பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 20, 2006

10 கிலோ அரிசி இலவசம் - அறிவிப்பு இல்லை அலறல் - கலைஞர்

கேள்வி: முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிபந்தனையின்றி 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாரே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: ஜனங்கள் அதுபற்றி எல்லாம் வேடிக்கையாக கேட்டு வருகிறார்கள். தேர்தல் அறிக்கை என்பது புனிதமானது. தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு போட்டியாக அது சொல்லப்பட்டுள்ளது.

கேள்வி: ஜெயலலிதா தற்போது 10 கிலோ அரிசி இலவசமாக கொடுப்பதாக சொல்லியுள்ளாரே. இது சாத்தியப்படுமா?

கிலோ 2 ரூபாய்க்கு அரிசி வழங்கப்படும் என்று சொன்னவுடன் இது ஆகாத காரியம். மக்களை ஏமாற்றுகிற வேலை. கட்டுப்படியாகாது. நிதி ஆதாரம் இடம் தராது என்றெல்லாம் பேசிய ஜெயலலிதா ஒரே நாளில் தன்னை மாற்றிக்கொண்டு இப்படி அறிவித்து இருப்பது தோல்வி பயத்தின் எதிரொலிதான் என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை.

மனோகரா படத்தில் வசந்தசேனையை பயமுறுத்துவதற்காக கேசரிவர்மன் அருவ உருவத்தில் (மாயத்தோற்றம்) பயமுறுத்துவது போல், தேர்தல் தோல்வி அவர்களை பயமுறுத்துகிறது. இந்த திடீர் அறிவிப்புக்கு அதுதான் காரணம். சொல்லபோனால் இது அறிவிப்பு அல்ல அலறல்.

அ.தி.மு.க. 2001-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. கல்வித்துறையில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமனம் என்று சொன்னார்கள். அதை நிறை வேற்றவில்லை.

வேலை தேடி அலையும் நிலை அறவே இருக்காது என்று சொன்னார்கள். அதையும் செய்யவில்லை.

கோப்புகள் மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை என்றார்கள். ஆனால் ஊழல் கோப்புகள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கிராமபுரத்தில் சமையல் எரிவாயு அடுப்பு கொடுப்பதாக சொன்னார்கள். அதையும் கொடுக்கவில்லை.

பெண்களுக்கு பெண்களே நடத்தும் தனி தொழிற்பேட்டை அமைப்பதாக கூறினார்கள். அதுவும் அமைக்கவில்லை.

கேள்வி: தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க. என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளது?

பதில்: நான்குநேரியில் பெரிய தொழிற்பேட்டை அமைப்பதற்கு 2 ஆயிரம் ஏக்கரில் நில ஆர்ஜிதம் செய்தோம். முரசொலி மாறன் தொழில் அமைச்சராக இருந்தபோது அது நடந்தது. ஆனால் அதன் பின்னர் ஆட்சி மாறியது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் சில இடங்களை தேர்வு செய்து தொழில் வளர்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

ஒவ்வொரு முறையும் தி.மு.க. ஆட்சி வரும் போதெல்லாம் தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக ஓசூர், ராணிபேட்டை ஆகிய இடங்களில் தொழில் பேட்டை அமைத்துள்ளோம். சென்னையில் மிகப்பெரிய டைட்டல் பார்க் நிறுவி உள்ளோம். இந்தியாவில் உள்ள பெரிய தொழில் கூடங்களில் அதுவும் ஒன்று. வருகிற தேர்தல் மூலம் தி.மு.க. ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிற்பேட்டை உருவாக்கப்படும். அந்தந்த மாவட்டத்தின் வசதி வாய்ப்புகளை பொருத்து தொழிற்பேட்டைகள் தொடங்கப்படும்.

கே: சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது சினிமாவின் எழுச்சியாப அல்லது அரசியலின் வீழ்ச்சியா?

ப: இதற்கு மக்களிடையே உள்ள விழிப்பின்மைதான் காரணம். அதற்காக கலையுலகில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்லமாட்டேன். ஆனால் சினிமாகாரர்களை அரசியல் கட்சிகள் (குறிப்பாக அ.தி.மு.க.) பிரசாரத்துக்கு இழுக்கும் முறை பெரிய வியாபாரமாக உள்ளது. நேற்றுக்கு கூட ஒரு பிரபலமான நடிகரை அ.தி.மு.க.வில் இழுக்க ரூ.100 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு அந்த நடிகர் மறுத்து விட்டார். அவரது பெயர் கேட்காதீர்கள்.

கே: அது நடிகர் ரஜினிகாந்த் என்று எடுத்துக்கொள்ளலாமா?

ப: அதுபற்றி நான் சொல்ல மாட்டேன்.

கே: நடிகர் சரத்குமார் தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க. வுக்கு சென்றது தென் மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா?

ப: நீங்கள்தான் அதை சொல்ல வேண்டும்.

கே: சாதாரண உப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதை நீக்க நட வடிக்கை எடுப்பீர்களா?

ப: 6 மாத காலமாக அந்த துறை மந்திரியுடன் பேசியிருக் கிறேன். நல்லவிதமாக பதில் வரும் என நினைக்கிறேன். மீண்டும் பேசுவேன்.

கே: சிறிய உப்பு உற்பத்தியாளர்கள் இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்களே?

ப: அந்த கோரிக்கை வந்துள்ளது. தி.மு.க. ஆட்சி அமைந்தால் உடனடியாக பரிசீலிக்கப்படும்.

கே: மீனவர்களுக்கு டீசல், மண்எண்ணை மானியம் வழங்கப்படுமா?

ப: தி.மு.க. ஆட்சியில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தொடரும்.

கே: ஜெயலலிதா அறிவித்துள்ள இலவச அரிசி திட்டம் தேர்தலுக்கு புறம்பானதா?

ப: அதை தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்ய வேண்டும்.

கே: சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படுவதால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறதே?

ப: மீனவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. அப்படி பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் வழங்கப்படும். தி.மு.க. ஆட்சி வராவிட்டால் கூட மத்திய அரசு மூலம் வழங்க உத்திரவாதம் அளிக்கிறேன்.

கே: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

ப: அது மக்களின் முடிவை பொறுத்தது. கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாது என்றால் அதை தி.மு.க. எதிர்க்காது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் தி.மு.க. ஆட்சி அமையவே அதிக வாய்ப்பு உள்ளது.

தகவல் உதவி: மாலை மலர்

2 Comments:

தயா said...

ஜெ சாத்தியமில்லை என்று சொன்னார். வைகோவும் சொன்னார்.

ஆனால் இன்றைக்கு சாத்தியம் என்று சொன்னவுடன் இவர்கள் அலறுகிறார்கள்.

நீங்க தானே கூட்டம் போட்டு இன்ன இன்ன செய்து இப்படி இப்படி குடுக்கலாம் என்று சொன்னீர்கள். போதாதற்கு ப.சி வேறு சாத்தியம் என்று சொல்லிவிட்டார். நாலு முறை முதலமைச்சர் நாட்டின் நதியமைச்சர் என பலர் எடுத்துக்காட்டிய பிறகு ஆகா அரசி கொடுப்பது சாத்தியம் போல என நினைத்து "பொன்னையனை?!" கலந்து கொண்டு 25 பைசா குறைச்சே கொடுக்கலாம் என்று தெளிவாக புரிந்து கொண்டு அதனால் நாமும் கொடுக்கலாமே என்று அறிவித்துவிட்டார்.

சாத்தியம் எனும் போது கருணாநிதி கொடுத்தால் என்ன ஜெ கொடுத்தால் என்ன? அதனால் ஜெவுக்கு வோட்டு போட வேண்டியது தான் மக்கள் முடிவெடுத்துவிட்டால்; அதனால் தான் இப்போது அறிவிப்பு அலறலாகியிருக்கிறது.

இலவச அரிசியை பற்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டுமென்றால் இலவச டிவி பற்றி யார் முடிவெடுப்பது?

ஃஃமீனவர்கள் பாதித்தால் நிவாரணம்.ஃஃ வரும் முன் காப்போம் திட்டம் குழந்தை பிறப்புக்கு மட்டும் தான் போல!

ரஜினிக்கு நூறு கோடியா? ஜெ பல கோடிகள் வைத்திருப்பார் போலிருக்கிறதே. கலைஞர் பேசாமல் ஆளுக்கு ஓரு லட்சம் இலவசம் என அறிவித்துவிடலாம். போட்டியாக ஜெவும் ஆளுக்கு ஒரு கோடி என அலறுவார்.

கலைஞர் ஜெ வீட்டு கஜானாவை காலி செய்து ஓரு லட்சம் கொடுக்க முடியும் என்று சொல்வார். ஜெ சன் குழுமத்தை விற்று கொடுப்பேன் என சொல்வார்.

நமக்கும் கொஞ்சம் தேறும். சீக்கிரம் Flash News போடுங்க இட்லி வடை!

Anonymous said...

Please visit this

http://www.aaraamthinai.com/arasiyal/states/2006/apr21state.asp

Till today i was not aware of this...