பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 03, 2006

தயாநிதி மாறனுக்கு வைகோ சவால்

தயாநிதிமாறன் இன்று எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜ் டி.வி. ரத்து செய்தது தொடர்பாக நான் கூறிய கருத்துக்களுக்கு நாளைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்கப்போவதாக அறிவித்துள்ளார்.

"உனக்குத் தெரியுமா?
இந்த உலகமே இடிந்து விழுந்தாலும் வைகோ மன்னிப்பு கேட்கமாட்டான்.
யாரைப் பார்த்து மன்னிப்பு கேட்க சொல்கிறாய்?
41 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறேன்.
23 முறை சிறை சென்று உள்ளேன்.

நீ சரியான ஆண் மகனாக இருந்தால் என் மீது வழக்குப்போட்டுக் கொள்
நான் வக்கீல் வைத்துக்கொள்ளமாட்டேன்.
நானே நேரில் ஆஜராவேன்.
உன்னிடமும் குறுக்கு விசாரணை நடத்துவேன்.
என் மீது வழக்கு போடும் முன்பு உன் தாத்தாவிடம் கொஞ்சம் கொஞ்சம் யோசனை கேட்டுவிட்டு வழக்கு போடு.
நான் இப்போது 10 சதவீதம் தான் பேசி உள்ளேன்.
இன்னும் நான் 90 சதவீதம் தேர்தல் முடியும் வரை பேசுவேன்."

( வைகோ வீரபாண்டிய கட்ட பொம்மன் போல் பேசியிருக்கிறார் அதனால் இந்த படம் ஹி ஹி )

25 Comments:

சம்மட்டி said...

வைக்கோ சவடால் என்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

terror said...

//நீ சரியான ஆண் மகனாக இருந்தால் என் மீது வழக்குப்போட்டுக் கொள் //

இவர் இதை எதிர்பார்த்து பேசி இருக்கார் போல இருக்கு. சரிதான் !

//என் மீது வழக்கு போடும் முன்பு உன் தாத்தாவிடம் கொஞ்சம் கொஞ்சம் யோசனை கேட்டுவிட்டு வழக்கு போடு.
நான் இப்போது 10 சதவீதம் தான் பேசி உள்ளேன்.
இன்னும் நான் 90 சதவீதம் தேர்தல் முடியும் வரை பேசுவேன்."//

10 சதவீதத்துக்கே அவங்க எல்லா அலசலும் பண்ணி ஸ்டார் நெட்வொர்க்ல இருந்து சிஎன்என் வரை அவங்க வியாபாரத்தை ஒப்பிட ஆரம்ப்ச்சுட்டாங்க ! 90 சதவீதத்துக்கு இதுக்கும் மேல போனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. வைகோவோட திடீர் கூட்டணி மாற்றம் திமுகவுக்கு பெரிய ஆத்திரத்தை கிளப்பியிருக்குன்னு மட்டும் தெரியுது

Anonymous said...

porutham arumai.maha kusumbu therikirathu.

Haranprasanna said...

வைகோ ஆரம்பிக்கும்போதே, "அட பைத்தியக்காரா" என்றுதான் ஆரம்பித்தார். அதை விட்டுவிட்டீர்கள்!

ஆனாலும் தயாநிதிமாறனின் வழக்கை நான் வ்ரவேற்கிறேன். அரசியலில் யார் மீது என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்கிற எண்ணம் ஒழிய வேண்டும். இதுபோன்ற வழக்குகளினாலும், முக்கியமாக வழக்கின் முடிவுகளினாலுமே அது சாத்தியம்.

Idly Vadai said...

haranprasanna - ஜெயா டிவியில் காண்பித்தார்களா ?

Haranprasanna said...

ஜெயா டிவியில் காண்பித்தார்கள். நான் பார்த்தேன். நன்றி.

Anonymous said...

அப்படியொரு வழக்கு வருவதைத்தான் வை.கோ விரும்புகிறார் போலுள்ளது. அவரது தெனாவெட்டான, எதிராளியைச் சீண்டும் பேச்சில் இது தெரிகிறது. வழக்கு வந்தால் இன்னும் மக்களுக்கு இன்னும் சுவாரசியமாக இருக்கும்.
தயாநிதி என்ன செய்யப்போகிறார்?

Anonymous said...

ஜெயலலிதாவின் காலடியில் வீழ்ந்த வீரனின் பேச்சில் கன்னியம் இல்லை. துப்புக் கெட்டவர்களின் சாயலில்தான் அவரின் கர்ஜனை அமைந்துள்ளது. பொடா அவரை மென்டலாக்கி விட்டதா? 40 ஆன்டுகாலம் அவர் அரசியலில் இருந்தால் இவர் மயிரை புடுஙக முடியாதா என்ன?
- நர்மினா-

Dharan said...

புஸ்வான புயல் வைகோ.....

sun tv மதிமுக வை காட்ட வேண்டும் என்று சட்டமா என்ன?

தனிப்பட்ட ஒரு niruருவனம்..INCOME TAX
கட்டுகிறது பிறகு என்ன?

வி ட் டா ல் INFOSYS software company ல்

மதிமுக தொண்டர்கள வே லை க் கு வைக் க வேண் டு ம் என்று சொல்லூவார் போல!!!!!

பேச்சில் கன்னியம் இல்லை. துப்புக் கெட்டவர்களின் சாயலில்தான் அவரின் கர்ஜனை அமைந்துள்ளது

Idly Vadai said...

நர்மினா,

வார்த்தைகளை அளந்து பேசினால் நன்றாக இருக்கும். கொஞ்சம் டீசண்டாக பேசலாமே !

Anonymous said...

If he had got his expected number of constiuencies in DMK alliance.....Will he raise this SUNTV / BSNL issue ??? ..moodikitu iruparu...ithe dayanidhi maran-oda kaikorthu pose kuduparu...ellam kaligalam...ellame thirudargal...


வைக்கோ சவடால் என்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

agreed..

சம்மட்டி said...

ஒரு மத்திய அமைச்சரைப் பார்த்து ஆண்மகானா ? என்று கேட்பது அநாகரீகம், தாயாநிதி மாரனை தேர்ந்தெடுத்த தொகுதிமக்களைப்பார்த்து கேட்பதாக கூட பொருந்தும், வைகோ வின் பண்பாடு ஒரு அரசியல் முரண்பாடு. தாயானிதி மாரன் நான் நிருபிக்கிறேன் உன் உறவினர் பெண்களை அழைத்துவா என்று சொன்னால் இவர் எங்கு முகம் காட்டிக்கொள்வார்.

D The Dreamer said...

//If he had got his expected number of constiuencies in DMK alliance.....//

Anon: Even if MK had given him 35 seats he might not have stayed put in the DMK led front. That remains the hard truth. He just killed several birds with one stone. Of which one is the financial support to face the election.

Sorry Idli Vadai for hijacking your post and answering Anon. I just wanted to set things straight.

தயா said...

வைகோவின் மேடை பேச்சை இதற்குமுன் கேட்டிராதவர்களுக்கு ஜெயாவின் ஒளிபரப்பு அதிர்ச்சியாய் தான் இருந்திருக்கும். எனக்கும் தான்.

வைகோ நல்லவர் வல்லவர் என்பதெல்லாம் நாம் வாசித்த படித்த பத்திரிக்கைகள் வாயிலாக தான். அவர் நன்றாக பேசுவார் என்பதும் தான்.

ஆனால் இந்த பேச்சு அந்த பிம்பத்தை உடைப்பதாக இருந்தது. காமெடியன் போல வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பேசுகிறார்.

தவிர்த்திருக்கலாம்.

எதிர்ப்பது என முடிவு செய்துவிட்டார். இனி வக்கனையாக பேசுவது மக்களுக்கு உரைக்காது என நினைத்துவிட்டார். அதனால் இதுநாள் வரையில் தான் அடக்கிவைத்திருந்த கோபத்தை எல்லாம் கொட்டுகிறார் போல!

Idly Vadai said...

தயா - ஒன்றை கவனிக்க வேண்டும். மீண்டும் வைகோ திமுக பக்கம் போனாலும் இந்த பேச்சை ஜெயா டிவி ஒளிபரப்பும் :-)

neo said...

>> நர்மினா,

வார்த்தைகளை அளந்து பேசினால் நன்றாக இருக்கும். கொஞ்சம் டீசண்டாக பேசலாமே ! >>

இந்த 'ஜெண்டில்மேந்தனம்' உமக்கு 'நாரதர்' கலைஞரைப் பற்றி ஆபாசத்தின் உச்சமாகப் பேசியதை ஒருவரி நீக்காமல் வெளியிட்டபோதும் இருந்திருக்க வேண்டும். (வைகோவின் ஜெயா டிவி பேட்டி பற்றிய பதிவில்)

முடிந்தால் அதை வெளியிட்டது ஏன் என்று நீர் நேர்மையாக விளக்கவும். அதே போல 'நாரதருக்கு' இந்த ஜெண்ட்ல்மேன் அட்வைஸ் அப்போது 'ஸ்டாக்' இல்லாமல் போனதால் வழங்கவில்லையா என்பதையும் விளக்கவும்.

neo said...

'கர்னல் கருணா'த்தனமான எச்சித்தனமான புத்தியை வையாபுரி நாயுடு மவன் கோபால்சாமி நாயுடு காமிக்கிறார்!

Idly Vadai said...

Neo,

நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை. பின்னூட்டத்தில் 'ஆபாச' வார்த்தைகளை தவிற்க்கவும் என்று சொன்னதில் தவறில்லை. பின்னர் அதுவே தனி மனித தாக்குதலாகும் அபாயம் இருக்கிறது.

எல்லோருக்கும் இந்த 'so called' அட்வைஸ் பொருந்தும்.

ஜோ / Joe said...

இட்லி வடை அவர்களே!
நான் தெரியாமல் தான் கேட்கிறேன் ..எதை நீங்கள் ஆபாசம் எனச் சொல்லுகிறீர்கள்? 'மயிர்' என்பதையா? தமிழில் நம்பர்1 வலைப்பதிவில் தமிழை இழிவுபடுத்த இதே 'மயிர்' என்பதை தலைப்பிலேயே வைத்து எழுதிய போது நீரெல்லாம் என்ன பண்ணுனீரய்யா?...வைகோ இப்போது பேசி வருவதை விட 'மயிர்' ஒன்றும் ஆபாசம் இல்லை.

Idly Vadai said...

ஜோ,
என் வலைப்பதிவில் வேண்டாம் என்கிறேன் அவ்வளவுதான். மற்றவர்களை பற்றி நான் ஒன்னும் சொல்லபோவதில்லை. இந்த பிரச்சனையை மேலும் வளர்த்து விசைப்பலகையை தேய்க்க விரும்பவில்லை. நன்றி.

Anonymous said...

வைகோ-வின் பேச்சில் நியாயம் உள்ளது. பூனைக்கு(அரசியல் வியாபாரி கருணாநிதி குடும்பத்திற்கு) மணி கட்ட சரியான ஆள் வைகோ தான். என் யூகம் நிஜமானால் 2011-ல் வைகோ தான் நம் தமிழக முதல்வர்.
-ஜெயக்குமார்

Luckylook said...

2011ல் வைகோ முதல்வராக எல்லாம் ஆக முடியாது... மணி தான் ஆட்டிக்கொண்டு இருப்பார்.... ஆண்மகனாக இருந்தால் தனியாக நின்றிருக்க வேண்டும்... அதை விடுத்து பெட்டி வாங்கிக்கொண்டு நாகரிகம் இல்லாமல் பேசி வருவது பச்சை அரசியல் விபச்சாரம்.... வைகோவை மக்கள் அரசியல் விபச்சாரியாகத்தான் பார்க்கிறார்கள்.....

SK said...

ஆமாம்! பேச்சு சுவாரஸ்யத்தில், இந்த 'ஒரு நாள் கெடு' முடிந்து போனதை யாரும் கவனிக்க வில்லையே!

"த.மா.", "வை.கோ." மேல் கேஸ் போட்டாரா இல்லையா?

ஜெயக்குமார் said...

மணி ஆட்டிக்கொண்டிருப்பது கருணாநிதி போன்ற ஆத்திகவாதிகளின் வேலை. 1100 கோடி அரசு பணத்தில் இலவச கலர் டிவி கொடுத்து மாதம் 200 கோடியை தன் குடும்ப டிவிக்கு வருமானமாக பெற்றுதரும் சுயநலவாதியை ஓரம்கட்ட சரியான ஆள் வைகோ தான். ஒரு பெண்ணை எதிர்த்து தனியாக போட்டியிட முடியாமல், ஒரு பெரிய பட்டாளத்தையே துனைக்கு அழைக்கும் கருணாநிதி தான் உம் அகராதியில் ஆண்மகனா?

ஜெயக்குமார் said...

மணி ஆட்டிக்கொண்டிருப்பது கருணாநிதி போன்ற ஆத்திகவாதிகளின் வேலை. 1100 கோடி அரசு பணத்தில் இலவச கலர் டிவி கொடுத்து மாதம் 200 கோடியை தன் குடும்ப டிவிக்கு வருமானமாக பெற்றுதரும் சுயநலவாதியை ஓரம்கட்ட சரியான ஆள் வைகோ தான். ஒரு பெண்ணை எதிர்த்து தனியாக போட்டியிட முடியாமல், ஒரு பெரிய பட்டாளத்தையே துனைக்கு அழைக்கும் கருணாநிதி தான் உம் அகராதியில் ஆண்மகனா?