பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 06, 2006

இலவச கம்ப்யூட்டர் !


திருமங்கலம், புழல், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் ஜெயலலிதா பேசியதாவது:

* தமிழகத்தில் பிளஸ் டூ தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் வழங்கப்படும்.

* அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் கேபிள் டிவி இணைப்பு கிடைக்கும் வகையில் கேபிள் டிவி சட்டத்தை அமல்படுத்துவோம். செட்-டாப் பாக்ஸ் முறையை ஒழித்தே தீருவோம்.

* தமிழகத்தில் புதிதாக 23 நர்ஸிங் கல்லூரிகள் திறக்கப்படும். புதிதாக 2 கண் மருத்துவமனைகள் திறக்கப்படும்.

* குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு தரப்படும்.

* ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலி வாங்க அரை பவுன் இலவசமாக தரப்படும்.

* ரேஷன் கடையில் ஏழை எளிய மக்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.

* உழவர் பாதுகாப்பு திட்டம் போலவே, மீனவர் பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்படும்.

தமிழகத்தில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி தொடர ஆதரவு தாருங்கள். இன்னும் பல நல்ல திட்டங்களை செய்வேன்.

நல்ல வேளை நாளையுடன் பிரச்சாரம் முடிகிறது. இல்லை என்றால் (அக்னி வெயிலில் ) இலவச தாலியுடன் இலவச மாப்பிள்ளை என்றால் ?

20 Comments:

Sivabalan said...

I think Amma has an edge over opposition now.

We have to wait & see.

நாமக்கல் சிபி said...

எல்லாத்தையும் இவங்களே இலவசமாக் கொடுக்கறதா சொல்லிட்டா நாங்க எதைக் கொடுப்பதுன்னு தயாநிதி மாறன் கேஸ் போடப் போறாராம்.

இலவச கம்ப்யூட்டர் தந்தா இலவச இண்டர்னெட் கணெக்ஷன் தருவோம்னு கலைஞர் அறிக்கை தயார் பண்ணிகிட்டு இருக்கார்.

:)

பரணீ said...

//நல்ல வேளை நாளையுடன் பிரச்சாரம் முடிகிறது. இல்லை என்றால் (அக்னி வெயிலில் ) இலவச தாலியுடன் இலவச மாப்பிள்ளை என்றால் ?//
:-)))

Anonymous said...

Let amma tells whatever she think.

sun TV'la amma'voda 5 aandu saadhanaigalai kaati kilikuraanga.
idha 1 month munnadiye potrundha ADMK'oda election expense'avadu save aagi irukum.

DMK has media power as Cho says. but vaiko POTA arrest appo Amma'va Fascisit veri piditha aatchi 'nu sonnare adhukku enna padhil.

Anonymous said...

\\நல்ல வேளை நாளையுடன் பிரச்சாரம் முடிகிறது. இல்லை என்றால் (அக்னி வெயிலில் ) இலவச தாலியுடன் இலவச மாப்பிள்ளை என்றால் ? \\

The top most interesting comment read in the blogs for the 2006 Elections!! :-))

kirukan said...

Now Jeya knows its going to be hard for her. These are just reactions of those facts.

வவ்வால் said...

'இலவசம் இல்லை நம் வசம் நிதி' என்ற வசனம் வெகு விறைவில் மக்கள் காதில் பாயும் !

Krishna said...

இரண்டு காரணங்கள்

1. தாம் வருவது மிகக் கடினம் என உணர்ந்திருக்கலாம். எனவே, நிறைவேற்றவே இயலாத வாக்குறுதிகளை வீசி, தோல்வியின் தாக்கத்தை குறைக்கலாம் என்றெண்ணியிருக்கலாம்.

2. முடிந்தவரை, திமுக தனி மெஜாரிடி பெறாமல் இருக்க முயலலாம். கூட்டணி ஆட்சி அமைந்து, அவர்களுக்குள் அடித்துக் கொண்டால், மக்கள் வெகுண்டெழுந்து மீண்டும் தன்னை நாடி வரலாம். எதுவும் செய்யாமலேயே அடுத்த முறை வ்ந்துவிடலாம்....

கொழுவி said...

ம். ஏறக்குறைய தமிழகத்தில் கூட்டணி ஆட்சியென்பது முடிவாகிவிட்டது.
நீண்டகால அடிப்படையில் ஜெ, வை.கோ, திருமாவுக்கு இத்தோல்வி சாதகம் என்றுதான் புரிகிறது. தேர்தலில் வென்றால் இவர்களுக்குப் பாதகம்தான்.

Prabhu said...

Ok !
"Hereby i declare i belong to lower socio economic strata,and i ought to get everything freeeeee.."


Seriba, intha certificate vaanga thasildar kitta evalo rooba kattanum..?? LOL

Idly Vadai said...

Update: 6/5/06 - இந்த செய்திக்கு ஒரு கார்ட்டூன் :-)

Haranprasanna said...

ஜெயலலிதா போட்டிக்கு அறிவித்துவரும் இலவசங்கள் அவசியமற்றவை. போட்டிக்காக அறிவிக்கப்படுபவை. கருணாநிதி இலவசத் தொலைகாட்சி என்று அறிவித்தபோது பணம் இல்லை என்று சொன்னவர்கள் இலவசத் தங்கம், இலவச கணினி என்று அறிவிப்பது நல்ல வேடிக்கை. இரண்டு கட்சிகளும் தரும் இலவசங்கள் மாநிலத்தைச் சீர்குலைக்குமே அன்றி வளர்ச்சிக்கு உதவாது. கணினி இலவசம் என்றால் அதன் configuration-ஐ இப்போதே சொல்லச் சொல்லிக் கேட்கவேண்டும். 6000 ரூபாய்க்குக் கணினி கிடைக்கிறது. அரசு மொத்த விலையில் வாங்கினால் 4000 ரூபாய்க்கு வாங்கும். அதில் காய்கறி போட்டு வைத்துக் கொள்ளலாம். ஆனால் கணினி என்பது கல்விக்குப் பயன்படக்கூடியது என்று மறக்காமல் பிரசாரம் மட்டும் செய்வார்கள்.

நாமக்கல் சிபி said...

//கணினி இலவசம் என்றால் அதன் configuration-ஐ இப்போதே சொல்லச் சொல்லிக் கேட்கவேண்டும். 6000 ரூபாய்க்குக் கணினி கிடைக்கிறது. அரசு மொத்த விலையில் வாங்கினால் 4000 ரூபாய்க்கு வாங்கும்//

அட கம்ப்யூட்டர் வாங்க அவ்ளோ செலவு செய்யனுமா என்ன? இந்தக் கம்ப்யூட்டர் வாங்க எவ்ளோ ஆகும் சொல்லுங்க?

கோவி.கண்ணன் said...

10 ஆம் தேதிக்கு பிறகு தேர்தல் முடிந்துவிட்டது என்று அந்த அம்மாவிடம் சொல்லுங்கள், இல்லையென்றால் படுக்க கட்டில், பல் விளக்க ப்ரஸ், குளிக்க சீயக்கா அப்படின்னு தன்னை மறந்து அடுக்கி கிட்டே பழைய நினைப்பில் அறிக்கை அனுப்பிக்கிட்டே இருக்க போகிறார்.

நாமக்கல் சிபி said...

//10 ஆம் தேதிக்கு பிறகு தேர்தல் முடிந்துவிட்டது என்று அந்த அம்மாவிடம் சொல்லுங்கள், இல்லையென்றால் படுக்க கட்டில், பல் விளக்க ப்ரஸ், குளிக்க சீயக்கா அப்படின்னு தன்னை மறந்து அடுக்கி கிட்டே பழைய நினைப்பில் அறிக்கை அனுப்பிக்கிட்டே இருக்க போகிறார். //

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவருக்கு எலெக்ஷனோஃபோபியா என்ற நோய் பீடித்திருப்பதாக தெரிகிறது.

நாகு said...

கோவிக்கண்ணன், இலவசங்களை இந்தத்தேர்தலில் அறிமுகப்படுத்தியவர், பழம்தின்னு கொட்டைப்போ ட்டவர்ன்னு நினைக்கிறேன்.

இரா.மோகன் காந்தி said...

கழகங்கள் கூரும் இலவசங்களை பார்த்தாள் இவர்கள் ஆட்சிக்கு வந்தபின் மக்கள் தலையில் சுமத்தும் வரி சுமையை நினைத்தால் தலைஐ சுற்றுகிறது

supersubra said...

எனக்கு இலவச காஸ் அடுப்பு, அரிசி இதெல்லாம் வேண்டாம். அப்புறம் யார் சமைப்பது.

என் கோரிக்கைகள் யார் நிறைவேற்றுவார்களோ அவர்களுக்கே என் குடும்பத்தின் மொத்த ஓட்டும்.

1.வருடம் 365 நாளும் 3 வேளையும் குடும்பத்தோட சாப்பிட இலவச அனுமதி. ஹோட்டல் என் இஷ்டப்படி தினசரி மாற்றிக்கொள்வேன்.

2.வாரம் ஒரு முறை ஒரு புதிய படத்துக்கு டிக்கட்.

3. வருடம் ஒரு முறை உல்லாச ச்ற்றுலாவிற்கு டிக்கட்.

4. வருடம் முழுவதும் வரும் எல்லா பண்டிகைக்கும் பக்ரீத் க்ரிஸ்துமஸ் உட்பட புது துணிமணிகள் சாரி ரெட்மேட் ட்ரெஸ்

5. தங்கும் வீட்டிற்கு வாடகை அரசாங்கம் கொடுக்கவேண்டும்.எனக்கு ஒரே வீட்டில் அதிக நாள் இருக்க பிடிகாது.

6. வீட்டில் படிக்க எல்லா புத்தகமும் வேண்டும் இன்டர்னெட் வசதி உட்பட.

இதை எந்தக்கட்சி கொடுக்கிறதோ அவர்கள் என் குடும்ப ஓட்டை அவர்களே போட்டுக்கொள்ளலாம்.

இது எப்படி இருக்கு

Anonymous said...

கண்ணன் - துபாய்

எப்படியோ ஆட்சியை பிடிப்பவர்கள் பாடு சந்தோஷம், ஆட்சியை பிட்டிக்க ஓட்டு போட்டவர்கள் பாடு திண்டாட்டம். இனி வரும் அரசவாது கொஞ்சம் மக்களுக்கு நல்லது செய்யட்டும். ஒவ்வொரு தடவையும் ஓட்டு போடும் மக்களின் மனநிலை இப்படிதான்...ம்ம்ம்ம்ம்ம்..... (பெருமூச்சு)

நம் மாநிலத்திற்கு அருகில் உள்ள கேரளாவுக்கு, துபாயில் இருந்து மிக மிக குறைந்த விமான கட்டினத்தில் இங்கிருந்து செல்லலாம், ஆனால் நமக்கோ......000000. இந்த விமான சேவை நடைபெற மிக முக்கிய காரணம், அம்மாநில அமைச்சர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. நம் அமைச்சர்கள் எங்கே......? இனிவருபவர்களாவது கண்ணை திறப்பார்களா?

காத்திருப்போம்.... அது தானே அன்னிய நாட்டில் வாழும் தமிழனின் நிலை

பிரதீப் said...

இலவச மாப்பிள்ளை... சபாஷ்...
டிவி குடுக்க 15000 கோடி ஆவும்னு சொன்ன அம்மா, கலைஞரு ஆமா ஜெ.கிட்ட குடுத்தா 15 என்ன 20000 கோடி கூட ஆவும்னவுடனே கம்னு ஆயிட்டாங்க.

இப்ப கணினிக்கு எவ்வளவு ஆவுமாம்? அதுக்கு நிதி எங்க இருந்து வருதாம்?