தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கருத்து கணிப்பு நடத்தினர். அதன் முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் நிருபர்களிடம் இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* தற்போதுள்ள அரசி யல் சூழலில் இன்று எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு வாக்காளர் பதில்.
அ.தி.மு.க. -38.5%
தி.மு.க. -36.0%,
காங்கிரஸ் 4.5, %
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-2.1. %
பா.ம.க.-1.8 %
ம.தி.மு.க.-1.2 %
தே.மு.தி.க.-12.3 %
பாரதீய ஜனதா-0.5 %
விடுதலை சிறுத்தைகள்-0.3.%
இந்த முடிவுகளை இதற்கு முந்தைய கணிப்புகளோடு ஒப்பிட்டால் அ.தி.மு.க.வின் வாக்கு சீராக உயர்ந்து தி.மு.க.வை முந்தியிருப்பது புலப்படுகிறது.
நவம்பர் 2004:
அ.தி.மு.க. -19.0 %
தி.மு.க. -41.7.%
மே-2005:
அ.தி.மு.க. -30.1 %
தி.மு.க. -46.1 %
ஜனவரி 2006,
அ.தி.மு.க. -.33.7 %
தி.மு.க. -38.4. %
ஏப்ரல் 2006:
அ.தி.மு.க. -38.5. %
தி.மு.க. -36.8. %
ஆட்சியில் எந்த அணி
* வரும் தேர்தலில் அ.தி.மு.க. அணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என யூகமாக கருதுவோர்.
அ.தி.மு.க.கூட்டணி -43.8%
தி.மு.க. கூட்டணி -42.3 %
* கணிப்பில் கலந்து கொண்டவர்கள் வாக்களிக்கும் முடிவிற்கும் அணி வெல்லும் என்ற யூகத்திற்கும் இடைவெளி உள்ளது. கூட் டணிகள் என்ற அளவில் வாக்களிக்க விரும்புவோர்:
தி.மு.க.அணி -44.5 %
அ.தி.மு.க.அணி -40.1 %
தே.மு.தி.க. -12.3 %
முடிவு செய்யாதோர்-1.6.%
தி.மு.க. அணிக்கு ஆதர வாக 44.5 சதவீதம் பேர் வாக் களித்தாலும் அ.தி.மு.க. அணி தான் பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்று 43.8 சதவீதம்பேர் யூக மாக கருத்து தெரிவித்து உள்ளனர்.
அ.தி.மு.க. அணிக்கு கிடைக் கும் வாக்குகள் 40.1 சதவீதம், தே.மு.தி..க.வுக்கு கிடைக்கும் வாக்குகள் 12.3 சதவீதம். அ.தி.மு.க.வுக்குசீரான ஆதரவு பெருகி வருகிறது. தி.மு.க. அணிக்கு வாக்களிப் போரிடம் தன்னம்பிக்கை குறைந்துள்ளது.
* எந்த கட்சிக்கோ அணிக்கோ ஆதரவாக அலை வீசவில்லை.
* ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவுக்கும், சேப்பாக்கத்தில் கருணாநிதிக்கும் சாதகமான நிலை உள்ளது.
* தேர்தல் அறிக்கை பற்றி வாக்காளர் கருத்து:
தி.மு.க. -59.4 %
அ.தி.மு.க. -58.6%
* வாக்களிக்கும் பெண்கள் அ.தி.மு.க.-55.4. %
தி.மு.க. -31.7, %
தே.மு.தி.க. -11.2. %
ஆண்கள்:
தி.மு.க. -45.8, %
அ.தி.மு.க. -38.6, %
தே.மு.தி.க. -12.4 %
படிக்காதவர்கள்:
அ.தி.மு.க. -55.6 %
தி.மு.க. -31.8 %
கல்லூரி உயர் கல்வி:
அ.தி.மு.க. -34.2. %
தி.மு.க. -47.3. %
மகளிர் சுய உதவிகுழுவினர் ஆதரவு:
அ.தி.மு.க. -68.1 %
தி.மு.க. -23.2 %
சுய உதவிகுழு உறுப்பினர் அல்லாத பெண்கள்:
அ.தி.மு.க. அணி -45.7 %
தி.மு.க. அணி -37.4 %
அரசு ஊழியர்:
தி.மு.க. -62.5 %
அ.தி.மு.க. -28.3 %
குடும்பப் பெண்கள்:
அ.தி.மு.க. -50 %
தி.மு.க. -41.1 %
* மக்களின் பார்வையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அணிகளின்தேர்தல் வியூகங் கள் சம அளவில் சிறப்பாக அமைந்துள்ளன. இவற்றுக்கு அடுத்ததாக சராசரி 20சதவீதத்துக்கும் சற்று அதிகமானோர் தே.மு. தி.க.வின் வியூகம் சிறப்பாக உள்ளதாப கருதுகின்றனர்.
தினமணி செய்தி:
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க. கட்சியும் கூட்டணி என்ற முறையில் தி.மு.க. அணியும் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
அக்கல்லூரியின் ஊடகவியல் ஆய்வுத் துறை அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பு இதைத் தெரிவிக்கிறது. காட்சித் தகவல் இயல் துறையுடன் நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பை வெளியிட்டு பேராசிரியர் ராஜநாயகம் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
நாங்கள் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின்படி தற்போதைய சூழலில் அ.தி.மு.க. கட்சிக்கு தனிப்பட்ட முறையில் 38.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், தி.மு.க. கட்சியை 36 சதவீதம் பேர்தான் ஆதரித்துள்ளனர்.
கூட்டணி என்று பார்க்கும்போது, தி.மு.க. கூட்டணிக்கு 44.5 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 40.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நான்காவது முறையாக தற்போது ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டு நவம்பரில் அ.தி.மு.க.க-வை 19 சதவீதம் பேரும், தி.மு.க-வை 41.7 சதவீதம் பேரும் ஆதரித்தனர். ஆனால், அ.தி.மு.க.வுக்கு மக்களிடையில் செல்வாக்கு அதிகரித்து, தி.மு.க.வுக்குக் குறைந்து வந்தது.
இதன் விளைவாக ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட கள ஆய்வில் தி.மு.க.வுக்கான ஆதரவு 36 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அ.தி.மு.க.வுக்கான ஆதரவு 38.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அ.தி.மு.க.வுக்கு மக்களிடையே ஆதரவு மெல்ல மெல்ல அதிகரித்ததுடன், தி.மு.க.வை விட உயர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்தக் கள ஆய்வில் கட்சிகளின் தேர்தல் வியூகம், பத்திரிகைகள், தகவல் சாதனங்களின் நடுநிலைமை, தேர்தல் நியதிகள், திரையுலகத்தின் தாக்கம், ரஜினிகாந்த் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, தொகுதியின் முக்கியப் பிரச்சினை ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
சுய உதவிக் குழுவினர், ஆண் -பெண், வெவ்வேறு தொழில்களில் இருப்போர் எந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்; மத, சாதி ரீதியில் எப்படி வாக்குகள் போகின்றன; படித்தவர்கள், படிக்காதவர்களின் வாக்குகள் எப்படி அமைந்துள்ளன என்ற விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளன.
கருத்துக் கணிப்புகளுக்கு மக்களிடம் எத்தகைய வரவேற்பு உள்ளது என்ற கருத்தும் சேகரிக்கப்பட்டுள்ளது.
சரத் குமார்: தி.மு.க.விலிருந்து விலகிய நடிகர் சரத்குமார் அ.தி.மு.க.வில் சேர்ந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்கள், அ.தி.மு.க. அண்மையில் அறிவித்த ரேஷன் அரிசி சலுகை ஆகியவற்றின் பின்னணி இந்த ஆய்வில் இடம்பெறவில்லை.
இக்கள ஆய்வு தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் நீங்கலாக இதர அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 122 தொகுதிகளில் வசிக்கும் 5,058 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இப்பணியில் இரு பேராசிரியர்கள், மூன்று கள ஆய்வு ஒருங்கிணைப்பாளர்கள், 29 மாணவர்கள் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே, 2004-ம் ஆண்டு நவம்பர், 2005-ம் ஆண்டு ஏப்ரல், மே, நவம்பர் மாதங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதமும் தற்போது ஏப்ரல் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, April 21, 2006
லயோலா கல்லூரி கருத்து கணிப்பு
Posted by IdlyVadai at 4/21/2006 08:23:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










9 Comments:
DMDK 12.5%
Still 18 days more!
Go Captain!
இட்லிவடை - ஒரே குழப்பமா இருக்கு! சன் டிவியிலே பார்த்த எண்களும் நீங்கள் சொல்லும் எண்களும் அவ்வளவு வித்தியாசப்படுகின்றன.. இப்படிக்கூடவா செய்வார்கள்?
சுரேஷ் - எனக்கும் அதே குழப்பம் தான். இப்போது பார்த்த தினமணியில் கொஞ்சம் தெளிவாக போட்டிருக்கிறார்கள். Update செய்துள்ளேன்.
இன்றைய தமிழ் முரசு (www.dinakaran.com) தலைப்பு செய்தி என்ன தெரியுமா? 'தி.மு.க. வெற்றி உறுதி' - இதான். லயோலா கல்லூரி மாணவர்கள் கருத்து கணிப்பின்படி தி.மு.க.வுக்கு வெற்றி உறுதி என்று போட்டிருக்கிறார்கள். உலக மகா டுபாக்கூருடா சாமி!
வெங்காயம் - உங்கள் பின்னூட்டத்தை அனுமதிக்க இயலவில்லை. தனிநபர் தாக்குதல், கேட்ட வார்த்தை போன்றவற்றை அரசியல் தலைவர்கள் தவிர வலைப்பதிவாளர்கள் உபயோகித்தால் அதை அனுமதிப்பதில்லை என்று உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் :-)
தி.மு.க. கூட்டனி தான் 175 இடங்களை பிடிக்கும் அதர்க்கு தான் கூட்டனி பலமும் வாக்கு வக்கியும் உள்ளது
ஸாரி மோகன் காந்தி. தேர்தல் நடப்பது 234 தொகுதிகளுக்கு மட்டும் தான். 2340 தொகுதிகளுக்கு அல்ல.
Update 23/4/06 - கருத்து கணிப்புகள் கணிப்பு கருத்துக்களாக மாறி விட்டன என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார். மதுரையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், தற்போது தி.மு.க., அணிக்கு சாதகமாக கருத்து கணிப்புகள் வருகின்றன. அதற்காக வருந்த முடியாது. தற்போது கருத்து கணிப்புகள் கணிப்பு கருத்துக்களாக மாறிவிட்டன - கலைஞர்
2430 தெகுதி என்றால் 1750 சிட்டுகளை தி மு க கூட்டனி பிடிக்கும்
Post a Comment