திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு கலர் டிவி என்ற ஒரு கலர்ஃபுல் திட்டத்தை அறிவித்திருக்கிறார். அதை தொடர்ந்து வந்த செய்திகள் மற்றும் கருத்துக்கள்
பெண்களின் பொது அறிவைப் பெருக்குவதற்கு பயன்படும் வகையில் தொலைக்காட்சி பெட்டி இல்லாத ஒவ்வொரு வீட்டுக்கும் அணëணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் விழாக்களில் இலவசமாக கலர் தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும். - திமுக தேர்தல் அறிக்கை
மாநிலத்தில் கலர் டி.வி. இல்லாத குடும்பங்கள் 20 லட்சம் இருக்கும். எல்லோருக்கும் கலர் டி.வி. தருவதற்கு ரூ.2,000 கோடி தேவைப்படும். இதை 4 ஆண்டுகளில் தரும்போது ஓராண்டுக்கு ரூ.500 கோடி தேவை - செய்தி
திமுகவின் தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு வீடு இலவசமாக டி.வி. கொடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். இதைப் பார்த்து நாடே சிரிக்கிறது. வறுமையில் வாடும் ஏழைகளுக்கான திட்டத்தை அறிவிக்கவில்லை. டி.வி. தரப் போவதாகக் கூறுவது ஏன்?.
அவர்களது குடும்ப டி.வி. பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடி விட்டதாகக் கணக்குக் காட்டி, விளம்பரக் கட்டணத்தை உயர்த்தி கோடி, கோடியாகச் சம்பாதிக்கத்தான். இதனால் ஏழைகளுக்கு என்ன லாபம் ? - வைகோ
தி.மு.க.,வினர் ஐந்து பைசா கூட செலவு செய்ய மாட்டார்கள். ஆனால் இன்று வீட்டுக்கு வீடு கலர் "டிவி' கொடுக்கிறேன் என சொல்கின்றனர். கலர் "டிவி' கொடுத்தால், ஏழை மக்களின் பசி போய் விடுமா...? - விஜயகாந்த்
வீடுதோறும் கலர் "டிவி' வழங்கப் போவதாக தேர்தல் அறிக்கையில் தி.மு.க., அறிவித்துள்ளது. தமிழ் பயிற்று மொழியாக்கப் படும் என்று கூறவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தற்போது தமிழர்களின் பண் பாட்டையே சீரழித்து வருகின்றன. தி.மு.க.,வின் தேர்தல் அறிவிப்பு தமிழர்களின் பண்பாட்டை மேலும் சீரழிக் கும் வகையில் அமைந்துள் ளது. இலவச கல்வி என்று அறிவிப்பதை விட்டு விட்டு இலவச "டிவி' என்று அறிவித்திருப் பதன் மூலம் கருணாநிதியின் சமூகப் பார்வை என்ன என்பது தெரிகிறது. - திருமாவளவன்.
மக்கள் கருத்து
விஜயலட்சுமி: வெள்ள நிவாரண தொகை வாங்கறதுக்கே பாடாய்பட்டோம். இதுல பலரு உயிரை விட்டாங்க... இப்ப "டிவி' தர்றாங்களா? இதுக்கு எத்தனை பேரு உயிரை விடப்போறாங்களோ... "டிவி' தரோம்ன்னு சொன்னாங்களே தருவாங்களா?
ஆட்டோ டிரைவர் சீனிவாசன்: எங்க குடும்பமே தி.மு.க.,வுக்குதான் ஓட்டு போடுவோம். "டிவி' எல்லாருக்கும் தருவாங்களா... இல்ல கொஞ்ச பேருக்கு கொடுத்துட்டு கட்சிக்காரங்களே எடுத்துப்பாங்களே! எப்படி தருவாங்க...?
டீக்கடைக்காரர் முகமது: நாங்க காலையில இருந்து இரவு வரை கஷ்டப்பட்டாதான் நாலுகாசு சம்பாதிக்க முடியும். கட்சிக்காரங்க பின்னாடி எங்களால் போக முடியுமா... அவங்க பிரியாணி சாப்பிடுறவங்க.. நாங்க ரேஷன் அரிசியைதான் சாப்பிடுறோம்.. இதுதான் எங்க பிழப்பு.
பூ வியாபாரி சந்திரா: உதயசூரியனுக்கு தான் நான் ஓட்டுப் போடுவேன். ஜெயலலிதாம்மா வெள்ள நிவாரணம், சுனாமின்னு அள்ளி அள்ளி கொடுத்துட்டாங்க... தலைவரு ஆட்சிக்கு வந்தா எப்படி "டிவி' தருவாரு?
பாகீரதி (வங்கி அதிகாரி): மக்களின் அன்றாட வாழ்க்கை டிவி யோடு முடிந்து விட போவதில்லை. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், ஏழை குழந்தைகளின் வறுமை, தரமான சாலை வசதி போன்ற எவ்வளவோ அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தான் தற்போதைய தேவை.
எஸ்.சீனிவாசன் (தொழிலதிபர்): கலர் "டிவி' கொடுப்பது இது முற்போக்கு சிந்தனையாக இல்லை. இலவசங்களால் எதையும் சாதிக்க முடியாது.
முனைவர் எஸ்.ரகு (கல்லூரி பேராசிரியர்): தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் இதுபோன்ற திட்டங்கள் அடிமட்ட மக்களுக்கு போய் சேருவது நல்ல திட்டம் தான். ஆண்டுகள் பல கடந்தும் இன்னமும் ஏழை எளிய மக்கள் வறுமையில் வாடுவதும், தகவல்களை பெற முடியாமல் இருப்பதும் முறையல்ல. அவர்களும் வாழ்வில் முன்னேற வேண்டும்.
பெரியார் தாசன் (சட்டக்கல்லூரி மாணவர்): தி.மு.க.,காரர்களுக்கு பயன்தரும் திட்டம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இழந்த வருவாயை மீண்டும் பெறவே இத்திட்டத்தை அறிவித்துள்ளனர்.
ஜி.சூர்யா (கட்டட கலைஞர்): கேபிள் டிவி அவங்க கையில் இப்பவே இருக்கு. அதை வெச்சு சம்பாதிக்க தான் இத்திட்டம்.
மாலதி ராமமூர்த்தி (பாஸ்ட் புட் கடை உரிமையாளர்): இந்த அறிவிப்பை பார்த்தால் அரசியல் கட்சி அறிவிப்பு போல இல்லை. வியாபாரியின் அறிவிப்பு போல உள்ளது. இலவச கலர் டிவி, இலவச கேஸ் ஸ்டவ், இலவச நிலம் எல்லாமே அப்பட்டமான பொய்.
டி.ஜெயராஜ் (பெட்டிக்கடை உரிமையாளர்): இது காதிலே பூ சுத்துற வேலை. பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகளில் கரன்ட்டே கிடையாது. அப்புறம் கலர் டிவிய வச்சுகிட்டு என்ன செய்யறது? வர்ற வருமானத்தெ கேபிள் டிவி கனெக்ஷனுக்கு குடுத்துட்டு சாப்பாட்டுக்கு என்ன செய்யறது?
விஜயகுமார்(ஆட்டோ ஓட்டுனர்): அனைவருக்கும் இலவசமாக கலர் "டிவி' வழங்க முடியுமா என்பது சந்தேகமே. பணமாக வழங்கினால் கஷ்டப்படுபவர்களுக்கு உதவும்.
சசிகலா ஸ்ரீதர் (குடும்பத் தலைவி): ஆசைகாட்டி பொதுமக்களை திசைதிருப்புகின்ற இத்தகைய அறிவிப்புகள் நல்ல அரசியலுக்கு நல்லதல்ல. நியாயமான நடைமுறையில் சாத்தியமான வாக்குறுதிகளை தெரிவிக்க வேண்டும்.
சத்தியமூர்த்தி(கரும்பு ஜூஸ் வியாபாரி): தேவையில்லாத அறிவிப்பு. கலர் "டிவி' வழங்குவது குழந்தைகளின் படிப்பை பாதிக்கும். பெண் குழந்தைகளுக்கு பயன்படக்கூடிய திட்டங்களை அறிவித்திருக்கலாம்.
* ஜெயப்பிரகாஷ்(ஜே.இ.,): மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் ஓட்டுக்காக இத்தகைய அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. சொந்தக் காசையா கொடுக்கிறார்கள்?
* வைத்தியநாதன்(சுயதொழில் புரிவோர்): கல்வித்துறை மேம்பாடு, வேலைவாய்ப்பு முதலியவற்றை மேம்படுத்துவது, தொழில்துறையை மேம்படுத்துவது ஆகியவை தான் தற்போதைய உடனடி தேவை.
* காயத்ரி(ஏரோனாட்டிக்ஸ் மேனேஜ்மென்ட் மாணவி): தேர்தல் சமயங்களில் சொல்வது ஒன்று. ஆனால் தேர்தலுக்கு பிறகு செய்வது ஒன்று. கல்வி, அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
குமார் (தனியார் நிறுவன ஊழியர்): கிராமப்புற மக்களுக்கு தேவையான ஒன்றாக இதைக் கருதுகிறேன். கலர் "டிவி' கொடுப்பது அரசுக்கு பெரியவிஷயம் இல்லாவிட்டாலும், அதைவிட பல கிராம மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன.
கதிர்வேல் (ஆட்டோ டிரைவர்): அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி அரிசியை வேண்டுமானால் கொடுக்க முடியும். மற்றபடி கலர் "டிவி' என்பதெல்லாம் ஏமாற்று வேலை. ஒருவேளை ஆட்சிக்கு வந்து "டிவி' கொடுத்தாலும் அதை கட்சியினரே பெற்று செல்வார்கள். பொதுமக்களுக்கு உருப்படியாக எதுவும் வரப்போவதில்லை.
தீபன் (கல்லூரி மாணவர்): இப்பல்லாம் தேர்தல் கூட வியாபாரம் ஆயிடுச்சி பாத்தீங்களா? "டிவி' பார்த்து கொண்டே சோத்த உருட்டி உள்ளே போட்டா தமிழகம் சீக்கிரம் உருப்பட்டு விடுமா? "டிவி'க்கு பதில் ஒரு மொபெட்டை பாதி விலை கொடுத்து வாங்க சலுகை காட்டலாம். பஸ்சுலயும், ரயில்லயும் முட்டிமோதி தொங்க அவசியம் இருக்காது.
பத்மா ( அரசு ஊழியர் ): தமிழகத்தில் ஒரு ஐந்து வருஷம் கட்சிகளே இல்லாம ராணுவ ஆட்சி இருந்தலே போதும். தமிழகம் உருப்பட்டு விடும். தேர்தல் அறிக்கைன்னு மக்களை நல்ல ஏமாத்தறாங்க... காவிரி, பெரியார் அணை, பாலாறு அணை ஆகிய பிரச்னைகளுக்கு என்ன தீர்வு காணப்போறாங்க? கல்வி, தொழில்நுட்பம், இளைய தலைமுறை குறித்த விஷயங்களை எப்படி செய்யப் போறாங்க? அதை விட்டுட்டு " இத கொடுக்கறோம்... அத கொடுக்கறோம்'ன்னு சொன்னா அதெல்லாம் சுத்த "ஹம்பக்!'
கல்லூரி மாணவிகள் கீதா, சாந்தி, வசுப்பிரதா: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் "டிவி' கொடுப்பதாக அறிவித்துள்ளனர். இதெல்லாம் என்ன சாத்தியமா? தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள இலவசங்களில் அதற்கான செலவு மீண்டும் நம் தலைக்குதான் வந்து சேரும். இப்போ ஒரு கிலோ அரிசி 3.50 ரூபாய்க்கு ரேஷனில் போடப்படுகிறது. இதற்கே ஆயிரத்து 750 கோடி ரூபாய் மானியமாக நிதி ஒதுக்கப்படுகிறது. கிலோ அரிசி 2 ரூபாய்க்கு கொடுத்தால் மூவாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மானியம் ஒதுக்க வேண்டும். அதற்கு தேவையான நிதியும் நம்மிடம் இருந்துதான் வரியாக வசூலிக்கப்படும். இப்போதெல்லாம் தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் விளம்பர யுக்திபோல விடும் அறிக்கையெல்லாம் இனி வரும் தேர்தலில் எடுபடாது.
கிருபாகரன் (கல்லூரி மாணவர்) : தற்போதெல்லாம் அரசியல் வாதிகளை விட சுயநலவாதிகளே அதிகமாக அரசியலில் இருக்கின்றனர்.
கன்னியம்மாள் (பூ வியாபாரி) : "டிவி', காஸ் கொடுக்கறேங்கறாங்க... கொடுத்தா ரொம்ப நல்ல விஷயம். கிலோ அரிசி 2 ரூபாய்க்கு கொடுத்தா சந்தோஷமா வாங்கிக்குவோம். ஆனால், இதெல்லாம் எதிர்பார்த்து நாங்க இல்லை. பொழப்பு நடந்தா சோறு. இந்த "டிவி', காஸ் இத கொடுக்குறத விட, வீடு இல்லாதவங்களுக்கு கால் கிரவுண்டு இடம் கொடுத்தா ரொம்ப சவுகரியமா இருக்கும்.
நீங்க உங்க கருத்தை பின்னூட்டத்தில் சொல்லுங்கோ :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, April 01, 2006
டிவி அரசியல்
Posted by IdlyVadai at 4/01/2006 01:48:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











5 Comments:
eanntha solla saame
eaniku date 1
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா போன்றவர்களின் வழியே தன் வழி எனும் கலைஞரா இப்படியான வாக்குறுதிகளை வழங்குகிறார்? கலைஞருக்கு என்ன கொள்கைப் பஞ்சம் வந்து விட்டதா? தொலைக்காட்சிகளுக்கு பதிலாக ஊர்கள் தோறும் உள்ள நூல்நிலையங்களில் மின்கணணிகள் வைப்போம் என்று சொல்லியிருந்தால் கலைஞரை பாராட்டியிருக்கலாம். ஆனால் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு மாறாக இப்படியான கீழ்த்தனமான அறிவிப்புகள் விடுவது மிகவும் மனவேதனையாக இருக்கிறது. கலைஞர் மீது, பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவன் நான். எத்தனையோ அருமையான, காலத்தால் அழியாத பல தமிழ் நூல்கள் தந்தவர். சங்கத் தமிழ், தொல்கப்பியப்பூங்கா, குறளோவியம், பண்டாரக வன்னியன், ரோமபுரிப் பாண்டியன்... அப்பாடி, இப்படி எத்தனை நூல்கள் தந்த கலைஞர், அரசியலில் இருந்து ஒதுங்கி எமக்கு இன்னும் பல நூல்கள் தர வேண்டும் என்பதே என் ஆசை. உலகில் வாழும் எத்தனையோ இலட்சம் தமிழர்களின் இதயங்களில் முதல்வராகவே கலைஞர் இருக்கிறார்.அதுதான் நிரந்தரமான முதல்வர் பதவியும் கூட.
கலர் டிவி கிடைக்கப்போவது மகிழ்ச்சியே.
என்னுடைய கவலையெல்லாம் அது 50 இன்ச் ப்லாஸ்மா டிவியாக இருக்க வேண்டுமென்பதே.
கூடவே இலவச கேபிள் இணைப்பும் கொடுத்தா என்னோட ஓட்டு திமுகவுக்கே.
செந்தில், கவுண்டமணிக்கு மொட்ட மாடியில் காட்டின கலர் டி.வி தான் ஞாபகத்துக்கு வருது.
டீவி அரசியலில், மக்கள் அனைவருக்கும் டீ.வி தேவைப்படவில்லை. சிலருக்கு இடம் தேவைப்படுகிறது. ஒருவருக்கு மொபெட் தேவைப்படுகிறது. எனவே கலைஞர் ஒரு custimization option கொண்டுவரலாங்கோ.
வடிவேலு ஒரு படத்தில் சும்மாவே உக்காந்திருப்பாரே, அப்படி நிறைய பேர்கள் உள்ளனர். அவர்களின் கைச்செலவுக்கும் அரசே பணம் கொடுக்கலாம்.
Post a Comment