பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 19, 2006

சரத்குமார் மதிக்கப்பட்டார் - கலைஞர்

நடிகர் சரத்குமார் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்திருக்கிறார். அவருக்கு திமுகவில் முக்கியத்துவம் தரவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.

திமுக சார்பில் ஒருவர் மட்டும் தான் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட முடியும் என்ற நிலையில், சரத்குமாருக்கு அப் பதவி வழங்கப்பட்டது.

அவர் நடித்துக் கொண்டிருந்ததால் அமைச்சரவையில் இடம் பெற முடியாமல் போனது.

நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பி என் ஆட்சியில் தமிழக அரசின் சுற்றுலா வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1967-ல் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி இருந்தபோது சி.பா. ஆதித்தனார் சட்டப் பேரவைத் தலைவராக இருந்தார். சிலருடைய எதிர்ப்பால் அவரை அமைச்சராக்கும் முடிவு தள்ளிப்போடப்பட்டது.

அண்ணா மறைவுக்குப் பிறகு நான் முதல்வராக பொறுப்பேற்றதும் விவசாயத் துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் பொறுப்புகளை அவர் ஏற்றார்.

கே.பி. கந்தசாமி, ஆலடி அருணா, சற்குணபாண்டியன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர்.

போலீஸôர் சுட்டதில் உயிரிழந்த வெங்கடேசப் பண்ணையாரின் துணைவியார் ராதிகா செல்வி கடந்த தேர்தலில் திமுக சார்பில் எம்.பி. ஆக்கப்பட்டார்.

கலைத் துறை பணி காரணமாக சரத்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க இயலவில்லை என்பதாலேயே அவர் மதிக்கப்படவில்லை என்பது பொருளல்ல.

விருதுநகரில் 2004-ல் நடந்த மண்டல மாநாட்டின் திறப்பாளர் சரத்குமார். கடந்த மார்ச் 3, 4, 5 தேதிகளில் திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில், மாநாட்டுத் தலைவரை வழிமொழியும் முக்கிய பொறுப்பில் சரத்குமார் பேசினார்.

காமராஜர் முதல்வராக இருந்தபோது நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தது. அப்போது திமுக நடுநிலை வகித்து வெளிநடப்பு செய்தது. குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராஜரை திமுக ஆதரித்தது.

காமராஜருக்கு சிலைகள், நினைவு மண்டபம், கன்னியாகுமரி கடல் அருகே மணி மண்டபம் போன்ற நினைவு சின்னங்கள் அமைக்கப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்டச் செய்தோம்.

இப்போதைய தேர்தல் அறிக்கையில், காமராஜர் பிறந்த நாளை "கல்விக் கண் திறந்த நாள்' என்று கொண்டாடப்படும் என அறிவித்துள்ளோம்.

கட்சி வேறுபாடு, அரசியல் மாறுபாடு இருந்தாலும் அவற்றைக் கடந்து காமராஜரிடம் திமுக கொண்டுள்ள மதிப்பை இது காட்டுகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்

4 Comments:

ராம்கி said...

ஆசைத்தம்பி, சி.பா. ஆதித்தனார் ,கே.பி. கந்தசாமி, ஆலடி அருணா, சற்குணபாண்டியன்,ராதிகா செல்வி, காமராஜர் .... ada.. all are naadaaar! :-)

சீனு said...

ஏம்பா...அதுக்கு எதுக்குபா நாமீதா???

Idly Vadai said...

சீனு, அம்மா கட்சியில சேர்ந்ததால பச்சை நிறம் உள்ள போட்டோ. மற்றபடி நமீதா சும்மா ஒரு ஜாலிக்குதான். :-)

randramble said...

Jaadhi ozhiga!