பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 08, 2006

ஜெ, விஜயகாந்த், கலைஞர் ஓட்டு போட்டனர்

முதல்-அமைச்சர் ஜெயலிலதா ஓட்டுபோடும் வாக்குச்சாவடி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரி கல்லூரியில் அமைந்துள்ளது. அவர் 9.15 மணிக்கு போயஸ் கார்டனில் இருந்து ஸ்டெல்லாமேரி கல்லூரிக்கு காரில் வந்தார். அவருடன் சசிகலாவும் வந்தார்.
அங்குள்ள 102-வது பொது வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார். முதலில் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் தனது அடையாள அட்டையை காண்பித்தார். பின்னர் கையெழுத்து போட்டார். அவர் விரலில் மை வைக்கப்பட்டது.

பிறகு அவர் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் பொத்தானை அழுத்தி வாக்கை பதிவு செய்தார். சசிகலாவும் அதே வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்த ஜெயலலிதா விடம் கடந்த தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த ஜெயலலிதா "ஏற்கனவே பிரசாரத்தின் போது அனைத்தையும் தெளிவாக சொல்லிவிட்டேன். இப்போது ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. முடிவு வரட்டும் பொறுத்திருப்போம்'' என்றார்.

* - *
தி.மு.க. தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள சாரதா வித்யாலயா மேல்நிலை பள்ளியில் காலை 9 மணிக்கு ஓட்டு போட்டார். அவருடன் மனைவி தயாளு அம்மாள், மத்திய மந்திரி தயாநிதி மாறன், முரசொலி செல்வம், பேத்தி எழிலரசி மற்றும் குடும்பத்தினர் வாக்கு அளித்தனர். பின்னர் அவரது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி: சுதந்திர இந்தியாவில் அனைத்து தேர்தல்களிலும் ஓட்டு போட்டு இருக்கிறீர்கள். இந்த தேர்தலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


பதில்: பெரிய மாறுதலாக எதையும் கருதவில்லை. மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர் இருவரும் ஒன்றாக இருந்து தி.மு.க. வின் பிரசாரத்திற்கு அண்ணா இல்லாமல் முக்கியமானவர்கள் மாநிலத்தில் இல்லாமல் இருந்த போது பெரியார் ஒருவரின் துணையோடு 1971-ல் தேர்தலை நான் சந்தித்தேன். தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே அதுவரை இல்லாத அளவுக்கு 184 இடங்களை தி.மு.க. பெற்றது. அதனால் இந்த தேர்தலை அதைவிட பெரிய போராட்டம் என்று நான் கருதவில்லை.

கே: தி.மு.க. கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

ப: வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

கே: தி.மு.க. கூட்டணி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்?

ப: 200 தொகுதிகளுக்கு குறையாமல் கிடைக்கும்.

கே: தி.மு.க. ஆட்சி அமையும் பட்சத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா?

ப: இப்போதே எம்.எல்.ஏ.க்களுக்கான வேட்பாளர் தேர்வில் புதியவர்களும், இளைஞர்களும் இடம் பெற்று இருக்கிறார்கள்.

கே: தி.மு.க. தணித்து ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறீர்களா?

ப: இதுவரை உள்ள நிலவரத்தின்படி தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன்.

கே: மத்திய கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலக வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைப்பீர்களா?

ப: கோரிக்கை வைக்க வேண்டியது இல்லை. அவர்களுக்கே தெரியும் இவர்களை பற்றி.

* - *
தேதசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் நடிகர் விஜயகாந்த் சாலி கிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில் தனது மனைவி பிரேமலதாவுடன் வந்து ஓட்டு போட்டார்.

சிறிது நேரம் அவர் கிïவில் காத்து நின்று அதன் பிறகு அவர் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது கட்சி புதிய கட்சி என்றாலும் மக்கள் எங்களுக்கு அமோக ஆதரவு அளித்தார்கள். இதுவரை 2 கட்சிகளும் மாறிமாறி ஆட்சிக்கு வந்திருக்கின்றன. எனவே ஒரு மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று மக்கள் எண்ணுகிறார்கள். மக்களிடம் இப்போது ஒரு மவுன புரட்சி நடக்கிறது.

நிச்சயம் தமிழக அரசியலில் அது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். நான் போட்டியிடும் விருத்தாச்சலம் தொகுதியில் எனக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 2 பெரிய கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகிறார்கள்.

தேர்தல் கமிஷனிடம் நாங்கள் எந்த புகாரும் இதுவரை கொடுக்கவில்லை. யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று மக்களுக்கு தெரியும். மக்களிடம் ஏற்பட்டுள்ள மவுன புரட்சி எங்களுக்கு சாதகமாக இருக்கும்

10 Comments:

Krishna said...

//தி.மு.க. வின் பிரசாரத்திற்கு அண்ணா இல்லாமல் முக்கியமானவர்கள் மாநிலத்தில் இல்லாமல் இருந்த போது//

அப்போது எம்.ஜி.ஆர், படப்பிடிப்பிற்காக வெளிமாநிலம் சென்றிருந்தாரோ?...

தயா said...

கடந்த 2001 தேர்தலின் போது ஜெயின் முகத்தில் தெரிந்த நம்பிக்கையும் பூரிப்பும் இன்று இல்லை. மாறாக ஒரு பதற்றத்துடனும் கவலையுடனும் இருக்கிறார். கலைஞரிடமோ நம்பிக்கை மிளிர்கிறது. 5/11 வரை ஒரே திக் திக் தான். பார்ப்போம்.

ஆதரவு அனுதாப அலைகள் இல்லாமல் சன் குழுமம் கிளப்பும் செயற்கையான அலைகளையும் தாண்டி மக்கள் வாக்களிக்க வேண்டுவோம். (ஜெயாவின் சொதப்பல் அலைகள் தாக்கம் ஏற்படுத்துவதில்லை)

எக்ஸிட் போல்கள் ஓரு முன்னுரை தர முடியும். CNN-IBN பார்க்க வேண்டும்ஃ

பிரதீப் said...

ஆயிரம் விளக்குல அம்மா ஆதி ராஜாராமுக்கா ஓட்டுப் போட்டாங்க... ஹி ஹி
ஏதோ நினைப்புல பப்ளிக் மாதிரி அவங்களும் உதய சூரியனுக்குக் குத்திருக்கப் போறாங்க???

Krishna said...

இட்லிவடையாரே, இரு கேள்விகள். ஓட்டுப் பதிவு அதிகமாயிருக்கும் போல தெரிகிறதே. இது ஆளுங் கட்சிக்கா, எதிரணிக்கா அல்லது உங்கள் அணிக்கா, எதற்கு சாதகமானது?

ஜெ இப்படி கருத்து கூறாமல், ஜகா வாங்குவது தோல்வியை ஒப்புக் கொண்டது போன்றா?

Krishna said...

பிரதீப், சூப்பர் குசும்பு!!

Anonymous said...

இந்த வார நட்சத்திரம் இட்டிலிவடை என்ற பெயரில் எழுதும் பாஸ்டன் பாலா அவர்களுக்கு வாழ்த்து.

இவண்,
போலிடோண்டு ரசிகர்மன்றம்
தலைமைக் கழகம்,
சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.

Anonymous said...

//அப்போது எம்.ஜி.ஆர், படப்பிடிப்பிற்காக வெளிமாநிலம் சென்றிருந்தாரோ?... //

எம்.ஜி.ஆர் அவருக்கு 40 ஆண்டு கால நண்பர் மட்டுமே. எம்.ஜி.ஆர் பேரை சொன்னால் இவர் Status என்னாவது. அப்புறம் அம்மா "எங்கள் தயவால்தான் கருணாநிதி 1962ல் வெற்றி பெற்றார்" என்று சொல்வார்கள்.

எங்கப்பா மா மற்றும் ஜெ வை காணவில்லை. அவர்களுக்கு தேவையான keywords எல்லாம் இருக்கு ஆனால் இன்னும் comment உடல.

Idly Vadai said...

Update: 8/6/06 - விஜயகாந்த் - படம் அப்டேட்

Anonymous said...

இட்லி வடையாரே,

கலைஞர், அம்மா படங்கள் தனியே, விஜய்காந்த் படம் .....

நீங்கள் தே.மு.தி.க வா?

Doondu said...

இட்லிவடை,

எங்கள் இயக்கத்தின் பெயரால் மேலே வந்த கருத்து எங்கள் இயக்கம் இட்டது அல்ல!
தயவு செய்து அழித்துவிடவும்!