பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 11, 2006

போட்டுத்தாக்கு

"பொதுக் கூட் டங்களில் பேசும் போது, எம்.ஜி.ஆர்., இரண்டு விரலை காட்டுவார். அது "வி' போன்று இருக்கும். அது என்ன தெரியுமா? அடுத்து விஜயகாந்த் தான் அரசியலுக்கு வரப்போகிறார் என்று எம்.ஜி.ஆர்., அன்றே சொல்லி இருக்கிறார். தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், பாழும் கிணற்றில் தள்ளி விடுவர்..." - தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ( எனக்கு என்னமோ இரண்டு சிட் கூட வராது என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருப்பாரோ என்று தோன்றுகிறது )

"வைகோ அறிவாளி தான்; ஆனால் மக்கள் அவரை விட அறிவாளிகள். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்ததுக்காக காரணங்களை தேடிக் கொண்டிருக்கிறார். தான் கைதாகி ஜெயிலில் இருந்ததற்கு, அப்போது இருந்த வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த பொடா சட்டம் தான் காரணம் என்று வைகோ சொல்லியிருப்பது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாகும். பொடா சட்டத்தை அமல்படுத்துவது மாநில அரசு தான்..." - பா.ஜ., முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு ( தமிழ் நாட்டு அரசியல் பற்றி உங்களுக்கு ஒன்னும் தெரியலை )

"அ.தி.மு.க.,வுடன், கூட்டணி சேர வேண்டும்; அந்த கூட்டணியில் தொடர வேண்டும் என்று தொண்டர்களும் விரும்புகின்றனர்; நானும் விரும்புகிறேன். அவர்களிடம் இருந்து சாதகமான பதில் வரும், அழைப்பு வரும் என்று நம்பிக்கையுடன் காத்து இருக்கிறோம்..." - பார்வர்டு பிளாக் கட்சி தமிழக தலைவர் கார்த்திக் ( அதுகுள்ள தேர்தல் முடிஞ்சுடும் )


"தன் தேவைக்காக, எல்லாவற்றையும் மறந்து போவது தான் ஜெயலலிதாவின் குணமே. முன்பு நடந்த எதுவும் அவருக்கு நினைவில் இருக்காது. பதவிக்கு வந்ததும், தனக்கு ஓட்டுப் போட்ட மக்களை மறந்துவிடுவார். தேர்தலில் கூட்டணி வைத்துக் கை கொடுத்த கட்சிகளை மறந்துவிடுவார். பழசை எல்லாம் அவர் மறக்கலாம். ஆனால், அவரால் தாங்கள் பட்ட துன்பங்களை மக்கள் மறக்க மாட்டார்கள்..." - மத்திய இணையமைச்சர் இளங்கோவன் ( நீங்க கூட ராஜிவ் காந்தியை .. சரி சரி விடுங்க )


தேர்தலைச் சந்திக்க நிதி தேவைப்படுகிறது. எனவே முதலில் "கலெக்ஷன்', அப்புறம் "செலக்ஷன்', அதன் பிறகு "எலக்ஷன்'. - வெங்கையா நாயுடு. ( என்ன சார் டி.ராஜேந்தரிடம் டியூஷன் போரீங்களா ? )

கருணாநிதி எதிரிகளிடம் தோற்றதில்லை. நண்பர்களிடம்தான் அவர் தோற்றுப் போயுள்ளார். ( தமிழக மக்கள் நண்பர்களா ? பகைவர்களா ? ( நாயன் ஸ்டைலில் படிக்கவும் ) )

பாம்பின் நிழலை நம்பிச் சென்ற தவளையின் கதை யாகத்தான் பிரிந்து போனவர்கள் நிலை இருக்கும். நா (நாக்கு) வணிகம் செய்வோரை நாடு நம்பாது.
வைகோ பற்றி ஆர்.எம்.வீரப்பன் ( அட நீங்க கூட காளிமுத்து போல நல்ல பேசறீங்க )

வரும் தேர்தலில் சுனாமி போல திருப்பம் வந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆட்சியைப் பிடிக்கும். தேமுதிக தலைவர் விஜயகாந்த். ( எச்சரிக்கைக்கு நன்றி )

அரசியல் சுனாமி களால் திமுகவை அழிக்க முடியாது. - திமுக தலைவர் கருணாநிதி. ( நீங்களும் சுனாமியா சூப்பர் )

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் அரிசி மண்ணெண்ணெய்க்காக ரேஷன் கடையில் நிற்கும் ஏழை, நடுத்தர மக்கள்தான் - நடிகர் சத்யராஜ்: ( அப்போ உங்களுக்கு அந்த கடமை இல்லை )

6 Comments:

அழகப்பன் said...

அ.தி.மு.க. அணியினரை மட்டும் போட்டுத்தாக்காத இட்லி வடையின் ஆதரவு யாருக்கு என்பதை உணர்த்திய இப்பதிவுக்கு நன்றி.

Agent 8860336 ஞான்ஸ் said...

//"பொதுக் கூட் டங்களில் பேசும் போது, எம்.ஜி.ஆர்., இரண்டு விரலை காட்டுவார். அது "வி' போன்று இருக்கும். அது என்ன தெரியுமா? அடுத்து விஜயகாந்த் தான் அரசியலுக்கு வரப்போகிறார் என்று எம்.ஜி.ஆர்., அன்றே சொல்லி இருக்கிறார். //

Oh... JESUS CHRIST!!

;-)

Kusumban said...

//"பொதுக் கூட் டங்களில் பேசும் போது, எம்.ஜி.ஆர்., இரண்டு விரலை காட்டுவார். அது "வி' போன்று இருக்கும். அது என்ன தெரியுமா? அடுத்து விஜயகாந்த் தான் அரசியலுக்கு வரப்போகிறார் என்று எம்.ஜி.ஆர்., அன்றே சொல்லி இருக்கிறார். //

Oh... JESUS CHRIST!!
//

எண்ட குருவாயூரப்பா :-)

Vignesh said...

//எனக்கு என்னமோ இரண்டு சிட் கூட வராது என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருப்பாரோ என்று தோன்றுகிறது

Kalakkal :-) :-)

-- Vignesh

சீனு said...

//வரும் தேர்தலில் சுனாமி போல திருப்பம் வந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆட்சியைப் பிடிக்கும். தேமுதிக தலைவர் விஜயகாந்த். ( எச்சரிக்கைக்கு நன்றி )//

Xcellent!

Anonymous said...

aiyooo tamil nattu makkal nanraka erupathu pudikavillyaya. Tamil makkalai vasha veikka nalla atchi thevai