1 991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அவரது அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இந்திரகுமாரி இருந்தார். அவர் மீது கடந்த திமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு வழக்கு போடப்பட்டது.நீண்ட காலமாக தீவிர அரசியலி லிருந்து ஒதுங்கியிருந்த அவர் இன்று சுமார் 2 ஆயிரம் மகளிருடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக் கட்சியில் சேர்ந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:
32 ஆண்டுகளாக எனது அரசியல் வாழ்வில் இல்லாத உற்சாகமும், மகிழ்ச்சியும் இப்போதுதான் ஏற்பட் டுள்ளது. ஒரு சிறிய கூட்டத்துடன் தான் நான் இப்போது வந்து சேர்ந்திருக்கிறேன்.
நீங்கள் ஆணையிட்டால் தமிழகம் முழுவதும் 1 லட்சம் மகளிரை திரட்டிக் கொண்டு வர முடியும். இங்கு வந்துள்ள ஒவ்வொரு மகளிரும் ஓராயிரம் வாக்குக்கு சமமானவர்கள் ஆவார்கள். திமுகவை ஆட்சியில் அமர்த்தும் வரை நாங்கள் ஓய மாட்டோம். உங்கள் வழியில் நாங்கள் செயல் படுவோம். தமிழ்நாட்டுக்கு மட்டு மல்லாமல் இந்தியாவுக்கே வழி காட்டும் ஒளி விளக்காக நீங்கள் இருக்கிறீர்கள். இனி நீங்கள்தான் முதலமைச்சர். அதை யாராலும் தடுக்க முடியாது.
10, 15 ஆண்டுகளாக தங்கள் மனதில் நோகடித்திருந்த போதிலும் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் அன்பு காட்டி எங்களை கட்சியில் இணைத்துக் கொண்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் கட்சிக்கு துணை இருப்போம். உங்கள் கால்களில் செருப்பாக உழைப்போம்.
கருணாநிதி ஆணையிட்டால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிரிகளின் முகத்திரையை கிழிக்க தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார். இந்திரகுமாரி உள்ளிட்டோரை கட்சியில் இணைத்துக் கொண்டு கருணாநிதி பேசியதாவது: ஏறத்தாழ 6 ஆயிரம் மகளிர் திமுகவில் உறுப்பினர்களாக சேரும் பெருவிழா திருவிழா போல நடந்துள்ளது.
கடந்த கால கசப்புகளை மறந்து விளைவுகளை கனவு போல கருதி எதிர்க்கால திராவிடத்தை, தமிழகத்தை வாழ வைப்போம் என்ற நல்லெண்ணத்துடன் வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். திமுகவில் ஏற்கனவே மகளிர் பிரிவு உள்ளது. இப்போது பல்லாயிரம் தாய்மார்கள் சேர்ந்திருக்கிறீர்கள். எந்த சமுதாயமாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் தாய்மார்கள் தான் அதன் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருப்பார்கள்.
ஏற்கனவே உள்ள மகளிர் அணி என்னும் ஓடும் நதியில் உபநதியாக நீங்கள் கலந்திருக் கிறீர்கள். இது ஆறாக, பேறாராக பெருக்கெடுத்து ஓடி தமிழகத் திற்கு பெருமை சேர்க்க வேண்டும். நமது கருத்துக்கள் கிராமங் களில் உள்ள தாய்மார்களை சென்றடைய வழிவகுத்து திமுக உறுப்பினர்களின் சரிபாதி பேர் பெண்கள் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும். உங்களுடைய தொண்டு பயன்பட வேண்டும்
தொண்டர்களின் உணர்வுகளை, துன்ப, துயரங்களை புரிந்து கொள்ள முடியாத ஒரு தலைமையின் கீழ் இவ்வளவு காலம் இருந்து வந்தோம். என் மீது கடந்த காலங்களில் வழக்கு போடப்பட்டது. அதிலிருந்து மீண்டு ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர்
என்னை சந்திக்க மறுத்து விட்டார்.
எனக்கு எதிரான வழக்குகளை அதிமுக அரசே மேல்முறையீடு செய்தது. இப்படிப்பட்ட ஒரு தலைமையின் கீழ் இனி இருந்து பயனில்லை
என்றுதான் தொண்டர் களின் உணர்வுகளை, துன்ப, துயரங்களை உணர்ந்து கொள்ளும் நல்ல தலைமையின் கீழ் இன்று வந்து சேர்ந்துள்ளோம். எனக்கு ஏற்பட்ட நிலைதான் தற்போது அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் முத்துச்சாமி, மதுசூதனன் போன்றோருக்கு உள்ளது
படம் தரும் பாடம் : கையில் ஜெயலலிதா உருவ பச்சைகுத்தியிருந்த இந்திரகுமாரி அதைமறைத்து பிளாஸ்திரியை ஒட்டியிருக்கிறார். சிலவற்றை அழிக்க முடியாது மறைக்க தான் முடியும்.












3 Comments:
செய்தி தரும் பாடம் :
1. அய்யா கேஸ் போட்டா அம்மாகிட்ட ஓடு.
2. அம்மா கேஸ் போட்டா அய்யாகிட்ட ஓடு.
3. அய்யா போட்ட கேஸுக்கு அம்மா மேல் முறையீடு பண்ணா, திருப்பி அய்யாகிட்டயே ஓடு.
(பி.கு : நடு, நடுவில பிளாஸ்திரிய, கழட்டி மாட்ட மறக்காதே)
Ur last comment about "pachai" is a "NUCH " comment. Keep up ur great work of compiling election news.
regards
Suresh
கையில் இருக்கும் பிளாஸ்திரியைப் பார்த்து கருணாநிதி கனிவுடன் என்ன வென்று விசாரித்தார். இதை எதிர்பார்க்கவில்லை இந்திர குமாரி! என்ன சொன்னார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. கருணாநிதியின் பின்னிருந்த யாரோ எதுவோ சொன்னார்கள், கருணாநிதி சிரிப்பது தெரிந்தது. என்ன சொன்னார்கள், ஏன் சிரித்தார் என்பது தெரியவில்லை. இரண்டே நிமிடங்கள் நீடித்த இக்காட்சி, ரசமானதாகவும், நகைச்சுவை நிரம்பியதாகவும் இருந்தது. முதலில் கையில் பிளாஸ்டர் ஒட்ட மறந்துவிட்டார் இந்திரகுமாரி! பின்னர்தான் ஒட்டினார். டெக்கான் க்ரானிக்கள் இதைப் படத்துடன் சுட்டிக் காட்டியிருக்கிறது. அரசியல் கூத்தில் காமெடி காட்சிகள்!
Post a Comment