சிறப்புப் பேட்டி - சோ
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்தும், முதல் முறையாகத் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படப்போவது குறித்தும் 'துக்ளக்' ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான சோவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
"தி.மு.க., அ.தி.மு.க. போன்ற எந்த பெரிய கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல், தமிழக மக்கள் வித்தியாசமான தீர்ப்பளித்திருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?"
"தமிழகத்தில் தி.மு.க. அமைக்கப்போகும் புதிய அரசாங்கத்தில், அதன் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்குமா அல்லது வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து ஆட்சியில் தி.மு.க-வை அமர்த்துமா என்பது இன்னும் முடிவாகாத நிலையில்தான் நான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். எப்போதும் ஒரு தேர்தல் முடிவு வெளிவந்துவிட்டால், அதுதான் மக்களின் மனநிலை என்ற கருத்து நிலவுகிறது. அது தவறு. இந்தத் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் வேண்டும் என்று எந்த வாக்காளரும் ஓட்டுச் சாவடிக்குப் போகவுமில்லை; ஓட்டுப் போடவும் இல்லை. அதேபோல், இந்தத் தொகுதியில் தி.மு.க-வுக்கு ஆதரவளிப்போம், அடுத்த தொகுதியில் தி.மு.க. கூட்டணிக்கு எதிர் அணியில் இருப்பவர்களுக்கு ஆதரவளிப்போம் என்றும் பெரும்பாலான வாக்காளர்கள் முடிவு செய்து ஓட்டுப் போடுவதுமில்லை. இப்படித்தான் ஆட்சி அமையவேண்டும் என்று மக்கள் திட்டமிட்டு ஓட்டுப் போட்டதினால் வந்த முடிவல்ல இது. இப்போது வந்திருக்கும் முடிவு எதேச்சையானது. ஆகவே, இப்படி முடிவு வரும்போது, மக்களை முன்னிறுத்தி இப்படிப்பட்ட கருத்துக்களை நாம்தான் பரப்புகிறோம்."
"தேர்தல் முடிவுகள் ஜெயலலிதாவுக்கும் அவரது கட்சிக்கும் சாதகமானதா... பாதகமானதா?"
"தி.மு.க-வைவிட அ.தி.மு.க. என்ற இயக்கம் வலுவானது என்பது இந்தத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க-வுக்கு இந்தத் தேர்தலில் அதன் கூட்டணிக் கட்சிகள் மூலம் சராசரியாக 22 சதவிகித ஓட்டுகள் கிடைத்திருக்கலாம். அதாவது, காங்கிரஸில் என்னதான் கோஷ்டிகள், சர்ச்சைகள் இருந்தாலும் தமிழகத்தில் அந்தக் கட்சிக்குப் பத்து சதவிகித ஓட்டுகள் இருக்கும். பா.ம.க-வுக்கு, குறைத்து மதிப்பிட்டாலும்கூட ஐந்து சதவிகித ஓட்டு வங்கி இருக்கும். இரண்டு கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கும் தமிழகத்தில் என்றுமே ஆறு சதவிகித ஓட்டு வங்கி இருந்து வருகிறது. இவற்றுடன் இந்தத் தேர்தலில் தி.மு.க-வை ஆதரித்த பல்வேறு அமைப்புகள், இயக்கங்களின் மூலம் ஒரு சதவிகிதம் ஓட்டு வங்கி சேர்ந்திருக்கும். ஆக, 23 சதவிகித ஓட்டு வங்கியை இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வைவிட, தி.மு.க. அதிகமாகப் பெற்றிருக்கிறது.
நடைபெற்று முடிந்திருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் சம பலத்தில் இருக்கும் கட்சிகள் என்ற நிலை இருக்குமானால், ஒட்டுமொத்த தொகுதிகளையும் தி.மு.க. அணிதான் பெற்றிருக்க வேண்டும். காரணம், அதனிடம்தான் கூட்டணி பலம் இருந்தது. ஆனால், கூட்டணி பலமே இல்லாமல் அ.தி.மு.க. மட்டுமே அறுபது இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு அ.தி.மு.க. தன் பலத்துடன் கூடுதலாக ஆறு சதவிகித ஓட்டு வங்கியைத் தனது கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து பெற்றிருக்கிறது. ம.தி.மு.க-வுக்கு நான்கு சதவிகிதம், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புக்கு இரண்டு சதவிகித ஓட்டு வங்கி, அதுவும் சில இடங்களில்தான். அந்தக் கட்சிகள் எட்டு இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.
இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஏற்பவர்கள், கலைஞரை ஏற்பவர்களைவிட அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த தோல்விக்குப் பிறகு, தனது சரிந்துபோன செல்வாக்கை மீண்டும் பெருமளவு ஜெயலலிதா நிமிர்த்தியிருக்கிறார். அடுத்து, இந்தத் தேர்தலில் சரியான கூட்டணியோடு ஜெயலலிதா தேர்தலைச் சந்தித்திருந்தால் மிகபெரிய வெற்றியை அடைந்திருப்பார். கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்தித்தது, ஜெயலலிதா செய்த தவறு என்பது என் கருத்து. அ.தி.மு.க., ம.தி.மு.க-வோடு மட்டுமில்லாமல், விஜயகாந்த் கட்சியோடும் கூட்டணி அமைத்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். தி.மு.க-வுக்கு அதன் கூட்டணி பலம் வெற்றிக்கு உதவியது.
அடுத்து, இலவச கலர் டி.வி., இலவச நிலம் என தி.மு.க. இலவச வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தபோது, அவர்களுக்குப் போட்டியாக ஜெயலலிதாவும் இலவசங்களை வாக்குறுதிகளாக அள்ளித் தெளித்திருக்கக் கூடாது. மாறாக, 'தி.மு.க. சொன்னதுபோல எதையும் அவர்களால் கொடுக்க முடியாது. நடைமுறைக்கு சரிப்பட்டு வராதவை இந்த இலவச அறிவிப்புகள். இலவசங்களைக் கொடுப்பது மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அழகல்ல' என்பது மாதிரியான பிரசாரங்களை ஜெயலலிதா செய்திருக்க வேண்டும். கலைஞரின் வாக்குறுதிகளுக்கு மக்களிடையே ஆரம்பத்தில் நம்பகத்தன்மை இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் போட்டி அறிவிப்புகள் பிற்பாடு அதை ஏற்படுத்திக் கொடுத்து விட்டன என்பது என் கருத்து."
"இந்தத் தேர்தல், விஜயகாந்த்தை அரசியல் கதாநாயகனாக நிர்ணயித்திருப்பதாகப் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. விஜயகாந்த் கட்சியை மக்கள் உண்மையிலேயே ஏற்றுக் கொண்டார்களா?"
"நான் அவரது கட்சிக்கு ஒரு ஸீட் வரும் என்று முன்பே சொல்லியிருந்தேன். கூடவே பல இடங்களில் மூன்றாவது இடத்துக்கு வந்திருப்பார், பல இடங்களில் டெபாஸிட் இழந்திருப்பார் என்றும் சொல்லியிருந்தேன். தொகுதிவாரியாக அவரது கட்சி எவ்வளவு ஓட்டுகளை வாங்கியிருக்கிறது என்ற விவரம் தற்போது என்னிடம் இல்லை. ஆனாலும், அவர் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வோடு கூட்டணி வைத்திருந்தால், கணிசமான எம்.எல்.ஏ-க்களோடு பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாகத் தமிழகத்தில் விளங்கியிருப்பார். அவரது கட்சியைப் பற்றிய எதிர்பார்ப்பும் பேச்சும் இந்தத் தேர்தலில் மக்களிடம் இருப்பது தெரிகிறது."
"சென்னையில் அ.தி.மு.க. கணிசமான இடங்களைப் பெற்று, தி.மு.க-வின் கோட்டையில் பெரிய விரிசலை ஏற்படுத்தி இருக்கிறதே?"
"சென்னை மக்கள் இந்த முறை அ.தி.மு.க-வுக்கு வாக்களித்ததற்கு முக்கிய காரணம், குடிநீர் பிரச்னையை அது கையாண்ட விதமும், அதற்கு தீர்வு தேடிக் கொடுத்ததும்தான். இதோடு, சென்னை மாநகரம் சுனாமியாலும், மழை வெள்ளத் தாலும் பாதிக்கப்பட்டபோது, அரசு இயந்திரம் ஓடோடி வந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டதையும் மக்கள் எண்ணிப்பார்த்து அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட்டிருப்பார்கள்."
"இந்தத் தேர்தலில் ம.தி.மு.க., அ.தி.மு.க-வுடன் இணைந்ததும், வைகோவின் பிரசார பாணியும்... அ.தி.மு.க-வுக்குப் பலமா, பலவீனமா?"
"வைகோவின் பிரசாரம், அ.தி.மு.க-வுக்கு மிகப் பெரிய அளவுக்குக் கைகொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ம.தி.மு.க. கூட்டணி சேர்ந்ததால் அ.தி.மு.க-வுக்கு ஓட்டு பலம் கூடும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கவில்லை."
"பா.ம.க-வுக்கு இந்தத் தேர்தல் பெரிய சறுக்கல் என்று வரும் விமர்சனங்களைப் பற்றி..?"
"என்னைக் கேட்டால், பா.ம.க-வுக்கு இந்தத் தேர்தல் மூலம் பெரிய முன்னேற்றமும் இல்லை... பின்னடைவும் இல்லை. கூட்டணி பலமில்லாமல் தேர்தலில் தன்னால் வெற்றிபெற முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை பா.ம.க. நிரூபித்திருக்கிறது."
நன்றி: ஜூனியர் விகடன்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, May 15, 2006
ஜெயலலிதா செய்த தவறு! - சோ பேட்டி
Posted by IdlyVadai at 5/15/2006 04:19:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











21 Comments:
//வைகோவின் பிரசாரம், அ.தி.மு.க-வுக்கு மிகப் பெரிய அளவுக்குக் கைகொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ம.தி.மு.க. கூட்டணி சேர்ந்ததால் அ.தி.மு.க-வுக்கு ஓட்டு பலம் கூடும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கவில்லை//
வைகோவை காளிமுத்துக்கு பதில் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்று சொல்கிறாரா ?
அட! அட! அட! நான் எதிர்ப்பார்த்தது அப்படியே கொடுக்கறீங்களே!!! மிக்க நன்றி இட்லி வடை.
//எப்போதும் ஒரு தேர்தல் முடிவு வெளிவந்துவிட்டால், அதுதான் மக்களின் மனநிலை என்ற கருத்து நிலவுகிறது. அது தவறு. இந்தத் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் வேண்டும் என்று எந்த வாக்காளரும் ஓட்டுச் சாவடிக்குப் போகவுமில்லை; ஓட்டுப் போடவும் இல்லை. அதேபோல், இந்தத் தொகுதியில் தி.மு.க-வுக்கு ஆதரவளிப்போம், அடுத்த தொகுதியில் தி.மு.க. கூட்டணிக்கு எதிர் அணியில் இருப்பவர்களுக்கு ஆதரவளிப்போம் என்றும் பெரும்பாலான வாக்காளர்கள் முடிவு செய்து ஓட்டுப் போடுவதுமில்லை. இப்படித்தான் ஆட்சி அமையவேண்டும் என்று மக்கள் திட்டமிட்டு ஓட்டுப் போட்டதினால் வந்த முடிவல்ல இது. இப்போது வந்திருக்கும் முடிவு எதேச்சையானது. ஆகவே, இப்படி முடிவு வரும்போது, மக்களை முன்னிறுத்தி இப்படிப்பட்ட கருத்துக்களை நாம்தான் பரப்புகிறோம்.//
இது நூற்றுக்கு நூற்றுக்கு சரியான கருத்து. நான் நினைத்ததை அப்படியே சொல்லியிருக்கார் சோ.
//ம.தி.மு.க. கூட்டணி சேர்ந்ததால் அ.தி.மு.க-வுக்கு ஓட்டு பலம் கூடும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கவில்லை//
எப்படியோ ஒரு திராவிட கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்பதை தனக்கே உரிய பானியில் செல்வதில் சோ சோர்ந்துவிடுவாரா என்ன ?
//எப்படியோ ஒரு திராவிட கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்பதை தனக்கே உரிய பானியில் செல்வதில் சோ சோர்ந்துவிடுவாரா என்ன ? //
Iduthan "Pannamarathula theil kottina...thennamarathula neri katratho..?"
ADMK is also an "dravaidan party only" right...?!
//ADMK is also an "dravaidan party only" right...?! //
எந்த பனைமரத்தில நெறி கட்டுதுன்னு தெரியல. என்ன இருந்தாலும் அதிமுக அம்மா தலைமேல இல்ல இருக்கு
அ.தி.மு.க திராவிட கட்சி என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்..
மூர்ச்சையானேன் பஜ்ஜி...
ADMK is dravidian party but who is their SUPREMO?
//அடுத்து, இலவச கலர் டி.வி., இலவச நிலம் என தி.மு.க. இலவச வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தபோது, அவர்களுக்குப் போட்டியாக ஜெயலலிதாவும் இலவசங்களை வாக்குறுதிகளாக அள்ளித் தெளித்திருக்கக் கூடாது. மாறாக, 'தி.மு.க. சொன்னதுபோல எதையும் அவர்களால் கொடுக்க முடியாது. நடைமுறைக்கு சரிப்பட்டு வராதவை இந்த இலவச அறிவிப்புகள். இலவசங்களைக் கொடுப்பது மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அழகல்ல' என்பது மாதிரியான பிரசாரங்களை ஜெயலலிதா செய்திருக்க வேண்டும். கலைஞரின் வாக்குறுதிகளுக்கு மக்களிடையே ஆரம்பத்தில் நம்பகத்தன்மை இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் போட்டி அறிவிப்புகள் பிற்பாடு அதை ஏற்படுத்திக் கொடுத்து விட்டன என்பது என் கருத்து."//
என்னுடைய கருத்தோடு மிகவும் ஒத்துப்போன கருத்து.
திமுக அறிவித்த பல சாத்தியமில்லாத, சுயநல நோக்கோடு உள்ள இலவச திட்டங்களை, வைகோ கடுமையாக விமர்சித்துக்கொண்டு இருக்கும் போது, அதற்கு மேலும் வலுச்சேர்க்காமல் , மேலும் பல இலவசங்களை ஜெயலலிதா அறிவித்தது, வைகோ-வை தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளியது. கூட்டணியில் இருந்து கொண்டு தேர்தலை சந்திக்கின்ற இவ்வேளையில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை ஆதரிக்கும் சூழ்நிலைக்கு வேறுவழியின்றி தள்ளப்பட்டார் வைகோ?. இதனால் மற்ற கட்சிகளின் ஏளனத்திற்கு ஆளானார்., அதிமுக தேர்தல் அறிக்கைகள் அணைத்தும் எங்களிடம் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என திமுக-வும் , தேமுதிக-வும் பிரச்சாரம் செய்ய ஜெயலலிதாவின் கடைசிக்கட்ட அறிவிப்புகள் வசதியாகப்போய்விட்டது.
திமுகக் கூட்டணி வெற்றி விபத்தே! எந்த வாக்காளரும் அப்படி வேண்டுமென வாக்களிக்கவில்லை.எனும் "சோ" வின் கூற்று மிக உண்மை!
இத் தேர்தலை" வாழ்வா? சாவா? எனக்கருதுவது... அதிமகவின் பலவீனம், வெற்றி தோல்வி சகசம்; அடுத்தது , நமது நாடுகளில் ஆளும் கட்சி வெல்வதரிது. தோல்விக்கும் தயாராக இருந்திருக்க வேண்டுமே தவிர துவழக்கூடாது. திமுக கூட மிருக பலதிதுடன் வரவில்லை. நல்ல எதிர்கட்சியாக் அதிமுக முகம் கொடுக்கலாம்.
விஜயகாந்தை சோ பாராட்டத்தவறிவிட்டார்; கட்சி தொடங்கிக் குறுகிய காலதிதுள்; பலர் கேலி ஏளனத்துக்குமிடையில்; ஒரு இடமும்; கணிசமான வாக்கும் பெற்றது. பாராட்டே!. இதைத் தொடர இனிப் பணம் எப்படி??? முக்கிய வினா,....யாதாவது பெரிய கட்சியுடன் சங்கமமா??? போகப் போகத் தெரியும்.சினிமா கவர்ச்சியும் இன்னும் உண்டே!
திமுக இலவசப் புயலை; மேலும் ஊதிவிட்ட பெரிய தவறை அதிமுக செய்து; அவர்கள் வாக்குறுதிக்கு நம்பகத் தன்மையை எற்படுத்தியது; மிகத் தவறு; அதை விடுத்து. இவை சாத்தியமில்லை. என்பதனை வைகோ உதவியுடன் ; வெகுவாக எடுத்துச் சென்றிருக்கலாம். வெற்றியோ தோல்வியோ- இவர்கள் எவருமே உயிர்விடப் போபவர்கள் இல்லை. உண்மையில் இந்த இலவசங்களில் உள்ள நடை முறை சிக்கல்களை விளக்கியிருக்கலாம். பிரச்சாரத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள்
யோகன்
பாரிஸ்
--திமுகக் கூட்டணி வெற்றி விபத்தே! --
Ungalai pol innum selaperuku adirchi poha villai
Mnanthai therthikolungal!!!!!!
naalai namathuye (but beware of stalin)
பினாத்தலார் தான் ஞாபகம் வருகிறார்.
//அடுத்து, இந்தத் தேர்தலில் சரியான கூட்டணியோடு ஜெயலலிதா தேர்தலைச் சந்தித்திருந்தால் மிகபெரிய வெற்றியை அடைந்திருப்பார்.
//
adhukenna adutha vaati ramadossai
'pota'vil pottudalam.
:)
therthaluku munnal ivar sonnadhayum pakkathule eduthu
podunga thala.
"வைகோவின் பிரசாரம், அ.தி.மு.க-வுக்கு மிகப் பெரிய அளவுக்குக் கைகொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை"
- வைகோவால் பெரிய பலன் எதுமில்லை என்பதே உண்மை. ஆனால் அவருக்கு பலன் இருந்தது. இருந்தாலும் 35 இடங்களில் போட்டியிட்டு 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது ஒரு 16 ஆண்டுகால கட்சிக்குப் பெருமையா என்ன?
//அ.தி.மு.க திராவிட கட்சி என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்..//
Is DMK a dravidian party? Are they free from all superstitions? Then why is Mr. Karunanidhi always wearing a yellow saalvai?
மாயவரத்தான் - உங்கள் பின்னூட்டதை அனுமதிக்க இயலவில்லை. மன்னிக்கவும்
//இப்படித்தான் ஆட்சி அமையவேண்டும் என்று மக்கள் திட்டமிட்டு ஓட்டுப் போட்டதினால் வந்த முடிவல்ல இது. இப்போது வந்திருக்கும் முடிவு எதேச்சையானது. ஆகவே, இப்படி முடிவு வரும்போது, மக்களை முன்னிறுத்தி இப்படிப்பட்ட கருத்துக்களை நாம்தான் பரப்புகிறோம்."//
ஒரு அனுபவமிக்க பத்திரிக்கையாளரான சோ இவ்வாறு சொல்லியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்கள் அக்கூட்டணி வெற்றி பெற்று திமுக தனியாகவோ அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்தோ ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வாக்களித்திருப்பார்கள். அதேபோலதான் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களும் செய்திருப்பார்கள். இது எப்படி எதேச்சையானதாகும்?
ஒருவேளை அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தால் சோ இதே போல் ஸ்டேட்மென்ட் கொடுப்பாரா?
//Is DMK a dravidian party? Are they free from all superstitions? Then why is Mr. Karunanidhi always wearing a yellow saalvai?//
அப்ப ராமராஜன் மாதிரி கலர் கலரா சால்வை போடணும்கறீங்களா...
எதன் அடிப்படையில் கருணாநிதியை விட ,ஜெயலலிதாவை மக்கள் அங்கிகரிக்கிறார்கள் என்று எழுதுகிறார்?180க்கு மேலான இடங்களில் போட்டியிட்டு பெற்ற வாக்குக்களை 130 இடங்களில் மட்டும் போட்டியிட்டு (திமுக) பெற்ற வாக்குக்களுடன் எப்படி ஒப்பிடுவது?
சோவிற்கு தன்னுடன் யார் இணக்கமாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்கள் நலனுக்காக யார் பணி செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல.சங்கராச்சாரியார் விசயத்தில் ஜெயலலிதா செய்தது சரியா என்பதைக் குறித்து வெளிப்படையாக எங்காவது எழுதியிருக்கிறாரா அவர்?
திமுகவை சோ எதிர்பதற்கும் கருணாநிதியின் மீதான தனிப்பட்ட காழ்புணர்ச்சியே தவிர வேறு எதுவுமில்லை.
அடுத்து, இலவச கலர் டி.வி., இலவச நிலம் என தி.மு.க. இலவச வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தபோது, அவர்களுக்குப் போட்டியாக ஜெயலலிதாவும் இலவசங்களை வாக்குறுதிகளாக அள்ளித் தெளித்திருக்கக் கூடாது. மாறாக, 'தி.மு.க. சொன்னதுபோல எதையும் அவர்களால் கொடுக்க முடியாது. நடைமுறைக்கு சரிப்பட்டு வராதவை இந்த இலவச அறிவிப்புகள். இலவசங்களைக் கொடுப்பது மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அழகல்ல' என்பது மாதிரியான பிரசாரங்களை ஜெயலலிதா செய்திருக்க வேண்டும். கலைஞரின் வாக்குறுதிகளுக்கு மக்களிடையே ஆரம்பத்தில் நம்பகத்தன்மை இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் போட்டி அறிவிப்புகள் பிற்பாடு அதை ஏற்படுத்திக் கொடுத்து விட்டன என்பது என் கருத்து."
If jaya would have gone according to Cho statement, She would have lost all the seats like last parliament election.DMK would have got absolute majority.She took the followng action before parliament election.
1) Action against govt.employees( welcomed by public)
2) Anti-conversion law ( which stop some religions to convert the people for money)
3) Ban on lottery(which stop destroying of seveal families)
4) Ban on killing of animals in the name of god.
5)Selling of liquor thro. TASMAC
6)Selling of sand by govt.
7)Increase in busfare and electricity charges in the beginning year of her ruling.
8)ESMA * TESMA (which will improve the quality of working style of govt.employees)
Because of the above, she could not not get even one seat. People in TN expects lot of free things.No other way to get power eventhough jaya knows that these expenses due to free things cannot be managed. Jaya moves was correct.She would have gone extreme end, but time was not adequate. Cho should understand one thing that Jaya is more clever than any other politician in TN.
//இப்படித்தான் ஆட்சி அமையவேண்டும் என்று மக்கள் திட்டமிட்டு ஓட்டுப் போட்டதினால் வந்த முடிவல்ல இது. இப்போது வந்திருக்கும் முடிவு எதேச்சையானது. ஆகவே, இப்படி முடிவு வரும்போது, மக்களை முன்னிறுத்தி இப்படிப்பட்ட கருத்துக்களை நாம்தான் பரப்புகிறோம்."//
இதுக்கு பேருதான் ''சோ''த்தனமான பேத்தனம். :-)
//"வைகோவின் பிரசாரம், அ.தி.மு.க-வுக்கு மிகப் பெரிய அளவுக்குக் கைகொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.//
ஆமாம் ஆமாம் மதிமுக தன் வாயால் பொடாவை நினைவு படுத்தினவர்களையெல்லாம் போடான்னு சொல்லவச்சிட்டங்கல்ல. கை கொடுத்திருக்காதா பின்னே
//ஆனால், ம.தி.மு.க. கூட்டணி சேர்ந்ததால் அ.தி.மு.க-வுக்கு ஓட்டு பலம் கூடும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கவில்லை."//
மதிமுக ஒரு கட்சியே இல்லை, அதோடு கூட்டணி வைத்தால் அதிமுகவுக்கு பலமா என்ன ?
என்று சூசகமாக பேசி மதிமுகவை மறைமுகமாக இழித்திருக்கிறார் சோ. இதுக்கு நம்ப பம்பரம் பார்டிங்க அவரு ஏதோ புகழுராருன்னு, புளகாங்கிதம் அடைந்து பதில் போடுவது ஆச்சிரியமாக இருக்கிறது. எப்பதான் புத்தி வருமோ !
Post a Comment