அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ஒரு பிரபல நடிகரிடம் ரூ.100 கோடி பேரம் பேசப்பட்டதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அந்த நடிகர் ரஜினியா, கமலா, விஜயகாந்தா அல்லது நானா என கருணாநிதி மக்களுக்கு விளக்கிக் கூறவேண்டும். நான் பணத்திற்காக அ.தி.மு.க.,விற்கு வரவில்லை... - நடிகர் சரத்குமார ( என் அப்பன் குதிர்குள்ளே இல்லை.. )
எங்கள் கூட்டணிக்கு 10 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்து விட்டால் போதும். அடுத்த பார்லிமென்ட் தேர்தலில் மொத்த இடங்களையும் எங்கள் கூட்டணியே பிடிக்க வழி செய்து விடுவோம். அடுத்த பிரதமர் தமிழகத்திலிருந்து தான்; அதில் மாற்றமிருக்காது. அடுத்த பிரதமர் யார் என்பதற்கான முயற்சியில் இப்போதே ஈடுபட்டு வருகிறோம்... - சுப்ரமணியசாமி ( வாங்கிய அடி பத்தலை என்று நினைக்கிறேன் )
அம்மாவுக்கு குடும்பமே மக்கள் தான். வைகோ குடும்பம் வெளியே தெரிவதே இல்லை. திருமாவளவனுக்கு குடும்பமே இல்லை. ஆனால், ஒரே குடும்பம், அரசாளத் துடிக்கிறது. இங்கே நான்கு முறை வெற்றி பெற்ற பரிதியை கருணாநிதி அமைச்சர் ஆக்கவில்லை. அண்ணன் பரிதிக்காக நான் பரிதாபப்படுகிறேன்... திருமாவளவன் ( அட அட )
கருணாநிதியுடன் ஜெயலலிதாவை ஆயிரத்தில் ஒரு பங்கு கூட ஒப்பிட முடியாது. கடந்த முறை அ.தி.மு.க.,வை பா.ம.க., எப்படி ஆட்சியில் அமர்த்தியது என்று கேட்கின்றனர். ஆனால் நாங்கள் மட்டும் அந்த தவறை செய்யவில்லை. எங்களுடன் மூப்பனார், இந்திய கம்யூ., மார்க்., கம்யூ., ஆகியோரும் அந்த தவறை செய்தனர். ஆனால் அந்த தவறை உணர்ந்து நாங்கள் தான் முதலில் வெளியே வந்தோம்...ராமதாஸ் ( மீண்டும் மீண்டும் சிரிப்பு என்று ஒரு தொடர் சன் டிவியில் வரும் அதில் நீங்க நடிக்கலாம் )
என்னை பொறுத்தவரையில் இப்போது கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புகள் இல்லை. 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். எனவே கூட்டணி ஆட்சிக்கு அவசியம் இருக்காது. என்னுடைய கொள்கையை மாற்றவில்லை. இப்போது இருக்கும் நிலையை அனுசரித்து தான் இவ்வாறு கூறுகிறேன்... இளங்கோவன் ( அப்போ கேட்ட மன்னிப்பு இன்னும் மறக்கவில்லை )
100 இளைஞர்களை கொடுங்கள்; இந்த நாட்டையே மாற்றி காட்டுகிறேன்' என்று விவேகானந்தர் தெரிவித்தார். என்னிடம் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் இந்த தமிழகத்தையே மாற்றிக் காட்டுவேன்...விஜயகாந்த் ( தமிழகம் அவ்வளவு மோசமா ? )
தி.மு.க., அலை வீசுகிறது என்பது தான் உண்மையான கணிப்பு. நான் பல தேர்தல்களைச் சந்தித்துள்ளேன். இதுபோன்றதொரு அலையை 1967ல் பார்த்தேன். இப்போது அதையும் தாண்டி மக்களிடம் அமோக ஆதரவு தெரிகிறது. ஒரு கன்னத்தில், "பளார்' என அறைந்துவிட்டு 100 ரூபாய் பணத்தைக் கொடுத்தால், அடிபட்டதை மக்கள் மறப்பார்களா...? - வெற்றிகொண்டான் ( அது சரி நீங்க எப்போ அதிமுகவில் சேரபோறீங்க )
அதிமுக திறந்தவெளி சிறைச்சாலை - கராத்தே தியாகராஜன் ( நம்புகிறேம், உங்களால் எப்படி ஈசியா தப்பிக்க முடிஞ்சது )
ஜெயலலிதா தற்போது 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். அப்படி வழங்க முடியும் என்று அவர் நம்பினால், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏன் வழங்கவில்லை? எதிர்க் கட்சியை கேலி செய்துவிட்டு, பிறகு அதே பாணியை முதல்வர் கடைப்பிடிப்பது விசித்திரமாக உள்ளது... ஜெயந்தி நடராஜன் ( எப்போ டில்லியிலிருந்து வந்தீர்கள் )
இரண்டு ரூபாய்க்கு அரிசி என்று சொல்கிறாயே? நீ தானே அரிசி விலையை ரூ.3.50 க்கு உயர்த்தினாய். இப்பொழுது முதல்வர் மாதம் 10 கிலோ அரிசி என்று சொன்னவுடன் மக்களிடம் மகிழ்ச்சி வந்து விட்டதே. கருணாநிதி அஸ்திவாரமே ஆடிவிட்டதே. இதை எப்படி கொடுக்க முடியும் என்று கேட்பீர்கள். உன்னால் முடியும் போது, எங்களால் முடியாதா...? - நாஞ்சில் சம்பத் ( ஐயா வைகோ கூட முடியாது என்றார் பிறகு ஒரு துண்டு சீட்டு ... சரி சரி இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, April 23, 2006
போட்டுத்தாக்கு
Posted by IdlyVadai at 4/23/2006 10:45:00 AM
Subscribe to:
Post Comments (Atom)











5 Comments:
ungal arasiyal news vasantha bhavan idly vadaiyai pol nadraga ulathu :)..
I think Captain is going to be the deciding factor in this elections..no one is going to get a majority..and if Captain can pull atleast 10 seats - then he will be deciding :)
தலைங்க பேச்சை விட அதற்கு நீங்கள் கொடுத்துள்ள கமென்ட்ஸ் சூப்பர் தல.
சூடு புடிக்குதுடோய்!
இதை வைத்து மீண்டும் மீண்டும் சிரிப்பு மட்டுமல்ல ஒரு முழுநீள காமெடி திரைப்படமே எடுக்கலாம் போல.
"100 இளைஞர்களை கொடுங்கள்; இந்த நாட்டையே மாற்றி காட்டுகிறேன்' என்று விவேகானந்தர் தெரிவித்தார். என்னிடம் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் இந்த தமிழகத்தையே மாற்றிக் காட்டுவேன்...விஜயகாந்த்
( தமிழகம் அவ்வளவு மோசமா? )"
விஜயகாந்த் கூறியிருப்பதில் என்ன தவறு? தமிழகம் அவ்வளவு மோசமா என்று ஏன் கேட்கிறிர்கள்?
//சரி சரி இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா//
அனியாயத்துக்கு விசுவாசமா இருகீங்களே...
அதிமுகவின் இணைய இளைஞர் அணி தலைவர் ஜெயக்குமார் வந்து சென்றுவிட்டார்.
அதிமுகவின் கொளுவை பரப்பு செயலாளர் மாயவரத்தானை இன்னும் காணோமே?
Post a Comment