கலைஞர் வேண்டுகோள்
"எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் கடந்த மார்ச் மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் சரத்குமார் கலந்து கொண்டு தான் சாகும் வரையில் தி.மு.க. தான் என்றும், தன்னுடைய இறுதி ஊர்வலத்தில் தி.மு.கழகக் கொடி தான் தன் மீது போர்த்தப்பட வேண்டுமென்றும் பேசினார்.
அதற்கிடையே இந்த இரண்டு மாதக் காலத்திற்குள் அவருக்கு மன மாற்றம் ஏற்படக் கூடிய எந்த நிகழ்ச்சி நடைபெற்று விட்டது என்பதைப் பற்றிய சிந்தனையில் நான் இருக்கிறேன். அவர் எடுத்துள்ள முடிவை அவரே மறு பரிசீலனை செய்ய வேண்டுகிறேன்"
அதிமுகவில் சரத்குமார் ?
சரத்குமார் அ.தி.மு.க.வில் சேரப்போகிறார் என்று பரபரப்பாக தகவல்கள் பரவியது. தற்போது முதல்- அமைச்சர் ஜெயலலிதா, குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
இன்றிரவு பிரசாரத்தை தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் நிறைவு செய்கிறார். பிறகு அங்குள்ள தாரங்கதாரா கெமிக்கல் நிறுவன விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை பகல் முழுவதும் அவர் அங்குதான் தங்கி இருப்பார். அப்போது சரத்குமார் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் சேருவார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
சரத்குமார் விலகலை அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் வரவேற்றுள்ளனர். சரத்குமார் ரசிகர்கள் அனைவரும், அவரை தேர்தல் பணியில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளனர்.
சரத்குமாரின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து சரத்குமார் பிரசாரம் செய்வாரா என்ற எதிர் பார்ப்பும் நிலவுகிறது.
செல்வி - தங்கவேட்டை கதி ?
"சரத்குமார் விலகியதால் ராதிகாவின் டி.வி. சீரியல்களுக்கு எந்த தடையும் ஏற்படாது. அவை தொடரும். அவர் விலகியதை இதோடு சம்பந்தப்படுத்த வேண்டாம்'' என்று சன் டி.வி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
ராதிகா ரெஸ்பான்ஸ்
"இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். தற்போது நான் எந்தக் கருத்தையும் சொல்லும் மனநிலையில் இல்லை. இரண்டொரு நாளில் என் கருத்தை தெரிவிக்கிறேன். அதுவரை தயவு செய்து பொறுமையாக இருங்கள்" என்றார்
Update 1(3:30pm, 10/04/06)
கலைஞர் ரெஸ்பான்ஸ்
கே:- நடிகர் சரத்குமார் தி.மு.க.வில் தன்னை அவ மானப்படுத்தினார்கள் என்று கூறியுள்ளாரே?
ப:- அவரையே கேளுங்கள். என்ன அவமானப்படுத்தினார்கள் என்று.
Update 2(12/04/06)
சரத்குமார் அ.தி.மு.க.வில் சேருவார் - வைகோ
திரை உலகில் சுப்ரீம் ஸ்டாராக விளங்கி வரும் நடிகர் சரத்குமார் தி.மு.க.வில் இருந்து விலகி உள்ளதாக எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. கொத்தடிமைக்குத் தான் தி.மு.க.வில் இடம்.
சரத்குமார் அ.தி.மு.க.வில் சேருவார் என்ற தகவல் விரைவில் வரும். இதே போல் தினமும் ஒரு நல்ல தகவல் வரும்.
திமுகவிலிருந்து சரத்குமார் விலகல்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, April 11, 2006
சரத்குமார் மறு பரிசீலனை செய்ய கருணாநிதி வேண்டுகோள்
Posted by IdlyVadai at 4/11/2006 11:21:00 AM
Subscribe to:
Post Comments (Atom)











6 Comments:
அதிமுகவில் சரத்குமார் ?
செல்வி - தங்கவேட்டை கதி ?
ராதிகா ரெஸ்பான்ஸ் ?
Have been updated in the post.
செல்வி மற்றும் தங்க வேட்டை நிறுத்தினால் வருமானம் போய் விடுமே! என்ன செய்வது.இரு தலை கொள்ளி எறும்பு போல் இருப்பார்கள் என நினைக்கிறேன்
கலைஞர் ரெஸ்பான்ஸ் அப்டேட் செய்துள்ளேன் ;-)
வைகோ ரெஸ்பான்ஸ் அப்டேட் ;-)
சரத்குமார் - அதிமுக-விலா?
அரசியலில் எதுவும் சாத்தியமே!
idly vadai,
Where are you?.Radhika and sharathkumar joined in ADMK. And its raining in chennai.
Ravi
Post a Comment