பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 07, 2006

தேர்தல் செய்திகள்

நேற்று பிரச்சாரத்திற்கு கடைசி நாள், அதனால் ஒளரல் கொஞ்சம் ஜாஸ்தியாக இருந்தது. வாசகர்கள் பொருத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்


புதிதாக கல்யாணம் செய்த ஒருவன் சாந்தி முகூர்த்தத்தன்று தனியாக படுத்திருந்தானாம். ஏன் என்று அவனிடம் கேட்டபோது, அம்மா தான் இலவசமாக அனைத்தும் தருகிறேன் என்று கூறி வருகிறார். அவரே இலவசமாக குழந்தையும் கொடுப்பார் என்று காரணம் கூறினானாம். அந்தளவுக்கு தோல்வி பயத்தில் இலவசங்களை ஜெயலலிதா அறிவித்து வருகிறார். - நடிகர் பாக்கியராஜ்

கம்ப்யூட்டரில் "டிவி'யை பார்க்கும் வசதிகள் வரப்போகின்றன. ஆனால் "டிவி'யை கம்ப்யூட்டரை போல பயன்படுத்த முடியாது. எது சிறந்தது? கம்ப்யூட்டரா, "டிவி'யா என்பதை பொதுமக்களும், மாணவர்களும் சிந்தித்து ஓட்டு போட வேண்டும். - எஸ்.வி.சேகர்


தி.மு.க., மாநாட்டில் நான் பேசியதை இப்போது திரும்பத் திரும்ப சன் “டிவி’யில் காட்டுபவர்கள் “மாநாட்டிற்கு நீங்கள் வராவிட்டால் பலகீனமாகிவிடும், வந்து பேசுங்கள். உங்கள் பரச்னைகளை தீர்த்து வைக்கிறேன்’ என்று கருணாநிதி என்னிடம் கெஞ்சியதை ஏன் காட்டவில்லை? - நடிகர் சரத்குமார்

அடுத்த கட்சியின் எம்.பி.,க்கள் பெயரைச் சொல்லி அமைச்சர் பதவி வாங்கிய சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை. எனவே தி.மு.க.,தனது எம்.பி.,க்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். ம.தி.மு.க., எம்.பி.,க்கள் நான்குபேரும் ராஜினாமா செய்யத் தயார். தற்போது தேர்தலில் தி.மு.க., கூறியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமரை நம்பியுள்ளதாக கருணாநிதி பேசியுள்ளார். ஆனால் அதற்கு உடன்படுவதாக பிரதமர் அந்த மேடையில் எதுவும் பதில் சொல்லவில்லை. - வைகோ

ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் தலைவர் கருணாநிதி, மக்களுக்காக மக்களின் நன்மைக்காக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளார். ஒரு கிலோ அரிசி ரூ.2, கலர் டி.வி., கியாஸ், ஸ்டவ் அடுப்பு, 2 ஏக்கர் நிலம் ஆகியவைகளை தருவதாக கூறியுள்ளார். சொன்னதை செய்வார். செய்வதை சொல்வார். - டாக்டர் ராமதாஸ்


சென்னை மேயராக மு.க. ஸ்டாலின் இருந்தபோதுதானë சென்னையில் பல வளர்ச்சித் திட்டங்கள் செயலëபடுத்தபëபட்டன. சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.
நான் தமிழகத்தில் கடந்த 1 மாத காலமாக பல பகுதிகளை சுற்றி வந்திருக்கிறேன். சென்ற இடங்களில் எல்லாம் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு பெரும் ஆதரவு அலை வீசுகிறது. இலவச அரிசி தருவதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறி இருக்கிறார். இதே ஆட்சியில் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு ஏன் இலவச அரிசியை தரவில்லை? - அன்புமணி

எந்த பதவி வந்தாலும் எந்த கவுரவமë வந்தாலும் அவைகளையெல்லாம் உங்களுக்கு சொந்தம். மன்னிக்க வேண்டும் உங்கள் காலடிகளுக்கு சொந்தம். 6 கோடி தமிழர்களின் இன்பத்துக்கு சொந்தம். எனக்கு சொந்தமல்ல. அவர்களுடைய முதல்-அமைச்சராக இருக்க வேண்டும் என்பதைவிட தமிழர்களே, தமிழர்களே உங்களுடைய அடிமையாக இருக்க தான் நான் விரும்புகிறேன். வேறு யாருக்கும் நான் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. வேறு யாருக்கும் கீழ்படிந்து நடக்கவேண்டும் என்று விரும்புகிறவன் நான் அல்ல. தமிழர்களுக்கு ஆற்றும் சேவையில், உங்களுக்கு ஆற்றும் பணியில், உங்களுக்கு அடிமையாக இருக்க விரும்புகிறேன். அந்த அடிமை வாழ்வில் உங்கள் காலடியில் நான் சுருண்டு விழுந்து செத்தாலும் அது தான் எனக்கு சொர்க்கம் என்று கருதுகிறவன். என்னை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றால் மொத்த தமிழ் சமுதாயத்தை அதற்காக பாடுபட்டு கொண்டிருக்கின்ற, அதற்காக சுவாசித்து கொண்டிருக்கின்ற ஒரு ஜீவனை ஆதரிக்கிறீர்கள் என்று பொருள். - கலைஞர்


சினிமாவை காட்டிலும் இந்த அரசியல் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. - விஜயகாந்த்


தேர்தல் நேரத்தில் நிறைய வாக்குறுதிகளை திமுக தலைவர் கருணாநிதி சொல்வார். ஆனால் அதை செய்ய மாட்டார். அது அவருக்கு கை வந்த கலை.

நான் ஒன்றை சொன்னால் நடந்தே தீரும். எப்பாடு பட்டேனும் நிறைவேற்றுவேன். சொன்னதையும் செய்வேன். சொல்லாததையும் செய்வேன் - ஜெயலலிதா

மத்திய அமைச்சர் சிதம்பரம் இரட்டை வேடம் போடுகிறார். மத்தியில் மானியங்களை குறைக்க வேண்டும் என்று கூறுகிறார். தமிழகத்தில் வந்து இரண்டு ரூபாய் அரிசி சாத்தியம் தான் என்கிறார். இதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகள் பிற மாநிலங்களிலும் பரவி மோசமான சூழ்நிலைக்கு நாடு தள்ளப்படும். மத்தியில் ஊழல் ஆட்சியை நடத்திக்கொண்டு, தமிழகத்தில் வந்து சோனியா அ.தி.மு.க., ஊழல் அரசை அகற்ற வேண்டும் என்று கூறுகிறார். -வெங்கையா நாயுடு

0 Comments: