இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்க பிரதமர் தயாரா?'' - எல்.கே.அத்வானி ( அதை சாப்பிட மக்கள் தயாரா என்று யாருமே கேட்க மாட்டீர்களா ? )
சாலை, குடிநீர், மருத்துவ வசதி செய்யாமல் இலவச டி.வி.தருவதாக சொல்வதா? - வெங்கையா நாயுடு ( அது சரி, ஒரு காலத்தில் இந்தியா இந்தியா ஒளிர்கிறது என்று நீங்க ஜல்லி அடித்தீர்கள் )
காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளே இங்கே வென்று வந்திருக்கின்றன. எழுத்தும், நாவலும் போல இல்ல இது. அரசியல் கொஞ்சம் கடினம் தான். அதிகபட்சம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது...- திருச்சி மாவட்டம் மருங்காபுரி தொகுதியின் தி.மு.க., வேட்பாளரான கவிஞர் சல்மா ( கவிதை போல் கஷ்டம் என்று சொல்லுங்கள் )
சன் டிவியில் அரட்டை அரங்கம் நடத்தி வரும் விசு அதிமுகவில் ஐக்கியமாகப்போகிறார் - செய்தி ( 'செல்வி' ஜெயலலிதா அரட்டை அரங்கம் பார்க்க போகிறார் )
திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று கையில் வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு அதைக் காட்டி சிம்ரன் ஆதரவு திரட்டினார். ( இதே போல் சிறுத்தைக்கு டிரை பண்ணாதீங்க )
எல்லா கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டால் புதிய தமிழகம்தான் அதிக வாக்கு களைப் பெறும். - டாக்டர் கிருஷ்ணசாமி ( இட்லிவடைக்கு எழுத உங்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு )
எங்களுக்கு வரும் மிரட்டல்களைப் பார்த்தால் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது. இது தேர்தலா? யுத்தமா? - கார்த்திக் (புதுசா அரசியலுக்கு வந்தவர்கள் சொல்லும் வார்த்தை இது )
தலைமைக்கான அனைத்து தகுதி யும் ஸ்டாலினுக்கு உள்ளது. அவருடன் போட்டியிட யோக்கியதை இல்லாத வர்கள்தான் வாரிசு அரசியல் பற்றி வம்பளக்கின்றனர் - திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ( அட பாவமே, உங்க நிலமையை பார்த்தீங்களா ? )
பொதுவாக நடிகர், நடிகைகள் எங்கே போனாலும் கூட்டம் கூடும். அது ஓட்டாக மாறுமா என்பதே பிரச்சனை. - டி.ராஜேந்தர் ( அனுபவம் தான் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, April 25, 2006
போட்டுத்தாக்கு
Posted by IdlyVadai at 4/25/2006 04:40:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











8 Comments:
வாழைப்பழம் எந்த கட்சி சின்னம்?
சேப்பாக்கம் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் தாவூத் மியாகானை ஆதரித்து அவரது சின்னமான வாழைப் பழத்துடன் நடிகை சிம்ரன் பிரசாரம் செய்தார்.
ya,ungalin blog paarthen.
migaum suvaiyaga irunthathu.
puliipu.uppu,kaaram ena sariyan kalavai.
ravishankar
கொஞ்சம் விரசமாக தெரிகிறதே :(
anonymous,
அந்த நோக்கத்தில் எழுதவில்லை.
எங்களுக்கு வரும் மிரட்டல்களைப் பார்த்தால் வலைப்பதிவில் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது. இது வலைப்பதிவா? யுத்தமா? - கால்கரி சிவா (புதுசா வலைப்பதிவிற்க்கு வந்தவர்கள் சொல்லும் வார்த்தை இது )
தமிழன் தமிழன் தான்யா. அது தேர்தல் ஆகட்டும் வலைப்பதிவாகட்டும்
யார் போட்டாலும் போடலனாலும் நான் போடுவேன்பா...சிம்ரனுக்கு ஓட்டு..:)
விரச நோக்கத்தில் எழுதவில்லை...
Good Site. . . can know everything about elections huh,. . .
Post a Comment