பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 11, 2006

சிம்ரன் - விந்தியா - கோவைசரளா

மக்கள் ஜனநாயக கூட்டணி (அ.தி.மு.க.) வேட்பாளர்களை ஆதரித்து நடிகைகள் சிம்ரன், விந்தியா, கோவைசரளா, உள்ளிட்ட பலர் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளனர்.

பிரசார தொடக்ககூட்டமாகவும், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் பி.கே.சேகர்பாபுவை ஆதரித்து அவருக்கு வாக்கு சேகரிக்கும் பொதுக்கூட்டமாகவும் நேற்று இரவு நடைபெற்றது.

பொதுக்கூட்ட மேடையில் நடிகைகள் சிம்ரன், விந்தியா, கோவைசரளா, திரைப்பட இயக்குனர் அந்தோணி, நடனஇயக்குனர் ரகுராம், கிரிஜாரகுராம், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர்சினேகன், இயக்குனர் மனோஜ்குமார் ஆகியோர் வரிசையாக நின்று இரண்டு விரல்களை காட்டியபடி பொதுமக்களை பார்த்து கையசைத்தனர்.

இவர்களுக்கு இடையில் வேட்பாளர் பி.கே.சேகர்பாபு தனக்கு ஓட்டுக்கேட்டு பொதுமக்களை பார்த்து இருகைகூப்பியபடி நின்றார்.

சிம்ரன்

கூட்டத்தில் நடிகை சிம்ரன் தமிழில் பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

எல்லோருக்கும் வணக்கம், மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் சின்னம், புரட்சித்தலைவி அம்மாவின் சின்னம், நமது சின்னம், உங்கள் சின்னம் இரட்டைஇலைசின்னம். உங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே. இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுப்போடுங்கள். அம்மா திரும்பவும் ஜெயிக்கணும், அம்மா ஆட்சியில் தண்ணீர் பிரச்சினை இல்லை. ரோடுகள் நன்றாக இருக்கின்றன. குழாயில் நன்றாக தண்ணீர் வருகிறது. ரவுடித்தனம் இல்லை. எனவே மீண்டும் அம்மாவின் ஆட்சிமலர இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுங்கள். அம்மாவின் சின்னம், எம்.ஜி.ஆரின் சின்னம். உங்கள் சின்னம் இரட்டை இலை சின்னம்.

விந்தியா

நடிகை விந்தியா பேசும்போது கூறியதாவது:-

என்பிறந்தநாள் போல நான் சினிமாவுக்கு மேக்அப் போட்ட முதல் நாள் போல தேர்தல் பிரசாரம் செய்யும் இந்தநாளை நினைக்கிறேன். துணிச்சல், ஆற்றல், அறிவு உள்ள நமது அம்மாவை வணங்குகிறேன்.

நான் ஒரு கதைகூற விரும்புகிறேன். 25 வயதுபையன், அப்பா நான் அரசியலுக்கு போகவிரும்புகிறேன் என்றான். அப்படியானால் நான் சொல்வதை கேள் என்று கூறிய அவரது தந்தை ஒரு ஏணியை எடுத்து வந்து அதை ஒரு சுவரில் சாய்த்து அதில் மகனை ஏறச்செய்தார்.

சுவரில் ஆணியை கொடுத்து சுத்தியலால் அடிக்க செய்தார். ஆணி அடிக்கும் போதே பிடித்துக்கொண்டு இருந்த ஏணியை தந்தை விட்டுவிட்டார். இதனால் மகன் கீழே விழுந்தான். ஏனப்பா என்னை கைவிட்டுவிட்டீர் என்று அப்பாவிடம் கேட்டான்.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் அரசியலுக்கு வந்தால் அப்பாவை நம்பக்கூடாது. அம்மாவை தான் நம்பவேண்டும் என்று தெரிகிறது. அப்பா என்றால் யார் என்பது உங்களுக்கு தெரியும். எனவே தான் நான் அம்மாவை நம்பி அரசியலுக்கு வந்து விட்டேன். என் உயிர் இருக்கும் வரை இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பேன். வேட்பாளர் சேகர் பாபு 75 சதவீதம் ஓட்டு பெற்று வெற்றிபெறுவார்.

கவிஞர் கண்ணதாசன் எழுதியதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். "கருணாநிதி திறமைசாலி. இங்கே எந்த மாவட்டத்தில் நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்பதை விரல்நுனியில் வைத்திருப்பார். ஆனால் கருணாநிதி ஒரு பதவி காலியானால் அந்தப் பதவியை மாறனுக்கு கொடுக்க முயற்சி எடுப்பார். பணம் கிடைத்தால் குடும்பத்துக்கு ஒதுக்குவார்'' என்று கண்ணதாசன் 1978-ல் எழுதி இருக்கிறார்.

தலைவர்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோருக்குப் பிறகு தன்னலம் இல்லாதவர் அம்மாதான். வெற்றி விழாவில் வந்து இதே மேடையில் பேசுவேன். ராமருக்கு அணில் உதவி செய்தது போல அம்மாவுக்கு நான் என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன்.


கோவை சரளா

நடிகை கோவை சரளா பேசியதாவது:

அம்மா மாதர்கள் போற்றும் தங்கத் தலைவி, காவிரித் தாய், தங்கத் திருமகள், எங்கள் தங்கம், மழைநீர் வற்றினாலும் பாசநீர் வற்றாத ஜீவநதி அவர். பெருகி ஓடும் அருவி, வற்றாத காவிரித் தாய், தமிழ் மக்களின் உயிர். இன்று நான் களம் இறங்கியுள்ளேன். அம்மா நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

அம்மாவின் சாதனைகள் அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்கள், கோவில்களில் கிறிஸ்தவ ஆலயங்களில், இஸ்லாமியர்களின் மசூதிகளில் இலவச அன்னதானத் திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச பாடப் புத்தகத் திட்டம், பிளஸ் -1, பிளஸ் - 2 மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள் திட்டம், மின்சாரக் கட்டணம் குறைப்பு, விவசாயிகளுக்கு கடன் ரத்து, உழவர் பாதுகாப்புத் திட்டம், மகளிர்களுக்கு பஸ்கள், ஆட்டோக்கள் ஓட்ட உரிமங்கள் வழங்குதல் உட்பட எத்தனையோ திட்டங்கள் உள்ளன.

பாரதியார் சொன்னது போல் தமிழகத்தில் மறுமலர்ச்சி பெற்றுள்ளனர். நடிகர் பாக்யராஜ் எனக்கு குரு. அரசியலைப் பொறுத்தவரை அவருக்கு எதிராக இருக்கிறேன். அ.தி.மு.க.வில் சேருகிறவர்கள் எல்லாம் பெட்டி வாங்குகிறார்கள் என்று கூறுகிறார்கள். அ.தி.மு.க.வில் யாரும் பெட்டி வாங்கி சேரவில்லை.

வீராணம் திட்டத்தை சிறப்பாக அம்மாதான் செயல்படுத்தினார். வீரப்பனை என்ற மகிசாசுரனை வீழ்த்தியவர் அம்மாதான்.

6 Comments:

சம்மட்டி said...

ஒரே டேக்-குல ஓக்கே பண்ணனும், டப்பிங் வசதியும் இல்லை. பாவம் சிம்ரனை நினைச்சாதான் பரிதாபமாக இருக்கு, என்ன இருந்தாலும் புள்ள பெத்த பச்ச உடம்பு இல்லையா. ப்ச் !

Sivabalan said...

How can you able to give all news?

Good work.

Boston Bala said...

---அ.தி.மு.க.வில் யாரும் பெட்டி வாங்கி சேரவில்லை.----

எங்கம்மா குதிருக்குள் இல்லை :-)

பெட்டி வாங்காவிட்டால்? ஸ்விஸ் வங்கியா அல்லது லோக்கல் ஹவாலாவா?

எப்படி எப்படி.... சரி செஞ்சதெப்படி (இந்து படப் பாடல் மெட்டில் படிக்கவும்)

சீனு said...

தேர்தல் ஆணையம் மொதல்ல இந்த குட்டி கதைகளுக்கு ஒரு தடை போடனும்.

சீனு.

Anonymous said...

tamil nadu seitha punniyam than yengal thanga thalaivi simran punjabil irundhu ingu vandhu arasiyal seivadhu.

ஜெயக்குமார் said...

என்னடா இது தமிழகத்துக்கு வந்த சோதனை!. தமிழகத்தில் ஒரு தமிழன் ஒரு தமிழன் முதல்வராக இல்லையே என்ற வருத்தத்தில் இருக்கும்போது. எங்கெங்கிருந்தோ வந்த இவர்கள் பேச்சையெல்லாம் கேட்க வேண்டியுள்ளது.