பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 28, 2006

பாம்பு - தவளை குட்டி கதை - வைகோ

குரோம்பேட்டையில் நடைபெற்ற ம.தி.மு.க. கொடி ஏற்று விழாவில் பாம்பு, தவளை பற்றிய கதையை வைகோ கூறினார்.

நிழல் தேடுகிறோம் என்கிறபோது காளிதாசன் சாகுந்தலத்தில் ஒரு காட்சியை சொல்கிறார்.

நெருப்பு வெயிலில் ஒரு தவளை எப்படியோ சாலைக்கு வந்து விடுகிறது. நிழல் தேடுகிறது. நிழல் கிடைக்கவில்லை. தவளை கொதிக்கிற வெயிலில் சுருண்டு செத்து போய்விடும். இந்த நேரத்தில் ஒரு நிழலை பார்க்கிறது. அந்த நிழலில் போய் இந்த தவளை உட்காருகிறது. அந்த நிழல் என்ன நிழல் தெரியுமா? பார்த்த மாத்திரத்திலேயே தவளையை விழுங்கக்கூடிய நாக பாம்பின் நிழல்.

நாக பாம்பு நிழல் தேடி அலைகிறது. நிழல் கிடைக்கவில்லை. ஆகவே அது என்ன செய்கிறது. தனது வாலை தரையில் ஊன்றி வேறு வழியில்லாமல் தலையை முழுவதும் தூக்கி படமெடுத்து நிற்கிறது. கீழே விழுந்தால் பாம்பு கருகி செத்துவிடும்.

கை தட்டல்

இந்த படமெடுத்து நிற்கும் பாம்பின் கீழே நிழலாக இருப்பதால் தவளை நாக பாம்பின் கீழே நிற்கிறது. பசிக்கு கொஞ்சம் வேண்டும் என்றாலும் தவளையை பாம்பு விழுங்கிவிடும். ஆனால் இப்போது விழுங்கமுடியாது. ஏன் விழுங்கமுடியாது என்றால், தன்னை காப்பாற்றிக் கொள்ளத்தான். தவளை, பாம்புக்கு கீழே இருக்கிறது. தவளைக்கு பாம்பு எமன். ஆனால் வேறு வழியில்லாமல் தவளை, பாம்பின் நிழலில் நிற்கிறது. (பலத்த கைதட்டல்) எதையோ நினைத்து கை தட்டாதீர்கள். நான் சங்க இலக்கிய கதையை சொன்னேன்.

இங்கே, ம.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளனர். அர்ஜூனனுக்கு கண்ணன் தேர் செலுத்துவது போல. ம.தி.மு.க. தொடங்கி 13-வது ஆண்டு நடைபெறுகிறது. அஞ்ஞாதவாச கட்டத்தில் இருக்கிறோம். இந்த கட்டத்தில்தான் அர்ஜூனனின் வில்லின் வீரம் வெளிப்பட்டு தெரிந்தது.

தேர்தல் வரட்டும்

வெள்ளித்திரையில் மீதத்தை காணுங்கள் என்பார்கள். தேர்தல் தேதி அறிவிக்கட்டும். புதிய கருத்துக்களோடு தேர்தல் நேரத்தில் வந்து மீதியை சொல்கிறேன்.

நன்றி : தினத்தந்தி

3 Comments:

Haranprasanna said...

இந்தக் கதையைப் படித்துவிட்டு கருணாநிதிக்கு வரப்போகும் அசூயை, கோபம், சந்தேகம் எல்லாம் என்ன மாற்றங்களை நிகழ்த்தப்போகிறதோ! நாளை தி.மு.க. தரப்பிலிருந்து பதில் கதை வராமலிருக்கவேண்டும். கதைகள் தொடருமானால், வைகோ சொன்ன இக்கதையே அவர் அடிக்கப்போகும் பல்டிக்கான முதற்படியாக அமையும் வாய்ப்புகள் அதிகம்.

BALAJI said...

திரு கருணாநிதிக்கு கோபம் வரும் ஆனால் தேர்தல் வரை கூட்டனியில்
யார் கேவலபடுத்தினாலும் பொருத்துதான் ஆக வேண்டும்.....

பாரதி said...

கதையின் முதல் பகுதியில் ஒரு செய்தியும் பிற்பகுதியில் மற்றொரு செய்தியும் இருக்கிறதே! வை.கோ.வுக்கு இன்னுமா குழப்பம் தீரவில்லை.