இட்லிவடை டாப் 10-1 தேர்தல் அறிக்கை
திமுகவின் தேர்தல் அறிக்கை தான் இந்த தேர்தலின் கதாநாயகன் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். கில்லி கொடுத்த தைரியத்தில் வலைப்பதிவில் தேர்தல் நடந்தால்? இதோ என் தேர்தல் அறிக்கை.
1. போலி டோண்டுவினால் பாதிக்க பட்ட அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து.
2. தமிழ்மணத்தில் இலவச இட ஒதிக்கீடு (நட்சத்திர பதிவாளர் போல்)
3. பதிவுகள் இல்லாத போது இலவச பதிவுகள் எழுதி தரப்படும். பின்னூட்டம் அதிகம் வரவில்லை என்றால்(வாங்க வாங்க, :-), சூப்பர் அப்பு, கலக்கல், போன்ற பின்னூடங்கள் இலவசமாக ஏற்பாடு செய்யப்படும்.
4. போன ஆட்சியில் வலைப்பதிவை விட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடியவர்களை எல்லாம் தேடி கண்டுபிடித்து, திரும்பவும் வலைப்பதிவு எழுத சொல்லி மற்றவர்களை விரட்டுவோம்.
5. பெண் வலைப்பதிவாளர்களுக்கு தனியாக மாமிமணம் என்று ஒரு சுய உதவி குழு ஆரம்பிக்கப்படும்.
6. சுனாமி/வெள்ளம் போல் தாக்கும் வலைப்பதிவு வைரஸுக்கு உடனடி நிவாரணம்.
7. வீரப்பனை தேடி வீழ்த்தியது போல் வலைப்பதிவு தீவிரவாதிகளை வீழ்த்துவோம். அவர்களுக்கு ஆதரவு தருவோரை போடோ( போடோ - போலி டோண்டு :-) சட்டத்தில் கைது செய்வோம்.
8. மதிய சத்துணவில் எல்லோருக்கும் இனிமேல் இரண்டு முட்டைக்கு பதில் இரண்டு இட்லி போடப்படும்.
9. எல்லோருக்கும் கையடக்க எலிக்குட்டி
வேறு வாக்குறுதிகள் இருந்தால் பின்னூட்டதில் நீங்கள் சொல்லலாம்....
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, May 13, 2006
டாப் 10-1 தேர்தல் அறிக்கை
Posted by IdlyVadai at 5/13/2006 08:42:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











6 Comments:
மாமி மணமா? என்ன பேரூய்யா இது :-((((((
இ.வ, மரியாதையாய் பெயரை மாற்றுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
//மத்திய சத்துணவில் எல்லோருக்கும் இனிமேல் இரண்டு முட்டைக்கு பதில் இரண்டு இட்லி போடப்படும். //
இட்லி போடுபவர்கள் சட்னி சாம்பார், ஊற்றுவார்களா ? டிவி தருபவர்கள் கேபிள்கனெக்ஸன் தருவார்களா என்று கேட்டது எனக்கு நினைவுக்கு வந்தாதாக நீங்களே முடிவு செய்து கொள்ளவேணடாம்.
//போடோ - போலி டோண்டு ://
இந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று முத்து(தமிழினி) கூறியுள்ளதை மறந்துவிட்டீர்களா?
//இட்லி போடுபவர்கள் சட்னி சாம்பார், ஊற்றுவார்களா ? //
ம்.. வந்து ஊட்டி விடுவாங்க.
எல்லாம் நல்லாதான் இருக்கு. மாமி மணம் வேண்டாமெ. வேற பெயர் வைக்கவும். பெண்மனம் சிபாரிசு செய்கிறென்.
இவை அனைத்தையும் நிறைவேற்ற சாமியிடம் வரம் கேட்போம்
அன்புடன்
நாகை சிவா
Post a Comment