பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 30, 2006

டாட்டா பற்றி - கலைஞர் பேட்டி

கேள்வி:- மானியம் வழங் கினால் மண்எண்ணை விலை குறையுமா?

பதில்:- மானியம் வழங்கி னால் மண்எண்ணை விலை குறையத்தானே செய்யும்.

கே:- முந்தைய தேர்தல் கருத்துக்கணிப்புகள் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவும், தற்போதைய கருத்துக்கணிப்புகள் தி.மு.க.வுக்கு சாதகமாகவும் மாறி மாறி வருகிறதே?

ப:- நாங்கள் 7 மாதங்களுக்கு முன்பே கணித்து விட்டோம். பத்திரிகைகளில் வருவது கருத்துக்கணிப்புகள் அல்ல. ஏற்கனவே கணித்த கருத்துகள் கடந்த 3 வாரமாக எங்களுக்கு சாதகமாக வருகின்றன. கருத்துக்கணிப்புகளை பார்த்து கூட்டணிக்கட்சி தோழர்களும், தி.மு.க. தோழர்களும் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது.

கே:- மத்திய மந்திரி தயாநிதி மாறன் டி.டி.எச் விவகாரத்தில் சிக்கி இருக்கிறாரே?

ப:- அவர் மீது பொறாமையினாலும், எரிச்சலினாலும் சொல்கிறார்கள். உருப்படியான குற்றச்சாட்டு எதுவும் இல்லை. இவர் அவரிடம் சொல்லி இருக்கிறார். அவர் இவரிடம் சொல்லி இருக்கிறார். அவ்வளவுதான்.

இது தொடர்பாக தயா நிதி மாறன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் நானே நடவடிக்கை எடுப்பேன். இந்த கருணாநிதி எப்போதும் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டான். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தயாநிதி மாறனை எனது பேரனாக கருதமாட்டேன். ஒரு அடிப்படை உறுப்பினரை போன்றே நடத்தப்படுவார்.

ஆனால் அந்த குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை. வேண்டுமென்றே தேர்தல் நெருங்க நெருங்க இப்படிப்பட்ட திசை திருப்பும் குற்றச் சாட்டுகளை சொல்கிறார்கள். அதே போன்று என் மீது சாதி மோதல் குற்றச்சாட்டையும் சுமத்தி இருக்கிறார்கள். உசி லம்பட்டியில் இலக்கியரீதி யாக பதில் சொன்னேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. முக்குலத்தோருக்கும், தலித்துகளுக்கும் இடையே கலகம் ஏற்படுத்த பேசியதாக கூறுகிறார்கள்.

மதுரையில் இருக்கும் பெரிய தேவர் சிலையினை குடியரசுத் தலை வராக இருந்த வி.வி.கிரியை அழைத்து வந்து நான் திறந்து வைத்தேன். கமுதி, உசிலம் பட்டி உள்பட 3 இடங்களில் தி.மு.க. ஆட்சியில் கல்லூரி கள் கட்டப்பட்டது. வன்னி யர்களை மிகவும் பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோது அதனை ஏற்றுக்கொண்டு அத்துடன் சேர்த்து சீர்மர பினரையும் மிகவும் பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் இணைத்து அவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்ததே தி.மு.க. ஆட்சி தான்.

அதே போன்று டாக்டர் அம்பேத்கார் பெயரால் முதன் முதலில் சட்ட பல்கலைக் கழகம் சென்னையில் அமைத்ததும் தி.மு.க. ஆட்சியில்தான். அண்டை மாநிலமான மராட்டிய மாநிலத்தில் கூட அம்பேத்கார் பெயரில் பல் கலைக்கழகம் அமைக்க அறி வித்து பணி நிறுத்தப்பட்ட போது அமைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் அம்மாநில கவர்னருக்கு தந்தி அனுப்பப் பட்டது. ரூ.4 கோடி செலவில் சென்னையில் முக்கியமான இடத்தில் அம்பேத்காருக்கு மணி மண்டபம் அமைத்ததும் தி.மு.க. ஆட்சியில் தான். மேலே கூறிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே அவர்களுக்கு தெரியும். தலித் இட ஒதுக்கீடு 16 சதவீதமாக இருந்ததை 18 சதவீதமாக உயர்த்தி மேலும் தனியாக ஒரு சதவீதம் மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கிக் கொடுத்ததும் தி.மு.க. ஆட்சியில்தான்.

கே:- அண்டை மாநில தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதேப அதே போல் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் உயருமா?

ப:- மக்களின் ஆர்வத்தையும், ஆரவாரத்தையும் பார்க்கும்போது வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருக்காது என்று கருதுகிறேன்.

கே:- நடிகர் விஜயகாந்தும், பாரதீய ஜனதா கட்சியும் ரகசிய உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கக்கூடாது என்று திட்டமிட்டு செயல்படுவதாக கூறப்படுகிறதே?

ப:- அதைப்பற்றி எனக்கு தெரியாது. கருத்துச் சொல்லவும் விரும்பவில்லை.

கே:- தி.மு.க.வின் மீது மேலும் பல பிரம்மாஸ்திரங்களை தொடுக்க இருப்பதாக கூறினார்களே?

ப:- மோகன அஸ்திரத்துக்கு அடிமைப்பட்டு பிரம்மாஸ்திரங்களை பிரயோகிப்பதாக கூறினார்கள். என் மீது தாக்கிய அஸ்திரங்களின் முனை மழுங்கிப்போய் விட்டது. அஸ்திரங்களால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்பட்ட தில்லை. பாதிக்கப்பட்டதும் இல்லை. பாதிக்கப்படப் போவதும் இல்லை.

கே:- தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஏற்படுமா?

ப:- கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை. இப்போதைய சூழ்நிலைகளை பார்க்கும்போது தி.மு.க. தனித்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக இருக்கிறது.

4 Comments:

திருவாளர் பொதுஜனம் said...

இந்தியா டுடே'வில் DTH விவகாரம் உட்பட மாறனை சுற்றியுள்ள சர்ச்சைகளை பற்றி ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. இதில் மாறனின் பேட்டியும் இடம் பெற்றிருக்கிறது. அதன் scan'களை நீங்கள் இங்கு பார்க்கலாம்:

http://img263.imageshack.us/img263/5247/itdm013mg.jpg
http://img263.imageshack.us/img263/1228/itdm023oq.jpg
http://img276.imageshack.us/img276/4131/itdm030yj.jpg

Idly Vadai said...

திருவாளர் பொதுஜனம்,
மிக்க நன்றி. இதை ஒரு தனி பதிவாக போடுகிறேன்.
அன்புடன்,
இட்லிவடை

இளவஞ்சி said...

//இந்த கருணாநிதி எப்போதும் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டான். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தயாநிதி மாறனை எனது பேரனாக கருதமாட்டேன். ஒரு அடிப்படை உறுப்பினரை போன்றே நடத்தப்படுவார்.
//
ம்ம்ம்.. கலைஞர் தயாநிதிக்கு மந்திரி பதவி வாங்கிக்கொடுக்கும் போதும் இதை நினைத்திருக்கலாம்!

rajkumar said...

//ரஜினி ஆதரித்தும்...

1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களவைக்குப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலுக்கு முன்பாக அரசு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது"கருணாநிதியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்' என ரஜினி குறிப்பிட்டார். உடனே தி.மு.க.வை ஆதரித்து ரஜினி பேசியதாக அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. அதுமட்டுமின்றி, அப்போது வெளியான கருத்துக் கணிப்புகள் கணிசமான தொகுதிகளில் தி.மு.க.வே வெல்லும் என்றும் கூறின.

ஆனால், மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் நாகப்பட்டினம் தொகுதியைத் தவிர இதர 38 தொகுதிகளிலும் தி.மு.க. அணி தோற்றது.

நாகப்பட்டினத்தில் கூட தி.மு.க. அணியில் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் தான் வென்றது.//

தினமணியில் இக்கட்டுரை உண்மையில் வந்ததா? இது முற்றிலும் தவறான தகவல்.

1989ல் ரஜினி யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. 1998 ல் தான் ஆதரவு தெரிவித்தார்.1989ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் , காங்-அ.தி.மு.க கூட்டணி வெற்றிவாகை சூடியது. கருத்துக் கணிப்புகள் அப்போது இக்கூட்டணியின் வெற்றியைத்தான் கணித்திருந்தன.

1998ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், ரஜினி தி.மு.க மற்றும் த.மா.கா விற்கு ஆதரவு தந்தார்.கருத்துக் கணிப்புகள் இக்கூட்டணியின் வெற்றியை கணித்தனர். ஆனால் கோவை குண்டுவெடிப்பு மற்றும் கூட்டணி வலிமை நிலைமையை மாற்றியது. தி.மு.க கூட்டணி-10, அ.தி.மு.க கூட்டணி-30.

ஏன் தவறான தகவல்களை தினமணியில் வெளியிடுகிறார்கள் -அதிர்ச்சியாக உள்ளது.

ராஜ்குமார்