பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 21, 2006

முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டி - சரத்குமார்

கே:- சென்னையில் தேர்தல் பிரசாரத்தை எங்கெங்கு செய்தீர்கள்.

ப :- சென்னையில் நேற்று பிரசாரம் தொடங்கினேன். காளிகாம்மாள் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வட சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் பிரசாரம் செய்தேன். அ.தி.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் நல்ல எழுச்சி உருவாகி இருப்பதை காண முடிகிறது.

கே:- சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

ப:- நான் 4 தேர்தல்களை சந்தித்து உள்ளேன். மக்களிடம் `பல்ஸ்' பார்க்கும்போது அ.தி. மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கே:- தி.மு.க.வில் இருந்ததற்கும், தற்போது அ.தி.மு.க.வில் இருப்பதற்கும் எப்படி உணருகிறீர்கள்?

ப:- நான் அ.தி.மு.க.வில் தான் இருந்திருக்க வேண்டும். 8 ஆண்டு காலம் தி.மு.க.வில் இருந்ததை விட இப்போது சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன். தி.மு.க. தயாநிதி முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது. மக்களுக்கான எந்த பணி களையும் அவர்கள் செய் வதில்லை. நாளைய சமுதாயத் தை பற்றியோ, இளைஞர்க ளின் எதிர்காலத்தை பற்றியோ அவர்களுக்கு அக்கறை இல்லை. சுயமரியாதைக்கும் தி.மு.க.வில் இடமில்லை. எனவே எதிர் கால சிந்தனையும் சுயமரியாதையும் இருக்கிற இடத்துக்கு நான் வந்துள்ளேன். என்னை பாசத்தோடு அரவணைத்துக் கொண்டார் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

கே:- எதை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்வீர்கள்?

ப:- அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் இன்னும் மக்களுக்காக செய்யப்பட உள்ள திட்டங்கள் குறிப்பாக மதிய உணவு திட்டம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகம், இலவச சைக்கிள், அனைத்து மக்களுக்கும் மாதந்தோறும் இலவச 10 கிலோ அரிசி ஆகியவற்றை முன்னிறுத்தி பிரசாரம் செய்வேன்.

கே:- தற்போது தி.மு.க.வின் நிலை என்ன?

ப:- தி.மு.க.வில் தற்போதைய நிலவரப்படி முதல்- அமைச்சர் பதவிக்கு 2 பேர் போட்டி போடுகிறார்கள். ஒருவர் தயாநிதி மாறன், இன்னொருவர் மு.க.ஸ்டாலின். 3-வதாக இன்னொருவரும் காத்திருக்கிறார். அவர் உதயநிதி.தரம் இல்லாதவர்கள் எல்லாம் முதல்-அமைச்சர் பதவிக்கு போட்டி போடுகிறார்கள். சென்னையில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரியாக இருக்கும் தயாநிதிமாறன் திராவிட இயக்க வளர்ச்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த வைகோவை பார்த்து சென்னை பாஷையில் ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?என்று கேட்கிறார். அப்போது மேடையில் இருந்த அவரது தாத்தாவும் இதுபற்றி கண்டிக்கவில்லை. இது என்ன அரசியல் நாகரீகம். எல்லா தொழிலையும் அவர்கள்தான் செய்ய வேண்டும், எல்லா பத்திரிகைகளையும் அவர்கள் தான் நடத்த வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மை சர் வாதிகார போக்குக்கு அவர்கள் வழிவகுத்து வருகிறார்கள்.

கே:- அ.தி.மு.க.வில் சேர ஒரு நடிகருக்கு ரூ. 100 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் அதற்கு அந்த நடிகர் மறுத்து விட்டதாகவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறாரே?

பதில்: சினிமாவில் பெரிய நடிகர்கள், உயரமான நடிகர்கள் நிறைய பேர் உள்ளனர். எந்த நடிகர் என்பதை தைரியமாக அவரே சொல்லட்டும் அரசியல் ஞானி என்று கூறி கொள்ளும் அவர் அதனை வெளிப்படையாக தெரிவிக்க ஏன் தயங்குகிறார்ப முரசொலி மாறன் மறைவுக்கு பிறகு பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கூட்டணிக்கு தி.மு.க. தாவிய போது காங்கிரசிடம் இருந்து தி.மு.க. எவ்வளவு பணம் வாங்கியது

கே: தற்போது அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ள உங்களின் மன நிலை எப்படி உள்ளது?

ப: இப்போது தான் நிம்மதியாகவும், சந்தோஷ மாகவும் இருக்கிறேன்.எனது மனபாரத்தை இறக்கி வைத்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது.

கே: அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டதால் தி.மு.க. தரப் பில் இருந்து உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதா?

ப: தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் எந்த பிரச்சினை வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். வருமான வரித்துறையை ஏவி விட்டு என் வீட்டில் சோதனை கூட நடத்தலாம். நான் ஊரில் இல்லாத போது என் வீட்டில் வந்து சோதனை நடத்தட்டும். அங்கு என்ன இருந்தாலும் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். தி.மு.க.வில் தனி மனித ஆதிக்கம் ஓங்கி உள்ளது.

கே: உங்களுடன் சேர்ந்து மனைவி ராதிகாவும் பிர சாரத்துக்கு வருவாரா?

ப: இப்போதைக்கு அந்த திட்டம் இல்லை. என் மகனுக்கு இரண்டு வயது ஆகிறது. அவனை பராமரிக்க வேண்டும். தேவைப்படும் போது நாங்கள் நிர்பந்திக்கப்படும் போது அவரே பிரசாரத்திற்கு வருவார்.

கே: நிர்பந்தம் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்?

ப: போக, போக நீங்களே பார்ப்பீர்கள். எங்களை சீண்டி பார்த்தால் விபரீதமான விளைவுகளை தி.மு.க. சந்திக்கும். அரசியல் நாகரீகம் கருதி சில விபரங்களை வெளியே சொல்லவில்லை. அதை நாங்கள் சொல்ல ஆரம்பித்தால் தி.மு.க.வுக்கு ஒரு `சீட்' கூட கிடைக்காது.

கே: சில நாடார் அமைப்புகள் அந்த இயக்கத்துக்கு தலைமை தாங்க அழைத்ததாகவும், இப்போது நீங்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டதால் அவர்கள் வருத்தப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்களே?

ப: அவர்கள் நல்ல தீர்மானத்தைத்தான் நிறை வேற்றி இருக்கிறார்கள். அந்த தீர்மானத்தில் சரத்குமார், அ.தி.மு.க.வில் இருந்தாலும், சுய மரியாதையை விட்டுக் கொடுக்கக்கூடாது என்று தான் கூறி இருக்கிறார்கள்.

அவர்களின் எதிர் பார்ப்புக்கு ஏற்ப அன்பும், பண்பும், பாசமும், நிறைந்த இடத்திற்குதான் வந்துள்ளேன். அவர்கள் எதிர்பார்ப்புக்கு மேல் ஒரு படி செல்லக்கூடிய இயக்கத்தில் தான் சேர்ந்துள் ளேன். அவர்களின் எதிர் பார்ப்புகள் நிச்சயமாக நிறை வேற்றப்படும்.

கே: அ.தி.மு.க.வில் சேர்ந்த தால் உங்கள் மன்ற நிர்வாகிகள் மிரட்டப்படுவதாக கூறப்படுகிறதே?

ப: சன் டி.வி.யும், ஒரு ரூபாய் பத்திரிகையும் சரத்குமார் ரசிகர் மன்ற கார்டை காட்டி `சரத்குமார் ஒழிக' என்று சத்தம் போட்டால் ரூ. 10 ஆயிரம் தருவதாக ஆசை காட்டி வருகிறார்கள். அதற்கெல்லாம் எனது மன்றத்தினர் விலை போக மாட்டார்கள். அவர்கள் மீது நானும் என் மீது அவர் களும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளோம். நெல்லை மாவட்டத்தில் சரத்குமார் நுழைய கூடாது என்று சிலர் கூறியதாக ஒரு ரூபாய் பத்திரிகையில் செய்தி வெளியிடுகிறார்கள். இதன் மூலம் சாதி பிரச்சினையை அவர்களே கிளப்பி விடுகிறார் கள். என் மீது ஒரு கீறல் விழுந்தாலும் தி.மு.க. தான் பொறுப்பு. அவர்கள் வன் முறை கலாசாரத்தை உருவாக்கு கிறார்கள்.
கே: கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதியே தற்போது சம்மதம் தெரிவித்திருப்பது, அவருக்கு ஏற்பட்ட தோல்வி பயத்தை வெளிப்படுத்து கிறதா?

ப: மத்திய மந்திரி இளங் கோவன் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் வேண் டும் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக கட்சியின் உயர்நிலை கூட்டத்தை கூட்டி இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தவர் கருணாநிதி. ஆனால் அவரே இப்போது கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டு வருகிறார் என்றால், தோல்வி பயம் அவருக்கு வந்துவிட்டது என்பது தான் முக்கிய காரணம்.
கே: தேர்தலுக்கு பிறகு நாடார் அமைப்புகள் உரு வாக்கும் அரசியல் அமைப்புக்கு உங்களை தலைமை ஏற்க அழைப்பு விடுக்க இருப்பதாக கூறி இருக்கிறார்களே?

ப: அப்படி அவர்கள் தீர்மானம் போட்டு இருக்கி றார்கள். வருங்காலத்தில் நான் அவர்களை அழைத்து பேசி இங்கே (அ.தி.மு.க.) வரவைக்கும் சூழ்நிலையும் ஏற்படும். நான் அனைத்து சமுதாய மக்களையும் ஒருங் கிணைத்து சாதி, மத, பேத மற்ற சமுதாயத்தை உருவாக்க நினைப்பவன்.
கே: தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறுகிறது. ஆனால் அதை எதிர்கட்சிகள் ஏற்க மறுக்கிறதே?

ப: அவர்கள் கருத்து கணிப்பை ஏற்க வேண்டாம். மக்கள் தீர்ப்பை ஏற்கத்தானே வேண்டும்.

கே: தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோவும், தி.மு.க.வில் இருந்து நீங்களும் விலகியது சந்தர்ப்பவாதம் என்று தி.மு.க. கூட்டணியினர் கூறுகிறார்களே?

ப: நான் தி.மு.க.வில் இருந்த போதும் எதையும் அவர்களிடம் கேட்கவில்லை. சரத்குமார் இதை கேட்டார் அதை கேட்டார் என்று என் மீது குற்றச்சாட்டு கூற முடியாது. தமிழக மக்களின் எதிர்கால தேவைகள் மக்க ளின் கடமைகளை செய்ய தவறும் போது அதனை சுட்டிக்காட்டுவது எப்படி தவறாகும். சந்தர்ப்பவாதமாக செயல்படுபவர்கள் அவர்கள் தான். தனது குடும்பத்தை பற்றி நினைப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை.
கே: மத்திய அரசு நடத்திய தபால்தலை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயை அழைத்தது தான் நீங்கள் தி.மு.க.வில் இருந்து விலகு வதற்கு காரணமா?

ப: நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்ட சில நாட்களில் மத்திய அரசு விழாவில் பிரதமர் முன்னிலையில் நடிகர் விஜயை கலந்து கொள்ள செய்தது என்ன நியாயம். எத்தனையோ பெரிய நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளனர். அவர்களை அழைத்து சென்றிருக்கலாம். ஆனால் தயாநிதி மாறன் நடிகர் விஜயை அழைத்து சென்று தபால் தலையை வெளியிட்டது சகித்து கொள்ள முடியாத ஒரு நிகழ்வு ஆகும் அதுவும் எனது மனதை உறுத்தியது.

கே: இன்று நீங்கள் எங்கெல்லாம் தேர்தல் பிரசாரம் செய்கிறீர்கள்.

ப: இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு கோவில்பட்டி செல்கிறேன். அங்கிருந்து ஓட்டப்பிடாரம், விளாத்திக் குளம், தூத்துக்குடி ஆகிய பகுதி களில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறேன்.

4 Comments:

ஜெயக்குமார் said...

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்ன என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ தெரியவில்லை.

அடுத்த தேர்தலில் திமுக இருக்காது என்று அதிமுக-வும், அதிமுக இருக்காது என்று திமுக-வும் கூறிக்கொள்கின்றன. ஆனால் இவர்களின் நடவடிக்கைகளைப்பார்த்தால் அடுத்த தேர்தலுக்கு தமிழ்நாடு இருக்குமா?, இந்த தலைவர்கள் இருப்பார்களா?, இவர்களின் கட்சி இருக்குமா அல்லது ஓட்டுபோட மக்கள் தான் இருப்பார்களா? என்று தெரியவில்லை.

ஜோ / Joe said...

//எனவே எதிர் கால சிந்தனையும் சுயமரியாதையும் இருக்கிற இடத்துக்கு நான் வந்துள்ளேன்.//

ஏம்பா சர்பத் குமாரு..சோக்கடிக்குறதுக்கு ஒரு அளவு வேண்டாமாப்பா!

வழிப்போக்கன் said...

ஜெயகுமார் என்ன பைத்தியம் புடிச்சி அலையரமாதிரி தெரியுது. கமென்ட்டுன்ற பேர்ல எதயாச்சும் ஒலரவேண்டியது...

naagareega komali said...

பணத்துக்காகவோ, பயத்துக்காகவோ. நாய் வேஷம் போட்டுவிட்டால், குரைத்துதானே ஆகவேண்டும். இவர்களை நினைத்தால் பரிதாபப்படத்தான் தோன்றுகிறது. சந்தர்ப்பவசத்தால் கட்சி/அணி தாவிவிட்டு நாக்கைப் பிரட்டி பேசும் இவர்களுக்கு கமல் 100 மடங்கு மேல்.