கலைஞர், ஜெ, வைகோ பேட்டியிலிருந்து ஒரு கேள்வி ஒரு பதில்.
கலைஞர்
கேள்வி:- தேர்தலுக்காக நீங்கள் இன்று ஏதாவது இலவச அறிவிப்பு வெளியிடுகிறீர்களா?
பதில்:- நான் என்னையே நாட்டுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கிறேன். அ.தி.மு.க.வின் இலவசங்களோடு நான் போட்டியிட விரும்பவில்லை.
ஜெயலலிதா
கே:- இப்போது வந்துள்ள பல கருத்து கணிப்புகள் தி.மு.க. கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற வகையில் வெளியிடப்பட்டுள்ளதே?
ப:- முதலில் வந்த சர்வே தான் சரியான கணிப்புகள். அதில் அ.தி.மு.க.வுக்கும் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதுதான் உண்மை. அதன் பிறகு தி.மு.க.வினர் சில செயற்கை சர்வேகளை நடத்த வைத்து அவர்களுக்கு சாதகமாக சில அறிக்கைகளை கொடுக்க வைத்திருக்கிறார்கள். அதை எல்லாம் பார்த்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. நாங்கள் கவலைப்படவும் இல்லை.
வைகோ
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீங்கள் இன்னும் இருக்கிறீர்களா?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆதரிப்பதாக நான் அறிவித்ததற்கு அடுத்தநாள் என்னை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிக்கவிட மாட்டோம் என்று ஆத்திரத்தில் வார்த்தைகளை கெட்டித்தீர்த்தது கருணாநிதிதான். தலைகீழாக நின்று அதற்காக டில்லியில் சோனியாவிடமும், மன்மோகன்சிங்கிடமும் முயற்சி செய்தார்கள். ஆனால் கருணாநிதியின் முயற்சி வெற்றிபெறவில்லை. எங்களது நான்கு எம்.பி.,க்களை காட்டி கூடுதலாக அமைச்சர்களை தி.மு.க., பெற்றது என்று நான் குற்றம் சாட்டினேன். பிரசாரத்திற்காக தமிழகம் வரும்போது பிரதமரும், சோனியாவும் இதற்கு தக்கபதிலடி தருவார்கள் என தி.மு.க., தரப்பில் சொல்லப்பட்டது. இப்போது அவர்கள் தமிழகத்தில் பிரசாரத்தை முடித்து விட்டார்கள். ஆனால் எந்த பதிலும் அவர்களால் கூறமுடியவில்லை. எப்படி கூறமுடியும்? என்னிடம் அந்த தகவலை சொன்னதே அவர்கள் இருவரும்தானே. எனவே அவர்கள், எப்படி அவர்கள் சொன்ன தகவலையே மறுக்க முடியும்? எனவே எங்களது எம்.பி.,க்களைக் காட்டி கூடுதலாக பதவி பெற்ற தி.மு.க., மத்திய அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, May 07, 2006
ஒரே கேள்வி - ஒரே பதில்
Posted by IdlyVadai at 5/07/2006 09:30:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










2 Comments:
வைகோ என்னதான் சொல்ல வருகிறார். தன்னை வாளைமீனுக்கு ஒப்பிட்டுக் கொள்கிறார் போலும். வாளை மீன் மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டுமாம். அல்லது தான் வொவ்வால் போல என்கிறாரா? இல்லை கட்டபொம்மு பிறந்த எட்டப்பன் என்கிறாரா?
அப்படியே விஜய ராஜேந்தரிடம் ஒரு கேள்வி - 10 பதில்ன்னு சேர்த்து தொகுப்பா போட்டு இருந்தீங்கனா சும்மா கலக்கலா இருந்திருக்கும்.
Post a Comment