருக்கின்றது.

அரசியல் ரீதியாகவும் சரியானது தானா?

இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த ஒரு முக்கிய அமைச்சர் சங்கராச்சாரி யாரைச் சந்தித்திருப்பது சட்டப்படியும் நியாயப்பட்டியும், கொள்கைப்படியும் சரியானதுதானா? அந்த வதந்தி உரம் போடுவது போன்றதல்லவா?

அரசியல் ரீதியாக எடுத்துக் கொண்டாலும் சரி, சவுண்டிப் பார்ப்பானிலிருந்து சங்கராச்சாரியார் பார்ப்பனர் வரை கலைஞரையும், திமுகவையும் எப்படியும் ஒழித்துக் கட்டியே தீருவது என்று பூணூலை உருவிக் கொண்டு நின்றிருக்கின்றனர்.

திமுகவுக்கு எதிராகவே வாக்களித்தனர் (ஏன், கும்பகோணத்திலேயே கூட அந்த அனுபவம் மாண்புமிகு அமைச்சருக்குக் கிடைத்திருக்குமே!)

இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் சங்கராச்சாரியாரைச் சந்தித்து மரியாதை காட்டுவது உகந்ததுதானா?

கலைஞருக்குச் `சாபம்’ விட்டவர் தானே இந்த ஜெயேந்திரர்?

``சங்கராச்சாரி-யார்?’’ என்ற தலைப்பில் சென்னையில் 10 நாள்கள் தொடர் சொற்பொழிவாற்றினேன்.

அந்தச் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டிய அவசரம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

``கருணாநிதியை எடுத்துக் கொள்ளுங்கள். என்னைப்பற்றி எது வேண்டுமானாலும் சொல்லட்டும்; ஆனால் எனது பீடத்தை எதற்காக அவர் இழிவுபடுத்திப் பேச வேண்டும்? எனக்கு ரொம்ப வருத்தம். நான் என்ன செய்ய முடியும்? நான் வழிபடும் ஆண்டவனிடத்திலே அவருக்கு (கலைஞருக்கு)த் தண்டனை அளிக்கும்படி முறையிட்டுக் கொண்டேன். அப்படியே கருணாநிதியும் படுத்துவிட்டார்’’ என்று சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில், கலைஞர் அவர்கள் உடல் நலம் இல்லாத போது, பண்பற்ற முறையில் தனது கடுமையான எதிரியாகக் கருதிக் கூறியதை கண்டு `வெகுண்டு’தான் அந்தவுரையை நிகழ்த்தினேன் (1983)

கலைஞருக்கு நோய் ஏற்பட வேண்டும் என்று தாம் நம்பும் ஆண்டவனித்திலே பிரார்த்தனை செய்த ஒருவரைச் சந்தித்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்துவது, அவர் சார்ந்த கட்சிக் கண்ணோட்டத்திலும் சரியானதுதானா?

கொள்கைப்படிதான் சரியா?

கொள்கைக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சங்கராச்சாரியாருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் - என்ன உறவு இருக்க முடியும்?

சிருங்கேரி சங்கராச்சாரியார் தம்மைச் சந்திக்கும்படி தந்தை பெரியாரை முகம் (கடிதம்) போட்டு அழைத்தாரே - தந்தை பெரியார் சந்தித்ததுண்டா? காஞ்சிபுரத்தில் தானே அண்ணா இருந்தார்? ஒரே ஒரு முறையாவது சங்கராச்சாரியாரை - அண்ணா சந்தித்து இருப்பாரா?

அந்த வகையில் கொள்கைக் கண்ணோட்டப்படி பார்த்தாலும் மாண்புமிகு அமைச்சர் கோ.சி. மணி அவர்கள் செய்தது ஏற்றுக் கொள்ளத் தக்கதுதானா?

திமுக அமைச்சர் ஒருவர் தீ மிதித்தார் என்பதற்காக முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அதனைக் காட்டுமிராண்டித்தனம் என்று கண்டிக்கவில்லையா?

மூத்த அமைச்சரும், திராவிடர் கழகம் தொட்டு பொது வாழ்வில் பங்கு கொண்டவருமான மாண்புமிகு கோ.சி. மணி அவர்களுக்கு இது தெரியாதா?

இதற்கு என்ன சமாதானம் தான் கூற முடியும்?

திமுக ஆட்சி அமைந்து அடிப்படையான கொள்கை அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக அணி வகுப்பு வரும் ஒரு காலகட்டத்தில், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஒரு நேரத்தில், இப்படி ஒரு அபவாதமா - ஒரு அமைச்சர்மூலம் சறுக்கலா?

வெட்கம்! வேதனை!! வன்மையான கண்டனத்திற்குரியது!

முதல் அமைச்சர் எச்சரிக்கட்டும்!

இதுபோன்ற தவறு - இனி நடக்காதவாறு முதல் அமைச்சர் அவர்கள் கண்டிப்பாக எச்சரிக்க வேண்டும். இதுவே தொடக்கமானதாகவும், கடைசியானதாகவும் இருக்கட்டும்!

மக்கள் நல வளர்ச்சிக்கென்று இந்த ஆட்சிக்குப் பல திட்டங்கள் இருப்பதுபோலவே, திமுக ஆட்சிக்கென்று அடிப்படையான கொள்கைகள் உண்டே - அவைதானே அடிப்படைப் பலம்! அதனை ஆட்டம் காணச் செய்ய இடம் கொடுக்கலாமா? அமைச்சர்களும், தோழர்களும் சிந்திப்பார்களாக! இப்படி நமது அரசின் அமைச்சர் பற்றி எழுதும்போது மிகுந்த மன வலியுடன்தான் எழுதுகிறோம்.

முகாம்: தஞ்சை

தலைவர், திராவிடர் கழகம்.

( லிங்க் கொடுத்த Ravi Srinivasக்கு நன்றி )

கோ.சி.மணி விளக்கம்:

தேர்தல் நேரத்தில் சங்கரமடத்துக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களை திமுகவுக்கு ஓட்டு போட கேட்டுக் கொண்தாகவும், தனது வேண்டுகோளை ஏற்று திமுகவுக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்தவர்களுக்கு நன்றி சொல்வதற்காக மீண்டும் மடத்துக்கு சென்ற நேரத்தில் அங்கு இருந்த ஜெயேந்திரரை சந்திக்க நேர்ந்துவிட்டதால் அவருக்கு சால்வை போர்த்தியதாகவும் கோ.சி.மணி கூறி இருக்கிறார்.

26 Comments:

ENNAR said...

நாடு விட்டு நாடு சென்று வைகே புலித்தலைவரை காண வில்லையா? அதைவிடாவா கோசிமணி தவறு செய்த விட்டார்?

G.Ragavan said...

கோ.சி.மணி அவரைப் பார்ப்பதும் பேசுவதும்...தனிப்பட்ட விஷயம். அதைக் கண்டு ஏன் கருணாநிதிக்கு ஆச்சிரியமும் அதிர்ச்சியும் உண்டாக வேண்டும்!

johan -paris said...

அடுத்த நாள் தனக்கு என்ன? நடக்குமென்று தெரியாமல்; கம்பியெண்ணிக் கஞ்சி குடிச்சவரிடம்; இன்னும் ஆசி பெறும் கூட்டம்.
"நெஞ்சு பொறுக்குதில்லை"
யோகன் -பாரிஸ்

Anonymous said...

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

இந்திர குமாரி வாழ்க
சேடப்பட்டி முத்தையா வாழ்க

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

ஆட்சியில் பங்கு வேண்டும் அல்லது வேட்டி உருவப்படும்.

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

எல்லோரும் மனைவி - துணைவி வைத்து தமிழர் பண்பாடு காக்க வேண்டும். இரு பெண்டாட்டி இல்லாதவன் தமிழன் அல்ல.

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

இந்தி தெரிந்தால் மட்டுமே, அவன் சுத்த தமிழனாக இருந்தாலும் மந்தியாக முடியும்... உதாரணம் தயாநிதி

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

இந்தி தெரியாமல் இருந்தால் மட்டுமே, அவன் சுத்த தமிழனாக இருந்தாலும் மந்தியாக முடியும்... உதாரணம் ஸ்டாலின்

கோ சி மணி கோவிலுக்கு போனதற்கு விளக்கம் சொல்லவேண்டும். தலைவர் குடும்பமே கோவிலுக்கு போனதற்கு எல்லோரும் வாய மூடி கொள்ளவேண்டும்.

ஆ கொல்றாங்க !!!
ஆ கொல்றாங்க !!!

chandar said...

//"எனக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இதுபற்றி அமைச்சரிடம் விளக்கம் கேட்கப்படும்'//

அமைச்சர் சொல்லும் விளக்கம் என்னவாக இருக்கும். தெரிஞ்சிக்கலைனா மண்டை வெடிச்சுடும் போல இருக்கே!

ravi srinivas said...

Read what veeramani has said
in viduthalai.com
Who knows Jayendrar might have
helped Mani to win in the elections :). In any case
Mani could always say it was a
courtesy call :)

ஜெயக்குமார் said...

ஜெயேந்திரரை அவர் சம்பத்தப்பட்டுள்ள கொலை வழக்கில் இருந்து விடுவிக்க நடந்த பேரமாக கூட இருக்கலாம்.
பக்தி, பழம் எல்லாம் ஒன்றும் இருக்காது!. ஜெயேந்திரருக்கே அது இல்லாத போது நம்ம மணிக்கு மட்டும் இருந்துவிடப்போகுதா என்ன?

gosthoso said...

//நாடு விட்டு நாடு சென்று வைகே புலித்தலைவரை காண வில்லையா? அதைவிடாவா கோசிமணி தவறு செய்த விட்டார்?//

புலித்தலைவர் உயிரைக் (தமிழனுக்காக)கொடுப்பவர். ஜெயேந்திரர் உயிரை எடுப்பவர்.தயவு செய்து அந்த (புலித்தலைவர்) தியாகியை எவரிடமும் ஒப்பிடாதீர்.

Anonymous said...

//கோ.சி.மணி அவரைப் பார்ப்பதும் பேசுவதும்...தனிப்பட்ட விஷயம். அதைக் கண்டு ஏன் கருணாநிதிக்கு ஆச்சிரியமும் அதிர்ச்சியும் உண்டாக வேண்டும்//

ஒரு வேளை எல்லோருக்கும் தெரிந்துவிட்டதே என்ற பயமோ.அம்மா இது பற்றி சட்டசபையிலே கெள்வி எழுப்ப கூடும்.

Anonymous said...

எம்மக்களின் விடுதலைக்கான அறப்போராட்டத்தை அடுத்த தளத்திற்கு எடுத்த செல்வதும் கட்டுடைப்பதுமான நிகழ்வுகளைக்கூட திரித்து இனமான தலைவர் கருணாநிதிக்கு களங்கம் விளைவிக்க முற்படும் இந்த பார்ப்பனீய பிரச்சாரத்தை கடுமையாக எதிர்க்கிறோம்.

-இவண்,
அண்ணன் கோ.சி.மணிக்கு ஆதரவு தெரிவிக்கும்,
ராகுல் டிராவிட் தமிழர்கள் கூட்டமைப்பு.

gosthoso said...

//கோ சி மணி கோவிலுக்கு போனதற்கு விளக்கம் சொல்லவேண்டும். தலைவர் குடும்பமே கோவிலுக்கு போனதற்கு எல்லோரும் வாய மூடி கொள்ளவேண்டும்//

தலைவர் வழி தனி வழி

Anonymous said...

//அமைச்சர் சொல்லும் விளக்கம் என்னவாக இருக்கும். தெரிஞ்சிக்கலைனா மண்டை வெடிச்சுடும் போல இருக்கே//

கவலை வேண்டாம்.அமைச்சர் கருணாநிதியை மாட்டிவிட மாட்டார்.

gosthoso said...

//பக்தி, பழம் எல்லாம் ஒன்றும் இருக்காது!. ஜெயேந்திரருக்கே அது இல்லாத போது நம்ம மணிக்கு மட்டும் இருந்துவிடப்போகுதா என்ன? //

நம்ம மணி(கோ.சி) மணிக்காக போயிருக்கலாம்.நம்ம இன்னொரு மணி(வீர) இது பற்றி என்ன நினைக்கிறார்.

Idly Vadai said...

திரவிட தலைவர் கீ.விரமணி அறிக்கை - அப்டேட்.

Agent 8860336 ஞான்ஸ் said...

ஆக.... கோ.சி.மணி அவர்கள் தானே முன்வந்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார் என்பது அடுத்த செய்தி இல்லையா!

இந்த ஆட்சி 5 வருஷம் தாங்குமா? இல்ல பிரச்சன வருமான்னு பிரஸ்னம் கேக்க அனுப்பப்பட்டிருந்திருப்பாரோ!

;-)

Idly Vadai said...

கோ.சி.மணி விளக்கம் அப்டேட்.

அருண்மொழி said...

ராகவன்,

//கோ.சி.மணி அவரைப் பார்ப்பதும் பேசுவதும்...தனிப்பட்ட விஷயம். அதைக் கண்டு ஏன் கருணாநிதிக்கு ஆச்சிரியமும் அதிர்ச்சியும் உண்டாக வேண்டும்! //

கோ.சி.மணி ஒரு அமைச்சர். அமைச்சராக இருப்பவர் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சந்தித்து சால்வை போர்த்துவது சரியல்ல.

Anonymous said...

//சிருங்கேரி சங்கராச்சாரியார் தம்மைச் சந்திக்கும்படி தந்தை பெரியாரை முகம் (கடிதம்) போட்டு அழைத்தாரே //

இது தெரியாதே. யாராவது பதிவு போடுங்களேன்.

G.Ragavan said...

// ராகவன்,

//கோ.சி.மணி அவரைப் பார்ப்பதும் பேசுவதும்...தனிப்பட்ட விஷயம். அதைக் கண்டு ஏன் கருணாநிதிக்கு ஆச்சிரியமும் அதிர்ச்சியும் உண்டாக வேண்டும்! //

கோ.சி.மணி ஒரு அமைச்சர். அமைச்சராக இருப்பவர் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சந்தித்து சால்வை போர்த்துவது சரியல்ல. //

உண்மைதான் அருண்மொழி. இந்த வாதம் நியாயமானதாகப் படுகிறது.

அமிழ்து said...

கோ. சி. மணி சாதாரண மணியாக சந்த்திருந்தால் ஒன்றும் இல்லை. அமைச்சர் மணியாக சந்தித்ததனால் தான் பிரச்சனை!

Idly Vadai said...

நண்பர்களே! - தனிமனித தாக்குதல் வேண்டாமே!.

அருண்மொழி said...

//தேர்தல் நேரத்தில் சங்கரமடத்துக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களை திமுகவுக்கு ஓட்டு போட கேட்டுக் கொண்தாகவும், தனது வேண்டுகோளை ஏற்று திமுகவுக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்தவர்களுக்கு நன்றி...//

இது செம டமாசுபா!!!. அப்ப சங்கரமட ஊழியர்கள் ஒட்டுதான் கோ.சி.மணியார் வெற்றி பெற உதவியதா?.

ஓட்டு ரகசியமானது என நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் இவருக்கு ஓட்டு போட்டது எப்படி தெரியும்?

kanmani said...

இன்னமும் ஆசி பெற ஜெயேந்திரரிடம் போகும் மக்களை என்ன சொல்வது? நெஞ்சு பொருக்குதில்லையே.....

ஆசி வாங்கப் போனேன்...
நிறையப் பாவம் வாங்கி வந்தேன்!!!!

என்று பாட வேண்டியதுதான்....
இனி அவரைப் போய் பார்ப்பவர்களுக்கு பாவம் தான் சேரும்.
கே.சி. மணி நிலமையே சாட்சி.
சங்கர மடத்தின் பெருமை பெரியவருடன் தீர்ந்து விட்டது.

citizen said...

This incident shows that DMK is no longer a policy based party . Even the Chief minister is not a big exception

பதிவுலக விமர்சகன் said...

தங்கள் வலைப்பூவின் மீதான விமர்சனம் பார்க்க.

http://pathivulagam.wordpress.com/2006/05/30/vimarsanam001/

Idly Vadai said...

பதிவுலக விமர்சகன்,

படித்தேன். மிக்க நன்றி.
அன்புடன்,
இட்லிவடை