பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 05, 2006

கலைஞர் கதைக்கு வைகோ பதில் !

கலைஞர் கதைக்கு வைகோ பதில்....

"இன்றைக்கு ஒரு கதை எழுதியிருக்கிறார். அமிர்தவதின்னு ஒரு கதை எழுதி உள்ளார். யசோதர காவியம் என்ற ஒரு கதையை நண்பன் ஒருவன் சொன்னானாம். அந்த கதையில் ஆபாசமாக சொல்லி இருக்கிறார். இங்கே எனது சகோதரிகள் உள்ளனர். அவர்கள் இருப்பதால் அதற்கு மேல் நான் பேச விரும்பவில்லை. எனது பேச்சில் ஆவேசம் இருக்கும். ஆனால் ஆபாசம் இருக்காது.

நான் கலைஞர் அவர்களை கேட்கிறேன். அது வடமொழி காவியம். அந்த யசோதர காவியத்திலே செகண்ட் பார்ட்டை விட்டுட்டீர்களே? பாதி எழுதி விட்டு விட்டுவிட்டீர்கள். மன்னனையே மனைவி விஷம் வைத்து கொன்று மாமியாரையும் விஷம் வைத்து கொன்றுவிட்டாள். எதற்கு தெரியுமா? அதை எழுதாமல் விட்டுவிட்டார். மகனுக்கு புத்தி கிடையாது என்று மகனுக்கு முடிசூட்டவோ பட்டம் கட்டவோ மன்னன் விரும்பவில்லை. மன்னன் நல்லவன். தன்னுடைய மகனை மன்னனாக்க அவன் விரும்பவில்லை அதனால் இந்த மனைவி புருஷனை விஷம் வைத்து கொன்றுவிட்டு, அதுவரைக்கும் எழுதியிருக்கிறார்.

மனைவி தன் மகனை மன்னனாக்கினாள். யசோதர காவியத்தின் அடுத்த கதை அதுதான். அவனை மன்னனாக்கி அவள் வீணாக போனாள். அது வேறு விஷயம். இப்போ நான் குற்றஞ்சாட்டுறேன். அமிர்தவதின்னு சொல்லி சொல்லாமல் சொல்லி நீங்கள் ஒருபக்கத்துக்கு அழகாக எழுதிவிட்டீர்கள். செந்தமிழில் எழுதிவிட்டீர்கள். இப்போ நான் நேரடியாக கேட்கிறேன். நான் உங்களை சொல்கிறேன். திராவிட முன்னேற்ற கழகம்தான் அந்த மன்னன். அண்ணா உருவாக்கிய இயக்கம்தான் அந்த மன்னன்.

அந்த மன்னன் விரும்பாத காரியத்தை திராவிட முன்னேற்ற கழகத்தில் நீங்கள் திணிக்கிறீர்கள். திராவிட முன்னேற்ற கழகம் என்ற அந்த உயிரை சாகடித்து மகனுக்கு முடிசூட்டுவதற்காக அந்த அமிர்தவதியாக நீங்கள் காட்சியளிக்கிறீர்கள்."

3 Comments:

வரவனையான் said...

இவருதான் அத (திமுக) விட்டு விட்டு வந்திட்டாருல அப்புறம் என்ன பழைய கட்சி மேல பாசம் பொங்குது !!!!!

கிட்டாதெனில் வெட்டேன மற !!!!

Boston Bala said...

Karunanidhi Interview Snippets

Idly Vadai said...

boston bala - thanks.