வைகோ - ஜூவி
இன்று மதுரையில் ஜெயா டிவிக்கு வைகோ அளித்த பேட்டியில்
"அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருவதாக பல்வேறு கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இதை தயாநிதி மாறனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இதனால் பல்வேறு பத்திரிக்கைககளுக்கு நெருக்கடி கொடுத்து திமுகவுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகளை வெளியிட முயற்சித்து வருகிறார்.
கேரளாவின் பிரபலமான மலையாள மனோரமா நாளிதழ் நிறுவனத்தைச் சேர்ந்த தி வீக் ஆங்கில வார இதழ், கேரளாவில் நடந்த தேர்தல் தொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பையும் நடத்தவில்லை.
ஆனால் தமிழகத்தில் மட்டும் திடீரென ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இல்லாத ஒன்றை இட்டுக் கட்டிக் கூறி திமுகவுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடடுள்ளது.
இப்போது இவர்கள் ஜூனியர் விகடனை வளைத்து விட்டார்கள். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் தினகரனை பணம் கொடுத்து வாங்கினார்கள். அதன் மூலம் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இப்போது ஆனந்த விகடனை வளைத்துள்ளார்கள். ஆனந்த விகடன் பத்திரிக்கை தரதமான, மிகச் சிறந்த, உயர்ந்த பத்திரிக்கை. நேர்மைக்கு இலக்கணமான பத்திரிக்கைக் குடும்பம் அது.
அப்படிப்பட்ட பத்திரிக்கை சமீப காலமாக, சில வெளியில் சொல்ல முடியாத பிரத்யேக காரணங்களினால், சன் தொலைக்காட்சியின் தயவு தேவைப்படும் இக்கட்டில் இருப்பதால் அவர்களுக்கு சாதகமான செய்திகளை வெளியட வேண்டிய நிலையில் உள்ளது.
அப் பத்திரிக்கையின் நடுநிலை கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து இப்போது முற்றிலும் போய் விட்டது.
வருகிற நாட்களில் திமுக கூட்டணிக்கு 200 இடங்கள் வரை கிடைக்கும் என்ற அப்பட்டமான, பொய்யான செய்தியை வெளியிட அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
அந்த செய்தியை தினகரன், சன் டிவியில் வெளியிட்டு வாக்காளர்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவான பிரமையை ஏற்படுத்தி அதன் மூலம் கொஞ்சம் ஓட்டுக்கள் கிடைக்காதா என்று முயற்சிக்க நினைக்கிறார்கள்.
ஜூனியர் விகடனின் நிருபர்கள் பலர் மிரட்டப்பட்டுள்ளார்கள். உண்மையைச் சொன்னதற்காக அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்.
அந்தப் பத்திரிக்கையை விலைக்கு வாங்க தீவிரமாக முயற்சித்து வந்தனர். அந்த முயற்சியில் அனேகமாக வெற்றி பெற்று விட்டதாகவே எனக்கு தெரிய வந்துள்ளது"
இந்த செய்தி குறித்து பத்திரிக்கை வட்டாரத்தில் இருக்கும் நண்பர்களிடம் கேட்டதற்கு இந்த செய்தியில் கொஞ்சமும் உண்மை இல்லை என்றனர்.
ஜெ சூப்பர் அறிவிப்புக்கள் ?
ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து 32 நாட்கள் ஆதரவு திரட்டினார். வரும் 4 நாட்கள் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓட்டு சேகரிக்கிறார். இன்று மாலை சைதாப் பேட்டை தொகுதியில் ஆதரவு திரட்டினார்.
இந்த நான்கு நாட்களில் சில சூப்பர் அறிவிப்புக்கள் வரும் என்று அதுமுகவில் உள்ள ஒரு முக்கிய நபர் தெரிவித்தார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, May 03, 2006
வைகோ - ஜெ - செய்திகள்
Posted by IdlyVadai at 5/03/2006 08:42:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











16 Comments:
விட்டால், எலெக்சன் முடிந்தபிறகும் அறிவிப்புகள் தொடரும் போல!?
வைகோவின் தந்திரம்:
திமுக கூட்டணிக்கு 200 இடங்கள் கிடைக்கும் என ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளதாகத் தெரிகிறது.
இதை அந்தப் பத்திரிக்கை இந்த வாரம் வெளியிடவுள்ளது. அந்த முடிவுகள் வெளி வந்தால் தங்கள் தரப்புக்கு பேரிடியாக இருக்கும் என்பதால் அந்தக் கருத்துக் கணிப்பு வெளிவரும் முன்பே அதற்கு ஒரு சாயத்தைப் பூசி அந்தக் கருத்துக் கணிப்பின் நம்பகத்தன்மையை குலைக்க வைகோ முயன்றுள்ளார் என்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.
இது ஒரு 'ணீணூஞுஞுட்ணீtடிதிஞு ண்tணூடிடுஞு' மாதிரி என்று சொல்லும் அவர்கள், வைகோவே சொல்வைத் போல நியாய, தர்மத்துக்கு பேர் போன விகடன் குழுமம் நிச்சயம் அந்த வேலையைச் செய்யாது என்பது அதன் பாரம்பரியம் அறிந்தவர்களுக்குத் தெரியும் என்றார்கள்.
நக்கீரன் கருத்துக் கணிப்பு:
இதற்கிடையே நக்கீரன் வார இதழ் முதல் கட்டமாக 80 தொகுதிகளில் கருத்துக் கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில் போட்டி மிகக் கடுமையாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும் 80 இடங்களில் 69 இடங்களை திமுக கூட்டணியும் 10 இடங்களை அதிமுக கூட்டணியில் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.
விருத்தாசலத்தில் விஜய்காந்த் வெல்வது உறுதி என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
செய்திய முழுசா போடுங்க இட்லி வடையாரே....... இது தட்ஸ்தமிழ் நியூஸ் தானே?
Manasu,
தட்ஸ் தமிழிலிருந்து ஜெயா டிவியில் வந்த செய்தியை மட்டும் எடுத்து போட்டேன். போடுவதற்கு முன் அது உண்மையா பொய்யா என்று ஆரய்ந்து பிறகு பதிவில் போட்டேன்.
என்னத்தான் மத்த ஐட்டங்களைச் சாப்பிட்டாலும், சுடச் சுட இட்லி வடைய சாப்பிடற சுவையே அலாதிதான். இன்னும் ஒரு வாரத்துக்கு அப்பப்ப விருந்து படைங்க வடையாரே..
வைகோ ஜெயுடன் சேர்ந்த பிறகு டிவியில் அவர் முகத்தை அடிக்கடிக் காட்டுவதால் சந்தோசத்தில் என்ன வேண்டுமானாலூம் பேசலாம் என்றுப் பேசுகிறாரோ என்னவோ ? ஆவி /ஜூவி பலகாலமவாகவே கலைஞரின் மேல் பரிவாகவே இருந்து வந்துள்ளது அதற்காக அது திமுக ஜால்ரவாக எப்போதும் நடந்து கொண்டதாக இல்லை..முடிந்தவரை அவர்கள் நடு நிலைமையாகவே இருந்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை அவர்களின் கருத்துக்கணிப்பு பெரிய்தாக பலித்ததில்லை
idly vaadaiyum neere
boston balavum neere
enayya kolupure
அதிமுக தோற்றால் அதற்க்கு வைகோ ஒரு முக்கிய காரணமாக இருப்பார். ஏற்கனவே நம்பகத்தன்மையை இழந்த இவர் மேலும் மேலும் ஆதாரம் இல்லாமல் நேரிடையாக குற்றஞ்சாற்றி வருவதால் இவரை சார்ந்திருக்கும் கட்சிகளின் நம்பகத்தன்மையையும் குறைத்து விடுகிறார். ஜு.வி. மிரட்டல்களுக்கு பணிகிற பத்திரிக்கை என்றால் எப்போதோ அவர்கள் இழுத்து மூடி இருப்பார்கள். இவர் இப்படியே போனால்... லயோலா கல்லூரியை தயாநிதி வாங்கிவிட்டார் என்றும் வாய் கூசாமல் கூறுவார். தயாநிதி மாறனை வில்லனாக்கிய இவர் தான் கோமாளியாக இருப்பதை எப்போது மாற்றிக்கொள்வார்?
VaiKo was upset with the anandhavikatan group for publishing the interview with his mother. To prove the point, they went ahead and published the audio transcript (I think that is the first only audio stuff they published). So he doesnt have a choice now.
பேபி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் ராமஜெயத்துக்கு கொலை மிரட்டல்
http://www.dinakaran.com/epaper/2006/may/04/16_2.jpg
இந்த செய்தி உன்மையா பொய்யா என்று தெரியவில்லை..ஆனால் இது உன்மையாக இருந்தாலும் 'நடுநிலையாளர்களான' சோ, சு.சாமி இதை கண்டித்து Sun TV'யில் அறிக்கை விடமாட்டார்கள். ஏன் என்றால் இவர் டாட்டா இல்லை வெரும் 'பேபி'.
வை.கோ முதல் முதலா TATA ப்ரச்சனைய வெளிக்கொண்டு வந்தார். அது தீ மாதிரி எரிகிறது.
நானும் ஜு.வி ய கொஞ்ச நாளா கவனித்து வருகிறேன்..
வை.கோ சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்.
சுடச் சுட இன்றைய செய்தி, ஆன்டி பட்டியில் ஜெ. தோற்பார் - உளவுத்துறை ரிபோர்ட்
http://epaper.tamilmurasu.in/2006/may/04/1.html
வை.கோ சொல்வது எந்தளவிற்கு உண்மை என்பது சொல்ல முடியாது. ஆனாலும், ஆண்டிப்பட்டியில் ஜெ.தோற்பார் என்பதெல்லாம் செம ரீலு. பொட்டி போனபிறகு என்ன பெரிசாய் மாற்றம் வரும் என்று நினைக்கிறீர்கள். ஆனாலும், ஜெ வுக்கு ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை.
I'm least bothered about what politicians are talking about Vikatan.In 2001 Assembly election,Ananda vikatan and Junior Vikatan predicted that DMK's gonna win 224 seats and got biggest bulb of their life time and yet they(JV) claim they are Tamil makkalin nadi thudipu,which is disqusting.
All TV companies has to close their operation in Tamil Nadu because there's going to be only one K & Sons company. Service Tax is applicable to all services, but not to cable operators that shows C Finance has joined K & Sons company's New Delhi branch. Is it diffucult to say TATA bye bye?
இப்போது ராடான் டிவி-க்கு வழங்கியுள்ள சன் டிவி ஸ்லாட்டுகள், விகடனுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விகடனின் பல நிகழச்சிகளை இனி நீங்கள் சன் டிவியில் பார்க்கலாம்.
அதான் ஏற்கனவே ராடானுக்கு இதனால் ஏற்படும் நஷ்டங்கள் அதிமுகவால் "சரி"க்கட்டப் பட்டு விட்டனவே...
அப்புறம் என்ன, இன்னொருத்தர் பிழைத்துப் போகட்டுமே... இந்த ஒரே குடும்பம் ஒரே நிறுவனம் பிழைப்பது எல்லாம் ராடானுக்குப் பொருந்தாதா என்ன??
அடுத்து ஜெயாவில் ராதிகா நடிக்கும் ஒரு மெகா தொடரை எதிர்பாருங்கள்.
Post a Comment