பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 14, 2006

கார்ட்டூன்ஸ் டாப் 10

இட்லிவடையில் பல கார்ட்டூன்களை ரசித்திருப்பீர்கள். ஒரு கார்ட்டூனிஸ்டின் வேலை நம்மிடையே ஒளிந்திருக்கும் நகைச்சுவை உணர்வை தட்டி எழுப்புவது (சிலருக்கு கிச்சு-கிச்சு மூட்டினால் தான் சிரிப்பார்கள்; சிலருக்கு இலக்கியம் படித்தால் தான் சிரிப்பு வரும்). நான் ஒரு நாளைக்கு நேரத்தை வீணடிக்காமல் அட்லீஸ்ட் ஒரு கார்ட்டூனையாவது பார்த்துவிடுவேன். கார்ட்டூனை பார்ப்பதற்கு ஒரு சில நொடிகளே போதும்.

மதன் சொல்லுவதை போல் -

"படம் போடத் தெரிந்தவர்கள் கார்ட்டூனிஸ்ட் ஆகி விட முடியாது. இன்னும் கேட்டால் தேவையான நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் கார்ட்டூன் வரையக் கற்றுக் கொள்ள முடியும்!. சிலருக்கு தீடீரென்று H2+O தண்ணீர் மாதிரி நகைச்சுவை உணர்வும் படம் வரையும் திறமையும் ஒருங்கிணைந்து வெளிப்பட்டு விடுகிறது. கார்ட்டூன் இல்லாத பத்திரிகை மீசையில்லாத் வீரன். தோகையில்லாத மயில்; மிளகாய்ப்பொடி இல்லாத இட்லி".
அன்றாட அரசியலில் தலைவர்களின் நிலைகளையும், அவர்களின் பேச்சுக்களையும் உன்னிப்பாக கவனித்து மக்கள் ரசிக்கத்தக்க வகையில் அதை கார்ட்டூனாக வெளிப்படுத்துவது என்பது எளிய வேலை இல்லை. தமிழ் நாட்டில் கார்ட்டூனிஸ்ட்டுகள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே தான் இருக்கிறார்கள். தற்போது இது பரவாயில்லை என்று சொல்லலாம். சொல்ல நினைக்கும் விஷயத்தை நீட்டி முழக்காமல் பளிச் என்று மின்னல் வேகத்தில் சொல்லி மற்றவரை சிரிக்கவும் செய்கிறார் ஒரு கார்ட்டூனிஸ்ட்!.


ஆனந்த விகடன் - மதன், குமுதம் - பாலா, Times of India - R.K.Laxman, தினமணி - மதி, Delhi Times - Sudir Dar, கோபுலு, சிம்பு என்று சொல்லுக்கொண்டே போகலாம்.

என்னிடம் இருக்கும் சில கார்ட்டூன் புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்.

1. தினமணிடூன் 1, 2 - மதியின் கார்ட்டூன்ஸ் தொகுப்பு. இரண்டும் நல்ல புத்தகங்கள். முதல் புத்தகம் - அரசியல், இரண்டாவது - அரசியல் அல்லாத சமூகப் பிரச்சினைகளை கொண்டது.
( The New Indian Express Group publication, ஒவ்வொரு புத்தகமும் 75/= )

2. ஆங்! - உதயன் கார்ட்டூன்ஸ் - இவர் எந்த படத்தை போட்டாலும், எல்லோருக்கும் மண்டை குண்டாக இருக்கும். ரசிக்கலாம். ( காலச்சுவடு பதிப்பகம் - 200/= )

3. மதன் ஜோக்ஸ் 1, 2 - 1992, 1993ல் ஆனந்த விகடன் வெளியிட்ட புத்தகங்கள். ஏனோ இதை மறு பிரசுரம் செய்யவில்லை. விழுந்து விழ்ந்து சிரிக்கலாம். அதுவும் அந்த ரெட்டைவால் ரெங்குடு, சிரிப்பு திருடன் சிங்காரவேலு, முன்ஜாக்கிரதை முத்தண்ணா, வீட்டு புரேக்கர் புண்ணியகோடி, ஹலோ டாக்டர், உஷ்...ஒய்ஃப். ( விகடன் பதிப்பகம் - முதல் தொகுதி - 12/=, இரண்டாம் தொகுதி - 17/=)

4. சமிபத்தில் கோபுலு ஜோக்ஸ் என்று ஆனந்த விகடன் ஒரு செல்போன் சைஸில் புத்தகம் வெளியிட்டார்கள். மிக நல்ல புத்தகம். ( விகடன் பதிப்பகம் - 50/= )

5. கிமுவில் சோமு - சிம்பு - தமிழ் காமிக்ஸ் என்றால் இந்த புத்தகம் தான் வந்திருக்கிறெது. மற்ற தமிழ் காமிக்ஸ் எல்லாம் ஆங்கிலத்திலிருந்து காப்பி. ( நர்மதா பதிப்பகம் - 27/=)

6. The Mad, Mad world of elections - Sudir Darன் அரசியல் கார்ட்டூன்ஸ். ஒரு பக்கம் கார்ட்டூன் மறு பக்கம் தேர்தல் பற்றி சில குறிப்புகள். நல்ல புத்தகம். (Penguin, 200/=)

7. The Dose of Laughter - R.K.Laxman - ஒரு பக்கம் கார்ட்டூன் ஒரு பக்கம் ஜோக்ஸ் என்று கலக்கல் புத்தகம். (Penguin, 200/=)

8. A Vote for Laughter - R.K.Laxman - முன்பு சொன்ன புத்தகம் போல் ஒரு பக்கம் அரசியல் ஜோக்ஸ் மறு பக்கம் கார்ட்டூன். இதுவும் ஒரு கலக்கல் புத்தகம். (Penguin, 200/=)

9. The Best of Laxman Series கார்ட்டூன் தொகுப்பு (Penguin, Each 200/=)
- The common man balances his budget
- The common man seeks justice
- The common man goes to the village

- The common man watches cricket

- The common man casts his vote

- The common man in the new millennium

- The common man tackles corruption

- The common man at large

- The common man meets the mantri

- The common man stands in queue
- The common man takes a stroll
- The common man at home


இவை எல்லாம் மிக நல்ல தொகுப்புகள்.

10. சமிபத்தில் "Brushing up the years - A cartoonist's history of India 1947 - 2004" R.K.Laxman என்ற புத்தகம் வாங்கினேன். விலை 750/=, கொடுக்கலாம். 1947 முதல் 2004 வரை முக்கிய நிகழ்வுகளின் கார்ட்டூன் தொகுப்பு. இது புத்தகம் அல்ல பொக்கிஷம் (Penguin, 750/=)


இந்த பதிவுடன் நட்சத்திர பதிவு முடிகிறது. தமிழ்மண நிர்வாகிகளுக்கும், வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

29 Comments:

கோவி.கண்ணன் said...

இட்லிவடைக்கு எனது சிறு கவிதை கிறுக்கல்

தேரும், திருவிழாவும் புகழ்பெற்ற தமிழ்நாட்டில்,இன்று
தேர்தல் திருவிழாக்களால் புகழ்பெற,

சட்டமன்ற தேர்தெலென்றதும், நம் சக நண்பர்
இட்லி வடையை. சட்டென்று நினக்கின்றோம்.

சுடச் சுடச் செய்திகளை சூடான இட்லி ஆக்கி
படத்துடன் வடைபோல கொடுத்திட்ட பதிவாளர்

தமிழ்மண விண்மீனாய், தனிப்பெரும் தேர்தல் வாரத்தில்,
தலைவாழை விருந்து வைத்து நற்செய்தி படைதவர்.

பின்னூட்டம் கொடுக்காமல், தின்று விட்டு சென்றோரையும்
மாவாட்ட வைக்காதவர் தாராள மனசுக்காரர்

அனானி அன்பர்களின் இனாம் செய்திகளையும்
அன்பாக ஏற்றுக்கொண்டு பதிலுரைத்த பண்பாளர்

நடுநிலைப் பதிவுகள் பலபடைத்து, தமிழ் பதிவர்தம்
இடுகைகளால் சுட்டிகாட்டிய நல்ல பதிவாளர்

இன்னொரு தேர்தல்வரை நீரே நட்சத்திரம்
என்ற தமிழ்மண வேண்டுகளை தாழ்மையுடன் மறுத்தவர்
(இது மட்டும் உடான்ஸ்ங்கோ)

http://govikannan.blogspot.com/2006/05/blog-post_114759094954670430.html

Idly Vadai said...

GoviKannan - அட அட - இதெல்லாம் கொஞ்சம் ஓவராக தெரியல அப்பு ?
கவிதையை படித்தேன் சிரித்தேன். நன்றி

பொன்ஸ்~~Poorna said...

//; மிளகாய்ப்பொடி இல்லாத இட்லி".//
இது மதனே சொன்னாரா? இல்லை நீங்க சேர்த்தீங்களா? :)

பொன்ஸ்~~Poorna said...

கோவி கண்ணன், உங்க கவிதையும் சூப்பருங்கோ.. தனிப் பதிவா போடுங்க..

//பின்னூட்டம் கொடுக்காமல், தின்று விட்டு சென்றோரையும்
மாவாட்ட வைக்காதவர் தாராள மனசுக்காரர்//
:)))

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

வாழ்த்துக்கள் தல... அசத்தீட்டீங்க....
அடுத்த ரவுண்டு கூட கொடுங்கன்னு காசி-க்கு மடல் போட ஆள் திரட்டலாமான்னு யோசனையில் இருக்கேன்..

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

மதன் ஜோக்ஸ் இப்போது எங்காவது கிடைக்குமா..? எனி ஐடியா?

Idly Vadai said...

பொன்ஸ் - //; மிளகாய்ப்பொடி இல்லாத இட்லி".// - ஐயோ அது மதன் சொன்னது. நானும் அத வரியை ரொம்ப ரசித்தேன்.

எஸ்.பாலபாரதி - எனக்கு தெரிந்து அது கிடைக்கும் என்று தோன்றவில்லை. கிடைத்தால் சொல்கிறேன்.

குழலி / Kuzhali said...

நல்ல வாரம், தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தந்த இட்லிவடைக்கு வாழ்த்துகள், தினமலர், www.eci.com எல்லாம் ஊத்திகினபோது இட்லிவடை தான் காப்பாற்றியது, பல தோழர்களுக்கு உங்கள் இட்லிவடையை அறிமுகப்படுத்திவிட்டேன் தேர்தலன்று

Idly Vadai said...

குழலி - மிக்க நன்றி.

Murthi said...

இட்லி வடையாரின் தன்னலமற்ற சேவையை பாராட்டி இந்த உளுந்து வடை மாலையை பொன் மாலையாக அணிவிக்கிறேன்.

அத்துடன் கட்சி னிதியக ஒரு மூட்டை அரிசியும் ஒரு மூட்டை உளுந்தும் வழங்குகிறேன்.

Idly Vadai said...

Glycol - அரிசி சீப்பாக கிடைக்கிறது அதுக்காக இப்படியா :-)

முத்துகுமரன் said...

//அரிசி சீப்பாக கிடைக்கிறது அதுக்காக இப்படியா :-) //
இது அக்மார்க் இட்லி வடை:-)

மாயவரத்தான்... said...

//அரிசி சீப்பாக கிடைக்கிறது அதுக்காக இப்படியா//

ஸாரி..பொருள் குற்றம்... கிடைக்கிறது இல்லை.. கிடைக்கப் போகிறது / கிடைக்கலாம்.

உளுந்து & அரிசி என்பதற்கு பதிலாக glycol உளுத்துப்போன அரிசியாக கொடுத்துவிடப் போகிறார் ஜாக்கிரதை.

பினாத்தல் சுரேஷ் said...

இட்லிவடை,

சிலபல காரணங்களால், என்னுடைய பின்னூட்டத்தை நீங்கள் பதிப்பிக்காமல் விட்டதால், இப்போது என் நினைவிலிருந்து மீண்டும்:

தேர்தல் வாரத்தில் யாரை நட்சத்திரமாக்கி இருந்தாலும், ஹிட் என்னவோ இட்லிவடைக்குதான் என்று தெளிவாக அறிந்து இட்லிவடையை நட்சத்திரமாக்கியது தமிழ்மணம் - அதற்கு முழு நீதி செய்வதோடு மட்டுமல்லாமல், உங்கள் தெளிவான, சார்பற்ற, வேகமான செய்திகளால் வலைப்பதிவு என்ற கட்டத்தைக் கடந்து நம்பகமான செய்திகளுக்கான ஸோர்சாகவும் செயல்படுவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

என் நெனைப்பை காப்பாத்திட்டீங்க!@

Idly Vadai said...

மாயவரத்தான் - நம்பிக்கை தான் வாழ்க்கை. இரண்டு ரூபாய்க்கு அது தான் கிடைக்கும். என் ஆசை எல்லாம் ஒரு நாள் அரசியல் தலைவர்கள் இல்லோரும் இந்த ரேஷன் கடையில் கிடைக்கும் அரிசியை சாப்பிட்டு பார்க்க வேண்டும்.

Idly Vadai said...

சுரேஷ் - உங்கள் பின்னூட்டம் எங்காவது ஒளிந்துகொண்டு இருக்கும். நான் அதை நிச்சியம் Reject செய்யவில்லை. உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த சமயத்தில் எனக்கு உடனுக்கு உடன் SMS/Phone மூலம் செய்தி தெரிவித்த அனைவருக்கும் நன்றி :-)

Idly Vadai said...

முத்துகுமரன் - நன்றி.

மலைநாடான் said...

தேர்தல் கொண்டாட்டங்களுக்குள் தனித்துவத்தோடு மிளிர்ந்த நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். தமிழ்சினிமாவில் சுபம் போட முன் நகைச்சுவையாக ஒரு காட்சிப்போடுவதுபோல் கார்ட்டூன் பதிவுடன் கலகலப்பாக நிறைவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

நன்மனம் said...

இட்லி-வடை!

வாழ்த்துக்கள்

Idly Vadai said...

மலைநாடான்,
தமிழ் சினிமாவில் சுபம் போட்ட பின் தான் தெரியும் தலைவலி. அது போல் இல்லை என்று நினைக்கிறேன். பாராட்டுக்கு நன்றி.

நன்மனம் - நன்றி.

துளசி கோபால் said...

இந்த வாரம் அருமையாக இருந்ததுங்க.
வடை மாத்திரம் 'மசால் வடை' யாவே போட்டதுக்கு ரொம்ப நன்றிங்க.

ஏங்க இட்லிவடை, அரிசி 'சீப்'ன்னா இட்லி அரிசிக்கும் இதே விலைதானாங்க?

அப்புறம் 'ஹிண்டு'லே வந்த தேர்தல் ரிஸல்ட் முழுசாப் போட்டதுக்கு நன்றிங்க.
ஆனாப் பொடி எழுத்தா இருந்துச்சுங்களா ஒண்ணும் சரியாத்தெரியலை(-:

ஆமாம், எஸ்.வி. சேகர் ஜெயிப்பா இல்லே தோற்பா?


பாலபாரதி,
என்னிடம் மதன் ஜோக்ஸ் 2 பகுதி இருக்கு. சென்னையில் அண்ணாசாலை ஹிக்கின்பாதம்ஸ்லே
கிடைச்சது.

Anonymous said...

I recently came across your website.Greetings.Pls keep it up. I do not agree that Vijaykanth is the answer for future.In my opinion ,he is a businessman.He spent money to make his first conferance a big publicity event.Compare him to Rajaji,Kamaraj,Annah and even MGR or Karunanidhi. My propehesy is that he will disappear from political scene in next election Best wishes. anand from Montreal

சல்மான் said...

தேர்தல் முடிவுகளின் காலையில் டீ கூட குடிக்காமல், பொறுப்போடு இட்லிவடையை சூடாக பார்த்துக் கொண்டதற்கு டிப்சுடன் கூடிய நன்றி. எங்களின் அரசியல் வெட்டிப்பேச்சில் இட்லிவடையும் ஒரு reference இப்போது.

ஒரு கேள்வி (சூட்சமங்கள் தவிர்த்த, பொதுவாக பகிர்ந்து கொள்ளலாம் என்பதை மட்டும் எதிர்பார்த்து ): எப்படி latest செய்திகளை சேகரிக்கிறீர்கள்?


நட்புடன்,
சல்மான்

இலவசக்கொத்தனார் said...

இனி அடுத்த தேர்தலின் போது சந்திப்போம்ன்னு சொல்லாம அடிக்கடி வாங்க.

முத்து(தமிழினி) said...

இட்லி,

வாழ்த்துக்கள்

Anonymous said...

am totally out of touch with Tamil dailies/newspapers and to some extent politics for more than 2 and a half years. This election, i followed through IdlyVadai and thank you for that. Btw, abt cartoonists, how about Hindu's Keshav and Siddhartha? Are they still around?

Idly Vadai said...

துளசிகோபால் - இப்போது அரிசி என்றலே அது கலைஞர் அரிசி என்று ஆகிவிட்டது :-).

எஸ்.வி.சேகர் - வெற்றி

Please click on the Image and see, you can read the contents.

பாராட்டுக்கு நன்றி.

Idly Vadai said...

salmaan,
//ஒரு கேள்வி (சூட்சமங்கள் தவிர்த்த, பொதுவாக பகிர்ந்து கொள்ளலாம் என்பதை மட்டும் எதிர்பார்த்து ): எப்படி latest செய்திகளை சேகரிக்கிறீர்கள்?//

பல செய்து ஊடகங்களை கவணித்தேன். மற்றும் நண்பர்களின் Network பெரிதும் உதவி செய்தது.

Idly Vadai said...

இளவசக்கொத்தனார், முத்து - பாராட்டுக்கு நன்றி.