கேள்வி: தேர்தல் விதி முறைகள் மீறியதாக புகார் ஏதும் வந்து உள்ளதா?
பதில்: பெரிய அளவில் புகார்கள் எதுவும் வரவில்லை. சிறிய சிறிய புகார்கள்தான் வந்து உள்ளது.
கேள்வி:- கண்பார்வையற்றவர்களுக்கு வாக்களிக்க தனி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதா?
பதில்:-சென்னையில் 2 இடங்களில் வாக்களிக்க வசதி செய்யப்பட உள்ளது.
கேள்வி: மாநில தேர்தல் கமிஷன் செயல்படும் முறை மத்திய தேர்தல் ஆணையத்துக்கு களங்கம் ஏற்படுத்துவது போல இருக்கிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறி உள்ளாரே?
பதில்:- இது குறித்து ஒரு பத்திரிகையில் படித்தேன். அதில் முழுமையான விவரம் இல்லை. பொதுவான குற்றச்சாட்டுதான் உள்ளது. தேர்தல் விதிமுறைகளை அமுல்படுத்துவதில் அதிருப்தி இருந்து இருக்கலாம். இந்த பதவிதான் எனக்கு வேண்டும் என்று இல்லை. எனக்கு இந்த பதவியில் மோகமும் கிடையாது. தனிப்பட்ட முறையில் விருப்பு, வெறுப்பு எனக்கு கிடையாது. அவர்கள் தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை வைக்காவிட்டால் அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனை மாற்றக்கூறலாம்.
கேள்வி:- தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இலவச கலர் டி.வி., ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
பதில்:- அது தேர்தல் வாக்குறுதி. அதனை கூற அவர்களுக்கு உரிமை உள்ளது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, April 06, 2006
நரேஷ் குப்தா பேட்டி
Posted by IdlyVadai at 4/06/2006 06:17:00 PM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










0 Comments:
Post a Comment