பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 10, 2006

டாப் டென்+1 விடை தெரியாத கேள்விகள் ?!

தமிழக அரசியலில் எனக்கும் (உங்களுக்கும்) விடை கிடைக்காத கேள்விகள்:

1. கராத்தே தியாகராஜனுக்கும் ஜெயலலிதாவிற்கும் என்ன நடந்தது ? ஏன் அவர் அம்மாவின் இறுதி சடங்கிற்கு கூட வர முடியாமல் போனது ?

2. வைகோ 40 கோடி வாங்கினாரா ? 70 கோடி வாங்கினாரா ? எப்படி அவரால் சில மாதங்களுக்கு முன் அழ முடிந்தது ? glycerine போட்டுக்கொண்டாரா ? எப்படி அவரால் 19 மாதம் சிறையில் தள்ளியவருடன் சேர்ந்து சிரிக்க முடிந்தது ?

3. கலைஞருக்கும் மஞ்சள் துண்டுக்கும் என்ன சம்பந்தம் ? ஸ்டாலின் பேரனுக்கு எந்த கோயிலில் மொட்டை அடித்தார்கள் ? பேரன் 'தாத்தா' என்று கூப்பிடும் போது எப்படி அவர் இன்னும் இளைஞர் அணி தலைவராக இருக்கிறார் ?

4. ஜெயலலிதாவிற்கு பச்சை கலர், நம்பர் 9 பற்றி யார் அட்வைஸ் செய்தார்கள் ? அதனால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை ?

5. ஜெயந்திரர், ஜெயலக்ஷ்மி, செரினா கஞ்சா வழக்கு எப்போது முடிவுக்கு வரும் ?

6. பாக்கியராஜ், டி.ராஜேந்தர் எல்லாம் லைவாக சன் டிவியில் காண்பிக்கும் போது, ஏன் ஸ்டாலினை அவ்வளவாக காண்பிக்க மாட்டேன் என்கிறார்கள் ?

7. டாட்டாவை மிரட்டிய விவகாரம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது ஏன் NDTV, CNN-IBN, STAR-TV, Headlines-Today, Times-Now அதை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ? பயமா ?

8. எம்.ஜி.ஆர், கலைஞர் ஏன் ராத்திரியிலும் கருப்பு கண்ணாடி அணிகிறார்கள் ? யாராவது இதை பற்றி அவர்களிடம் தைரியமாக கேட்டதுண்டா ?

9. திருமாவளவன், வைகோ, ஜெ ஏன் ஏப்ரல் 8ஆம் தேதி ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவில்லை ? அதற்குள் கூட்டணியில் பிளவா ?

10. போயஸ் கார்டனில் கார்த்திக்கு என்ன நடந்தது ? யாராவது சொல்வார்களா ?

11. 'எங்கள் எம்.பிகளை அடகு வைத்து மந்திரி பதவி வாங்கினார்' என்ற வைகோவின் குற்றச்சாட்டுக்கு ஏன் பிரதமர், சோனியா பதிலளிக்க வில்லை ?


மற்ற கேள்விகள் இருந்தால் பின்னூட்டத்தில் கேளுங்கள் !

21 Comments:

Sivabalan said...

நிறைய உண்மை பேசிறீங்க!!, ஆட்டோல ஆள் வரப்போகுது!!

ramachandranusha said...

இட்லி வடைக்கு இந்த கேள்விகளை சொந்த பெயரில் பொதுவில் கேட்க தில் இருக்கா?

வரவனையான் said...

இன்னும் இட்லிவடையாரை தேடி ஆட்டோக்கள் புறப்படாத மர்மன் என்ன?

இட்லிவடையார் செய்திகளை உடனுக்குடன் எப்படி பெற்று தரவேற்றுகிறார்( ) ?

நாளை காலை ஒருக்கால் ஜெ வெற்றி பெற்றால் என்ன மாதிரி சாமாளிப்பு பதிவு போடலாம்.

கலைஞர் வென்றால் அவுருக்கு என்னென்ன புத்திமதிகள் சொல்லி பதிவு போடலாம் ?

ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோ,கலைஞர், ஜெ மூவரும் ஒரே மாதிரி நிலைப்பாடு கொண்டுள்ள மர்மம் என்ன?

சசிகலா நடராஜனுக்கும் ஷெரினாவுக்கும் என்ன தொடர்பு ?

முன்னாள் வளர்ப்புமகன் இப்போது ஹெராயின் பழக்கத்தில் இருந்து மீண்டுவிட்டாரா?

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

இந்தத் தேர்தலின் மிகப்பெரிய கோயான் யார்? :)

Anonymous said...

Add another question.

Why PM or sonia never talked or defended dayanidhi maran regarding tata issue?

Anonymous said...

Add another question.

Why PM or sonia never talked or defended dayanidhi maran regarding tata issue?

இளவஞ்சி said...

1. கட்சியின் மூத்த தலைவர்களான அன்பழனும் ஆற்காடு வீராசாமியும் ஏன் முதல்வர் பதிவிக்கு கலைஞருக்கு மாற்றாக சொல்லப்படுவதில்லை?

2. வைகோவும் ராமதாசும் கட்சிமாறும்போது அவர்களை துரோகி / பச்சோந்தி என விமர்சிக்கப்படும் போது அவர்களை சேர்த்துக்கொள்ளும் கலைஞரையும், அம்மாவையும் ஏன் துரோகிகள் என அழைப்பதில்லை?

3. கொள்கைப்பிழம்புகள் கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு தேர்தலிலும் பெரிய கட்சிகளுடம் கூட்டுவைக்கிறதே? இந்த காம்ப்ரமைஸ் அவர்கள் கொள்கைகளுள் ஒன்றா?

4. "எனக்கு தன்மானம்தான் முக்கியம்" என விஜய.டி.ஆர் இங்கயும் அங்கயும் மாறி மாறி தாவறாரே! அவருக்கு நிஜமாவே வோட்டுபோட ஆள் இருக்கிறதா?

5. இத்தனை காலம் பிரிந்திருக்கும் நடராஜனும் சசிகலாவும் ஏன் விவாகரத்து செய்யவில்லை?! நடராஜனை எதிர்க்கும் ஜெ. சசியை இதற்கு ஏன் தூண்டவில்லை?

6. அம்மா அம்மா என காலில் விழும் அமைச்சர்கள் வீட்டில் மனைவியை எப்படி நடத்துவார்கள்? வீட்டில் அமைச்சர் ஏதாவது மிரட்டினால் மனைவிமார் நமுட்டுச்சிரிப்பு சிரிப்பார்களா?

ஒன்னுமே புரியல ஒலகத்துலே... :(

Anonymous said...

An another question.

Why Junior vikatan or dayanidhi maran are not talking abt vaiko´s comment regarding sun tv is going to buy JV???

Krishna said...

//8. எம்.ஜி.ஆர், கலைஞர் ஏன் ராத்திரியிலும் கருப்பு கண்ணாடி அணிகிறார்கள் ? யாராவது இதை பற்றி அவர்களிடம் தைரியமாக கேட்டதுண்டா ?//

கலைஞர் கருப்புக் கண்ணாடி அணிவது, கண் கோளாறு காரணமாக. ஒரு விபத்தில் கண் அடிபட்ட போது சிகிச்சை (அறுவை?) முடிந்தவுடன் போட ஆரம்பித்தது, மருத்துவ ஆலோசனையால் தொடர்கிறது.

ராஜீவ், 1989 தேர்தலில், கண்ணைக் காட்டாமல், கறுப்புக் கண்ணாடியால் மறைத்துக் கொள்ளும் கறுப்பு மனிதர்கள் என்ற தொனியில் தமிழகத்தில் பிரச்சாரம் செய்த போது, கலைஞரே பொதுக்கூட்ட மேடையில் சொன்ன விஷயம் இது....

Anonymous said...

//8. எம்.ஜி.ஆர், கலைஞர் ஏன் ராத்திரியிலும் கருப்பு கண்ணாடி அணிகிறார்கள் ? யாராவது இதை பற்றி அவர்களிடம் தைரியமாக கேட்டதுண்டா ? //

இந்த லிஸ்டில் இப்போது கார்த்திக்கும்.

கமல் said...

//6. பாக்கியராஜ், டி.ராஜேந்தர் எல்லாம் லைவாக சன் டிவியில் காண்பிக்கும் போது, ஏன் ஸ்டாலினை அவ்வளவாக காண்பிக்க மாட்டேன் என்கிறார்கள் ?//

அதான் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை பேட்டி கொடுத்தாரே! சன் டிவி செய்தி வாசிப்பாளர் ஒருவர்தான் பேட்டி எடுத்தார். பார்க்கவில்லை?

நன்றி
கமல்

vishytheking said...

1. இப்பொது கூட அ தி மு க ஜெயிக்காது என்ற நம்பிக்கையில் தான் வந்திருக்கிறார். அடித்த கொள்ளையில் பங்கு தராமல் உயிரொடு இருக்க முடியுமா...

2. அழுவது என்பது அந்த நொடியில் உணர்ச்சி வசப் படுவதால் வருவது.. ராமதாஸ் எளக்காரமாகப் பேசும் நிலை வந்ததால் நொந்து நூலைப் போன நொடியில் யார் கை கொடுத்தாலும் அவர்கள் தோளில் சாய்ந்து கொள்வது இயல்பு..
40, 70 எல்லம் ஒரு பிரமையை யெர்படுத்த எதிர் கட்சியினர் கிளப்பி விட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் வழக்கமாக சவால் விடும் புயல் ஏன் மற்றவர்கள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் இருந்தார் என்பதும் ஒரு கேள்வி.

3. ஜெயாவுக்கும் பச்சை நிறத்துக்கும் உள்ள அதே சம்பந்தம்.. வேறு என்ன பதவி கொடுப்பது.. தலைவனாக தோளில் தூக்கி வைத்து காட்டப் படுபவர்களுக்கு. தலைவர்கள் பிறக்கிறார்கள் உருவாக்கப் பட்ட தலைவர்கள் உருப்படுவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். தயானிதி மாறனைப் பாருங்கள். ஒரு மாதத்தில் அடுத்த தலைவர் இவராக இருக்கலாம் என்று பேச வைக்கிறார்.
கடவுள் நம்பிக்கை இல்லதவர்களும் மொட்டை போடலாம் என்று யாராவது சப்பை கட்டுவார்கள்

4. இது ஒரு கேள்வியா.. ஜொசியர்கள்.. எல்லம் ஒன்பது ஒன்பதாக கிடைக்கிரதே.. (11 க்கு பதில் 18, 21 க்கு பதில் 27 அப்படி).

5. முதல் வழக்கு முடிந்து விட்டது..இனிமேல் இது வாய்தா வழக்கு. இரண்டாவது இனிமேல் முடியவில்லை என்றாலும் யருக்கும் கவலை இல்லை. மூன்றாவது அடுத்த ஆட்சியில் முடியும்..(நிழல் மனிதர் ஏகப்பட்ட வேலை செய்திருக்கிறார்.. அதனால் கருணை காட்டப் படும். ஒரு கணிப்பு தான்)

6. வை கோ கூறியதை மறந்து விட்டீர்களா.. தயாநிதிக்கு பிடிக்காதவர்கள் சன் டிவியில் வர மாட்டார்கள். வேலியில் போவதை எடுத்து விட்டுக் கொண்டு கவலைப் படுவானேன்.

7. அவங்க நாளைக்கு ஒரு வேலை ஆகணும்னா இந்த அமைச்சகத்தை தானே அணுகணும்.. அமைச்சர் போனாலும், அடுத்தவர்கள் ஆப்பு வைக்கலாமே.. எதற்கும் ஒரு முன்னெச்சரிக்கை தான்.. பிரதமர் அவரை நீக்க மாட்டார் என்பதும் தெரிகிறது.. யானை தன் தலையில் மண்ணைப் போட்டுக்கொண்ட கதை அவருக்கும் தெரியும்.

8. யாராவது கருப்புக் கண்ணாடி போட்டால் நன்றாக இருக்கிறது என்று கூறி இருப்பார்கள்.. அது சரி கான உலக நாதன் ஏன் போடுகிறார்?

9. சங்கராசாரியார் ஒரு தாழ்த்தப் பட்டவரை ஆதரித்தாலும் ஆதரிக்கலாம் சில சாதிக் காரர்கள் மாட்டார்கள்.. இப்போது ஓட்டு தான் முக்கியம் சாதி இல்லை என்பதைப் புரிந்து கொண்டதால் பிரசாரம் செய்யவில்லை...

10. நாங்கள் இல்லாமல் நீங்கள் ஜெயிக்க முடியாது.. அதனால் 35 இடங்கள் தாருங்கள் என்று அதிகாரமாகக் கேட்டிருப்பார்.. கருணாநிதியைத் தானே முதலில் பார்த்தாய் அவரிடமே வாங்கிக் கொள் என்று பதில்.. இவர்கள் பதில் பேசும் முன்னால் அம்மையார் எழுந்து உள்ளே போயிருப்பார். நீங்கள் கிளம்பலாம் என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக விரட்டி இருப்பர்கள்.. இதைத் தான் மெக்ஸிகோ சலவை காரி ஜோக் போல அவரும் சொல்லிவிடுவேன் சொல்லிவிடுவேன் என்று கூறிக்கொண்டு அலைகிறார்.

11.அவர் சொன்னது உண்மை தான்..என்று தேர்தல் முடிந்து திமுக மந்திரிசபையில் இருந்து விலகும் போது கூறுவார்கள்..தி மு க சட்டசபையில் ஜெயித்தாலும் தோற்றாலும் மத்திய அமைச்சரவயிலிருந்து விலகாது.. அதனால் அடுத்த 10 வருடங்களில் காங் ஜெயா பின்னால் போகும் போது இந்த உண்மை வரும்.. அப்போது வை கோ கலைஞர் பின்னாலிருந்தால் அதை மறுத்து அறிக்கை விடுவார்.

அன்புடன் விச்சு

வெற்றி said...

//'எங்கள் எம்.பிகளை அடகு வைத்து மந்திரி பதவி வாங்கினார்' என்ற வைகோவின் குற்றச்சாட்டுக்கு ஏன் பிரதமர், சோனியா பதிலளிக்க வில்லை ?//

இக் கேள்விக்கான பதிலை மதிப்பிற்குரிய வைகோ அவர்களே தனது இறுதித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கூறிவிட்டார்களே! அப் பதில் செய்தித்தாள்களில் கூட வெளி வந்ததே! நீங்கள் பார்க்கவில்லையா? அல்லது வைகோவின் பதிலில் உங்களுக்கு திருப்தி இல்லையா?

Idly Vadai said...

சிவபாலன் - ஐயோ விட்டா நீங்களே அனுப்புவீங்க போல
உஷா - ரொம்ப தான் ஆசை :-)
கமல் - அது நிஜமான ஜல்லி

BrockLee said...

Fantastic

Gobinath said...

//7. அவங்க நாளைக்கு ஒரு வேலை ஆகணும்னா இந்த அமைச்சகத்தை தானே அணுகணும்.. அமைச்சர் போனாலும், அடுத்தவர்கள் ஆப்பு வைக்கலாமே.. எதற்கும் ஒரு முன்னெச்சரிக்கை தான்.. பிரதமர் அவரை நீக்க மாட்டார் என்பதும் தெரிகிறது.. யானை தன் தலையில் மண்ணைப் போட்டுக்கொண்ட கதை அவருக்கும் தெரியும்.//


I guess you are speaking about those TV channels. As far as i know, those channels are not afraid of any politicians.

If you are thinking in this way, then i guess you have not seen any of these TV channels.

Note: Yaravathu panninadi vanthu, SCV entha channel kudukarathu ellai sonninka, nan mummykita solli java tv thavera varathu varama panniduvaan

Anonymous said...

காஞ்சி காமகேடி பக்த்கோடி சங்கர்ராமனை ஆள்வெச்சு கொலை செய்தது உண்மையா?

Anonymous said...

My Question:
Will the court and police come up with the truth on M.K. Azhagiri's role in the murder of the former DMK minister Tha. Krishnan? If Karunanidhi becomes CM after this election, will this case have an independent investigation without Karunanidhi's intervention?

vishytheking said...

Hi Gopinath,

if you have notieced none of these channels would have offended anybody whom they directly deal with. secondly none of the ministers were also threatening the press or major businesses. i have never seen any issue coming up without political backing in any tv for that purpose. not only in India elsewhere too.. remember the bush issue of not going to war when he was working for the us military service.. even star tv who is an insider for this issue, did not report this issue..

anbudan vichchu

ஆங்கிலமஅறியாநண்பன் said...

இட்லி வடை இந்த ஆங்கில பின்னூட்டங்களை மட்டுறுத்தலில் தடுத்து விடலாம அல்லவா..?

சில தடவை செய்தால் மக்கள் தானே தமிழில் இட ஆரம்பித்து விடுவார்கள். வேண்டுமானால் அவர்களுக்காக
ஆங்கிலத்தில் பீட்ஸா கார்னர் ஆரம்பித்துவிடுங்களேன்.

Anonymous said...

அவர்தான் ஏற்கனவே சொல்லி விட்டாரெ. ஏன் தன்னை வெளிப்படுத்த முடியாத நிலை என்று. நமக்கு வேண்டியது உண்மையான நியூஸ். தரமாக கிடைக்கும் ஒரே இடம் இங்கேதான்.