பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 13, 2006

வந்தார் கராத்தே !

சென்னை மாநகராட்சியின் துணை மேயர் கராத்தே தியாகராஜனுக்கும், கட்சி தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தலைமறைவானார். சில மாதங்கள் புதுடெல்லியில் அவர் தங்கி இருந்தார். அங்கு தனிப்படை தேடி வரவே அவர், புதுடெல்லியிலிருந்து மலேசியாவுக்கு சென்றார்.

கடந்த சில மாதங்களாக மலேசியாவில் தங்கியிருந்த அவர், சென்ற மாதம் மீண்டும் புதுடெல்லிக்கு திரும்பினார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்னைக்கு திரும்பி வர முடிவு செய்தார். இன்று விமானம் மூலம் பகல் 1.20மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருடைய ஆதரவாளர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

8 மாதத்திற்கு பிறகு அவர் அடையாறு காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்கு நேராக சென்றார். அங்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சந்தித்து பேசவிருப்பதாக கூறப்படுகிறது. அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்த தடைகள் நீங்கி விட்டதைத் தொடர்ந்து அக்கட்சியில் சேருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கராத்தே கற்றுக்கொள்வது தற்காப்புக்கு என்று சொல்லுவார்கள் :-)

7 Comments:

சிரிப்புக்காரன் said...

கராத்தே வந்தது நல்லது தானே...
காங்கிரசுக்கு போக மாட்டார்ன்னு நெனைக்கிறேன்.. இனி
அவர் அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா? பார்க்கலாம்...

ப்ரியன் said...

இப்போ நடக்கின்ற அரசியலுக்கு கராத்தே கத்துகுறது கண்டிப்பா அவசியம் தான் அதுவும் காங். னா சொல்லவா வேணும்

முத்து(தமிழினி) said...

ஒருவேளை நாமெல்லாம் ஆசைப்படுற மாதிரி அம்மா ஜெயிச்சா திரும்ப மலேசியா போயிடுவாரா?

Anonymous said...

He is sonia amma' son. this came in yesterday's news.

Dharumi said...

Off the track...sorry about it.

ரொம்ப நாளா சொல்ல நினச்ச ஒரு விஷயம். நீங்க இலை போட்டு இருக்கிறது நீங்க சாப்பிடறதுக்கு...நாங்க இங்க வந்து 'சாப்பிடணும்னா' எங்களுக்குத் தோதாக இலையைத் திருப்பி போட வேண்டாமா...?

Idly Vadai said...

தருமி, இலைக்கு அந்த பக்கம் உட்கார்ந்து சாப்பிடவும் :-)

சீனு said...

இனி அவர் "கராத்தே" தியாகராசன் அல்ல. "மான் கராத்தே" தியாகராசன்.

சீனு.