முதல் அமைச்சர் ஜெயலலிதா நேற்று விருத்தாசலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, தனியார் டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
கேள்வி:- எந்த பிரச்சினை அடிப்படையில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறீர்கள்?
பதில்:- எங்கள் சாதனைகளை மக்கள் முன் எடுத்துக்கூறி அவர்கள் ஆதரவை கேட்டு வருகிறேன்.
கேள்வி:- தனிப்பட்ட முறையில் அரசியல்ரீதியாக நீங்கள் யாரையும் தாக்கிப் பேசவில்லையே?
பதில்:- அம்மாதிரியான தாக்குதலை வேறு சிலர் செய்யக்கூடும்.
கேள்வி:- மக்களிடம் திருப்தியான மனநிலை உள்ளது என்று கூறுகிறீர்கள். இது உங்களுக்கு உதவுமா?
பதில்:- அதன் பலனை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். மக்கள் எப்போதுமே நல்ல விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்.
கேள்வி:- மக்களிடம் உள்ள திருப்தியான மனநிலை 2004-ம் ஆண்டு உங்களுக்கு ஏன் உதவவில்லை?
பதில்:- கும்மிடிப்பூண்டி, காஞ்சீபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் அது எங்களுக்கு உதவியது. அதன்காரணமாக நாங்கள் வெற்றி பெற்றோம்.
கேள்வி:- எந்த வகையான நலத்திட்டங்களை பற்றி பிரசாரத்தில் கூறி வருகிறீர்கள்?
பதில்:- சில நிமிடங்களில் எங்கள் சாதனைகள் அனைத்தையும் சொல்லிவிட முடியாது.
கேள்வி:- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச கலர் டி.வி. என்று வாக்குறுதிகள் அறிவித்து இருக்கிறார்களே?
பதில்:- நிலவை பிடித்துத் தருவதாக கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை. அவர்கள் மக்களை முட்டாளாக்க பார்க்கிறார்கள்.
கேள்வி:- தேர்தல் கமிஷனர் நவீன்சாவ்லா மீது கூறப்பட்டுள்ள புகார் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- தனிப்பட்ட ஒருவர் மீது எழுந்துள்ள புகார் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.
கேள்வி:- வெள்ள நிவாரணம் வழங்க தேர்தல் கமிஷன் தடை விதித்து இருக்கிறதே?
பதில்:- சென்னை போலீஸ் கமிஷனர் மாற்றல் உத்தரவு தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு சரியான தீர்ப்பு அளித்து இருக்கிறது.
கேள்வி:- உங்களது முதல் தேர்தல் பிரசாரத்துக்கும், இப்போதைய தேர்தல் பிரசாரத்துக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
பதில்:- எனது முதல் தேர்தல் பிரசாரத்தை, டாக்டர் எம்.ஜி.ஆர் முதல்-அமைச்சராக இருந்தபோது 1983-ம் ஆண்டு திருச்சி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் மேற்கொண்டேன். அப்போது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக என்னை எம்.ஜி.ஆர். நியமித்திருந்தார். நான் பிரசாரம் செய்தபோது, எங்கள் கட்சி வெற்றி பெறாது என்று சிலர் கூறினார்கள். ஆனால் நாங்கள் வெற்றி பெற்றோம். எனது முதல் தேர்தல் பிரசாரமே வெற்றிகரமாக அமைந்தது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, April 03, 2006
மக்களை முட்டாளாக்க பார்க்கிறார்கள் - ஜெ பேட்டி
Posted by IdlyVadai at 4/03/2006 11:19:00 AM
Subscribe to:
Post Comments (Atom)











0 Comments:
Post a Comment