சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமியின் மகன் கஜராஜன் இருதய ரத்தகுழாயில் அடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலை 6.30 மணி அளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று கஜராஜனை பார்த்தார். அங்கிருந்த ஆற்காடு வீராசாமியிடம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பின்னர் அதே ஆஸ்பத்திரியில் கீழ்தளத்தில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவையும் கருணாநிதி சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
அவருடன் தி.மு.க. துணை பொது செயலாளர் மு.க.ஸ்டாலின், தலைமை நிலைய முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியோரும் சென்றனர்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, February 25, 2006
காளிமுத்து - கலைஞர் சந்திப்பு !
Posted by IdlyVadai at 2/25/2006 08:19:00 AM
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










13 Comments:
Let this political culture be encouraged. Hope Amma doesnt scold/demote K.M for this.
இதைப்போன்ற ஆரோக்கியமான நிகழ்வுகள் மேலும் மேலும் வரவேண்டும்.
இதற்கும் கலைஞரை கிண்டல் செய்ய 4 அறிவுஜீவிகள் வருவார்கள்.பொறுத்திருங்கள்!
ஆரோக்கியமான நிகழ்வுதான், ஆனால் அம்மாவை நினைத்து காளிமுத்துவுக்கு நேற்றிரவு BP எகிறியிருக்கும் என்பது உண்மை.
நல்ல நடத்தை. இது போன்ற ஆரோக்கிய நடத்தைகள் பெருக வேண்டும். இன்றைய நிலையில் எதிர்க்கட்சி ஆளுடன் பேசினாலே கூட்டணி கவிழ்கிறது என்ற நிலை மாறி எல்லோரும் நட்புறவு பாராட்ட வேண்டும். இதுவும் ஒரு கனவுதான். நடந்தால் நல்லது.
பாவம் காளிமுத்து!
அறிவுஜீவி #5.5
.:டைனோ:.
நான் கர்நாடக அரசு ஊழியன். அங்கு மிகப்பெரிய வி.ஐ.பி.க்களுடன் அளவளாவும் தினசரி வேலையில் உள்ளேன். தமிழ் நாட்டு அரசியல் வாதிகளைப்போலல்லாமல், அனைவரும் மிக கண்ணியமான முறையில் தனிப்பட்ட உறவை ஒருவரோடொருவர் வைத்திருக்கிறார்கள். சட்டசபை கூடும் சற்றுமுன் அவரவர் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறார்கள். தனிமையில் ஒருமையாக குறிப்பிட்டுக்கொண்டாலும் எதிரில் பன்மையிலேயே அளவளாவிக்கொள்கிறார்கள். தமிழ் நாட்டிலும் அந்த பொற்காலம் மலரட்டும். J.P.இரவிச்ந்திரன் பெங்களுர்.
பொன்னையன் நிலமை கறந்த பால் மடி புகாது காளிமுத்துவிற்கும் வராமல் இருந்தால் சரி.
வைகோவிற்கு கமா போட முயற்சித்து முடியாமல், இப்போது மருத்துவர் ஐயாவிற்கு கமா போட முயற்சி... தினமலரின் செய்திகளை பார்க்கனுமே.....
Joe sir sonna mathiri, Kalignara kindal seyya varala aana indha maathiri kalacharatha aarambichathe kalignar thaan, avare mutrupulli vaithaarna nallathu thaan. Vazhga Jananayagam
Although I'd like to believe MK visited KM out of basic decency, I am not so sure if his intentions were entirely honourable. Such is, unfortunately, his reputation.
கலைஞரால் தான் இந்த நட்பு கலாச்சாரம் கெட்டது என்று போகிற போக்கில் போடக்கூடாது.எப்படி என்று ஏதாவது சம்பவங்களை சொல்லி மற்றவர்கள் அவரை விட எப்படி உயர்ந்தவர்கள் என்பதையும் கூறவேண்டும்.
வடநாட்டு அரசியல்வாதிகள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டாலும் மறுநாளே ஏதாவது ஒரு (டீ,காஃபி) பார்ட்டியில் கலந்து கொண்டு நட்பாகி விடுவார்கள். ஆனால் நம் மாநில அரசியல்வாதிகள் இது போல் நட்பு பாராட்ட யாருக்காவது "நெஞ்சுவலி" வரவேண்டி இருக்கிறது.
இதைப்போன்ற ஆரோக்கியமான நிகழ்வுகள் மேலும் மேலும் வரவேண்டும்
Post a Comment