பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 08, 2006

வாக்களியுங்கள் !

விஜயகாந்த் வேண்டுகோள்


எல்லோரும் வாக்களிக்க ஜெ. வேண்டுகோள்

வாக்காளர்கள் எல்லோரும், வாக்களிப்பதை ஜனநாயகக் கடமை என்று உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அறிவார்ந்த மக்கள் வாழும் தமிழகத்தில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாயின என்று பிற மாநிலங்கள் வியப்போடு பாராட்டும் வகையில், முழு வாக்களிப்பு நடைபெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அமைதிப் பூங்காவான தமிழகத்தில், வாக்காளர்கள் எந்தவிதத் தயக்கமும் இன்றி, வாக்குச் சாவடிக்குச் செல்லலாம். சுதந்திரமாக தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்ற நிலை நிலவுகிறது.

தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற உறுதியோடு, ஜனநாயக வழியில் அதிமுகவினர் செயல்பட்டு வருகிறோம். அதே நேரத்தில், தங்களுக்கு ஏற்பட்ட தோல்வி பயத்தின் காரணமாக, விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் திமுகவினர், வன்முறையைத் தூண்டிவிடவும் தயாராகி உள்ளனர் என்பது அக் கட்சியின் தலைவர் கருணாநிதி அண்மையில் பேசியுள்ள பேச்சில் இருந்து தெரிய வருகிறது.

மிரட்டல்களுக்கு அஞ்சாமல் மக்களை வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கச் செய்வது அதிமுகவினரின் முக்கிய கடமை என ஜெயலலிதா கூறியுள்ளார்.

[அதிமுக வாக்குறுதிகள்]
ஏழைப் பெண்களின் திருமணத்தின்போது தாலிக்கு அரை பவுன் தங்கம் இலவசம். பிளஸ் டூ தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர்க்கு இலவச கம்ப்யூட்டர். ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி. வேளாண் கடன் தள்ளுபடி. சிறப்புக் கல்விக் கட்டணம் ரத்து. மாவட்டம் தோறும் அரசு மருத்துவ, பொறியியல் கல்லூரிகள். அனைத்து அரசு அலுவலகங்களும் கம்ப்யூட்டர்மயம். வாடகைக் கட்டடங்களில் உள்ள 2,172 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய சொந்தக் கட்டடங்கள். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடி, தேள்கடி, நாய்கடிக்கான மருத்துவ வசதி. அவை 24 மணி நேரமும் இயங்கும். மதுரையை உற்பத்தி மையமாகக் கொண்டு விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களைத் துணை உற்பத்தி மையமாகக் கொண்டு தொழிற்சாலைகள். தூத்துக்குடியில் முக்கிய ஏற்றுமதி மண்டலம். நெசவாளர் நலன்பேணும் வகையில் நெசவாளர் நலன் பாதுகாப்புத் திட்டம். சிட்டா நூலுக்கு விதிக்கப்படும் வரியில் இருந்து விலக்கு அளிக்க முயற்சி. கல்வி, வேலைவாய்ப்பு, அதிகார பிரதிநிதித்துவ அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாகப் பெற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் முதியோர் நல மருத்துவப் பிரிவு தொடங்கப்படும். புதிய முதியோர் இல்லங்கள் தொடங்க முன்வரும் தொண்டு நிறுவனங்களுக்கு, தேவையான உதவிகளும் ஊக்கமும் அளிக்கப்படும். ஆதிதிராவிட குடியிருப்புகளில் படிப்படியாக மாலை நேர அரசு தனிப் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக தொழில் பயிற்சி மையம் உருவாக்கப்படும். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரைகளின்படி முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவைக் கடுமையாக எதிர்ப்போம். பனை ஏறும் தொழிலாளர் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு திட்டம். கோவில் பணியாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி பெற மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். மீன் பிடி தொழில் செய்ய முடியாத 4 மாத காலத்துக்கு மத்திய அரசு பங்கு ரூ. 600, மாநில அரசின் பங்கு ரூ. 600, மீனவர் பங்கு ரூ. 600 ஆக உயர்த்தப்பட்டு மொத்தம் ரூ. 1800 வழங்க நடவடிக்கை. மீன்பிடி படகுகள் சேதம் அடைந்தால், நிவாரணம் கிடைக்க குறைந்த தொகை பெற்று காப்பீடு செய்ய திட்டம். தமிழகக் கடலோரப் பகுதிகளில் புதிய மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்கள். உழவர் பாதுகாப்புத் திட்டம் போன்று மீனவர் பாதுகாப்புத் திட்டம், இழுவை விசைப் படகுகளை -ரத்த சூரை மீன்களைப் பிடிக்க ஆழ்கடல் மீன்பிடி கலன்களாக மாற்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். கச்சத் தீவை நிரந்தர குத்தகை அடிப்படையில் பெறுவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்.]


கலைஞர் கவிதை

[ திமுகவின் வாக்குறுதிகள் ]
[தரமான அரிசி கிலோ ரூ.2. வீடுதோறும் இலவச கலர் டி.வி. தேவைப்பட்டால் இலவச கேபிள் இணைப்பு.
இலவச கேஸ் அடுப்பு. மீனவர்களுக்கு டீசலுக்கு வரி குறைப்பு பற்றி ஆலோசனை. பழுதான குடிசைமாற்று வாரிய அடுக்கு மாடி வீடுகள் புதிதாகக் கட்டித் தரப்படும். மீண்டும் திருமண நிதி உதவித் திட்டம் -ரூ.15,000 ஆக உயர்வு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, பயிற்சிக்கான தினப்படி மீண்டும் ரூ.45. கர்ப்பிணிகளுக்கு பேறு கால உதவி -மாதம் ரூ.1000 -6 மாதங்களுக்கு மாணவர்களுக்கு சத்துணவுடன் வாரம் 2 முறை முட்டை -திங்கள், வெள்ளிக்கிழமைகளில். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.300 வரை உதவித் தொகை. காலியாக உள்ள அரசுப் பணியிடங்களில் 3 லட்சம் இளைஞர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு. கிராமங்களில் இளைஞர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி. விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் அறவே தள்ளுபடி. நெசவுத் தொழில் செய்பவர்களுக்கும் இலவச மின்சாரம். நிலமற்ற ஏழை, எளிய குடும்பங்களுக்கு தலா 2 ஏக்கர் நிலம். விவசாயிகள் இறந்தால் கூட்டுறவுக் கடன் அறவே ரத்து. வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு -அதில் மகளிருக்கு 50 சதவீத இடம். சிறப்புத் தொகை கட்டி முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகள் திரும்ப வழங்கப்படும். உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த அரசு ஊழியர், சாலைப் பணியாளர் குடும்பங்களுக்கு நிதியுதவி -வாரிசுகளுக்கு வேலை. மூன்றாவது போலீஸ் கமிஷன் அமைக்கப்படும். 6-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்துவோம். காலியாக உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் டாக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். ஒப்பந்த நியமன முறை ரத்து.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் தனித் தனி வாரியம். உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.300 ஒய்வூதியம். சுனாமியால் வீடிழந்த மீனவர்களுக்கும், பிறருக்கும் உடனடியாக வீடுகள். அர்ச்சகராகப் பயிற்சி பெற்ற அனைத்து சமூகத்தினருக்கும் ஆலயங்களில் ஆராதனை செய்ய வாய்ப்பு. இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீட்டுச் சட்டம். முதியோர் உதவித் தொகை ரூ.400 ஆக உயர்வு. ஊனமுற்றோர் உதவித் தொகை ரூ.500 ஆக உயர்வு. பஸ் கட்டணங்கள் ரயில் கட்டண அளவுக்குக் குறைக்கப்படும். சினிமா வெளிப்புற படப்பிடிப்புக்கு கட்டணங்கள் பெரிதும் குறைக்கப்படும். மீண்டும் எம்.ஜி.ஆர். திரைப்பட நகர் உருவாக்கப்படும். நடிகர் சிவாஜிக்கு சிலை மற்றும் மணி மண்டபத்தை விரைவில் அமைப்போம். காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதியை கல்விக் கண் திறந்த நாளாக அறிவித்து பள்ளிகளில் விழா எடுக்கப்படும். ]


பதில் உங்கள் கையில் !

கட்டாயம் வாக்களியுங்கள். உங்களோடு சேர்ந்து 4 கோடியே 63 லட்சத்து 4 ஆயிரத்து 763 பேர் வாக்களிக்கப் போகிறார்கள்!!


பிகு: 'கடமையை செய் பலனை எதிர்பாராதே' - கீதை

13 Comments:

Anonymous said...

நன்றி இட்லி வடை.கண்டிப்பாக ஓட்டு போடுவோம்.மனு

Anonymous said...

pL VOTE NOW. BECAUSE IT IS ANOTHER FIVE - YEARS - MONTHS - DAYS YOU'LL BE ANOTHER ILICHCHCVAYAN FOR GETTING CTV,RICE,GOLD,COMPUTER ETC OR EVEN HOLIDAY ABROAD!!!

SWATHI

SK said...

நீங்கள் பதிவிட்ட வரிசையிலேயே வெற்றி 'முரசு' கொட்ட எனது வேன்டல்கள்!

கீதை வாசகம் அருமை!

சின்ன பிள்ளை said...

சும்மா புகுந்து விளையாடுறீங்க ஸார்.
இடிஎன் சாணலில் உங்கள் முகவரியை
கண்ட பின் உங்களது ஒவ்வொரு போஸ்டிங்கும் விடாமல் பார்த்து வர்ரேன். Really Great

கோவி.கண்ணன் said...

முத்து படமே தமிழ் மணம் முகப்பில் தெரிந்ததால் என்ன முத்து இந்த வாரமும் தொடருகிறாரோ என்று நினைத்து திறந்தால். ஆச்சரியம் இட்லிவடை.

இந்த வார நட்சத்திரமாவதற்கு நீங்கள் தான் சரியான நபர். பின்ன தேர்தல் செய்திகளை இலைவிருந்து வைத்தவராயிற்றே.

அப்ப இந்த வாரம் கூட்டு (அணி), பொறியல், வாரமாக இருக்கும்.

இட்லி வடை , சாம்பர் இட்லியாகவும், மசால் வடையாகவும் ஒருவாரத்திற்கு நல்ல வேட்டைதான்

நன்மனம் said...

நட்சத்திர வாரத்திற்க்கு வாழ்த்துக்கள்.

வியாழன் முதல் ஞாயிறு வரை நல்ல விருந்து வழங்க ஏற்ற வாரம்

முத்து(தமிழினி) said...

தேர்தல் வாரத்திற்கேற்ற அருமையாக தேர்வு..(கோவிக்கண்ணன் கூறியது சரியே)

கலக்குங்க இட்லி வடை..

சாப்பிட நாங்க ரெடி...(தொடர்ந்து சாப்பி்ட்டுத்தானே இருக்கோம்)

நாமக்கல் சிபி said...

அட! இட்லி வடைதான் இந்த வார ஸ்டார் என்பதில் சந்தேகமே இல்லை! ஒரு அர்த்தத்துடந்தான் இந்த வாரம் உங்களை நட்சத்திரமாக தெரிவு செய்துள்ளனர் போலும்!

எனிவே! வாழ்த்துக்கள் இட்லிவடை!

Krishna said...

இந்த வார நட்சத்திரத் தேர்வு தவறென்று முதலில் நினைத்தேன்.

எப்படியும் இந்த தேர்தல் வாரத்தில் வடையாரின் சிறப்பு விருந்து இருக்கத்தானே செய்யும், வேறொரு வாரத்திற்கு மீண்டும் ஒரு முறை விருந்தளிக்க வைத்திருக்கலாமே என நினைத்தேன். யோசிக்கையில், இந்த தேர்தல் வாரத்தில் எப்படியும் ஒளிவட்டம் உங்கள் மேல்தான் இருக்கும். வேறொருவரை நட்சத்திரமாய் போட்டால், முழுமதியின் முன் காணாமல் போன விண்மீனாய் காணாமற் போய்விடுவரே. ஆக சரியான தேர்வுதான்.

வாழ்த்துக்கள். விருந்து படைப்பீர் என்பதில் சந்தேகமேயில்லை. அது யார் மனமகிழ் விருந்து என்பது உங்கள் கையில் இல்லையே...

முத்துகுமரன் said...

அருமையான நட்சத்திர தேர்வு, இட்லி வடை உங்கள் விருந்திற்கு நாங்கள் தயார்...
விதவிதமா பந்தி பரிமாறுங்க....

ஆனா என்ன... சிலருக்கு அஜீரண கோளாறு வரக்கூடும் வாரத்தின் பிற்பகுதியில்:-)))))))))))))))))

முத்து(தமிழினி) said...

//ஆனா என்ன... சிலருக்கு அஜீரண கோளாறு வரக்கூடும் வாரத்தின் பிற்பகுதியில்//

இது இட்லிவடைக்கு வந்துவிடக்கூடாது என்பது தான் என் ஆசை..எப்படி அப்புறம் நாம் லேட்டஸ்ட் செய்திகளை தெரிந்துகொள்வது? என்ன நான் சொல்றது?:)

அருண்மொழி said...

இட்லி வடையாரே, இந்த வாரம் சைவமா, அசைவமா?

enRenRum-anbudan.BALA said...

Congrats for getting selected as a "thamizmaNam STAR" though you are already a "SUPERSTAR" considering your coverage on Election - 2006 !!!