
முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தார் திரைப்பட இயக்குநர் விசு.
கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா?
பதில்:- விருப்பம் தெரிவித்துள்ளேன். தலைமை கழகம் அறிவித்தபின் பிரசாரம் தொடங்குவேன்.
கே:- திடீரென அ.தி.மு.க.வில் சேர காரணம் என்ன?
ப:- ஆரம்பத்தில் இருந்தே இதுபற்றி மனதில் எண்ணியிருக்கிறேன். திருப்பத்தூரில் அரட்டை அரங்கம் முடிந்ததும் சன் டி.வி.யுடன் எனக்கு இருந்த ஒப்பந்தம் முடிந்தது. அதன் பின்னர் அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளேன்.
கே:- அரசியலில் உங்களால் சாதிக்க முடியுமா?
ப:- டிராவல் ஏஜென்சியில் ஊழியராக இருந்தேன். பின்னர் சினிமாவுக்குள் நுழைந்ததும் வீட்டில் ஏன் என்றனர். முயற்சி எடுத்தேன். சோரம் போகவில்லை. அரட்டை அரங்கத்தை தொடங்கினேன். ஏன் இப்படி என பலர் கேட்ட னர். அதிலும் நான் சோரம் போகவில்லை. பின்னர் அரசியலில் சேரலாம் என எண்ணினேன். கண்டிப்பாக இதிலும் நான் சோரம் போக மாட்டேன். ஏனென்றால் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது.
கே:- அ.தி.மு.க. ஆட்சி உங்கள் பார்வையில்...
ப:- அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதும் சென்றுள்ளேன். 600 முதல் 700 வரை நிகழ்ச்சி நடத்தியுள்ளேன். நான் பார்த்த வரையில் ஒட்டு மொத்தத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் திருப்தியாக உள்ளனர்.
கே:- அடிக்கடி அரட்டை அரங்கம் மூலமாக என்ன செய்தீர்கள்?
ப:- நல்லது செய்ய வேண்டும் என நினைத்தேன். செய்துள்ளேன். நல்ல நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு சேவை செய்துள்ளேன். என் மூலமாக ரூ. 1 கோடி வரை நன்கொடை கொடுத்துள்ளேன். கல்வி அறக்கட்டளை அமைத்து சேவை செய்து வருகிறேன்.
அரட்டை அரங்கம் ஒரு இயக்கமாக மாறி 5 வருடம் ஆகி விட்டது. அதில் உள் ளூர் பிரச்சினைகளை சொல் கிறோம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவற்றை சரிசெய்துள்ளனர். அதற்கு உதாரணம் பல உள்ளன. அதற்கு அரசுக்கு நன்றி என போட்டோம். அவற்றை `கட்' செய்தார்கள். எனினும் ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு சத்தியத்துக்கு கட்டுப்பட்டு இருந்தேன். அரட்டை அரங்கம் ஒரு இயக்கம் என்பதை நிரூபிக்க வந்துள்ளேன். தி.மு.க.வை பொறுத்தவரை சரத்குமார் சொன்னது போல அது தி.மு.க. அல்ல. தயாநிதி, கலாநிதி முன்னேற்ற கழகம்.
கே:- அரட்டை அரங்கம் தொடர்ந்து நடத்தப்படுமா?
ப:- விசுவின் அரட்டை அரங்கம் என்பது விசு இறந்த பிறகும் தொடரும். சன் டி.வி. இல்லாவிட்டால் என்ன ஜெயா டி.வி. உள்ளிட்ட வேறு டி.வி.க்கள் உள்ளனவே!
தினமலர் பேட்டி
கேள்வி: அரட்டை அரங்கம் இனி என்னவாகும்?
பதில்: இன்னும் நான்கு வாரம்தான் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
கேள்வி: அரட்டை அரங்கம் நிகழ்ச்சி இனி வராதா?
பதில்: சென்ற ஞாயிற்றுக்கிழமையே (23ம் தேதி) அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கான கான்ட்ராக்ட் முடிந்து விட்டது. இது தொடர்பாக ஏழு மாதத்துக்கு முன்பாகவே "சன் டிவி' நிர்வாகத்துக்கு தெரிவித்து விட்டேன். அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராததால் நான் என்ன செய்ய முடியும். வரும் நான்கு வாரத்துக்கான கேசட்டுகளை கொடுத்து விட்டேன்.
கேள்வி: நீங்கள் அ.தி.மு.க.,வில் இணைவது யாருக்காவது தெரியுமா? ஏன் இந்த திடீர் முடிவு?
பதில்: நான் அ.தி.மு.க.,வில் இணைவதை தெரிந்து கொண்ட "சன் டிவி' நிர்வாகத்தினர் அ.தி.மு.க.,வில் இணைய வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாதவர்கள் அங்கு உள்ளனர். "சன் டிவி'யால் அரட்டை அரங்கம் முன்னுக்கு வரவில்லை.
கேள்வி: எத்தனை ஆண்டுகளாக அரட்டை அரங்கம் நிகழ்ச்சி வந்து கொண்டிருக்கிறது.
பதில்: "சன் டிவி' ஆரம்பித்ததில் இருந்து அரட்டை நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். இதுவரை 601 வாரம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது.
கேள்வி: பின்னர் எதற்கு இந்த பிரச்னை?
பதில்: "சன் டிவி'யில் வரும் அரட்டை அரங்கத்தால் தான் நான் வளர்ந்தேன் என சிலர் குற்றம் சாட்டினர். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. நான் நானாகத் தான் வளர்ந்தேன். கலாநிதி மாறன் வளர்க்கவில்லை. சென்ற ஐந்து ஆண்டில் ஒரு முறை தான் கலாநிதி மாறனை பார்த்துள்ளேன்.
அரட்டை அரங்கம் நிகழ்ச்சி மூலம் சில பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். குறிப்பாக சில கிராமங்களின் குறைகளை இந்நிகழ்ச்சியில் காண்பித்த பின்னர், ரோடு போடும் பணி, குடிநீர் வழங்கும் பணி, பட்டா வழங்கும் பணிகள் போன்றவை வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால் பிரச்னை தீர்ந்த விஷயத்தை அரட்டை அரங்கத்தில் "சன் டிவி' நிர்வாகம் காட்ட மறுத்தது. தொடர்ந்து இதுபோன்று நடந்ததால் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தவறு செய்யும் அதிகாரிகளை சுட்டிக் காட்டுவதுதான் என் பணி. அந்த அதிகாரி தவறை திருத்தி சரி செய்து விடுவார். ஆனால் சன் டிவியில் அது ஒளிபரப்புவதில்லை. அவ்வாறு ஒளிபரப்பினால், அது அ.தி.மு.க., அரசுக்கு சாதகமாகி விடும் என்ற அச்சத்தில் அவர்கள் ஒளிபரப்பவில்லை.
கேள்வி: "ஜெயா டிவி'யில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி வருமா?
பதில்: "ஜெயா டிவி'யில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி வந்தாலும் தவறு செய்யும் அதிகாரிகளை சுட்டிக்காட்டுவேன். என்னைப் பொறுத்தவரை அரட்டை அரங்கம் இனி "சன் டிவி'யில் வரக் கூடாது.
படம் உதவி: தினமலர்
Update: 26/4/06
கீழே படம் உதவி: தட்ஸ் தமிழ்
( இந்த படத்துக்கு நல்ல பின்னூட்டங்கள் வரவேற்க்கப்படுகின்றன:-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, April 26, 2006
அதிமுகவில் விசு - சன் டிவி மீது புகார்
Posted by IdlyVadai at 4/26/2006 10:30:00 AM
Subscribe to:
Post Comments (Atom)











27 Comments:
இதுதாங்க ¹விசு¹வாசம்ங்கறது......
நாகு - ரசித்தேன் :-)
ஆக, வெளியே வரும் ஒவ்வொருவரும், தங்கள் சொந்தப்(சொத்து) பிரச்சினையைத்தான் சொல்கிறார்களே தவிர, வேற ஒன்னும் இல்லை போலிருக்கு
இதை எப்பொழுதோ எதிர் பார்த்தேன். விசு தன் வேலை முடியும் வரை அமைதியாய் இருந்துவிட்டு கழட்டிகிட்டார்.இந்த தேர்தல் சும்மா பட்டாசு கிளப்புது. Let us watch the play.
விசு பெட்டி வாங்கிவிட்டார்...நாளைய தினகரனில் மு.க...:))
//அரட்டை அரங்கம் நிகழ்ச்சி மூலம் சில பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். குறிப்பாக சில கிராமங்களின் குறைகளை இந்நிகழ்ச்சியில் காண்பித்த பின்னர், ரோடு போடும் பணி, குடிநீர் வழங்கும் பணி, பட்டா வழங்கும் பணிகள் போன்றவை வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால் பிரச்னை தீர்ந்த விஷயத்தை அரட்டை அரங்கத்தில் "சன் டிவி' நிர்வாகம் காட்ட மறுத்தது. //
இதெல்லாம் நடந்திருக்குதா என்ன? சன் டிவில காட்ட மறுத்தா வேற ஊடகங்கள் இல்லையா, எதுனா பத்திரிக்கைல எழுதறது... இதப் போய் ஒரு காரணமா சொல்லிகிட்டு..
இப்போ தேர்தல்ல தி மு க ஜெயிச்சு ஜெயா டிவில இது மாதிரி வளர்ச்சிப் பணிகள் பத்தி காட்டமாட்டேன்னு சொன்னா, மறுபடி கட்சி மாறிடுவாராமா?
ஆனாலும் விசுவை ஒரு விஷயத்துல பாராட்டித் தாங்க ஆகணும்.. "நான் நானாகத் தான் வளர்ந்தேன். கலாநிதி மாறன் வளர்க்கவில்லை. " அப்படின்னு தன் புகழை நிலை நாட்டத் தான் கட்சில சேர்ந்தேன்னு ஒத்துக்கிடறார் பாருங்க.. மக்களுக்கு நல்லது பண்ண அது இதுன்னு மழுப்பாம..
இட்லி வடையாரே!
அடுத்து யாரு எப்போ வெளிய வராங்க?
முதல்லயே ஷெட்யூல் குடுத்துட்டா அ.தி.மு.க விற்கு வரவேற்பு ஏற்பாடுகள் பண்ண சவுகரியமா இருக்கும்ல!
மாக்கான் - உங்கள் பின்னூட்டதை என்னால் அனுமதிக்க இயலவில்லை. Sorry!
Peoples of tamilnadu should be awake that each and every one has a reason(personal) for changing the party. Nobody is interested in peoples welfare
விசுவுக்கு தான் பிறந்த இன உணர்வு.
வர்ணபேதம்!
கைபர்போலன் கணவாய் வழியே வந்த...
(வேணாம் அடிக்க வராதீங்க.. நான் எஸ்கேப்)
visuuuuuuuuu inni kosuuuuuuuuuuu
Update: படம் update செய்யபட்டிருக்கிறது. கூடவே ஒரு போட்டியும் :-)
( இந்த படத்துக்கு நல்ல பின்னூட்டங்கள் வரவேற்க்கப்படுகின்றன:-)
இதுக்கு என்ன தனியா வேணும்..
"ஊரு ரெண்டு பட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டம்"னு எங்க அப்பத்தா சொல்லும்..
இங்க ரெண்டு கூத்தாடிங்க ஒன்னா நிக்குறாங்க... இனி ஊருக்குள்ள கொண்டாட்டம் தான்! :)
2011...
ராமராஜனைப்போல அம்மாவிடம் ஆப்பு வாங்கிய S.V. சேகரும் ஜெயா டிவியில் காண்டிராக்ட் முடிந்த விசுவும் ஒரு பேட்டியில்...
"நீங்கள் கேட்பது போல அன்றைக்கு நாங்கள் அதிமுக வை ஆதரிக்கவில்லை! வயிரு சரியில்லாததால் ரெண்டுக்கு வருகிறது என்றோம்! அப்போது எடுத்த புகைப்படம் தான் இது!!!"
//"நீங்கள் கேட்பது போல அன்றைக்கு நாங்கள் அதிமுக வை ஆதரிக்கவில்லை! வயிரு சரியில்லாததால் ரெண்டுக்கு வருகிறது என்றோம்! அப்போது எடுத்த புகைப்படம் தான் இது!!!" //
நல்லா சொன்ன கண்ணா!
பணம், இனம் என்று பல 'கனம்' இதில் இருக்கத்தான் செய்கிறது.
கூடவே, சிலர் 'குணம்' கூட.
எப்படியோ, இந்த தேர்தலில் நல்ல 'மணம்'.
நடத்துங்ஙய்யா, நடத்துங்ங்...க!
இவர்கள் சந்தர்ப்பவாத குரங்குகள்.
ஏறக்குறைய பத்து வருஷம் பாந்தமாய் அனுபவித்துவிட்டு இப்பொழுது நொண்டிச்சாக்கு சொல்லுகிறார்.
காண்டிராக்ட் இழுத்து மூடிவிட்டதால், ஜெயா டிவிக்கு அடிபோட்டு வசதிக்கு வழிபண்ணிக்கொள்கிறார்.
இரண்டு வருஷம் முன் ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் விசு பங்கேற்ற கல்கி ஆண்டுவிழா விவாதத்தில் (சினிமா கெடுக்கிறதா என்ற விவாதம்), கலாநிதியை தாங்கு தாங்கென்று தாங்கினார். அவரை புகழ்ந்து ஆகா, ஓகோ என்று கூப்பாடு போட்டார். இப்போ பாட்டு மாறுது.
ஜயலலிதாவின் நிலையற்ற மனமும், குரங்கு கை ஆட்சி போல் அடிக்கடி ஆட்களையும், கொள்கைகளையும் மாற்றும் இந்த ஆட்சியில் மரியாதை இழந்து நிற்கும் இன்னொரு வியாபாரி இந்த விசு.
எஸ்.வி.சேகர் என்ற இன்னொரு சந்தர்ப்பவாதியின் மூலமாக இவருக்கு இந்த ஐடியா கிடைத்ததாம்.
ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்.
நன்றி
விசுவும் எஸ்வி சேகரும்,
இருவிரல்களைக் காட்டி கூட்டாக அறிவிக்கிறார்கள்,
"எங்களுக்கு மட்டும் தான் நாமம் போடறது எப்படின்னு நல்ல தெரியும்"
நேக்கு ஒரு சந்தேகம்.
அவாள் எல்லாம் பெரியவா matterகாக அம்மாவை எதிர்ப்பான்னு பார்த்தா - இப்படி செய்யறாளே??
இன்னொரு சுனாமி வருமோ?
தங்கள் இடுக்கைக்கு பின்னோட்டம் இட்டது குறித்து வருத்தப்படுகிறேன்.
என் கருத்தை ராஜா என்கிற பெயரிலும், வேறு யாரோ எழுதின ஒரு கருத்தை (கொஞ்சம் கூச்சப்படவேண்டிய எழுத்து) என் பெயரிலும் பதித்துள்ளீர்கள்.
தாங்கள் அனானிமஸ் பின்னோட்டங்களை நிறுத்தவில்லை. இதனால் குழப்பத்தையும் மன வருத்தத்தையும் வளர்க்கிறீர்கள்.
இதை வேண்டும் என்று செய்கிறீர்களோ என்று தோன்றுகிறது.
அவா கட்சிக்கு அவா போயிருக்கா? நோக்கு என்ன நோபாளம்?
ஐயராமன்,
பின்னூட்டம் கீழே 'By ... ' என்று உங்கள் பெயர் இருக்கும். நான் எதையும் மாற்றி போடவில்லை ( போடவும் முடியாது ). பின்னூட்டம் எழுதுவது/எழுதாதது உங்கள் இஷ்டம்.
இட்லிவடை
இந்த படத்துக்கு நல்ல பின்னூட்டங்கள் வரவேற்க்கப்படுகின்றன:-)
"சீரியஸ் ஆன காமடியர்கள்"
naalu varam cassette thanthutan velila vanthutanu solrar oru velai naarpathu varathuku innum arratai arangam mudiyama iruntha vanthu iruka mataro visu? mm sun tv collection ku aapu vacha election la kalla kata vanthutarya ...vanthutar ....
No comments (வேற என்னத்த சொல்லுறது).
திமுக ஆட்சியில நடக்கர நல்லத ஜெயா டிவில காட்டுவாஙன்னு விசு நம்பர மாதிரி இல்ல இருக்கு? அரட்டை அரங்கம் நடத்தர விசுவுக்கு ஊருக்கெ தெரிஞ்ச விசயம் தெரியதா என்ன?
பி.கு : In 1996 election Jaya TV showed status only about the places they are winning..Only 4 out of 234 i think... at least sun TV shows all status even if they loose..Even though as everybody knows SUN TV is fully supporting DMK, it is far far better than Jaya TV.. just watch both news and you can find tht...
Naam Iruvar Namaku Iruvar
By
S.Saravanan
saravan23@gmail.com
Post a Comment