பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 02, 2006

குமுதம் தேர்தல் கணிப்பு பற்றி..

குமுதம் தேர்தல் கணிப்பு மூன்றாம் ரவுண்டும் வெளிவந்துவிட்டது. 15 கொகுதிகளில் அதிமுக கூட்டணி 9 இடங்கள், திமுக - 5 இழுபறி - 1.

குமுதம் தேர்தல் கணிப்பு கலைஞரை கொஞ்சம் டென்ஷன் படுத்தியிருக்கிறது. இவ்வளவு நாள் அரசியலில் இருந்த கலைஞர் இந்த கருத்துக்கணிப்பை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம்; கலைஞரால் குமுதத்திற்கு மேலும் விளம்பரம்!

இந்த கருத்துக்கணிப்பு பற்றி ...

அரசு பதில்கள்:
"குமுத விழியாள் போன்ற ஒரு ஏடு கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகக் கருத்துக் கணிப்பு நடத்துவதாக, திமுக தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறாரே ?

அதே குமுத விழியாள் ஏடுதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 'திமுக கூட்டணி 40ல் 38 இடங்களில் வெற்றி பெறும் என்று ஆணித்தரமாக, கருத்துக் கணிப்பு நடத்திச் சொன்னது. அப்போது எத்தனைக் கோடியை யார் அனுப்பி வைத்தார்கள் என்பது அவருக்கே வெளிச்சம்! சாதகமாக வந்தால் சந்தோஷமாக ஆடிப் பாடுவதையும், பாதகமாக வந்தால் பழிச் சொற்களை அள்ளி வீசுவதையும் இன்று நேற்றா அவர் செய்து கொண்டிருக்கிறார் ? அய்யோ பாவம்!

குமுதத்திற்கு ஜெ அளித்த பிரத்தியோக பேட்டியிலிருந்து..

"நான் குமுதத்தை முப்பது வருஷமா வாங்கிக்கிட்டிருக்கேன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பேன். அதுவும் சமீபத்தில் தேர்தல் கருத்துக் கணிப்பு வெளியிடுகிறீர்களே, அதையெல்லாம் ஒரு வரி விடாமல் உன்னிப்பாகப் படிக்கிறேன். மக்களின் தீர்ப்புக்குத் தலை வணங்குகிறேன்"

துக்ளக் கேள்வி பதில் பகுதியிலிருந்து.

குமுதத்தின் முதல் ரவுண்ட் கருத்துக் கணிப்புகள் பற்றி உங்கள் கருத்து என்ன ? ( இதில் கருணாநிதி எரிச்சல் பட்டுள்ளாரே!)

இரண்டாவது ரவுண்டும் வெளியாகி இருக்கிறது. கலைஞருக்கு எரிச்சல் வருகிற மாதிரிதான் அந்த முடிவுகளும் அமைந்திருக்கின்றன. குமுதம் வேண்டுமென்றே இதில் பொய் கூற வேண்டிய அவசியமில்லை. விலைக்கு வாங்கப்பட்டு விட்டார்கள் என்பதும் பிதற்றலே. அவர்கள் கடைபிடுத்த அணுகுமுறையில் தவறு இருக்கலாமோ என்னமோ தெரியாது. தவிர தேர்தலுக்கு இன்னுமும் ஒரு மாதத்துக்கு மேல் இருக்கிறது. மக்கள் கருத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது குமுதம் வெளியிட்டுள்ளது போலவே மக்கள் கருத்து தேர்தலிலும் அமைந்தால் - அது ஜெயலலிதாவின் மிகப் பெரிய தனுப்பட்ட சாதனையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

( சில தட்டச்சு பிழை இருக்கலாம் )

' கருத்து' கணிப்பு - கலைஞர் அறிக்கை
குமுதம் தேர்தல் கணிப்பு முதல் ரவுண்ட்
குமுதம் தேர்தல் கணீப்பு இரண்டாவது ரவுண்ட்

2 Comments:

mohan said...

ஓரு ருபாய்க்கு பத்திக்கை வத்ததின் விலைவே இந்த கருத்து கனிப்பல் எதிர் ஓலிக்கிறது

rajkumar said...

குமுதம் கருத்துக் கணிப்பை குறித்து சில சந்தேகங்கள் எழுகின்றன. காசு வாங்கிக் கொண்டு எழுதுகிறார்களா? என்ற கேள்வியை நான் முக்கியமானதாக கருதவில்லை. ஆனால் கருத்துக் கணிப்பு நடத்தும் முறை மிகவும் எளிமையாக இருப்பதால், இது எந்த அளவு உண்மையாக இருக்கும் என்று தெரியவில்லை.

இவ்வகையான எளிமையான கருத்துக்கணிப்புகள் ஆதரவு அலையோ, அல்லது எதிர்ப்பு அலையோ பலமாக வீசும்போது சரியாக அமையக் கூடும். ஆனால் கடுமையான போட்டியின் போது, விரிவான விஞ்ஞான ரீதியான அலசல் அவசியம்.

குமுதம் வெறும் சதவீதங்களை மட்டுமே முன் வைக்கிறது. வாக்கெடுப்பு எடுப்பவர்கள் ஓட்டுக்களின் எண்ணிக்கை தங்களுக்கு தெரியாது. தலைமை அலுவலகத்தில்தான் எண்ணுவார்கள் என்று கூறுகிறார்கள். மக்கள் கூறியதாக குமுதம் குறிப்பிடுவெதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பது தெரியவில்லை.

விஜயகாந்தின் வாக்கு வங்கி என குமுதம் குறிப்பிடும் ஓட்டு விகிதம் கணிசமாக இருக்கிறது. இதுவும் எந்த அளவு நம்பக் கூடியது என்பது தெரியவில்லை.

குங்குமம் ஏற்படுத்திய தாக்கத்தில் உண்டான ஆத்திரத்தினால் , குமுதம் திமுக எதிர்ப்பு நிலையை மேற்கொண்டிருக்கலாம் என்ற வாதத்தையும் நான் நம்ப மறுத்தேன். ஆனால் "நமது எம்ஜிஆர்" ரேஞ்சுக்கு குமுதம் வெளியிட்டுள்ள ஜெ..யின் பேட்டியை பார்க்கும் போது, கலைஞர் சொல்வதில் பாதி உண்மையாயிருக்கலாம்- குமுதம் கணிப்பில் பாதி உண்மையாய் இருக்கலாம் என்பதைப் போல.