இந்த பதிவில் தொடர்ந்து அப்டேட் செய்ய உத்தேசித்துள்ளேன்...
* முதல் இரண்டு மணி நேரத்தில் 25% சதவிகிதம் வாக்குபதிவு ( அதாவது 1.15 கோடி பேர் வாக்களித்துள்ளார்கள் )
* ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள மாகாணியம் கிராமத்தில் 1063 ஓட்டுக்கள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 528 பெண்கள் 535. இவர்கள் ஓட்டு போடுவதற்காக அங்குள்ள பள்ளிக் கூடத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. கிராம மக்கள் ஒருவர் கூட ஓட்டுப்போட வரவில்லை. இந்த கிராமத்துக்கு சாலை வசதி செய்து தரக்கோரி அவர்கள் தேர்தலை புறக்கணித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இருந்தாலும் கூட பகல் 11 மணி வரை ஒருவர் கூட ஓட்டுப் போடவில்லை. அரசியல் கட்சியினரும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
* பகல் 12 மணிக்கு 35% சதவிகிதம் வாக்கு பதிவு
* இதுபோல் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் முகஸபாரூர் என்னும் கிராமத்தில் ஒட்டுமொத்தமாக 732 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர். முகஸபாரூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் சுகாதாரமற்ற தண்ணீரைக் குடித்ததில் பாதிக்கப்பட்டு சில கிராமத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அரசு அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
* அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்களிடம் எழுச்சி - நடிகர் சரத்குமார்
நல்லாட்சி அமைய எல்லாரும் ஓட்டுப்போட வேண்டும் - ராதிகா சரத்குமார்
* ஆண்டிப்பட்டியில் திமுக வேட்பாளர் தாக்கப்பட்டார் - சீமான் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மின் தொடர்பை துண்டித்தார்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் ராஜேந்திர நகர் வாக்குச்சாவடியில் இன்று காலை பார்வை தெரியாத பெண்மணி ஒருவருக்கு அதிமுக தேர்தல் ஏஜென்டுகள் வாக்களிக்க உதவினர். இதுகுறித்து திமுக வேட்பாளர் சீமானிடம் அவரது ஏஜென்டுகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, தேர்தல் அதிகாரிகளிடம் அவர் முறையிட்டார். அவருக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சீமான் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மின் தொடர்பை துண்டித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
இதைக் கேள்விப்பட்ட அதிமுகவினர் திமுக வேட்பாளர் சீமானை தாக்கினர். மேலும், அவரது காரும் தாக்குதலுக்கு உள்ளானது. அவரை திமுகவினர் காப்பாற்றி மற்றொரு காரில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
10 நிமிட தாமதத்திற்கு பின்னர் அங்கு மீண்டும் வாக்குப்பதிவு நடைறுகிறது. இச்சம்பவம் தொடர்பாக திமுக, அதிமுக ஆகிய இருதரப்பும் போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.
* திருவள்ளூரில் அதிமுக பூத் ஏஜென்டுகளுக்கும் காங்கிரஸ் ஏஜென்டுகளுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. இதனால் அங்கு வாக்குப் பதிவு சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
* சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் தமிழக காங்கிரஸ் தலைவர் எம். கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் ஆகியோர் வாக்களித்தனர்.
* சிறுசிறு வன்முறைச் சம்பவங்களைத் தவிர பொதுவாக தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்தார்.
* காபாலபுரத்தில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்- "திமுக ஒரு ஜனநாயக இயக்கம். ஜனநாயக இயக்கத்தில் அடுத்து யார் என்ற கேள்விக்கே இடமில்லை. எனினும் முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை"
நடிகர் நடிகைகள்
* மயிலாப்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளரும், நடிகருமான நெப்போலியன் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிறுவர் தோட்டம் பள்ளியில் மனைவி ஜெயசுதாவுடன் ஓட்டு போட்டார்.
* நடிகர் விஜய் இன்று மதியம் 12.20 மணிக்கு சாலி கிராமம், காவேரி பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு மனைவி சங்கீதா, தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா ஆகியோருடன் சென்று ஓட்டு போட்டார். விஜய் ஓட்டு போட வருவது தெரிந்ததும் அருகில் உள்ள ஓட்டுச்சாவடியில் இருந்த ஊழியர்களும் அவர் ஓட்டு போட்ட வாக்குச்சாவடிக்கு சென்று அவரைப் பார்த்தனர். வெளியே வந்தபோது, பெண்களும், ஆண்களும் போட்டி போட்டு விஜய்க்கு கை கொடுத்தனர்.
* நடிகர் சூர்யா காலை 10.30 மணிக்கு, சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபா வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார். அவருடன் தந்தை சிவகுமார், தாயார் லட்சுமி, தம்பி கார்த்தி, தங்கை பிருந்தா, இசை அமைப்பாளர் (சங்கர்) கணேஷ் ஆகியோரும் சென்று ஓட்டு போட்டார்கள்.
* நடிகர் செந்தில், எஸ்.எஸ். சந்திரன், டைரக்டர் ஆர். சுந்தரராஜன், நடிகை பிரீதா, டைரக்டர் ஹரி ஆகியோரும் சாலி கிராமம் காவேரி பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவ டிக்கு சென்று வாக்களித்த னர்.
* நடிகை குஷ்பு அவருடைய கணவர் சுந்தர்.சி யுடன் சென்னை அண்ணாமலை புரம் குமாரராஜா முத்தையா பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார்.
* மீனா சின்னமலையில் இருக்கும் புனித சவேரியார் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார்.
* இதுபோல சாலி கிராமம், கோடம்பாக்கம், தி.நகர் பகுதியில் சினிமா துறை கலைஞர்கள், துணை நடிகர்- நடிகைகளும் பெருமளவில் சென்று அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டு போட்டனர்.
* நடிகர் விக்ரம், திரிஷா உள்ளிட்ட சில முக்கிய நடிகர்- நடிகைகள் இன்று காலை ஓட்டு போடவில்லை. மாலை ஓட்டு போடுகிறார்கள்.
* வைகோ வாக்களித்தார்
சங்கரன்கோவில் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கலிங்கப்பட்டியில் திங்கள்கிழமை அதிகாலையிலேயே வாக்களிக்க மக்கள் வரிசையில் காத்திருந்தனர். வைகோ காலை 8.55 மணிக்கு அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு வந்து, பொதுமக்களோடு வரிசையில் நின்றார். அவருக்கு முன்னதாக அவரது மகன் துரை வையாபுரி, மருமகன் ஜெகதீஷ், தம்பி மகன் இந்திரஜித் ஆகியோர் நின்றிருந்தனர்.
*ரஜினி - போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வரும் ரஜினிகாந்த் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு இன்று பிற்பகலில் தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகியோருடன் வந்து ஓட்டுப் போட்டார்.
ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்த ரஜினியை செய்தியாளர்கள் சூழ்ந்தபோது, தமிழக மக்களைப் போலவே, நானும் இந்தத் தேர்தல் முடிவை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன் என்று மட்டும் கூறி விட்டு அங்கிருந்து சென்றார். ( தனுஷ் எங்கே சார் ?)
* பகல் ஒரு மணி வரை 40% வாக்குபதிவு. தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இங்குள்ள ஐந்து தொகுதிளில் புதுக்கோட்டை தொகுதியில் பகலிலேயே 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
* தமிழகத்தில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 15 வருட ரெக்கார்டை உடைத்தது.
* பாண்டிச்சேரில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது
* தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் வாக்குச் சாவடியில் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் திடீரென நெஞ்சு வலியால் உயிரிழந்தார். ( அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் )
* விஜயகாந்த் மீது பாமகவினர் செருப்பு வீச்சு: விருத்தாசலத்தில் போட்டியிடும் விஜயகாந்த் திங்கள்கிழமை சென்னையில் வாக்களித்துவிட்டு, பின்னர் தான் போட்டியிடும் விருத்தாசலம் தொகுதிக்குத் திரும்பி, வாக்குப் பதிவு குறித்து விசாரிப்பதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியாக சென்றுள்ளார். அப்போது முதனை கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்றபோது, அங்கிருந்த பா.ம.க.வினர் ஏன் இங்கு வருகிறீர்கள் என்று கூறி விஜயகாந்த வாகனத்தை நோக்கி செருப்புக்களை வீசினர். அவரை பின் தொடர்ந்து சென்ற நிருபர்கள் வாகனத்தின் கண்ணாடிகளையும் உடைத்தனர்.
* திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் வாக்களித்தனர்.
* தேர்தல் விதிமுறையை மீறியதற்கு அதிமுக, திமுக மீது தேர்தல் ஆனையம் அதிர்ப்த்தி.
* தேர்தலில் நரேஷ் குப்தா ஓட்டு போடவில்லை. இந்த பதவியில் ஓட்டு போட்டால் நல்லா இருக்காது அதனால் என் ஓட்டு எந்த கட்சிக்கும் இல்லை என்றார்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, May 08, 2006
வாக்கு பதிவு செய்திகள் - நிலவரம்
Posted by IdlyVadai at 5/08/2006 12:10:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










44 Comments:
kalakkunga thalaiva..
Keep updating ...
நட்சத்திரத்துக்கு வாழ்த்து(க்)கள்.
சரியான ஆளாத்தான் சரியான நேரத்துலே வந்துருக்கீங்க!
ரிஸல்ட்டுக்கு உங்களைத்தான் நம்பி இருக்கோம்.
ஏங்கண்ணா சித்தி விரலை காட்டவில்லை?
//ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள மாகாணியம் கிராம மக்கள் ஒருவர் கூட ஓட்டுப்போட வரவில்லை//
பின்ன எப்பத்தாங்க அவங்க தங்களோட குறைகளை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தறது! மத்த நேரத்துல சொன்னா மனுக்கள் குப்பைக் கூடைக்குப் போறதோட முடிஞ்சி போயிடுது. இப்ப பாருங்க ஒட்டு மொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்குதுல்ல இப்படியொரு கிராமம் இருக்கான்னு!
மத்தபடி இது சரிதான்னு நினைக்கறீங்களா இட்லி வடை? அவங்களுக்கு தன்கள் கோபத்தைக் காட்ட நல்ல சந்தர்ப்பமா பயன்படுத்திகிட்டது சரிதான்னு எனக்கு தோணுது!
கட்சி சார்பு டி.விக்களையே பார்த்து சலிச்சி போயிருக்கற எங்களுக்கு இட்லி வடை நல்லதொரு வரம்.
நடுநிலையான செய்திகளுக்கு பேசாம இட்லிவைடைய பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்னு நினைக்கறேன் நான்.
சரியாச் சொன்னீங்க சிபி. நெறிமுறைகள் பா ர்க்கம் நேரமல்ல இது. கிடைத்திருக்கும் 10 மணிநேரம் பொன்னான நேரங்கள். போலிவா க்குறுதிகளை நம்பி வாக்களிப்பதைவிட, 'ஓ' போடலாமே! அதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்தி னை தங்களை நோக்கி திரும்பிபா ர்க்க செய்யமுடியும். அதன்விளைவாக அவர்களின் கோரிக்கை நிறைவேற வாய்ப்புகளிருக்கின்றன.
சித்தி விவரமாத் தான் இருக்காங்க... நல்லாட்சி அமையத் தானே வாக்குப் போட சொல்றாங்க!
//ஏங்கண்ணா சித்தி விரலை காட்டவில்லை?//
Perhaps they wanted a safe return to the DMK fold should the results turnout in favor of MK :)
//நல்லாட்சி அமைய எல்லாரும் ஓட்டுப்போட வேண்டும் - ராதிகா சரத்குமார்//
சூரியனுக்கு குத்துன மாதிரியெல்லா தெரியுது..இலைக்கு குத்திருந்தா 'நல்லாட்சி தொடர'-ன்னு சொல்லிருக்கணுமில்ல.
இட்லி வடையாரே, செய்திகள் சேகரிப்பதில் மும்முரமாய், பிஸியாய் இருப்பீர். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், இவ்வாரம், நீவிர் நட்சத்திரமாயிற்றே, பின்னூட்டங்களுக்கு பதிலையும் அவ்வப்போது இட வேண்டுமய்யா....
/சூரியனுக்கு குத்துன மாதிரியெல்லா தெரியுது..இலைக்கு குத்திருந்தா 'நல்லாட்சி தொடர'-ன்னு சொல்லிருக்கணுமில்ல. /
நானும் அதையே நினைத்தேன், கருணானிதியின் அன்புமகள் அப்படி நினைத்துத்தான் சொல்லியிருப்பார்
ஜோ, குடும்பத்தில குழப்பம் உண்டாக்காதீங்கப்பா.
இட்லிவடை! நட்சத்திர வாழ்த்துக்கள்! தேர்தல் சூட்டுலையும் மறந்துடாம உம்ம நகைச்சுவை பதிவுகளையும் சிலது போடுங்க! ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!
//இலைக்கு குத்திருந்தா 'நல்லாட்சி தொடர'-ன்னு சொல்லிருக்கணுமில்ல.
-// ஜோ... இதைத்தான் டாஸ்மாக் அக்கவுண்ட்டண்டு கிட்டயே அக்கவுண்ட்டு வைச்சு கோட்டரு அடிக்கறதுங்கறது! :)
இ/வ, சில மாதங்களாகவே நீங்கள்தானே நட்சத்திரம்? :) வாழ்த்துக்கள்!
//சூரியனுக்கு குத்துன மாதிரியெல்லா தெரியுது..இலைக்கு குத்திருந்தா 'நல்லாட்சி தொடர'-ன்னு சொல்லிருக்கணுமில்ல. //
இவ்வளவு நாளா குத்துன கை ஒரு
தேர்தல்ல மாறிடுமா என்ன...?
//நல்லாட்சி அமைய எல்லாரும் ஓட்டுப்போட வேண்டும் - ராதிகா சரத்குமார்//
//இலைக்கு குத்திருந்தா 'நல்லாட்சி தொடர'-ன்னு சொல்லிருக்கணுமில்ல. //
அடப் பாவிகளா! ஒரேயொரு வார்த்தையில இப்படியோரு அர்த்தம் கண்டுபிடிக்கறீங்களே!
படைய்ப்பா படத்துல பார்ட்டிய ஆரம்பிக்கலாமான்னு ரஜினி கேட்கும் காட்சி ஞாபகத்துக்கு வருது!
நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள்.
தேர்தல் செய்திகளை மிகவும் சுவாரஸ்யமாக கொடுத்தீங்க, தேர்தல் முடிவுகள், ஆட்சி அமைப்பு போன்ற செய்திகளையும் மிக சுவாரஸ்யமாக கொடுப்பீங்க என்று நம்புகிறேன். வாழ்த்துகள்.
இன்றைய தமிழ் முரசு ரெடி, இன்னும் லிங்க கொடுக்கப்படவில்லை, உங்களுக்காக ஸ்பெசல் லிங்க் இங்கே
http://epaper.tamilmurasu.in/2006/may/08/1.html
http://epaper.tamilmurasu.in/2006/may/08/2.html
http://epaper.tamilmurasu.in/2006/may/08/3.html
http://epaper.tamilmurasu.in/2006/may/08/4.html
http://epaper.tamilmurasu.in/2006/may/08/5.html
http://epaper.tamilmurasu.in/2006/may/08/6.html
.
.
.
http://epaper.tamilmurasu.in/2006/may/08/20.html.
Update 4:30pm: நடிகர்/நடிகைகள் படங்கள் :-)
//Update 4:30pm: நடிகர்/நடிகைகள் படங்கள் :-) //
he he waiting
கோவி.கண்ணன். கலக்கிட்டீங்கப்பான்னு சொல்றதா சைக்கிள் கேப்ல பூந்துட்டியேப்பான்னு சொல்றதா.
வடையார் விருந்துல ஸ்பெசல் அயிட்டம் பரிமாறியதற்கு நன்றி.
அழகாக விரிவாக செய்திகளை அப்டேட் செய்கிறீர்கள். எல்லா விதத்திலும் வலைப்பதிவு நட்சத்திரமான இட்லி வடைக்கு என் வாழ்த்துக்கள்.
http://akaravalai.blogspot.com/2006/05/1.html
updated on comment
தமிழ்மணத்திலயும், ஜெயிக்கற கட்சிக்கு ஓட்டு போடலான்னு முடிவு பண்ணிட்டாங்க போலிருக்கு... எக்ஸிட் போல்-ல திமுக அணிக்கு கொஞ்சம் கொஞ்சமா வாக்கு ஏறிட்டே போகுது....
Update 4:50pm: ரஜினி பற்றி..
இந்த வார தமிழ்மண விண்மீனுக்கு வாழ்த்துகள். இந்த வாரம் முழுக்கத் தேர்தல் பதிவுகள் தானா? :-)
நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள். சரியான நேரத்தில்தான் நட்சத்திரமாகியிருக்கிறீர்கள். போட்டு தாக்குங்க...
இந்த வார நட்சத்திரத்திற்க்கு வாழ்த்துகள். நல்ல சமயத்தில் நீங்கள் வின்மீனாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தருவீர்கள் தானே?
//தமிழகத்தில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 15 வருட ரெக்கார்டை உடைத்தது//
சந்தோஷமான செய்தி! இன்னும் 35% பேர் விழிப்புணர்வு பெறாமல் இருக்கிறார்கள் என்பதா? அல்லது வெளியூரில் உள்ளனர் என்று கொள்ளலாம்.
//தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் வாக்குச் சாவடியில் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் திடீரென நெஞ்சு வலியால் உயிரிழந்தார். ( அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் )//
எங்களுடைய அனுதாபங்களும் கூட. :(
ரஜினி பற்றிய செய்திக்கு நன்றி!
கோவை செய்திகள் Please!!
Mr.Idly Vadai, ரஜினி Photo எங்கே!! Please!
Update: 7:07pm விஜயகாந்த் மீது பாமக செருப்பு வீச்சு. நரேஷ் குத்தா ஓட்டு போடவில்லை
சிவபாலன் - எப்படியாவது எங்கிருந்தாவது படம் போடுகிறேன்.
//Mr.Idly Vadai, ரஜினி Photo எங்கே!! Please! //
Romba Mukkiyam!
Star News - AC Nielsen Exit Poll predicts a big win for DMK alliance.
http://www.chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID={88E076BD-0153-4C19-A808-C8603191C526}&CATEGORYNAME=ELE
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20060508084010&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0
தினமணியில், ஸ்டார் டிவி எக்ஸிட் போல்-ல், திமுக அணி, 175 இடங்களும், திமுக தனிப் பெருன்பான்மை பெறும் என்றும் செய்தி வந்துள்ளது.
Thaala,
latest update:
http://thatstamil.oneindia.in/news/2006/05/08/exit.html
"Vijaykanth who himself is a candidate voted at Saligramam before driving down to Vridhachalam from where he is contesting. He said that that his party would put up a good show all through. He also pooh-poohed the opinion polls and pre-election surveys. 'Most of them have been manipulated."
Congratulations, 'idlyvadai' for *****
The other actors who cast their votes are Sarath Kumar and wife Radhika, Karthik, Ajit, Vikram, Senthil, Kovai Sarala, Vindhya among others.
The views expressed in the article are the author's and not of Sify.com."
idly,
oru periya adhikaariya poi naresh naai-nu solreengale nyayamaa?
guththaa in Hindi- naai
வாழ்த்துக்கள் நட்சத்திரமே ! ஆமாம் நீங்க ஓட்டு போட்டிங்களா?
அன்பு நண்பர் இட்லிவடை,
இதயங்கனிந்த நட்சத்திர வாழ்த்துகள்.
Thambi idly nadantha news sonnega
Nadaka poratha soluren engal thazapathi nxt cm
நட்சத்திரப் பதிவுக்கு வாழ்த்துக்கள்.
இதோ அனைவரும் எதிர்ப்பார்க்கும் படம்.
- குகன்
Update: வேறு என்ன ரஜினி படம் தான். தலைவர் லேட்டாக வந்தாலும்...
கலக்கிட்டீங்க!! நன்றி!! தலைவர் படத்திற்க்கு!!
Post a Comment