பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 26, 2006

டாட்டாவிற்கு தயாநிதி மாறன் மிரட்டல்

இன்று தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த இந்த செய்தி இவ்வளவு பெரிசாக ஆகும் என்று நான் நினைக்கவில்லை. ஜெயா டிவிக்கு அல்வா போல் ஒரு நியூஸ் என்று மற்றும் தோன்றியது. அதே போல் இன்றைய ஜெயா செய்திகளில்

"டாடா நிறுவன டி.டி.ஹெச் சேவையை அபகரிக்க, மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் தீட்டிய சதித்திட்டம் அம்பலம் : தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேராபத்து ஏற்படும் என தொழிலதிபர்கள் அச்சம்" என்று இந்த செய்திக்கு முக்கியதுவம் கொடுத்து அதற்கு சோவிவின் விமர்சனம் என்று தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.


( சன் டிவி இந்த செய்தியை வெளியே கொண்டுவரகூடாது என்பதற்கு நிறைய முயற்சிகள் மேற்கொண்டதாக தெரிகிறது )

தினமணி செய்தி:

செட்-டாப் பாக்ஸ் மூலம் வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வகைசெய்யும் டி.டி.எச். திட்டத்தை டாட்டா குழுமத்திடமிருந்து அபகரிக்க மத்திய தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நிர்பந்தம் செய்து, மிரட்டல் விடுத்தது உண்மையா என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

டி.டி.எச். டி.வி. திட்டத்தை தனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கக் கோரி டாட்டா குழுமத்தை நிர்பந்தம் செய்து, மிரட்டியதாக தயாநிதி மாறன் மீது மதிமுக பொதுச்செயலர் வைகோ தேர்தல் பிரசாரத்தின்போது புகார் கூறியிருந்தார்.

இப்புகார் உண்மைதானா என்பதை அறிந்துகொள்வதற்காக டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டாவுக்கு நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கேள்விப் பட்டியலை அனுப்பியிருந்தது. இதற்கு உடனடியாக டாட்டா குழுமத்திடமிருந்து பதில் வந்தது.

"நீங்கள் அனுப்பியுள்ள கேள்விகளில் கடுமையான புகார்கள் இடம்பெற்றுள்ளன. இப்புகாரை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் இப்புகார் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை.' என்று அந்த பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.

இப்புகாரை டாட்டா குழுமத்தினர் மறுக்காத காரணத்தால், புகார்களை அவர்கள் உறுதி செய்ததாகவே முடிவுசெய்ய வேண்டியுள்ளது.

இப்புகார்கள் குறித்து கோவையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தயாநிதி மாறனிடம், நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் சார்பில் தொடர்புகொண்டு கருத்து கோரப்பட்டது.

டாட்டா டி.டி.எச். டிவி. திட்டத்தை, டாட்டா குழுமத்திடமிருந்து அபகரிக்க முயன்றதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து நேரடியாக பதில் அளிப்பதை தயாநிதி மாறன் தவிர்த்தார். மாறாக புகார் கூறிய வைகோவை இகழ்ந்து பேசினார்.

நேர்மையுடனும் நெறிமுறைகளுடனும் செயல்பட்டுவரும் டாட்டா குழும விவகாரத்தில் தயாநிதி மாறன் சிக்கிவிட்டதாக கருதப்படுவதால் இது பெரும் பிரச்சினையாக உருவாகும் என்பது நிச்சயமாகிவிட்டது.

தயாநிதி மாறனுக்கு எதிராக கூறப்பட்டுள்ள புகார் தொடர்பான விவரம்:

சர்வதேச டி.வி. ஜாம்பவான் ரூபர்ட் முர்தோச்சின் ஸ்டார் டி.வி.யுடன் இணைந்து, டாட்டா குழுமம் டி.டி.எச். டி.வி. திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டம் பல கோடிக்கணக்கான மதிப்புடையது. இத்திட்டத்தில் டாட்டா குழுமத்தின் பங்கு 80 சதவீதம். ரூபர்ட் மர்தோவின் பங்கு 20 சதவீதமாகும்.

இது ஒருபுறம் இருக்க, தயாநிதி மாறன் குடும்பம் டி.டி.எச். உரிமத்தை அண்மையில் பெற்றது. ஆனால் இதை நடத்துவதற்கேற்ற வல்லமை படைத்த பங்குதாரர் நிறுவனத்தை அது தேடிவந்தது. ஸ்டார் டி.வி.யைப் போன்று சன் டி.வி. நிறுவனமும் (தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் குடும்பத்துக்கு சொந்தமானது) 20 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்க இயலும்.

எனவே 80 சதவீதம் வல்லமை படைத்த பங்குதாரரையும் அதற்கேற்ற பணபலம் படைத்த நிறுவனத்தையும் சன்.டி.வி. நிறுவனம் தேடவேண்டிய அவசியம் நேரிட்டது.

எனவே டாட்டா குழுமம் மற்றும் ரூபர்ட் முர்தோச் இணைந்து நடத்திவந்த டி.டி.எச். டி.வி. திட்டத்தை கைக்கொள்ள தயாநிதி மாறனும் சகோதரர் கலாநிதி மாறனும் ஆர்வம் காட்டினர்.

இதுவிஷயமாக டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரடியாக விவாதிக்க அனுமதி கோரினார் கலாநிதி மாறன்.

டாட்டா-ஸ்டார் டி,டி,எச். திட்டத்தில் 33 சதவீத பங்கை அளிக்குமாறு ரத்தன் டாட்டாவிடம் கலாநிதி மாறன் கோரினார். அத்துடன் நிர்வாக உரிமைகளையும் அளிக்குமாறு வலியுறுத்தினார். சுருக்கமாக கூற வேண்டுமெனில் பங்குதாரராக மட்டுமின்றி ஏராளமான சலுகைகளையும் கோரினார்.

இக்கோரிக்கைகளைக் கேட்டு ரத்தன் டாட்டா அதிர்ச்சி அடைந்தார். டாட்டா குழும திட்டத்தில் பங்குதாரர் என்ற கோரிக்கைக்கே இடமில்லை என அவர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் அமைச்சர் தயாநிதி மாறன் தலையிடத் தொடங்கினார். 33 சதவீத பங்குதாரராக அனுமதிக்கக் கோரி ரத்தன் டாட்டாவை நிர்பந்தம் செய்யத் தொடங்கினார் தயாநிதி மாறன்.

இதேவேளையில், ரூபர்ட் முர்தோச்சையும், தயாநிதி மாறன் தொடர்புகொண்டு 33 சதவீத பங்குதாரராக அனுமதி கோரினார். ஆனால் இக்கோரிக்கையை ரூபர்ட் முர்தோச் நிராகரித்துவிட்டார்.

டாட்டா நிறுவனமும் முர்தோச்சின் ஸ்டார் நிறுவனமும் 33 சதவீத பங்குகளை சன் டி.வி.க்கு அளிக்க ஒப்புக்கொண்டுவிட்டதாக தயாநிதி மாறன் கூறிவந்தார். ஆனால் அவர் கூறியது பொய்யானது என்பது பின்னர் உறுதியானது.

இதற்கிடையில், தனது நிர்பந்தத்துக்குப் பணியாத டாட்டா குழுமத்தை மிரட்டத் தொடங்கினார் தயாநிதி மாறன். டாட்டா டெலிகாம் திட்டத்தை சீர்குலைத்துவிடுவேன் என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் டாட்டா டெலிகாம் நிறுவனத்துக்கு பல அனுமதிகளை நிறுத்திவைத்ததாகவும் தெரிகிறது.

இப்புகார்கள் குறித்து சன் டி.வி.க்கு தலைமை வகிக்கும் கலாநிதி மாறனிடம் பதில் கோரி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் சார்பில் கேள்விகள் அனுப்பிவைக்கப்பட்டன.

"எங்களிடம் ஏற்கெனவே டி.டி.எச். உரிமம் உள்ளதால், நாங்கள் எதற்காக டாட்டா குழுமத்தை நிர்பந்திக்க வேண்டும்' என கலாநிதி மாறன் பதில் அனுப்பியுள்ளார். டாட்டா குழுமத்துக்கு தயாநிதி மாறன் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் புகார்களை. டாட்டா குழுமம் மறுக்கவில்லை. எனவே இப்புகார்கள் தொடர்பாக இனி பதில் அளிக்க வேண்டியது தயாநிதி மாறன்தான்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் அனுப்பிய கேள்விகள்

டாட்டா குழுமத்துக்கு நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் அனுப்பிய கேள்விப் பட்டியல்

டி.டி.எச். திட்டத்தில் பங்குதாரராக சேர்க்க அனுமதி கோரி, டாட்டா குழுமத்தை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியதாகக் கூறப்படும் புகார் உண்மையா என்பதை உறுதி செய்ய. டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டாவுக்கு நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் அனுப்பியிருந்த கேள்விப் பட்டியல் விவரம்:

1. டி.டி.எச். திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு அனுமதி கோரி ரத்தன் டாட்டாவை கலாநிதி மாறன் நேரடியாகச் சந்தித்தது உண்மையா?

2. ஸ்டார் டி.வி.யின் பீட்டர் முகர்ஜியும் டாட்டா குழுமத்தின் இஷாத் ஹுசைனும் இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் கலாநிதி மாறனைச் சந்தித்து அதிக அளவு பங்குகளை அளிக்க முடியாது எனக் கூறியது உண்மையா? வேண்டுமானால் 20 சதவீதம் அளவுக்கு மட்டுமே பரிசீலிக்கலாம் என டாட்டா குழுமத்தின் சார்பில் கூறப்பட்டதா?

கலாநிதி மாறனின் கோரிக்கையை ரத்தன் டாட்டா ஏற்காதது, தயாநிதி மாறனுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது உண்மையா? அதற்காக டாட்டாவிடம் அதிகார தொனியில் தயாநிதி மாறன் பேசினாரா?

ரத்தன் டாட்டாவிடம் தொலைபேசியில் தயாநிதி மாறன் தொடர்புகொண்டு டி.டி.எச். திட்டத்தில் 33 சதவீத பங்குகளை சன் டி.வி.க்கு அளிக்குமாறு கோரியது உண்மையா?

தனது கோரிக்கையை ஏற்காவிடில் டாட்டா டெலிகாம் வர்த்தகத்தை சீரழித்து விடுவேன் என மிரட்டல் விடுத்தாரா?

டாட்டா டெலிகாம் நிறுவனத்துக்கு வழக்கமாக அளிக்கவேண்டிய அனுமதிகளை தயாநிதி மாறன் நிறுத்திவைத்தாரா?

ரத்தன் டாட்டா, ரூபர்ட் முர்தோச் ஆகியோர் 33 சதவீத பங்குகளை வழங்க ஒப்புக்கொண்டுவிட்டதாக கலாநிதி மாறன் கூறியது உண்மையா? இதை டாட்டா குழுமம் மறுத்துவிட்டது.

ரூபர்ட் முர்தோச்சை மூன்றில் ஒரு பகுதி பங்குகளை வழங்கக் கோரி தயாநிதி மாறன் மிரட்டல் விடுத்தாரா?

இப்பிரச்சினை தொடர்பாக பிரதமரை, ரத்தன் டாட்டா சந்தித்து முறையிட்டது உண்மையா? டாட்டா தொடர்பான பிரச்சினைகளை கவனிக்க செயலர்கள் குழுவை பிரதமர் நியமித்தாரா?

டி.டி.எச். திட்டத்தில் பங்குகள் எதையும் அளிக்க இயலாது என தயாநிதி மாறனுக்கு, டாட்டா கடிதம் அனுப்பியது உண்மையா?

இதுபோன்ற வர்த்தக விவகாரங்களை வெளிப்படையாக விவாதிக்கும் வழக்கம் டாட்டா குழுமத்துக்கு இல்லை எனக் கூறப்படுவது உண்மையா?

இக்கேள்விகள் அனைத்துக்கும் டாட்டா குழுமத்திடமிருந்து தெரிவிக்கப்பட்ட சுருக்கமான பதில், "இக்கேள்விகளில் இடம் பெற்றுள்ள உண்மைகள் அனைத்தையும் நாங்கள் மறுக்கவில்லை' என்பதுதான். எனவே இனி இக்கேள்விகளுக்கான உண்மையைத் தெரிவிக்க வேண்டியது தயாநிதி மாறன்தான்.

New Indian Express link இங்கே

துக்ளக் ஆசிரியர் சோ கருத்து :

"டாடாவையே தயாநிதி மாறன் மிரட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. நாட்டில் யாருமே தொழில் நடத்தக் கூடாது, தங்களைத் தவிர வேறு யாருமே இருக்கக் கூடாது என்று இவர்கள் நினைக்கிறார்கள். அதற்காகத்தான் இவ்வாறு மிரட்டிப் பணிய வைக்க முனைகிறார்கள்.

தயாநிதி மாறன் அமைச்சராக இருந்து கொண்டு பதவியைத் துஷ்பிரயோகம் செய்கிறார் என்று ஏற்கனவே துக்ளக்கில் நான் எழுதியிருந்தேன். இதுதொடர்பாக ஏற்கனவே சில தொழிலதிபர்கள் புகார்கள் கூறியவண்ணம் இருந்தனர். ஆனால் அவர்கள் பகிரங்கமாக வெளியில் சொல்லப் பயப்பட்டார்கள். ஆனால் டாடா இதற்கு எல்லாம் அப்பாற்பட்டவர்.

நாட்டிலேயே கண்ணியமான, மிகவும் நேர்மையான, மிகப் பெரிய வர்த்தகத்தை நடத்தி வருகிறவர்கள் டாடா குழுமத்தினர். அவர்கள் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு எதையும் செய்தார்கள் என்று புகார் கூட வந்ததில்லை.

அப்படிப்பட்ட நிறுவனத்தையே மிரட்டத் தொடங்கியுள்ளார்கள் என்றால் மத்தியில் ஆட்சியில் பங்கு வகிக்கின்ற திமுக எவ்வளவு தூரம் அந்த வாய்ப்பை துஷ்பிரயோகம் செய்து வருகிறது என்பது நிரூபணமாகிறது.

டாடா நிறுவனத்தின் டிடிஎச் திட்டத்தில் 33 சதவீத பங்குகளை அதாவது மூன்றில் ஒரு பங்கை, அதுவும் அடிமாட்டு விலைக்கு தர வேண்டும், நிர்வாக அதிகாரம் தர வேண்டும், முக்கிய முடிவுகளை எடுக்கிற அதிகாரங்களும் தர வேண்டும் என்று தயாநிதி மாறனும், கலாநிதி மாறனும் கேட்டுள்ளனர். ஆனால் இதை ஏற்க டாடா நிறுவனம் மறுத்து விட்டது.

இதையடுத்து தயாநிதி மாறன், டாடாவை அழைத்து உங்களது பிசினஸையே தொலைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அப்புறமும், அவர் மசியவில்லை. இதனால் டாடா நிறுவனத்தின் பங்குதாரரான முர்டோச்சை அழைத்து பேசியுள்ளார் தயாநிதி மாறன். ஆனால் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. மறுத்து விட்டார்.

முர்டோச் உலகின் முன்னோடி தொழிலதிபர்களில் ஒருவர், டிவி, பத்திரிக்கை என பல்வேறு தொழில்களை நடத்துபவர். எத்தனையோ நாட்டு அமைச்சர்களை பார்த்தவர். ஆனால் அந்த உலக அமைச்சர்களுக்கெல்லாம் பெரிய அமைச்சராக நடந்து கொண்டுள்ளார் தயாநிதி மாறன்.

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கலைஞர் குடும்பத்தினர் வேறு என்னதான் செய்ய மாட்டார்கள்?. இங்கே ஆட்சிப் பொறுப்பு இல்லை என்பதுதான் அவர்களுக்கு பெரிய தடைக்கல்லாக உள்ளது. வேறு யாரும் பிசினஸ் செய்யக் கூடாது, எதைச் செய்தாலும் அதில் 50 சதவீதம் ஷேர் கொடு என்று மிரட்டலாம்.

இப்படித்தான் கேபிள் டிவிக்காரர்களை மிரட்டியே சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை பெரிதாக்கினார்கள். பின்னர் ராஜ் டிவி மீதும் புகார் வந்தது.

அரசியல்வாதிகள், பதவிக்கு வந்த பின்னர் அதிகார துஷ்பிரயோகம் செய்வார்கள். ஆனால் தங்களுக்காக மட்டுமல்லாது, மற்றவர்கள் வாழக் கூடாது, நாங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும். பிசினஸ் என்றால் அது எங்களது குடும்பம் மட்டும்தான் என்று தயாநிதி மாறன் புறப்பட்டிருக்கிறார். இது மிகவும் விபரீதமான ஒரு விஷயம்.

பொருளாதார தாராளமயமாக்கல் என்கிறோம், தனியார் முதலீடுகளுக்காக மெனக்கெடுகிறது மத்திய அரசு. இதுகுறித்து மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் தினம் தினம் ஏதாவது பேசி வருகிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் தொலைத்து விடுவேன் என்று தயாநிதி மாறன் போய்க் கொண்டிருக்கிறார்.

இவர்கள் தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் விபரீதத்திற்குத் தடையே இல்லாமல் போய் விடும்.

வருகிற தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட்டால், மத்தியில் இவர்களது செல்வாக்கு மங்கி விடும். தயாநிதி மாறன் டாடாவை மிரட்டும் அளவுக்கு வர முடியாது. சோனியா காந்திக்கு, தமிழக முதல்வர் மீது உள்ள கோபத்தின் காரணமாகவே, திமுகவுக்கு பெரிய செல்வாக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடைய செல்வாக்கு பெயரளவில்தான், ஓட்டளவில் இல்லை, தேர்தலில் மக்கள் ஆதரவு கிட்டவில்லை என்று மக்கள் காட்டி விட்டால், மத்தியிலும் இவர்களது செல்வாக்கு தானாகவே மங்கி விடும். அது நாட்டுக்கு நல்லது, இல்லையென்றால் யாரையும் வளர விட மாட்டார்கள், தமிழகத்தையும் மிரட்டுவார்கள்"

வைகோ கிளப்பிய புயல் :

டாடா நிறுவனமும், ஸ்டார் டிவி நிறுவனங்களின் அதிபருமான பெரும் தொழிலதிபர் ரூபர்ட் முர்டோச்சும் இணைந்து டிடிஎச் சேவையை இந்தியாவில் தர முடிவு செய்தனர். எந்தவித கேபிள் இணைப்பும் இன்றி சாட்டிலைட் டிவிகளை பார்க்கும் வகையிலான திட்டம் இது.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டில் இந்த டிடிஎச் திட்டத்தை செயல்படுத்த டாடாவும், ஸ்டாரும் முடிவு செய்திருந்தன. இதில் டாடா நிறுவனத்தின் பங்கு 80 சதவீதம். ரூபர்ட்டின் பங்கு 20 சதவீதமாகும்.

இந்த இடத்தில்தான் சன் டிவி நிறுவனம் குறுக்கிட்டுள்ளது. ஏற்கனவே டிடிஎச் திட்டத்தை அமல்படுத்த உரிமம் பெற்று வைத்துள்ள சன் டிவி நிறுவனம், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஒரு சிக்கலை எதிர்கொண்டது.

அதாவது, டிவி நிறுவனத்தை நடத்தி வருவதால், சன் டிவி டிடிஎச் சேவையை நடத்த வேண்டும் என்றால் அத்திட்டத்தில் 20 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். மீதமுள்ள 80 சதவீத பங்குகளுக்கு வெளியாட்களைத் தேட வேண்டும்.

மேலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களையும் (குறைந்தது ரூ. 3000 கோடி என்கிறார்கள்) முதலீடாக போட வேண்டும். இதே பிரச்சினை காரணமாகத்தான் ஸ்டார் டிவி நிறுவனம் 20 சதவீத பங்குகளை மட்டும் வைத்துக் கொண்டு மீதமள்ள 80 சதவீதத்திற்காக இத்திட்டத்தில் டாடா நிறுவனத்தையும் சேர்த்துக் கொண்டது.

எதிர்காலத்தில் டிடிஎச் சேவைதான் நிலைக்கப் போகிறது என்பதால் தனக்கென தனியாக ஒரு டிடிஎச் சேவையை வைத்துக் கொண்டாக வேண்டும் என்று நினைத்த சன் டிவி, அதேசமயம், பல ஆயிரம் கோடியை முடக்க மனம் இல்லாமல், டாடாவின் திட்டத்தில் புகுந்து அதன் மூலம் பலன் பெற நினைத்தது.

இதையடுத்து முதலில் கலாநிதி மாறன் களம் இறங்கினார். டாடா நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட அவர் சன் டிவியையும் இதில் ஒரு பங்குதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும், 33 சதவீத பங்குகளை தங்களுக்குத் தர வேண்டும், நிர்வாக உரிமையும் தர வேண்டும் மற்றும் இன்ன பிற சலுகைகளையும் தர வேண்டும் என்று அவர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கலாநிதி மாறன், நேரடியாக டாடாவிடம் தொலைபேசியில் இதுதொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை உடனடியாக நிராகரித்து விட்டார் டாடா. எங்களுக்கு பங்குதாரர் யாரும் தேவையில்லை. இந்தத் திட்டம் முடிவாகி விட்டது. இதில் சன் டிவியை சேர்க்கவே முடியாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இதையடுத்து கலாநிதியின் தம்பியும், டிடிஎச் சேவை தொடர்பான அனுமதியைத் தரும் முக்கியத் துறையைக் கையில் வைத்துள்ளவருமான தயாநிதி மாறன் நேரடியாக களத்தில் இறங்கினார்.

அவரும் டாடாவுடன் பேசியுள்ளார். நெருக்குதல் தரும் வகையில் பேசியதால் அதிர்ந்து போயுள்ளார் டாடா.

இதேபோல ரூபர்ட் முர்டோச்சையும் தொடர்பு கொண்ட கலாநிதி இத்திட்டத்தில் 33 சதவீத பங்குகளுடன் பங்குதாரராக சன் டிவியையும் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால் ரூபர்ட் இதை மறுத்து விட்டார்.

இதைத் தொடர்ந்து, எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், உங்களது டெலிகாம் பிசினஸை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவோம் என்று தயாநிதி மாறன் மிரட்டினார்.

மேலும் டாடா டெலிகாம் நிறுவனம் தொடர்பான பல்வேறு கோப்புகளை தயாநிதி நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தொலைத்தொடர்புத் துறையில் தற்போது நிலவும் கடும் போட்டியான சூழலில் அமைச்சகத்தின் ஒப்புதல்கள், அனுமதிகள் உடனடியாக கிடைக்காவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும்.

இதை டாடா உணர்ந்திருந்தாலும் கூட, தயாநதி மாறனின் நெருக்கடிக்குப் பணிய மறுத்து விட்டார். என்ன வந்தாலும் சமாளிக்க அவர் தயாராகி விட்டார்.

இதுதான் வைகோ தெரிவித்த புகார்.

இந்தப் புகார் குறித்து சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு ஆங்கில நாளிதழ் டாடா குழுமத்திற்கு நேரடியாகவே கேள்விப் பட்டியல் ஒன்றை அனுப்பி வைத்தது.

அதில் தயாநிதி மாறன் மிரட்டல் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

அதற்கு டாடா நிறுவன செய்தித் தொடர்பாளர் உடனடியாக பதில் அனுப்பியுள்ளார். அதில், உங்களது கேள்விகளுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோ கருத்து மற்றும் வைகோ கிளப்பிய புயல் செய்தி உதவி: தட்ஸ் தமிழ்

ஒரு கோடி நஷ்ட ஈடு தினமணிக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்: பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

ஜெ அறிக்கை:

வீடுகளுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் டிடிஎச் திட்டம் தொடர்பாக டாடா தொழில் குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியிருப்பதால் அவரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பிரதமரை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாநிதி மாறன் தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி டாடா குழுமத்தை மிரட்டியிருப்பது பத்திரிகை புலனாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தனது பதவி மற்றும் கூட்டணி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தொழிலதிபர்களை மிரட்டி வரும் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியில்லாதவர் என ஜெ. தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சரத்குமார் பேட்டி

`டாட்டா' நிறுவனத்திடம் கலாநிதிமாறன் வியாபார ரீதியாக பேசியது என்றால் முறையாகும். அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மத் திய மந்திரி தயாநிதிமாறன் தங்களுக்கு அதிகபட்சமான `ஷேர்' வேண்டும் என கேட்டு மிரட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை `டாட்டா' மறுக்கவில்லை.

எனவே பிரதமர் மன்மோகன்சிங் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். தயாநிதிமாறன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இருந்தால் அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

ரூ.2 லட்சம் கோடிக்கு அதிபதியாக இருக்கும் `டாட்டா'வையே தயாநிதி மாறன் மிரட்டுகிறார் என்றால் என்ன சொல்ல? தயாநிதி மாறனிடம் ஒரு தரம் கிடையாது. அரசியல் நாகரீகம் கிடையாது. அவருடைய சர்வாதிகார போக்கு மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டது.

சுப்பிரமணிய சுவாமி

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சுவாமி பேசுகையில், உலகப் புகழ் பெற்ற டாடா நிறுவனத்தை மிரட்டி பணிய வைக்க முயற்சித்த தயாநிதி மாறன், தனது அமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல, தண்டனைக்குரிய குற்றம்.

தயாநிதி மாறனின் நடவடிக்கை மிகவும் கேவலமானது. அவரது மிரட்டல் தொடர்பாக டாடா, பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். எனவே தயாநிதி மாறன் அமைச்சர் பதவியில் தொடரக் கூடாது என்று கோரி நானும் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

சன் டிவி நிறுவனத்தின் நிதி நிலை, எப்படி அது இவ்வளவு பெரிய நிறுவனமாக மாறியது, பயங்கரவாத அமைப்பு ஏதாவதுடன் அதற்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தனியாக விசாரிக்க வேண்டும்.

தவிர, தம்பி, அண்ணா இருவரும் சேர்ந்து பெரிய நிறுவனத்தை கேவலமாக பேசி மிரட்டியிருப்பது குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்

மாறன் மறுப்பு:

தோல்வி பயம் அதிகமாகி, ஜெயலலிதா கூட்டணி இப்போது திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடத் துவங்கியுள்ளது.

டிடிஎச் குறித்து, நான் டாடா நிறுவனத்தை மிரட்டியதாக வந்த செய்தி அப்பட்டமான பொய் என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எந்தப் புகாரும் கூறாத நிலையில் "தினமணி', "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', போன்ற ஏடுகள் வலிந்து வெளியிட்டுள்ள செய்தி, உள்நோக்கத்தோடு இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என்பதை தெளிவாக்குகின்றன. இப்படி வெளியிடப்பட்ட செய்திக்காக அந்த ஏடுகளுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் என் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த ஏடுகள் கூட தெளிவாகக் குற்றம் சாட்டிட பயந்து, சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியோடு யாருடைய நிர்ப்பந்தத்துக்கோ பயந்து செய்தியினை வெளியிட்டிருப்பது அந்தச் செய்தியினை ஆழ்ந்து படிப்பவர்களுக்கு தெளிவாகத் தெரியும்.

ஆதாரமற்ற இந்தச் செய்தியினைப் படித்துக் கொண்டு ஜெயலலிதா கரையேற நினைப்பதையே அவரது அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

டான்சி வழக்கின்போது தான் போட்ட கையெழுத்தையே தனது கையெழுத்து இல்லை என்று நீதிமன்றத்திலே பொய் சொல்லி, பின்னர் உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா மனசாட்சிபடி நடக்கவில்லை என்று கண்டித்த போதும், சிறுசேரி நிலத்தை அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆதாயத்துக்காக விற்றுவிட்டு, விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும், அதைத் திரும்ப வாங்கிக் கொண்டதாக நாடகம் நடத்திய நிலையிலும் தனது பதவியை ராஜிநாமா செய்ய முன்வராத ஜெயலலிதா, இப்போது இல்லாத ஒன்றை சிருஷ்டித்து அதற்காக என்னை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கேட்பது வேடிக்கை.

"தினமணி', "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', ஏடுகளில் வெளியிடப்பட்ட செய்திக்குப் பின்னால் உள்ள சூத்ரதாரிகளை நான் அறிவேன்.

டிடிஎச் உரிமம் அளிக்கும் துறை என்னைச் சார்ந்ததில்லை. இச்சூழலில் செய்திகள் வெளியிட்ட ஏடுகள் மீது வழக்குத் தொடர இருக்கும் நிலையில் வழக்கும், வழக்கு முடிவும் உண்மைகளை நாட்டுக்கு உணர்த்திடும். நம் கவனத்தைத் தேர்தல் பணிகளில் இருந்து திசை திருப்பும் இந்த முயற்சிக்கு பலியாகாது நாம் நமது பணியினைச் தொடருவோம்

தயாநிதி மாறன் வழக்கு !

தன்னைப்பற்றிய அவதூறு செய்திகளை வெளியிட தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளிதழ்களுக்கு நிரந்தரத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக தயாநிதி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,

தேர்தல் பிரசாரத்தின்போது னனக்குக் கூடும் கூட்டத்தை ஜீரணிக்க முடியாமல் அதிமுக மற்றும் மதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் இந்த அவதூறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியில் சற்றும் உண்மை இல்லை.

பொய்யான ஒரு செய்தியை திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் அது உண்மையானதாகி விட முடியாது. என் மீது சேற்றை வாரி இறைக்க உதவும் கருவிதான் இது. இந்த செய்தியால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்றஅவதூறான செய்திகளை வெளியிட இரு நாளிதழ்களுக்கும் நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். மேலும் இரு நாளிதழ்களும் தலா ரூ. 15 லட்சம் நஷ்ட ஈடு தர உத்தரவிட வேண்டும்.

ஜெயா டிவி தொடர்ந்து பொய்யான செய்தியை ஒளிபரப்பி வருவதால் அந்த டிவி நிறுவனமும் என்னைப் பற்றிய அவதூறான செய்திகளை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். மேலும் ரூ. 1 லட்சம் நஷ்ட ஈடாக அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

38 Comments:

Anonymous said...

This is a conspiracy by papaans to defame the honest and upright minster like Maran.

How can generational billionaires like Maran even think of threatening indecent and third rate businesman like Tata who have cheated and grown rich overnite

Ratan Tata is jealous that Maran is now worth 9000 CRORES and spreading all these stories

Also Indian express and Dinanmani have been paid 21 / 41 crores by Jayalalitha to publish this story

Indian Express is likely to purchased by Jaya publication agter end of this elections

Anonymous said...

//How can generational billionaires like Maran even think of threatening indecent and third rate businesman like Tata who have cheated and grown rich overnite//

:)

G.Ragavan said...

தயாநிதி மாறன் இதைச் செய்திருக்கவே மாட்டார் என்று சொல்வதற்கில்லை. அவரும் அரசியல்வாதிதானே. அதிமுகவினர் தவறு செய்வார்கள் என்பது எல்லாரும் அறிந்தது. திமுகவினர் தவறே செய்ய மாட்டார்கள் என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது. தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருந்தால்தான் வியப்பு. அரசியல்ல இதெல்லாம் சகஜமுங்க.

Partha (பார்த்தா) said...

If I remember correctly, the comment from Tata's as per New Indian Express website was, "We do not want to make any comments regarding this" or "We have no comments". That’s it - a single statement, not as mentioned in the article like, "இக்கேள்விகளில் இடம் பெற்றுள்ள உண்மைகள் அனைத்தையும் நாங்கள் மறுக்கவில்லை". I presume that it’s the Tamil paper transaction and you (idli-vadai) have nothing to do with it. That’s a twisted way to translate a simple statement. It should be, "நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை"

When you accuse someone of misdeeds and if the accusation includes incorrect information, then though the person charged has committed crime, the accusation looses the ground. This is a missed opportunity to put forward a genuine argument against the Maran brothers.

செந்தழல் ரவி said...

//How can generational billionaires like Maran even think of threatening indecent and third rate businesman like Tata who have cheated and grown rich overnite///

இன்னக்கு அதிகமா சிரிக்க வச்சது உங்க பின்னூட்டம்..மாறன் எப்படிய்யா பில்லியனர் ஆனாரு..அவன் அப்பன் கோடீஸ்வரனா இல்ல அவங்க தாத்தா கோடீஸ்வரனா ? 40 ரூபா சம்பளத்துக்கு வேல செஞ்சவர் தான மு.க.....

//Ratan Tata is jealous that Maran is now worth 9000 CRORES and spreading all these stories//

வெள்ளக்காரனயே எதுத்து பிஸினஸ் பண்னவன் ரத்தன் டாடா அவங்க அப்பன்...அவங்க மாறன் குடும்பத்த பாத்து பொறாம படுறானா ??? ஹா ஹா ஹா...அவங்க சொத்த கணக்கு பண்னவே அவங்களுக்கு நேரம் இருக்காது...கேக்கறவன் கேனயா இருந்தா.......


//Also Indian express and Dinanmani have been paid 21 / 41 crores by Jayalalitha to publish this story//

கேக்கறவன் கேனயா இருந்தா.......


Indian Express is likely to purchased by Jaya publication agter end of this elections

கேக்கறவன் கேனயா இருந்தா.......

எங்க ஊர்ல இந்த பழமொழியோட ending வேற மாதிரி இருக்கும்...சொல்லவா ???

ரவி...

APPAVI_THAMILAN said...

Ravi,

I think Anonymous was being sarcastic.

Sivabalan said...

If this allegation proves to be true, then our democratic system dips to a new low.

Anonymous said...

//எங்க ஊர்ல இந்த பழமொழியோட ending வேற மாதிரி இருக்கும்...சொல்லவா ???//

ஒண்ணு சொல்லி தொலைக்கணும். இல்லாட்டி ஆரம்பிக்கவே கூடாது. நாங்க கே.ஆர். விஜயா பத்தியெல்லாம் இங்கே நெனச்சு பாத்து இதா இருக்குமோ அதா இருக்குமோன்னு மண்டைய ஒடச்சுக்கிறோமில்ல?

Idly Vadai said...

Update: இந்த செய்தி பற்றி சோ கருத்து மற்றும் வைகோ கிளப்பிய புயல் Update செய்யப்பட்டிருக்கிறது.

அப்பாவித்தமிழன் said...

யாருங்க இது, எனக்கு போட்டியா இங்க்லீஷ்ல வர APPAAVI_THAMILAN ?

எத்தனை அப்பாவிய்யா தமிழ் நாட்டில :-)

Sivaprakasam said...

ரவி சொல்றார் "40 ரூபா சம்பளத்துக்கு வேல செஞ்சவர் தான மு.க....."

சபாஷ் ரவி. இதையேதான் இப்படியும் சொல்லலாம் - தன்னுடடை தொழில் திறமையால் ரூ.40 - 4000 கோடியானது

Anonymous said...

Dear Ildi Vadai

Can you please update the summary part of Kumudam survey from last two weeks Kumudam. Kumudam online was not updated for the last 2 weeks.

Thanks for your great service

Yours
Bajji Bonda

திருவாளர் பொதுஜனம் said...

"திமுகவில் குடும்ப அரசியல்தான் நடக்கிறது!" - அதிமுகவில் இணைந்த தயாநிதி மாறன் பேச்சு.

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் திமுகவிலிருந்து விலகி இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பிறகு நிருபர்களை சந்தித்த அவர் திமுகவில் குடும்ப ஆதாயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கபட்டு வருவதாக கூறினார். "கருணாநிதி தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கே பதவியும் செல்வாக்கும் இருக்க வேண்டும் என்று செயல்படுகிறார். ஆனால் அவர் என்னை போன்று கட்சிக்கு உழைத்தவர்களை கண்டுகொள்வதில்லை. தக்க சமயத்தில் நண்பர் நடராசர் எனக்கு திமுகவில் இழைக்கபட்ட கொடுமைகளை தெளிவு படுத்தியதால், திமுகவிற்கும், சன் டிவிக்கும் பாடம் புகட்ட அதிமுகவில் இனைந்திருக்கிறேன். என் முடிவை வரவேற்று, புரட்சி தலைவி அவர்கள் 'மிடாஸ்' மதுபான தொழிற்சாலையில் எனக்கு ஒரு கணிசமான பங்கு தருவதாக கூறி கவுரவப்படுத்தியுள்ளார். ஜெயா டிவியில் தினமும் ஒரு மணி நேரமாவது என் முகத்தை காட்ட ஆவன செய்யப்படும் என்று அருமைச் சகோதரர் டிடிவி தினகரன் வாக்குறுதி அளித்துள்ளார். அதிமுகவில் சேர்ந்த பிறகுதான் நான் மன நிம்மதியுடன் இருக்கிறேன்" என்று மேலும் கூறினார். தேர்தலுக்கு சிறிதும் சம்மந்தம் இல்லையென்றாலும், தெரியாவிட்டால் பலபேர் மண்டை வெடித்துவிடும் என்பதால் இனி அவரை சன் டிவியில் இருட்டடிப்பு செய்வார்களா என்ற முக்கிய கேள்விக்கு தான் கலராக இருப்பதால் அவ்வாறு செய்ய இயலாது என்றும், அவ்வாறு செய்தால் தான் பேசவிருக்கும் அதிமுக தேர்தல் பொது கூட்டங்களில் இதற்கு முழு முக்கியதுவம் கொடுக்க போவதாக அவர் கூறினார்.

"ஏய் தயாநிதி, நீ ஆம்பிள்.." என்று தீவிர பிரச்சாரத்தில் இருந்த வைகோவிற்கு அதிமுகவில் தயாநிதி மாறன் இணைந்த செய்தி துண்டுச்சிட்டின் மூலமாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் பேசியதாவது: "தம்பி தயாநிதி மாறன் திமுகவில் இருந்தபோதும் அவர் மீது எனக்கு தனி அன்பு உண்டு. அந்த அன்பின் வெளிப்பாடாகத்தான் நான் அவரை 'ஏய்' என்றும், அவர் என்னை 'நீ','வா','போ' என்றும் பேசினோம். தயாநிதி மாறன் அதிமுகவில் சேர்ந்துவிட்டதால் இனி கலைஞரால் அம்மாவின் ஆட்சியையல்ல அவர்கள் வீட்டு டிவியில் சேனலைக்கூட மாற்ற முடியாது". தயாநிதி மாறன் டாட்டாவை மிரட்டிய விவகாரம் பற்றி நிருபர்கள் கேட்டதற்க்கு, இதை எழுப்பிய நாங்களே மறந்துவிட்டோம் நீங்கள் ஏன் இன்னும் கவலைப்படுகிறீர்கள் என்று பதிலளித்தார்.

சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களை சந்தித்த போது "தயாநிதி மாறன், நடிகர் சரத்குமார் கூறியது போல திமுகவை தயாநிதி முன்னேற்ற கழகமாக(த.மு.க) பெயர் மாற்றும்படி நிர்பந்தம் செய்துவந்தார். தேர்தல் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் இதை செய்தால் வீன் குழப்பம் நேரிடும் என்பதால் அதை மறுத்துவிட்டேன். இதை பெரிதாக்கி உளவுத்துறையை ஏவி தயாநிதி மாறனை அதிமுகவிற்க்கு இழுத்துவிட்டார்கள். பல கோடிகள் கைமாற்றபட்டதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. யார் மூலமாக யாருக்கு என்று என்னை கேட்காதிர்கள்" என்று கூறினார். தயாநிதி மாறன் டாட்டாவை மிரட்டினாரா என்ற கேள்விக்கு "அவர் டாட்டாவை மிரட்டினாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது ஆனால் அவர் தாத்தாவையே மிரட்டினார்" என்று பதிலளித்தார். "பேராண்டி பேர்-ஆண்டியான கதை" என்ற தலைப்பில் கலைஞரின் கவிதை இன்றைய முரசொலியில் வெளியிடப்பட்டுள்ளது.
--

போகிற போக்கை பார்த்தால் மேற்கண்டவாறு நடந்தாலும் வியப்பில்லை!!

-

Anonymous said...

"ஆதாரமில்லாமல் அவதூறு செய்தி வெளியிடுவதா?
ரூ.1 கோடி நஷ்ட ஈடு - தினமணிக்கு நோட்டிஸ்"

http://www.dinakaran.com/epaper/2006/Apr/27/16_2.jpg

Anonymous said...

Idly vadai, Jaya tv broadcast of Cho's speech was so shocking.
nenju porukkidhillaye pada vendiyathu thaan.

Karthikeyan Muthurajan said...

Cho, is not a neutral guy now-a-days..

வழிப்போக்கர் said...

அடப் பாவிகளா,
ஏன்டா, ஜெயலலிதா டான்சி நிலத்த வாங்கி சுப்ரீம் கோர்ட்ல நிரூபனமாகி, ஒன்னும் பன்னாம மனசாட்சிய கேக்க சொல்லிட்டீங்க. அத பத்தி சோவுக்கு கவலயே இல்ல. ஆனா, இவனுங்கலே கற்பனையா ஒருகேள்வியகேட்டு, நோ கமெண்ட்ஸ் சொன்னா, அதுக்கு ஒரு பெரிய கட்டுரை...

இதுக்குதாண்டா, உங்களுக்கு ஆப்பு அடிக்கறது. இருங்க இருங்க, இந்தமுறை "கோயில் குருக்கள்" பாப்பான்களுக்கு ஆப்பு இருக்குடி...

Anonymous said...

ஹா ஹா................. திருவாளர் பொதுஜனம்....சூப்பரப்பு

selvan said...

இதுவரை தயாநிதி மாறன் கொண்டு வந்த திட்டத்தில் எத்தனை பங்கு அவர் குடும்பத்திர்க்கு கிடைதிருக்கு என்பதை விளக்க வேண்டும். தமிழ் நாட்டில் எவ்வளவு பங்கு எதிர் பார்க்கிறார். இனி தமிழ் நாடு " தயா நாடு" என்று பெயர் மாற்றபடுமா.
திமுக வை அழிக்க வந்துவிட்டார் இந்த தயாநிதி. இத்தனை நாள் ஸ்டாலின் பட்ட கஷ்டம் வீணாக போய்விடும்.

selvan said...

How can generational billionaires like Maran even think of threatening indecent and third rate businesman like Tata who have cheated and grown rich overnite

I think Mr.Anonymous would have thought maran brothers are son of Tata and Rathan is son of Murasoli Maran.Please refresh your brain. Tata group has presented 1000 crores to public welfare on their founders 100th birth anniversary. Maran family cannot offer even Rs1000 for public welfare.Tata never do any business by threatening their competitor. But Maran brothers success in business is by threatening their competitors. You should remember that this type of business will never last long. If maran brothers are not correcting themselves, they will be vanished soon from the market.

Bharaniru_balraj said...

இந்த விசயத்தில் குழப்பமே மிஞ்சுகிறது. இதற்கு முடிவு தாயநிதியோ அல்லது டாடா நிறுவனமோ வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டும். தயாநிதி என்பதால் சோவும், வைகோவும் அதிகமாக்ப் பேசுகிறார்கள். அ தி மு க போட்ட போடில் கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டத்தில் ரஷ்யா வழக்கு தொடர்ந்ததே. அப்போது சோ என்ன செய்தார். அதற்காக தயாநிதி செய்திருப்பார் என்று நம்பாமலிருக்க முடியவுமில்லை, ந்ம்பித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயமுமில்லை.( சோ பற்றி எழுதினாலே இப்படி குழப்பமாவே பதில் வருது)

Idly Vadai said...

Update: இன்று இந்த செய்தி சம்பந்தமாக வந்த இரண்டு கார்ட்டூன்கள்.

நாகு said...

''சந்தேகங்களையும், ஐயப்பாடுகளையும் எழுப்பிவிட்டு, அதற்கு சம்பந்தப்பட்டவரே பதில் சொல்லவேண்டும் என்று கூறுவதை ஏற்கமுடியாது'' என்று தயாநிதிமாறனின் வழக்கறிஞர் நேட்டீஸ் அனுப்பியுள்ளதாக இன்றைய (27.04.2006) தினகரன் நாளிதழில் வெளிவந்துள்ளது.

இந்தியசட்டப்படி, ஒருநபரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரிக்கவேண்டிவந்தாலோ, அல்லது அவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யநேர்ந்தாலோ, சம்மந்தப்பட்டவரோ அல்லது அவரது வகையறாக்களோ தான், அவரை குற்றமற்றவராக நிரூபிக்க வேண்டி உள்ளதாக நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

ஆக, தயாநிதிமாறன் இந்த விசயத்தில் வெளிப்படையாக நடந்து கொள்ளலாமே.....

நேர்மையான தொழிலதிபர்களை நாம் உள்ளங்கையில் வைத்துத் தாங்கவேண்டும், என்னைப் பொறுத்தவரை அவர்களை நாடு என்ற உடம்பின் நரம்பு மண்டலாகத் தான் பார்க்கின்றேன். இந்த சம்பவம் உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் பொய்யாக இருக்கவே விரும்புகின்றேன்.

Idly Vadai said...

Update: 27/4/06 - தயாநிதி மாறனை பதவிநீக்கம் செய்ய ஜெ. வலியுறுத்தல்

Idly Vadai said...

Update 27/4/06 - `டாட்டா'வை மிரட்டிய விவகாரம்: தயாநிதிமாறனிடம் பிரதமர் விசாரணை நடத்த வேண்டும்- நடிகர் சரத்குமார் பேட்டி

நாகு said...

உடனுக்குடன் கடைசிச்செய்தி வழங்கும், உங்கள் பாங்கு பாராட்டுதலுக்குரியது.

Anonymous said...

நண்பர்களே,

செய்திகளை சுட சுட தரும் "இட்லி வடை"யாருக்கு ஒரு "ஓ" போடுங்க.

Anonymous said...

Tatas have every right to refuse commenting on this.Because if they had denied NIE would write that Maran had gagged the Tatas. Now that Maran has challenged it legally let us see what evidebce NIE and othrers have.Unless proved guilty one is presumed innocent- this is the law. If NIE or Vaiko has any evidence that Tatas were threatened let them prove it.

Idly Vadai said...

Update: 27/4/06
சு.சுவாமி - அறிக்கை
தயாநிதி மாறன் - மறுப்பு

Sivabalan said...

People think that TATA is pure & Clean Company.

Here, some of the facts. (This is not intended to support Maran. If Maran misuses his power then he should be punished)

Facts:

1. TCS - TCS collected tax refunds owed to its non-US citizen workers. A TCS employee sues for this.
http://ia.rediff.com/money/2006/feb/16tcs.htm?q=bp&file=.htm


2. VSNL - TATA - Corruption issue - propriety of VSNL (Government Property) Rs. 1,200 crores (company's reserves) diverted to an ailing group company, Tata Teleservices.

http://www.hinduonnet.com/2002/05/30/stories/2002053001971800.htm

3. TATA Voltas - HVAC system in larger buildings - Corrupted, Poor Service, Improper Billing. (So they have lost credibility and the competitors are in Top now)

4. TATA Finance - Closed in between for poor service & Corruption.

Many more.. I do find time to give a list.

This comment is to explain the other side of the coin.

Thanks IDLY VADAI for your good work.

Krishna said...

என்னங்க இட்லிவடயாரே, தயாநிதியோட அறிக்கை தினமணியில வர்றதுக்கு முன்னாடி, உங்கள் பதிவுல வர வேண்டாமா? தலைவர்களெல்லாம், அவங்க பண்ணப் போறத, பேசப்போறத முதல்ல உங்க கிட்ட சொல்லிட்டுதான் அப்புறம் வெளிய சொல்றாங்கன்னு நெனைச்சிட்டிருக்கோம்....

இத அடிச்சிட்டு நிமிர்ந்து பார்த்தா, பதிவ புதிப்பிச்சிட்டிருக்கீங்க...அசத்துது உங்க அசாத்திய வேகம். (என்ன காரணத்தாலோ இந்த பின்னூட்டம் இணைக்கப் படவில்லை. ஆதலால் மீண்டும் ஒரு முறை பதிகிறேன்)

Anonymous said...

Although Tatas enjoy a clean image as pointed out not all Tata companies are example of honesty and integrity.Tata Finance was
an example.Not all ventures of Tatas succeeded and in some business segments (e.g. soaps)
they failed.The privatisation
of VSNL and subsequent diversion of funds by Tatas was controversial.

செந்தழல் ரவி said...

சிவபாலன் , மற்றும் அனானி...யாராவது எதாவது சொல்லிடக்கூடாதே...உடனே அவன் மட்டும் ஒழுங்கா அப்படின்னு சேட்றை வாறி இறைக்க வேண்டியது...

சும்மா இருக்க டாட்டா எதுக்கு இந்த செய்தியை விடுகிறாங்க...இவன் வண்டவாளம் தண்டவாளம் ஏறட்டும் அப்படின்னு தான ?

நெருப்பு இல்லாமல் புகையுமா ??

//TATA Finance - Closed for Corruption.// அப்படீன்னு சிவபாலன் எழுதி இருந்தத படிச்சேன், சிரிச்சேன்...

அது தான் சார் ப்ரச்சனையே ஹா ஹா ஹா....

இது எப்படி இருக்கு அப்படின்னா, உங்க வீட்டு புள்ள அடுத்த வீட்டு கண்னாடிய உடைச்சிட்டான்னா, உடனே, அவன் மட்டும் என்ன ஒழுங்கா, யோக்கியமா அப்படின்னு சின்னபுள்ள தனமா ஆரம்பிப்பீங்க இல்ல...அது மாதிரி இருக்கு...

Anonymous said...

HI.
could u please stop publishuing blogs with the comments tht describe the caste(like paapaans, gurukal and all...).
That shows the enemity towards a single caste, that the MK &co, brainwashed their minds.
Even I know how to defame the non-paapans. but then that will not be good. please stop all those nonsenses. I could have given with my own identity. even at the computer age, they r tellign paapans and all.. it will not take much time to tell "SOODRANS" and all. but we dont want to take this.
Please

Gobinath said...

As far as i read the complaint from Tata to PM is some thing with TRAI, not with maram(I am not a DMK person).

If this issue is true y the medias like NDTV, CNN-IBN , Aaj Tak, Headlines Today are keeping quite.

Dont say that Sun T.V and maran have stopped them from telecasting this issue.

I dont know how many peoples watch NTDV and the other above said channels. They are not releateed to any party as far as i know . They try to get maximum truth to the people of india. If this complaint is going to be true, y there is no information about this.

AIADMK aliance has lost hope in wining the election because of the DMK's Mainfesto(I dont agree what ever they say in that. all free stuffs). Just because of the they are trying to divert the peoples consentration.

Is aiadmk a pure party. they have not done any thing. As far as i feel, maran is still good at his work. Developing the country telecommunication. The central govt. is still good at there stand and doing good.

My question,
1. Who gave this information to vaiko? did tata gave this info to vaiko, rather than giving it to Manmohan singh.
2. JJ is asking the PM to dismiss mr.maran!!! So how many time jj should have been dismissed from power.
3. Why vaiko did not talk any thing about this when he is with dmk aliance? does this issue happened last week.
4. Other important thing, they blame sun tv not allowing peoples to see other channels. Does sun tv network have remotes for all the peoples tv.

I totally dont belive this cheap political talks. If vaiko has a proof, he should have given it to CBI and manmohan singh for taking action. Y he did not do that.

Any replies

Idly Vadai said...

Update 28/4/06 - தயாநிதி மாறன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மற்றும் மேலும் ஒரு கார்ட்டூன் :-)

Gobinath said...

//இது எப்படி இருக்கு அப்படின்னா, உங்க வீட்டு புள்ள அடுத்த வீட்டு கண்னாடிய உடைச்சிட்டான்னா, உடனே, அவன் மட்டும் என்ன ஒழுங்கா, யோக்கியமா அப்படின்னு சின்னபுள்ள தனமா ஆரம்பிப்பீங்க இல்ல...அது மாதிரி இருக்கு... //

So you mean to say that they should not talk about TATA Group

திருவாளர் பொதுஜனம் said...

"நாட்டிலேயே கண்ணியமான, மிகவும் நேர்மையான, மிகப் பெரிய" வர்த்தகத்தை நடத்தி வரும் டாட்டா போன்ற மரியாதைக்குரிய தொழிலதிபர்களை இப்படி நடத்துவதால் செல்வி ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டுள்ள மனவேதனையை தயாநிதி மாறன் உணரவேண்டும். வெறும் 60 கோடி மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளை மட்டுமே "செயல்படாத பிரதமர்"(Vajpayee), "சோனியாவின் கைப்பாவை" (Manmohan Singh), "Suffering from Selective Amnesia" (Advani), fraud (சந்திரபாபு நாயுடு).. என்று கேவலப்டுத்தலாம்.