பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 06, 2006

இறுதிகட்ட ஓட்டுவேட்டை

தமிழக சட்டசபை தேர்தல்: 234 தொகுதிகளிலும் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது- வேட்பாளர்கள் இறுதிகட்ட ஓட்டுவேட்டை

* தேர்தல் வாக்குறுதிகளை கருணாநிதி நிறைவேற்றமாட்டார். ஆசிரியர்- டாக்டர்களுக்கான தொகுப்பூதியம் கால ஊதியமாக மாற்றப்படும் - ஜெயலலிதா

* மீனவர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல்: ராயபுரத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் - கருணாநிதி

* மத்திய அரசை மிரட்டும் கருணாநிதி தி.மு.க. மந்திரிகளை வாபஸ் பெற தயாரா?- நாஞ்சில் சம்பத்

* 'ஞாபகங்களைக்' கிளறும் சன் டிவி!: ராஜீவ் கொலையை கிளறும் ஜெயா டிவி! திமுகவின் சன் டிவியும், அதிமுகவின் ஜெயா டிவியும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு செய்து வரும் பிரசாரம் ஏற்கனேவே சூடாகிப் போயுள்ள தேர்தல் களத்தை பயங்கர கதகதப்பாக்கியுள்ளது.

* இன்பதமிழன் மீது முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த இன்பதமிழன் திமுகவில் சேர்ந்தார். ஸ்ரீ வில்லிபுத்தூரில் நடந்த மே தின கூட்டத்தில் இன்பதமிழன் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

* இன்று மாலை 5 மணிக்கு மேல் கருத்து கணிப்பு வெளியிட கூடாது - தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா

* தேர்தல் விதிகளை மீறி பிரசாரத்திற்கு அதிகளவில் வாகனங்களை பயன்படுத்தியதாக அதிமுக, திமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

* பத்திரிகைகள் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேர்தல் அதிகாரியிடம் கருணாநிதி புகார்:

சனிக்கிழமை காலை ஒரு ஆங்கிலப் பத்திரிகை மற்றும் தமிழ் பத்திரிகையில் ஆபாசமான, அவதூறு பரப்பும் வகையில், தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக விளம்பரம் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து இன்று காலை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவிடம் தொலைபேசியில் பேசினேன். அவர் இந்த விளம்பரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்"

9 Comments:

கோவி.கண்ணன் said...

// ராஜீவ் கொலையை கிளறும் ஜெயா டிவி!// வைகோவை கூட்டணியில் இணைத்திருக்கும் ஜெயலலிதா, காங்கிரஸ் தன் கூட்டணியில் இருப்பதாக நினைத்துக் கொண்டு ராஜிவ் காந்தியைக் காட்டி இறுதிக் கட்ட பிரச்சாரம் செய்வது அப்பட்டமான தோல்வி பயமே. ஜெயலலிதாவிற்கு இது 'இறுதி கட்ட' பிரச்சாரம் என்பது சரிதான்

ஜெயக்குமார் said...

இட்லி & வடை அவர்களே,

சன் டிவி திமுக தேர்தல் பிரச்சார ஒளிபரப்புகளில், தோழமைக்கட்சி பேச்சாளர்களை காட்டும் அளவிற்குகூட ஸ்டாலினை அதிகம் காட்டுவதில்லையே!. அது ஏன் என்பது பற்றி ஒரு விரிவான ஆய்வுக்கட்டுரை எழுதுங்களேன்.

கோவி.கண்ணன் said...

for answer to Jayakumar answer

http://govikannan.blogspot.com/2006/05/blog-post_05.html

Idly Vadai said...

ஜெயகுமார் - நீங்கள் சொல்லுவது உண்மைதான். நானும் கவனித்தேன். அவர்களுக்குள் ஏதோ இருக்கிறது. ஸ்டாலினுடன் ஒரு நாள் என்று சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு தொடர் இந்த வாரம் வந்தது. புலனாய்வு செய்து பார்க்கிறேன்.

நாமக்கல் சிபி said...

ஓ இட்லி வடை சன் டிவியோட புலனாய்வுக் குழுவா?

:-)

ravi srinivas said...

I was expecting that Vaiko would claim that he was chosen to play the role of Aravindan in the serial based on Naa.Parthasarathy's novel but Karunanidhi intervened and the role was offered to Stalin.Who knows he may such things in the future.

macmohan said...

Onnu gavinithirgala, Makkal ellarumae AIADMK varavendum enpatharkaga padupattal, media mattum vara vendam engiranga. Tsunami alai adikirathu AIADMKவுக்கு.

Kumaran said...

I don't know when all are going to start casting all their voting rights. Most of the laboureres working are now itself started going to their native village to cast their votes; But many persons who are speaking a lot about government and politicians never cast their voting rights. Things to worsen more is many using this as a leave to enjoy (most of them getting 3 days leave- Sat to Mon)with their childrens / friends. So pls go to your area and poll your vote on MAY 8.

barathi said...

பத்திரிக்கைகள் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக் மு.க. புகார்.

எந்த பத்திரிக்கைகள்ண்ணா...

1.தினகரன்
2.முரசொலி
3.தமிழ் முரசு
4.குங்குமம்
நீங்கலாக அனைத்து பத்திரிக்கைகள் தானே!!!!.