பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 19, 2006

அதிமுக - 2000, திமுக 6000

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவைப்படும் நிதி விவரம்: அ.தி.மு.க.-ரூ.2000 கோடி; தி.மு.க.-ரூ.6000 கோடி

தேர்தல் களத்தில் நிற்கும் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் சார்பிலும் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை நிறை வேற்றுவோம் என்பதுடன் மக்களை கவரும் வண்ணம் அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளன.

கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளும், அந் தந்த கட்சிகள் சார்பில் தனியாக வும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன.

அ.தி.மு.க.சார்பில், தற்போது ரேஷனில் வழங்கப்படும் 20 கிலோ அரிசியில் 10 கிலோ இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டிப்பட்டி தேர் தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டார். 10 கிலோ அரிசி ரூ.3.50 க்கும் 10 கிலோ அரிசி இலவசமாகவும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தி.மு.க.தேர்தல் அறிக்கையில் ஒரு கிலோ அரிசி ரூ.2க்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலவச கலர் டி.வி. கியாஸ் அடுப்பு ஆகியவற்றையும் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

ம.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 15 கிலோ இலவச அரிசி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் இந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவைப்படும் நிதி விவரம் தெரிய வந்துள்ளது. அ.தி.மு.க. அறிவித்துள்ள 10 கிலோ இலவச அரிசி திட் டத்தை நிறைவேற்ற அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி தேவைப்படும்.

தற்போது மத்திய அரசு ரேஷன் அரிசி விலையை கிலோ ஒன்றுக்கு ரூ.5.65 வீதம் மாநிலங்களுக்கு வழங்குகிறது. அந்த அரிசியை ரேஷனில் ரூ.3.50க்கு மாநில அரசு விநியோகிக்கிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டு தோறும் ரூ.1,350 கோடி இழப்பு ஏற்படுகிறது. தற்போது 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் மூலம் மொத்த இழப்பு ரூ.2 ஆயிரம் கோடியாக உயரும்.

அதே போல் தி.மு.க. அறிவித்துள்ள இலவச கலர் டி.வி. திட்டத்தை நிறைவேற்ற ரூ.3,180 கோடியும், இலவச கியாஸ் அடுப்பு திட்டத்துக்கு ரூ.160 முதல் ரூ.260 கோடி வரையும், ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவதன் மூலம் ரூ.2490 கோடியும் நிதி தேவைப்படும்.

தி.மு.க.வின் இந்த 3 திட்டத்திற்கு தேவைப்படும் மொத்த நிதி கிட்டத்தட்ட ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு ஆகும்.

நடிகர் விஜயகாந்த் 15 கிலோ இலவச அரிசி தருவதாக கூறி இருக்கிறார். இந்த திட்டத்திற்கு ரூ.3180 கோடி நிதி தேவைப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான ம.தி.மு.க.வின் வாக்குறுதியை நிறைவேற்ற ரூ.420 கோடி நிதி தேவைப்படும்.

தலவல் உதவி: மாலைமலர்

0 Comments: