அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா தனது ஆதரவாளர்களுடன் நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார்.
சேடப்பட்டி முத்தையா அறிக்கை -
அரசியலில் அடிபட்டு நிர்க்கதியாக்கப்பட்டு இன்று ஆறுதல் தேடி தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் தஞ்சம் நாடி வந்து உள்ளோம். திருவிழா கூட்டத்தில் காணாமல் போய்விடும் குழந்தைகள் சில ஒரு அடிமைக் கூட்டத்தில் அகப்பட்டு சீரழிந்து சின்னாபின்னாமாகி நிர்க்கதிக்கு ஆளாக்கப்படுவது போன்ற நிலையை அரசியலில் அனுபவித்து தற்போது தாயின் கருணை திரும்பவும் பெற்ற குழந்தையின் உணர்வை இன்று பெற்று உள்ளேன்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள வைகை அணைப்பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். எம்.பி.யான நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். டாக்டர் கலைஞரின் சிறப்புரையில் என்னை குறிப்பிடும்போது, `தம்பி முத்தையா அவர்களே...' என்று குறிப்பிட்டார்.
எங்கள் நண்பர்களோடு இன்றைக்கு அண்ணன் கலைஞரின் தலைமை ஏற்க வந்து உள்ளோம். எங்களைத் தொடர்ந்து, தென்மாவட்டங்களைச் சேர்ந்த எண்ணற்றோர் தி.மு.க.வுக்கு வர உள்ளனர். தலைவர், தளபதி கரங்களில் போர்வாளாகவும், ஈட்டிமுனைகளாகவும் திகழ்ந்திடுவோம்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, April 10, 2006
திமுகவில் சேடப்பட்டி முத்தையா
Posted by IdlyVadai at 4/10/2006 09:47:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










1 Comment:
//திருவிழா கூட்டத்தில் காணாமல் போய்விடும் குழந்தைகள் சில ஒரு அடிமைக் கூட்டத்தில் அகப்பட்டு சீரழிந்து சின்னாபின்னாமாகி நிர்க்கதிக்கு ஆளாக்கப்படுவது போன்ற நிலையை அரசியலில் அனுபவித்து தற்போது தாயின் கருணை திரும்பவும் பெற்ற குழந்தையின் உணர்வை இன்று பெற்று உள்ளேன்.
//
மனோகரா படம் டயலாக் மாதிரியே இருக்கே...
Post a Comment