பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 07, 2006

தொட்டியத்தில் வைகோ பேட்டி

தொட்டியம் தொகுதியில் இருந்து நேற்று பகல் பிரசாரத்தை தொடங்கும் முன் தனியார் டி.வி.க்கு ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார். அதன் விபரம் -


கேள்வி:- தேர்தல் பிரசாரத்தில் மாறன் குடும்பத்தை ஒட்டு மொத்தமாக தாக்குவது ஏன்?

பதில்:- அவர்கள் மீது தனிப்பட்ட பகை இல்லை. அவர்களது டி.வி. ஆதிக்கத்தை எதிர்த்து தான் பேசுகிறேன். மத்திய மந்திரியாக இருப்பவர் தனது குடும்பத்தை தான் பார்க்கிறார், நாட்டை பார்க்கவில்லை. அதனால் அவரை பற்றி பேசினேன். என் மீது ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடப்போவதாக கூறினார். அந்த வழக்கை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.


கேள்வி :- தேர்தல் பிரசாரத்தை தொடங்கியதில் இருந்து முதல்-அமைச்சர் தனது ஆட்சி சாதனையை பற்றி மட்டும் பேசுகிறார். நீங்கள் தி.மு.க.வை தாக்கி மட்டும் பேசுவதற்கு காரணம் என்ன?

பதில்:- நான் பேசும் போது அ.தி.மு.க. அரசு செய்த சாதனைகளையும் குறிப்பிட்டு வருகிறேன். அதே சமயம் தி.மு.க.வையும் எதிர்த்து பேசி உள்ளேன்.

கேள்வி:- 2004-ம் ஆண்டு நீங்கள் பாதயாத்திரை சென்ற போது அ.தி.மு.க.வை எதிர்த்து பேசினீர்கள். தற்போது அ.தி.மு.க.வை ஆதரித்து பேசுகிறீர்கள். உங்களின் பேச்சை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?

பதில்:- 2004-ம் ஆண்டு நான் மேற்கொண்ட பாதயாத்திரை ஆட்சியை எதிர்த்து இல்லை. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாதயாத்திரை போனேன்.

கேள்வி:- இந்த தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில், நீங்கள் நட்சத்திர பேச்சாளர் என்று கூறப்படுகிறதே?

பதில்:- மக்கள் பிரச்சினைகள், அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதைப்பற்றி தான் பேசி வருகிறேன்.

1 Comment:

சம்மட்டி said...

//கேள்வி:- தேர்தல் பிரசாரத்தில் மாறன் குடும்பத்தை ஒட்டு மொத்தமாக தாக்குவது ஏன்?//
சன் டி.வியில் காட்ட வில்லை காட்டல் வில்லை எத்தனை தடவை சொல்றது ?

//கேள்வி :- தேர்தல் பிரசாரத்தை தொடங்கியதில் இருந்து முதல்-அமைச்சர் தனது ஆட்சி சாதனையை பற்றி மட்டும் பேசுகிறார். நீங்கள் தி.மு.க.வை தாக்கி மட்டும் பேசுவதற்கு காரணம் என்ன?//
அதான் காளிமுத்து இடத்தை இவர் நிறப்புகிறாரே வேறு எவ்வாறு பேசுவது

//கேள்வி:- 2004-ம் ஆண்டு நீங்கள் பாதயாத்திரை சென்ற போது அ.தி.மு.க.வை எதிர்த்து பேசினீர்கள். தற்போது அ.தி.மு.க.வை ஆதரித்து பேசுகிறீர்கள். உங்களின் பேச்சை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?//
அது பாதயாத்திரை அல்ல. கால் நடைப் பயிற்ச்சி

//கேள்வி:- இந்த தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில், நீங்கள் நட்சத்திர பேச்சாளர் என்று கூறப்படுகிறதே?//

நல்லா நடிச்சா நட்சத்திரம் தானே ?