பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 27, 2006

சோ, கலைஞர் பதில்கள்

சோ பதில்கள்:

கேள்வி: பத்து கிலோ அரிசி இலவசம் என்று அறிவித்த ஜெயலலிதா மந்திரி சபையை கூட்டி முடிவெடுத்து அறிவித்திருக்க வேண்டும் என்று கருணாநிதியும், ராம தாசும் விமர்சிப்பதில் நியாயம் உள்ளதா?

பதில்:- மந்திரி சபையை கூட்டி முடிவெடுப்பதற்கு இது இன்றைய தமிழக அரசின் திட்டம் இல்லை. அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க. என்ன செய்யும் என்பதை பற்றிய அறிவிப்பு இது. இதற்கும் இன்றைய மந்திரி சபைக்கும் என்ன சம்பந்தம்ப ராமதாஸ், கலைஞர் ஆகியோரின் விமர்சனத்தில் அர்த்தம் இல்லை.

கே:- கலைஞர் கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்கிறார். ஜெயலலிதாவோ கிலோ அரிசி ஒரு ரூபாய் எழுபத்தைந்து காசுகள் என்று போட்டி அறிவிப்பு வெளியிடுகிறார்களே மக்கள் எதை விரும்புவார்கள்?

ப:- அத்துடன் முடியவில்லை. அதை ஜெயலலிதா வின் அறிவிப்பை பார்த்த வுடன் கலைஞர் அரிசி விஷயத்தில் மேலும் சலுகைகள் அறிவிக்கப்படும் என்று ஒரு உப வாக்குகுறுதியை அறிவித்திருக்கிறார். இப்படி யாக இது வாக்குறுதி என்பதை மீறி வம்பு சண்டையாகி வருகிறது. இதில் மக்களுக்கு நம்பிக்கையை விட சுவராஸ்ய மும், பொழுது போக்கும்தான் அதிகம்.

கே:- மத்தியில் மானிய குறைப்பு செய்து வரும் சிதம்பரம் தமிழகத்தில் இரண்டு ரூபாய்க்கு அரிசி கொடுப்பது சாத்தியம் என்கிறாரே?

ப:- அவர் கூறியுள்ளதை அப்படியே ஏற்பதனால் மாநில அரசுகள் பணக்கார அரசுகள் அவர்களிடம் நிதி குவிந்து கிடக்கிறது. மத்திய அரசோ ரொம்பவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது.வருமானமே கிடையாது என்பதை ஏற்க வேண்டும். ஏற்க முடியாத வாதம் என்றால் சிதம்பரத்தின் கூற்றும் ஏற்க முடியாததே.

கே:- தி.மு.க. கூட்டணி ஓட்டுக்களை விஜயகாந்த் கட்சி பறிக்குமா?

ப:- விஜயகாந்த் கட்சி எவ்வளவு ஓட்டுக்களை பெறப்போகிறதோ தெரியாது. அது எவ்வளவானாலும் சரி அதில் இரு கழக ஓட்டுக்களும் இருக்கும் என்று நினைக்கத்தான் இடமிருக்கிறது.


கலைஞர் பதில்கள்:

கேள்வி:- விஜயகாந்தின் வரவு, உங்கள் கட்சியின் வாய்ப்புகளை எந்த அளவு பாதிக்கிறது?

பதில்:- எந்த வரவு செலவுகளும் எங்கள் கட்சியைப் பாதிக்காது. ஏனென்றால், இது கொள்கை அடிப்படையில் குறிக்கோள் தவறாமல் நடைபோடுகின்ற ஒரு இயக்கம். அதனால் தான் இதை நாங்கள் கட்சி என்று சொல்வதை விட திராவிட இயக்கம் என்று குறிப்பிடுகிறோம்.

கே:- கருத்துக்கணிப்பு களின்படி பார்த்தால் தி.மு.க.வின் ஓட்டுக்களைத்தான் விஜயகாந்த் கட்சி பிரிப்பதுபோல் இருக்கிறது. தி.மு.க.வினர் விஜயகாந்த் பக்கம் சாய்கிறார்களா?

ப:- தி.மு.க.வினர் யார் பக்கமும் சாய மாட்டார்கள். ஒன்றிரண்டு தலையாட்டி பொம்மைகள் வேறு பக்கம் சாயலாம். அது மொத்த தி.மு.க.வைக் குலைத்து விடாது.

கே:- டி ராஜேந்தர், வைகோ, விஜயகாந்த், சரத்குமார் இவர்களில் உங்களோடு நெருக்கமாக இருந்து இப்போது தேர்தலில் உங்களை எதிர்ப்ப வர்களின் பிளஸ் மற்றும் மைனஸ்களை வரிசைப்படுத்துங்கள். இவர்களில் யாருடைய நடவடிக்கை உங்களுக்குத் திருப்தி தருகிறது?

ப:- விஜயராஜேந்தர்-அவர்தான் இன்றைக்கு எங்கள் அணியில் இல்லாவிட்டாலும், என்னை அவரது அரசியல் குரு என்பதை மறக்காமல் இருக்கிறார்.

கே:- ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்து வைகோவை அணி மாறாமல் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறதா?

ப:- அப்பாடா! நல்ல வேளை! மடியிலே கட்டிக் கொண்டு இராமல் தப்பித்துக் கொண்டோமே என்றுதான் இப்போது தோன்றுகிறது.

கே:- வைகோவின் பிரச்சாரம் தி.மு.க.வைப் பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா?

ப:- பாதிக்காது, மாறாக வளர்க்கும்.

2 Comments:

Anonymous said...

//..இது கொள்கை அடிப்படையில் குறிக்கோள் தவறாமல் நடைபோடுகின்ற ஒரு இயக்கம்..//

இதில் எழுத்துப்பிழை இருக்கிறது போல் தெரிகிறதே, (கையா, ளையா)

இவரு மட்டும் இல்லீங்க, எல்லாரும் தான் ஆனா தமிழ் நாட்டுல தொடங்கியது தான் யாரு நெசமாவெ தெரியலங்க.

:-)))

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

//இது கொள்கை அடிப்படையில் குறிக்கோள் தவறாமல் நடைபோடுகின்ற ஒரு இயக்கம்.//

ஒவ்வொரு கட்சியும் அவர்களின் தேர்தல் அறிக்கை புத்தகத்திலேயே அவர்களின் இயக்க கொள்கைகளையும் அச்சடித்துக் கொடுத்தால் வசதியாக இருக்கும்.