தமிழ்நாட்டில் நாளை 234 தொகுதிகளுக்கும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. காலை 11 மணிக்குள் எந்த கட்சி முன்னணியில் இருக்கிறது என்பது தெரிந்து விடும். பகல் 2 மணி அளவில் எந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது என்று அறிவிக்கப்பட்டுவிடும்.
ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தல் அதிகாரி சான்றிதழ் கொடுத்து விட்டு அதன் நகலை தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைப்பார்.
இதனை தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா 12-வது சட்டசபையை கலைத்து ஒரு அறிவிப்பு வெளியிட்டு (நோட்டிபிகேஷன்) உடனே 13-வது சட்டசபையை அமைக்கவும் மறு உத்தரவு பிறப்பிப்பார்.
அதனை பின்பற்றி கவர்னரும் தமிழக பொதுத்துறை அதிகாரிகளும் புதிய அரசு அமைய தேவையான ஏற்பாடுகளை செய்வார்கள்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றால் மீண்டும் முதல் அமைச்சராக ஜெயலலிதா 13-ந் தேதியே பதவி ஏற்றுக் கொள்வார். அவருடன் புதிய அமைச்சர்களும் உடனே பதவி ஏற்று கொள்வார்கள்.
அதேபோல் தி.மு.க. வெற்றி பெற்றால் முதல்- அமைச்சராக கருணாநிதி 13-ந்தேதியே பதவி ஏற்பார்.
ஆனால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டால் புதிய அரசு 13-ந்தேதியோ அல்லது சில நாள் கழித்தோதான் அமையும்.
கூட்டணி கட்சிகளுக்குள் இலாகா சம்பந்தமாக கருத்து ஒற்றுமை ஏற்பட்டு முடிவு ஏற்பட்ட பிறகே அமைச் சர்களின் பதவி ஏற்பும் நடைபெறும்.
அதன்பிறகு புதிய முதல்- அமைச்சரின் ஒப்புதலோடு தற்காலிக சபாநாயகரை கவர்னர் நியமிப்பார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அவர் சட்டசபைக்கு வந்து எல்லா எம்.எல்.ஏ.க்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
அதன்பிறகு புதிய சபாநாயகர் துணை சபாநாயகர் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.
பின்னர் புதிய அரசு பதவி ஏற்ற 1 வாரத்திற்குள் சட்டசபை கூடிவிடும். கவர்னர் உரையை தொடர்ந்து புதிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் கமிஷனால் நிறுத்தி வைக்கப் பட்ட அனைத்து திட்டங் களும் மீண்டும் செயல் படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு விடும்.
சுனாமி- வெள்ள நிவாரண உதவி, இலவச வேஷ்டி- சேலை, ரேஷன்கார்டு வினியோகம், புதிதாக ரோடு போடும் வேலைகள் என அனைத்தும் மளமளவென செயல்பட தொடங்கும்.
புதிய முதல்- அமைச்சராக பதவி ஏற்று வருபவர் முதலில் எந்த திட்டத்துக்கு கையெழுத்து போடுகிறாரோ அந்த திட்டமும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்படும்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, May 10, 2006
முதல்வர் 13-ந் தேதி பதவி ஏற்பு
Posted by IdlyVadai at 5/10/2006 12:01:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











3 Comments:
//புதிய முதல்- அமைச்சராக பதவி ஏற்று வருபவர் முதலில் எந்த திட்டத்துக்கு கையெழுத்து போடுகிறாரோ அந்த திட்டமும் பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்படும்.//
"வாக்குறுதிகள், நிறைவேற்றுதல்" உட்பட சில வார்த்தைகளை தமிழில் இருந்து நீக்குவதற்கான உத்தரவுதான் முதல் கையொப்பமாமே!
//முதல்வர் 13-ந் தேதி பதவி ஏற்பு //
13 ஆவது சட்டசபை 13 ஆம் தேதியா ? கோ-இன்சிடன்ட்
பதிமூணு அவ்வளவா ராசி இல்லாத நம்பர்னு சொல்லுவாங்களே!!
Post a Comment