பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 25, 2006

கலைஞர் பேட்டி

கேள்வி:- காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுக போவதாக கூறி இருக்கிறது. நீங்கள் வழக்கு எதுவும் தொடர்வீர்களா?

பதில்:- இது தொடர்பான சட்ட நுணுக்கம் பற்றி ஆராய்ந்து வருகிறோம்.

கே:- காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நிலை என்னவாக இருக்கும்.

ப:- அவர்களும் நாங்கள் சொல்லும் கருத்தைதான் சொல் வார்கள் என்று நம்புகிறோம். சம்பந்தப்பட்ட 4 மாநில அரசு களும் தேவையான புள்ளி விவரங்கள், ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்து விட்டது. முடிவு அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி. இந்த சூழ்நிலையில் மறுபடியும் முதலில் இருந்தே ஆராய முடியாது.

கே:- இது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்துவீர்களா?

ப:- எங்கள் கூட்டணி கட்சி கள் நிறைவேற்றியுள்ள தீர்மா னத்தை அவரிடம் கொடுப் போம். இன்று சென்னை யில் சோனியாகாந்தியிடமும் விளக்கி சொல்வேன்.

கே:- 2 கட்ட சுற்றுப்பயணத்தை முடித்து உள்ளீர்கள்ப உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது.

ப:- நிரம்ப மன நிறைவை தந்துள்ளது. 3-வது கட்ட சுற்றுப்பயணமும் செய்ய இருக்கிறேன்.

கே:- அ.தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார்களே

ப:- வேலை வாய்ப்பு தருவ தாக கூறி இருந்தார்கள். ஆனால் சாலை பணியாளர் கள், மக்கள் நல பணியாளர் கள் 25 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பினார்கள். வேலை நியமன தடைச்சட்டமும் கொண்டு வந்தார்கள். சேது சமுத்திர திட்டத்திற்காக வாதாடுவோம், பேராடுவோம் என்றார்கள். ஆனால் நாங்கள் மத்திய அரசை வலியுறுத்தி அனுமதி பெற்று பணிகள் தொடங்கிய நிலையில் அதற்கு எதிராக பேசுகிறார்கள். செயல்படுகிறார்கள். தேர்தல் அறிக்கைக்கு முரணாகவே செயல்படுகிறார்கள்.

கே:- தி.மு.க. தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன் என்று ப.சிதம்பரம் கூறி இருக்கிறாரே?

ப:- தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகள் நிறைவேற மத்திய நிதி அமைச்சரின் சான்றிதழ் எதிர்காலத்தில் மிகவும் பயன்படும் என்று நம்புகிறேன்.

கே:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா 10 கிலோ இலவச அரிசி வழங்குவது சாத்தியமாகுமா?

ப:- வானத்தை வில்லாக வளைப்பேன் என்று கூறுபவர்கள் கூறலாம். ஆனால் வளைப் பவர்களுக்குத்தான் தெரியும். நாங்கள் அவசரப்பட்டு எதையும் சொல்ல மாட்டோம். இது சாத்தியமாகுமாப சாத்திய மாகாதாப என்று ஆரா அமர யோசித்துதான் முடிவு எடுப்போம். சாத்தியமாகும் என்பதை தான் எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறேன்.

கே:-வரிப்பணத்தில் கலர் டி.வி. கொடுப்பது விரயம் என்று தா.பாண்டியன் பேசி இருக்கிறாரே?

ப:- அவர் அப்படி பேச வில்லை என்று அவரது கட்சியை சேர்ந்த துரை மாணிக்கம் கூறினார். தா.பாண்டியன் அப்படி சொல்லியிருக்க முடியாது. பட்ஜெட்டில்தான் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க முடியும். வரி இல்லாமல் பட்ஜெட் வராது.

கே:- விஜய டி.ராஜேந்தர் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிர சாரம் செய்து வருகிறார். லட்சிய தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் தி.மு.க.வின் நிலை என்ன

ப:- அந்த தொகுதிகளில் ஏற்கனவே யாரை ஆதரிப்பது என்று தி.மு.க. முடிவு எடுத்ததோ அந்த நிலை தொடரும்.

கே:- ஆண்டிப்பட்டி, கம்பம் பகுதிகளில் பார்வர்டு பிளாக் வேட்பாளர்கள் மிரட்டப் பட்டதாக கூறப்படுகிறதே

ப:- இது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால்.

கே:- தி.மு.க. தனி மெஜா ரிட்டியுடன் ஆட்சி அமைக்குமாப அல்லது கூட்டணி ஆட்சி அமையுமா

ப:- தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் வலிமையை பெற்று வருகிறோம்.

கே:- கருத்து கணிப்புகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

ப:- கருத்து கணிப்பு முடிவை முழுயைமாக நம்பி தேர்தல் பணியாற்றுபவன் அல்ல நான். கருத்து கணிப்புகள் சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் நான் ஒரே நிலையில் தான் இருப்பேன். கருத்து கணிப்பும் உண்டு. கணிப்பு கருத்துகளும் உண்டு.

கே:- கலர் டி.வி.க்கு விண்ணப்பம் கொடுப்பதாகவும், இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கூறப்படுகிறதே?

ப:- இது அதிகார பூர்வமாக நடக்கவில்லை. தலைமை கழ கத்தில் இருந்து எந்த அறிக் கையும் கொடுக்கவில்லை. வாக்காளர்களை தேடி செல்லும் யாராவது கேட்டு இருக்கலாம். இதற்கும் தி.மு.க. தலைமைக்கும் எந்த சம்பந்தம் இல்லை. ஒவ்வொரு நாளும் ஜெயலலிதா ஒவ்வொரு தேர்தல் அறிக்கையை வெளி யிட்டு இருக்கிறார். இது தேர்தல் விதிமுறைக்கு உகந்ததாப உட்பட்டதா?

கே:- இலவச அரிசி அறிவிப்பு பற்றி நரேஷ்குப்தா கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறி இருக்கிறாரே

ப:- கருத்து சொல்ல விரும்ப வில்லை என்பதன் சுருக்கம்தான் நரேஷ்குப்தா.

கே:- சிறுத்தைகள் நடமாடலாம். சிங்கங்கள் நடமாடக்கூடாது என்று நீங்கள் பேசியது சாதி கலவரத்தை தூண்டும் என்று வைகோ கூறி உள்ளாரே?

ப:- மிருக சாதிக்குள் கலகம் இருந்தால் நான் என்ன சொல்வது.

4 Comments:

SK said...

I hope you will also post Captain's interview in Chennai testerday, to be fair!!
Thanks.

Idly Vadai said...

sk, where can i get a copy of captain's interview ?

Anonymous said...

In his next film 'videshi'

SK said...

it is tuesday's dinamalar, in the first page. thanks.