பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 11, 2006

வாழ்த்துக்கள்!

தமிழக முதல்வராக 5-வது முறையாக பதவி ஏற்கும் கலைஞர் கருணாநிதிக்கு இட்லிவடையின் வாழ்த்துக்கள் !

தமிழக முதல்வராக 5-வது முறையாக தி.மு.க. தலைவர் கருணாநிதி பதவி ஏற்கிறார். மீண்டும் ஒரு புதிய சாதனையை அவர் நிகழ்த்தி உள்ளார் இதுவரை கருணாநிதி வென்ற தொகுதிகள்.
குளித்தலை (1957-62), தஞ்சாவூர் (1962-67), சைதாப்பேட்டை (1967-71, 1971-76), அண்ணாநகர் (1977-80, 1980-83), துறைமுகம் (1989-91, 1991), சேப்பாக்கம் (1996-2001, 2001-06, 2006)

கலைஞர் பேட்டி:

கேள்வி:- கூட்டணி ஆட்சி அமையுமா?

பதில்:- தேர்தல் முடிவு அனைத்தும் வந்த பிறகு கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவேன். அதன் பிறகு இந்த விஷயத்துக்கு பதில் சொல்கிறேன்.

கே:- தமிழ்நாட்டில் முதன் முறையாக கூட்டணி ஆட்சி அமைகிறதே?

ப:- அந்த பெருமை இந்த கூட்டணிக்கு இருக்கிறது.

கே:- தி.மு.க.வை ஜெயலலிதா பரம்பரை எதிரி என்று சொன்னாரே?

ப:- நான் ஏற்கனவே ஐந்தாறு பொதுக்கூட்டங்களில் சொல்லி இருக்கிறேன். தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏழை பெண்கள் திருமண உதவி திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினோம். அதை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ரத்து செய்துவிட்டனர்.

தற்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திருமண உதவி திட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றும், முன்பு அறிவித்த ரூ.10 ஆயிரத்துக்கு பதில் ரூ.15 ஆயிரம் வழங்குவோம் என்றும் தெரிவித்து இருக்கிறோம்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாலிக்கு 4 கிராம் தங்கம் தருவதாக கூறினார். அதை நாங்கள் தடுக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை.

திருமண உதவி திட்டத்தின்போது திருமண விழாவில் வந்து அ.தி.மு.க. கலந்து கொண்டு 4 கிராம் தங்கத்தை அவர்கள் கொடுக்கட்டும்.

நாங்கள் ஆளும் கட்சியாக மாறினாலும் எதிர்க்கட்சிகளை மதிப்போம். இதில் இருந்தே நாங்கள் எதிர்க்கட்சிகளை எப்படி நடத்துவோம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கே:- தேர்தல் அறிக்கையில் சொன்னதை எப்படி மக்களுக்கு வழங்குவீர்கள்.

ப:- ஒவ்வொரு திட்டமாக படிப்படியாக வழங்குவோம். நான் சட்டத்தின் ஆட்சி நடத்துவேன் என்று குறிப்பிட்டு இருக்கிறேன். எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு பழி வாங்கும் செயல் எங்கள் ஆட்சியில் இருக்காது.

கே:- சிறப்பாக ஆட்சி நடத்த வேறு ஏதேனும் திட்டம் உள்ளதா?

ப:- நீங்களே சொல்லுங்கள்.

கே:- தி.மு.க. தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன் என்று ப. சிதம்பரம் கூறினாரே?

ப:-அவர் சொன்னது சரி தான்.

கே:- பதவியேற்பு விழா மெரீனா கடற்கரையில் நடத்தப்படுமா?

ப:- மெரீனா கடற்கரையில் கூட்டம் நடத்த கோர்ட்டில் வழக்கு உள்ளது. எனவே அது பற்றி இப்போது சொல்ல இயலாது.

கே:- டாக்டர் ராமதாஸ், அன்புமணி மீது கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளதே?

ப:- ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கவர்னரிடம் முறையிட்டுள்ளோம். முறைப்படி நடவடிக்கை எடுப்போம்.

கே:- அ.தி.மு.க. கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றி பெறும் என்று வைகோ கூறினாரே?

ப:- அவர் கூறியதற்கு நான் பதில் சொல்ல தேவையில்லை.

கே:- கண்ணகி சிலை மீண்டும் கடற்கரையில் அமைக்கப்படுமா?

ப:- கண்ணகி சிலை உடைந்து அரசு அருங்காட்சியத்தில் உள்ளது. விரைவில் அதையே இடத்தில் நிறுவோம்.

கே:- சென்னையில் தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதே?

ப:- அதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

கலைஞரின் வெற்றி கவிதை:

ஆறு நோக்கிச் செல்கின்றேன் அவர்கள்
வாரி இறைத்த
சேறு கழுவிக் கொள்வதற்காக!
களிம்பு மருந்து தேடுகின்றேன்
தழும்பு தோன்றிடும் நெஞ்சக்
காயத்தில் தடவுதற்காக!
மூச்சை இழுத்துப் பெருமூச்சாக
விடுகின்றேன்; அவர்தம் ஆபாசப்
பேச்சை என் சுவாசம்,
அடித்துப் போவதற்காக!
வெற்றி என்பதைத் தேடிக் கொடுத்து
துரோகத்தின்
நெற்றிப் பொட்டில் அறைந்திட்ட
உடன்பிறப்பு நீ இருக்கும்போது;
உடல் பொருள் ஆவி அனைத்தையும்
உலகில் ஓர் துரும்பென மதித்து
கடல் போல் நம் அணியைப் பெருக்கிட
கழகம் வளர்த்திட
கண்ணியர் அண்ணாவின் வழி நடத்திட
கட்டுப்பாடெனும் அய்யாவின் மொழி போற்றிட-
காத்திருப்போம்; தமிழகத்தைப்
பூத்திருக்கும் மலர்ச் சோலையாக்குதற்கே!

-மு.க.

அடுத்தது நம் சிங்கம் விஜயகாந்திற்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து!.

சுமார் ஏழு மாதம் முன் துவங்கி திராவிட கட்சிகளுக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணி, தனித்து நிற்பதில் உறுதியாய் இருந்து விருத்தாசலத்தில் வெற்றியும் பெற்றார் அதுவும் 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில். பாமக இவரை கண்டு இனிமேல் நடுங்கும். ஏதாவது தொந்தரவு தந்து கொண்டே இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இவர் கட்சி 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. மேலும் இந்த வெற்றி அவர் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. தயாநிதி/அன்புமணி போல் வானத்திலிருந்து குதிக்கவில்லை. பத்திரிக்கை, செய்தி ஊடகம்( இட்லிவடையை தவிர:-) அவரை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. இருந்தும் வெற்றி பெற்றிருக்கிறார்.

அவருடைய கட்சி போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் அதிக ஓட்டுகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்து உள்ளது. அவரது கட்சி பெரிய கட்சிகளுக்கு பெரும் சவாலாகவே அமைந்து விட்டது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. 30 ஆயிரத்து 96 ஓட்டுகளை பெற்றுள்ளது. இங்கு காங்கிரஸ் 70 ஆயிரம் ஓட்டு பெற்று வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகளுக்கு 52 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்துள்ளன.

இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி பெற்ற 30 ஆயிரம் ஓட்டுகள் விடுதலை சிறுத்தைகளுக்கு கிடைத்திருந்தால் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கும்.

தாம்பரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மொத்தம் 89 ஆயிரம் ஓட்டு பெற்றார். ம.தி.மு.க.வுக்கு 73 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தது. இந்த தொகுதியில் தே.மு.தி.க. 15 ஆயிரத்து 750 ஓட்டுகள் பெற்றுள்ளது. இந்த ஓட்டு கிடைத்திருந்தால் ம.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். அச்சரபாக்கத்தில் தே.மு.தி.க. 10 ஆயிரத்து 500 ஓட்டுகளும், காஞ்சீபுரத்தில் 15 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றுள்ளது.

இது போல தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் விஜயகாந்தின் தே.மு.தி.க. அதிக அளவில் ஓட்டுகளைப் பெற்றுள்ளது. ஓட்டுகள் பிரித்ததால் பல தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளும், சில தொகுதிகளில் தி.மு.க. கூட் டணி கட்சிகளும் தோல்வி அடைந்துள்ளன.

மொத்தத்தில் விஜயகாந்த் கட்சி பெரிய கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.

வலைப்பதிவிலும் பலர் விஜயகாந்த் தோல்வி என்ற செய்தி கேட்டு தீகுளிக்க கூட தயாராக இருந்தார்கள்.


முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா:

எதிர் கட்சி தலைவவி ஆனதற்கு வாழ்த்துக்கள். நல்ல வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள். ராஜினாமா கடிதத்தை நீங்கள் தானே முறைப்படி கடிதத்தை போய் ஆளுநரிடம் கொடுத்திருக்க வேண்டும்? ஏன் ஒரு அமைச்சரிடம் அனுப்பி வைத்தீர்கள் ? நீங்கள் ஒன்றும் கலங்க தேவையில்லை. ஒரு பெரிய கூட்டணியுடன் நீங்கள் மோதி 70+ சீட்டுகளை வாங்கியுள்ளீர்கள்.

தோல்வி என்ற உடன் பத்திரிக்கையை கூப்பிட்டு ஒரு அறிக்கை விட வேண்டியதுதானே? சென்னை திமுக கோட்டையை நீங்கள் ஆட்டியுள்ளீர்கள். அதற்கு ஒரு வாழ்த்து.

நாளையாவது வெளியே வருவீர்களா ? கட்டாயம் சட்டசபைக்கு செல்லுங்கள் ! கலைஞர் மாதிரி கையெழுத்து போட்டுவிட்டு வந்துவிடாதீர்கள்.

வலைப்பதிவில் எனக்கு ஊக்கம் அளித்த எல்லோருக்கும் என் நன்றி.

23 Comments:

Anonymous said...

idly vadai nalai hyderabadil parkkalam

நாமக்கல் சிபி said...

வெற்றிபெற்ற கலைஞர் அவர்களுக்கு என் நெஞ்சாங்கூட்டிலிருந்து வாழ்த்துக்களைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்!

//நாங்கள் ஆளும் கட்சியாக மாறினாலும் எதிர்க்கட்சிகளை மதிப்போம். இதில் இருந்தே நாங்கள் எதிர்க்கட்சிகளை எப்படி நடத்துவோம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு பழி வாங்கும் செயல் எங்கள் ஆட்சியில் இருக்காது.

//

இதனை உண்மையிலேயே கடைப்பிடித்தால் மக்கள் மத்தியில் இன்னும் இமேஜ் நல்ல முறையில் ஏற்படும்.

விஜய்காந்த் வெற்றி ஒரு மகிழ்ச்சியான வெற்றியே! வரும் காலங்களில் நிச்சயம் நன்கு வளர்ந்துவிடுவார்.

அம்மா அவர்களிடம் இருந்து விரைவில் அறிக்கை வரும் என்று எதிர்பார்க்கலாம். மிகப் பெரிய எதிர்க்கட்சியாக சிறப்பாக பணியாற்றுவார்(கள்) என்பதில் ஐயமில்லை.

thiru said...

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா:

//உங்களுக்கும் வாழ்த்துக்கள். நல்ல வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள்.// :->

//ராஜினாமா கடிதத்தை நீங்கள் தானே முறைப்படி கடிதத்தை போய் ஆளுநரிடம் கொடுத்திருக்க வேண்டும்? ஏன் ஒரு அமைச்சரிடம் அனுப்பி வைத்தீர்கள் ?//:-?

//நீங்கள் ஒன்றும் கலங்க தேவையில்லை.//:-P:-P

//ஒரு பெரிய கூட்டணியுடன் நீங்கள் மோதி 70+ சீட்டுகளை வாங்கியுள்ளீர்கள்.// Makkalodu kuutanni vachaa sinna kuutaNiyaa? enna niyaayama vadai?

//தோல்வி என்ற உடன் பத்திரிக்கையை கூப்பிட்டு ஒரு அறிக்கை விட வேண்டியதுதானே? சென்னை திமுக கோட்டையை நீங்கள் ஆட்டியுள்ளீர்கள். அதற்கு ஒரு வாழ்த்து.// :)

//நாளையாவது வெளியே வருவீரிகளா ?// :-O:-/:P

IdlyVadai said...

திரு - கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறேன்.

Sivabalan said...

வெற்றிபெற்ற கலைஞர் வாழ்த்துக்கள்!!

Viji Sundararajan said...

Thanks for updating this site the entire day Idlyvadai.

Wishes to Vijayakanth :) kallkittarrullaa. 1 seat naaaluumm enddhhaa area lla vvaanggai errukkarr :) !

இலவசக்கொத்தனார் said...

//வலைப்பதிவிலும் பலர் விஜயகாந்த் தோல்வி என்ற செய்தி கேட்டு தீகுளிக்க கூட தயாராக இருந்தார்கள்.//

இதுதான் இட்லிவடைப் பஞ்ச்.

இணையத்தில் இந்த தேர்தலை இவ்வளவு அழகாகத் தொகுத்ததற்கு வாழ்த்துக்கள் சார்.

இலவசக்கொத்தனார் said...

கார்த்திக் கட்சியின் தாக்கம் இருந்ததா?

சீனு said...

எப்பொழுதும் full sweep ஆகும் மானிலத்தில், 70+ வாங்கியிருப்பதே, (முன்னாள்) ஆளுங்கட்சியின் மேல் தமிழக மக்களுக்கு அவ்வளாவாக வெருப்பு இல்லை என்பதை காட்டுகிறது. இதுவும் ஒரு விதத்தில் boost தரக்கூடிய செய்திதான். அடித்துப் பிடித்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதை விட, எதிர்கட்சியாக 5 வருடம் இருப்பது மேல்.

ஜெ பொருப்புள்ள எதிர்கட்சியாக இருப்பார் என்பது சந்தேகம் தான். இருந்தால் நன்றாக இருக்கும்.

வெற்றி said...

மாண்புமிகு கலைஞர் மு.கருனாநிதி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அடுத்த 5 வருடங்களுக்கு அவர் நலமாக இருந்து நல்லாட்சி தர இறைவன் துணை புரிவானாக. அடுத்த 5 ஆண்டுகளுக்கு உடல் நலம் குன்றி ஆட்சிப் பொறுப்பை நடத்த முடியாவிட்டால், பேராசிரியர் அன்பழகன் அவர்களைத் தான் அடுத்த முதல்வர் ஆக தெரிவு செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்ததாக, மதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.முதன் முறையாக ம.தி.மு.கழகம் சட்டசபைக்குள் நுழைகிறது. சிறப்பாகச் செயற்பட்டு, கட்சியை வளர்க்க இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என் அண்ணன் வைகோ அவர்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
மருத்துவர் இராமதாசு அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அடக்கப்படும் வன்னிய மக்களுக்காக மட்டுமல்ல, அனைத்து தமிழ் மக்களுக்குமாக குரல் கொடுக்க வேண்டும் என மருத்துவர் அய்யா அவர்களை வேண்டிக் கொள்கிறேன்.
இறுதியாக, விஜயகாந்த் மற்றும் திருமாலளவன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

I congratulate Vijayakanth for his brave decision to go alone. His paty has got about 8% votes which is much better than what PMK, Congress and MDMK got when they contested alone in the previous elctions. Now, DMDK is the third largest party in Tamil Nadu. Does anyone disapprove my comment?.

I thank Idlyvadai for this wondeful blog.It was very helpful for NRIs like me to know the political situation in TN.

hats off to Idly vadai !!!!!

IdlyVadai said...

ஜெ, கலைஞர், வைகோ அறிக்கை அடுத்த பதிவில்... http://idlyvadai.blogspot.com/2006/05/blog-post_114736020428351310.html

VSK said...

"கேப்டனுக்கு ஒரு கடிதம்!"

திரு. விஜய்காந்த், எம்.எல்.ஏ, அவர்களுக்கு,
வணக்கம்.
முதலில் எனது உளங்கனிந்த பாராட்டுகளைப் பிடியுங்கள்!

இந்தத் தேர்தலில் நீங்கள் சாதித்தது நிறையவே!

கட்சி ஆரம்பித்த ஆறு மாத காலத்தில் ஒரு பொதுத்தேர்தலை துணிவுடன் சந்தித்தது!

யாருடனும் கூட்டு இல்லை என மக்களிடத்தில் சொன்னது போலவெ, 232 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது!

தமிழகமெங்கும் 40000கி. மீ.க்கும் மேல் சுற்றி வந்து நாட்டு மக்களிடம் உங்களது புதிய அடையாளத்தை நிலை நிறுத்தியது!

இரு கழகங்களும் ஆட்சிப் பொறுப்பினின்றும் அகல வேண்டும் எனக் கூவி, கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாக யாரும் சாதிக்காத ஒன்றை செய்து காட்டியது!

பழம் தின்று கொட்டை போட்ட பழுத்த அரசியல் தலைவர்கள் கூட, பாதுகாப்பான தொகுதி தேடி பதுங்கி ஓடும் களத்தில், தைரியமாக பா. ம. க.வின் கோட்டையிலேயே நின்று, போட்டியிட்டு, திறமையான பிரச்சாரம் செய்து, வென்றும் காட்டியது.

தான் சொல்லி வந்த 'இரு கழக ஏகபோக ஆட்சியை' ஒழித்துக் கட்டி, முதன்முறையாக கூட்டணி ஆட்சி வர, பெரும் பங்கு ஆற்றியது!

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

வெற்றிக்களிப்பில் நின்றிருக்கும் இந்நேரத்தில் தங்களிடம் சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்.

1. இந்த வெற்றியின் மூலம் மாற்றத்தை விரும்பும் மக்களும் நம் மண்ணில் இன்னும் இருக்கிறார்கள் என்னும் கருத்து உறுதிப்படும் நேரத்தில், இதனைத் தீவிரமாக்க, ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறீர்கள்?

2. 'மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று இரந்தழைப்பார் இங்கில்லை' என்பதற்கேற்ப, பல பேர் உங்கள் கட்சியில் சேர வரக்கூடும். கவனமாகத் தெரிவு செய்வீர்கள் என நம்பலமா? இல்லை, எல்லாரையும் சேர்த்துக்கொண்டு நீர்த்துப் போவீர்களா?

3. யார் எப்படி சொன்னாலும், உங்கள் தொகுதி மக்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைத்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றாமல், நல்ல முன்னுதாரணமாய் செயல்படும் உத்தேசம் உண்டா?

4. எம்.எல். ஏ. என்பது ஒரு பொறுப்பான பதவி. அதற்குத் தேவையான விதி முறைகள், நெளிவு சுளிவுகள் இவற்றை வேகமாகக் கற்றுக் கொள்வது, இபோதைக்கும், பின்னாலும் உதவும் என்றறிந்து, செயல் படுவீர்களா?

5. தனியே ஆட்சி செய்வது வேறு; கூட்டணிகட்சியாக பங்கு வகித்து, சலுகைகள் பெறுவது வேறு, ஆனால், கூட்டணித் தலைமைக் கட்சியாக இருந்து ஆட்சிப் பொறுப்பை நடத்துவது வேறு என்பது இன்னும் சில நாட்களில் புரியப்போகும் நிலையினில், விரைவிலேயே அடுத்த தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும் என்பதை உணர்ந்து, கட்சியை பல்வேறு மட்டங்களிலும், மாவட்டங்களிலும் வளர்க்க ஆவன செய்வீர்களா?

6. இல்லை, மற்ற தேமுதிக வேட்பாளர்கள் எல்லாம் தோற்ற நிலையில் துவண்டு போவீர்களா?

7. இதுவரை நடத்தி வந்த, நகர்த்தி வந்த செயல்களெல்லாம் நன்கு நடந்திருக்கும் நிலையில், சில பல அனுபவமும், அறிவும் மிக்க ஆற்றலுள்ள இளைஞர் கூட்டத்தை வளர்த்துக் கொள்வீர்களா?

8.ஒரு சீட்டுதான் என்றாலும், அதனை வென்ற முறையில் தனித்துவம் காட்டிய நீங்கள், இந்த வெற்றி ஃபார்முலாவை திறம்பட இன்னும் விரிவு படுத்துவீர்கள் என நம்பலாமா?

9. மீண்டும் படங்களில் நடிக்கும் உத்தேசம் உண்டா?

இவையெல்லாம், மாற்றம் வேண்டுமென விரும்பும் ஒரு தமிழனின் கேள்வி!
அதுவே நான் உங்களை தனியனாக[இங்கும் தனிதான்!] இந்த இணையத்தில் ஆதரித்ததின் நோக்கம்!

உங்கள் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன்!

மென்மேலும்,வெற்றிக்கனிகள் குவிய எனது வாழ்த்துகள்!

நன்றி.

வணக்கம்.

மணியன் said...

இட்லிவடை, பிடியுங்கள் பாராட்டுக்களை!! தூள் கிளப்பி விட்டீர்கள்.
உங்கள் மூலம் நானும் ஐந்தாம் முறையாக முதல்வராகப் போகும் கலைஞர்கருணாநிதி, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும் விஜயகாந்த் மற்றும் எதிர்கட்சி தலைவியாகவிருக்கும் செல்வி ஜெயலலிதா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சந்தேகம்:
//கே:- டாக்டர் ராமதாஸ், அன்புமணி மீது கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளதே?

ப:- ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கவர்னரிடம் முறையிட்டுள்ளோம். முறைப்படி நடவடிக்கை எடுப்போம்.//
அமைச்சரவை அமைக்கப்படும் வரை கிடைத்த துருப்பு சீட்டா ?

Anonymous said...

Your site was really very informative! I must really appreciate Vijaykanth in this election for his daring decision. I dont understand our people's verdict, inspite of J having done so many good things, but well we have to respect it and go on!

பொன்ஸ்~~Poorna said...

//வலைப்பதிவிலும் பலர் விஜயகாந்த் தோல்வி என்ற செய்தி கேட்டு தீகுளிக்க கூட தயாராக இருந்தார்கள்.//

பின்ன என்னங்க.. தோற்றாரா, ஜெயிச்சாரான்னு, கேப்டன் படக் க்ளைமாக்ஸ் மாதிரியே ஒரே விறுவிறுப்பா இருந்துதே.. :)

Viji Sundararajan said...

@SK

unnggga letter to Vijayakanth MLA sooper nngga...

Sriram said...

I totally agree with the letter which SK has typed here for our Captain. My heartiest congratulations to our Captain for shaking the PMK fortress.!!

I have one more question for Captain. Will he continue as the Leader of Nadigar Sangam or will he resign from that post?

IdlyVadai said...

SK - கடிதம் நன்றாக இருந்தது. அனுப்பியிருந்தால் இவில் போட்டிருப்பேன்.

ஸ்ரீராம் - Sepல் ராஜினாமா செய்ய போகிறேன் என்று விஜயகாந்த் சொன்னதாக ஞாபகம்.

சின்னக்குட்டி said...

வாழ்த்துக்கள்...கலைஞர்...அவர்கட்கு

என்ன..sk...70 சீட்டோடு இந்தா இப்ப விஜயகாந்தை கூட்டியென்று வாறனெண்டு போனனிங்கள்... விஜயகாந்தை மட்டும் கூட்டியெண்டு வந்திருக்கிறியள்..

- யெஸ்.பாலபாரதி said...

எல்லோருக்கும் வாழ்த்து சொல்ல.. எல்லோரும் இருக்காங்க... உமக்கு.. அலுவலகத்திலேயும், வெளி மாநிலம்/நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு.. உமது ஃபாஸ்ட் சேவை(ஃபாஸ்ட் புட் ஐட்டம் இல்லீங்க!) தேவை..
உமது சுறுசுறுப்பு பலரை வியப்புக்குள்ளாக்குவது அறிந்த செய்தி...
வாழ்த்துக்கள்...

சாப்பாடுப்ரியன்
பாலா

Unknown said...

//சுமார் ஏழு மாதம் முன் துவங்கி திராவிட கட்சிகளுக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணி, தனித்து நிற்பதில் உறுதியாய் இருந்து விருத்தாசலத்தில் வெற்றியும் பெற்றார் அதுவும் 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில். பாமக இவரை கண்டு இனிமேல் நடுங்கும். ஏதாவது தொந்தரவு தந்து கொண்டே இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இவர் கட்சி 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. மேலும் இந்த வெற்றி அவர் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. தயாநிதி/அன்புமணி போல் வானத்திலிருந்து குதிக்கவில்லை. பத்திரிக்கை, செய்தி ஊடகம்( இட்லிவடையை தவிர:-) அவரை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. இருந்தும் வெற்றி பெற்றிருக்கிறார்.
//

வியஜகாந்திடம் பல குறைகள் இருந்தாலும் (குறையே இல்லேனா எப்படி அர(ரி)சியல் தலிவராவது? ) இட்லிவடையின் மேற்சொன்ன கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன்.

//வலைப்பதிவிலும் பலர் விஜயகாந்த் தோல்வி என்ற செய்தி கேட்டு தீகுளிக்க கூட தயாராக இருந்தார்கள்.//

உண்மை. குழப்பமான தகவல்களால் ரொம்ப மண்டை காய்ந்துவிட்டது.

இட்லிவடையாரே,

உங்களின் தேர்தல் கால செய்திகளுக்கு மிக்க நன்றி. கடுமையான உழைப்பு.

தயா said...

// பேராசிரியர் அன்பழகன் அவர்களைத் தான் அடுத்த முதல்வர் ஆக தெரிவு செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். //

சோனியாவோடு கூட்டு சேர்ந்திருக்கிறார்களே! "Renunciation" நாடகத்தை ஸ்டாலின் கூட நடத்திக் காட்டலாம். அன்பழகன் கூட சொர்க்கலோக வரிசைக்கு காத்திருப்பவர் தானே. வாய்ப்புகள் சர்க்கரை கட்டியாக தொங்க பயன்படுத்திக்கொள்ள வேண்டியது தான். தன்னால் மக்கள ஸ்டாலினுக்கு ஓ போடுவார்கள்