பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 05, 2006

பிரசாரம் ஓய்கிறது :-(

நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. அதன்பிறகு தேர்தல் முடியும் வரையிலான 48 மணி நேரத்துக்கு தேர்தல் தொடர்பான கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரம் முடியும் நேரத்துக்கு (மே 8, மாலை 5) முந்தைய 48 மணி நேரத்துக்குள் யாரேனும் இந்த விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் (இது தொலைக்காட்சிகளுக்கும் பொருந்தும்).

இந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்தல் பிரசாரமும் நடைபெறக்கூடாது. ஆனால், நிருபர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, தேர்தல் அலசல் நிகழ்ச்சி போன்றவற்றை டி.வி. ரேடியோ ஆகியவை நடுநிலையுடன் நடத்திக் கொள்ளலாம்.

இந்த கட்டுப்பாடு வலைப்பதிவிற்கு பொருந்துமா என்று தெரியவில்லை அதனால் இன்றே நமது வேட்பாளரை அறிவித்துவிட்டேன்.
மறவாதீர், முரசு சின்னம் ( சும்மா நச்சுன்னு இருக்கும் )

11 Comments:

Sittukuruvi said...

அப்படி போடுங்க அருவாள

நெருப்பு சிவா said...

சம்பந்தமில்லாமல், இந்த பதிவு ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது!


தலைவரே SK, நெலவரம் எப்டி இருக்கு? கடைசி நேரத்தில வெலகீட்டா, டெபாசீட் பணம் திரும்ப தருவாங்களோ, ஒய்?
இல்லைனா, அத சம்பாதிக்க, ரெண்டு படம் எxட்ராவா காமெடி பண்ணுவாரே கோவாலு!?

நெருப்பு

SK said...

நன்றி!

நன்றி!

இதுவே தமிழக மக்களின் கடைசி அஸ்திரமாக இருக்கட்டும்!

'முரசு' ஒலிக்கட்டும்!
'அலை' வீசட்டும்!

ப்ரியன் said...

அட என்ன அண்ணாச்சி இப்படி பண்ணிடீங்க

Anonymous said...

Chumma nachu selection..

Anonymous said...

Chumma nachu selection

திருவாளர் பொதுஜனம் said...

விஜயகாந்தை ஆதரிப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த விருப்பு வெருப்பும் இல்லை. அவர் கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆயினும் திறமையான நல்ல ஒரு அரசியல்வாதியாக திகழலாம். ஆனால் இப்பொது நடக்கும் தேர்தலில் பெரிய கட்சிகள் இரண்டுக்கு இடையே மிகவும் கடும் போட்டி நிலவுகிறது. எந்த தனிக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் குதிரை சந்தையில் வாங்கப்படுவதை போல பல சிறிய கட்சி MLAக்கள் விலைக்கு வாங்கப்படுவார்கள். அரசியல் முதிர்ச்சியும் பனபலம் பொருந்திய கட்சிகளே தங்கள் MLAக்களை தக்கவைத்துகொள்ள கடுமையாக போராடவேண்டிய நிலையில் விஜயகாந்தால் தன்னுடைய MLAக்கள் விலை போவதை தடுக்கமுடியுமா என்பது யோசிக்க வேண்டிய ஒன்று! தேமுதிக'வில் இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் புதுமுகங்களாக இருப்பதால் இந்த சந்தேகம் மேலும் வலுக்கிறது. ஆனால் இவர்களுக்கு முற்றிலும் வாய்ப்பு தராமல் போவதில் எந்த நியாயமும் இல்லை. எனவே விஜயகாந்த் மட்டுமாவது வெற்றி பெறுவார் என்று எதிர்பார்கிறேன். அடுத்த 5 ஆண்டுகள், அவர் கட்சியில் அவருக்கு உண்மையானவர்களை அடையாளம் காட்டட்டும்.

Idly Vadai said...

விஜயகாந்த் வெற்றி பெற்று எல்லா தொகுதிகளிலும் சுமார் ஒரு 5000-6000 ஓட்டு வாங்கினாலே மற்ற கட்சிகளுக்கு அடி வயிற்றில் புளியை கரைக்கும். டாக்டர் ஐயா ஏற்கனவே கொஞ்சம் திணறுகிறார் என்று thatstamil.comல் போட்டிருக்கிறார்கள். ( பார்க்க http://thatstamil.oneindia.in/news/2006/05/05/ramdoss.html ) எனக்கு ரஜினியை விட விஜயகாந்த் மேல் நம்பிக்கை இருக்கு. அட்லீஸ்ட் அவர் தைரியத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.

Sivabalan said...

//ரஜினியை விட விஜயகாந்த் மேல் நம்பிக்கை இருக்கு//
Sorry I cannot accept this. Nobody so far has seen ரஜினி political ambition.

It is not correct to comment like this Mr.Idlivadi.

- Rajinifan.

macmohan said...

Vote for Vijaykanth otherwise he will be back in cinema
---- Laughter a good medicine

Anonymous said...

Macmohan
ippadi sinthikka vaendiya vishaythukku ellam sirikurathunaala thaan thamizh natoda nilamai ippadi irukku...