* தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் நாளை காலை 8 மணிமுதல் எண்ணப்படும். பகல் 11 மணிக்குள், ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரிந்து விடும்.
* 12 தொகுதிகளைச் சேர்ந்த 18 ஓட்டுச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
* * காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணியை தொடங்கியிருக்கிறோம். அடிமட்ட அளவில் காங்கிரஸ் கட்சி வேரூன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் காமராஜர் ஆட்சி அமைய முயற்சி எடுப்போம். ( ஆகா கிளம்பிட்டாங்கயா ! கிளம்பிட்டாங்கயா !)
* தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, பேட்டி: எங்கள் கட்சிக்கு அமோக ஆதரவு இருக்கிறது. தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும். விருத்தாசலத்தில் என் கணவர், தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்... விஜயகாந்த் மனைவி பிரேமலதா ( அப்படியா ? )
* நாங்கள் போட்டியிடும் ஒன்பது தொகுதியிலும் மகத்தான வெற்றி கிடைக்கும். தி.மு.க., கூட்டணி மக்களை நம்பாமல், பண பலத்தையும், வன்முறையையும் நம்பியது. பத்திரிகைகளின் கருத்துக் கணிப்புகள் பொய்யாக்கப்பட்டு, அ.தி.மு.க., தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்... ( நாளைக்கும் இதையே சொல்லாதீங்க )
* அ.தி.மு.க., கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். தனிப்பெரும்பான்மையுடன் ஜெயலலிதா மீண்டும் ஆட்சி அமைப்பார்...( உங்களுக்கும் அதே அட்வைஸ்தான் )
* தமிழகத்தில் வாக்குபதிவு 70.22%!
பொதுவாக, 60 சத வாக்குகள் பதிவானாலே, வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள் என்று கூறுவார்கள். இரு ஆண்டுகளுக்கு முன் நடந்த மக்களவைத் தேர்தலில் 62 சத வாக்குகள் பதிவாயின. இப்போது, பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் சராசரியாக 70 சத வாக்குகள் பதிவாகியுள்ளன.
- இந்த தேர்தலில் வாக்களிக்கப்பட்ட ஓட்டுகளில் 82 சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டைகளைக் காண்பித்து போட்ட ஓட்டுகள் ஆகும்.
- மொத்தத்தில் 51 சதவீதம் ஆண்களும், 49 சதவீதம் பெண்களும் வாக்களித்து உள்ளனர்.
- சென்னை மாவட்டத்தில் 58.28 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
- இதர மாவட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் - திருவள்ளூர்-68.57, காஞ்சீபுரம்-68.14, வேலூர்-71.17, திருவண்ணாமலை-73.79, விழுப்புரம்-71.94, கடலூர்-74.89, கிருஷ்ணகிரி-71.06, தருமபுரி-71.6, சேலம்-73.85, நாமகëகல்-70.35, கோவை-69.43, ஈரோடு-73.64, நீலகிரி-65.52, திண்டுக்கல்-71.74, தேனி-70.45, மதுரை-70.23, கரூர்-77.15, பெரம்பலூர்-77.14, திருச்சி-73.16, நாகப்பட்டினம்-75.45, திருவாரூர்-75.8, தஞ்சாவூர்-74.52, புதுக்கோட்டை-73.91, சிவகங்கை-64.11, ராமநாதபுரம்-63.39, விருதுநகர்-72.24, தூத்துக்குடி-65.84, திருநெல்வேலி-68.86, கன்னியாகுமரி-63.46.
பெண்களை விட ஆண்கள் கூடுதலாக வாக்களிப்பு: ஆண்களை விட பெண் வாக்காளர்கள் குறைவாகவே வாக்களித்து உள்ளனர். கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் தொகுதிகள் அனைத்திலும் இந்த வித்தியாசம் இருக்கிறது. கிராமப்புறத் தொகுதியான திருப்பூரில் அதிகபட்சமாக 23 ஆயிரம் வாக்குகள் வரை ஆண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
கிராமப்புறத் தொகுதியில் மிகக் குறைவான வித்தியாசம் உள்ள தொகுதி வால்பாறை. இத்தொகுதியில், பெண் வாக்காளர்களை விட 187 ஆண் வாக்காளர்களே கூடுதலாக வாக்களித்து உள்ளனர்.
ஒரே குடும்பத்தில் ஆண்கள் வாக்களிக்கும்போது, பெண்கள் வாக்களிக்கவில்லை என்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
கூடுதல் சதவீதத்துக்கு என்ன காரணம்?:
அதிமுக, திமுக கூட்டணியின் வாக்குறுதிகளில் ஈர்க்கப்பட்டு வாக்குகள் அதிகரித்து இருக்கலாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இரு கூட்டணிக்கும் மாறி, மாறி வாக்களித்து பலன் ஏதும் கிடைக்கவில்லை. எனவே, இக்கூட்டணிகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்தவர்கள் அதிகரித்துள்ளனர் என்கிறது மற்றொரு தரப்பு.
மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வே வாக்கு சதம் அதிகரிக்கக் காரணம். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என நடந்த தொடர் பிரசாரங்களுக்குக் கிடைத்த பலன் இது என்கின்றன தன்னார்வ அமைப்புகள்.
கடந்த பேரவைத் தேர்தலில் ஏராளமானோர் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. இந்தத் தேர்தலில், மே 31-ம் தேதி வரை புதிய வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்களர்களைச் சேர்ந்து துணைப் பட்டியில் வெளியிடப்பட்டு உள்ளது. எனவே, வாக்குச் சதவீதம் அதிகரித்துள்ளது என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.
அரசு ஊழியர்கள் மத்தியில், கட்டாயம் வாக்களிக்க வேண்டும். அதுவும் குடும்பத்துடன் வாக்களிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கட்டளை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதும் வாக்குச் சதவிகிதம் அதிகரித்து உள்ளதற்குக் காரணம் என்கின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் சந்தேகம்: இதற்கிடையே, 85 சதத்துக்கு மேல் வாக்குப் பதிவான வாக்குச் சாவடிகளின் பதிவை ஆய்வு செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குச் சதம் அதிகரித்த மகிழ்ச்சியில் இருப்பதா, வாக்கு சதம் அதிகரித்ததால் நடத்தப்படும் ஆய்வை ஏற்றுக் கொள்வதா? என்கின்றனர். 100 சத வாக்குப் பதிவு நடக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தேர்தலுக்கு முன் கூறிய தேர்தல் ஆணையம். இப்போது, வாக்கு சதம் அதிகரித்தது கண்டு ஆச்சரியமடைந்து ஆய்வு நடத்துகிறது. வாக்கு சதம் அதிகரிக்கக் கள்ள வாக்கு காரணமா? என்ற சந்தேகம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கலாம். ஆனால், ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்ததை ஏற்பது அவசியம்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, May 10, 2006
தேர்தல் செய்திகள்
Posted by IdlyVadai at 5/10/2006 06:46:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










5 Comments:
மேலே உள்ள படத்தின் படியே
அதிமுக, திமுக, அதிமுக, திமுக, அதிமுக என்ற வரிசையில் அடுத்து திமுக என்பது நாளை தெரியும்
Good Work!!
Post us, update on Election result!!
வாங்க இட்லி வடை!
நேத்து நீங்க இல்லாத குறைய துபாய்வாசிதான் தீர்த்து வெச்சார்.
Hello sir,
check out jaya tv they are the only channel(Only Indian Channel) who is giving the correct information. Even Namathu M.G.R is the only Newspaper which gives correct information. I wont agree with what ever ur telling.
CNN-IBN, Hindu, Star News, Times Now, Times of India are supporting DMK. The exit poll surveys are done to satisfy Mr.Maran. So dont belive other Channels except Jaya TV.
Watch only Java TV :)
regards
PS: Dont get angry. Thats what Jaya TV peoples (Great Ravi Bernard, SS Chandran, Radharavi, Yesterday Java TV news) was telling pa.
Its not my view
Entha therthalil Niriya puthy votekal vijayakanthkku villunthu ullathu, Ethu varraikkum erandu katchikalaium veruthavarkal, votu podathavarkal entha thadavai vijaya kanth varaval votu Bottu erukkirarkal, Enakku therintha nanbarkal ellam yarrukku votu pottai endru kettal vijayakanth endru solli erukkirarkal avarkal annaivarum youth, so votu % increase aaki ullathu
Post a Comment