பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 15, 2006

போட்டுத்தாக்கு

காளிமுத்து வார்த்தைகளை நம்பி வைகோ ஏமாற மாட்டார் - கருணாநிதி ( என் வார்த்தைக்கு தான் ஏமாறுவார் என்று படிக்கவும் )

கருணாநிதியிடம் இன்று தோழமைக் கட்சிகள் பட்டியல் ( கம்மியா கேளுங்க சார், அப்புறம் தோழமை இல்லாமல் போய்விடும் )

"கை' உன் கை அருகில்
"பம்பரம்' உன் பை அருகில்
"மாம்பழம்' உன் மடியில்
"செங்கொடிகள்' உன் கையில்
வைகோ போவது வேறு கைக்கோ
அப்படி பத்திரிகைகள் எழுதுவது
வெறும் "சைக்கோ' - கவிஞர் வாலி

( "போ என்றால் போய்கோ" என்று கலைஞர் எண்ணியிருப்பார் )

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்ற முடிவு ஓராண்டிற்கு முன்பே எடுத்தது - பொன்.ராதாகிருஷ்ணன் ( அடங்குங்கப்பா )

மத்தியில் கூட்டணி ஆட்சிவேண்டும்; மாநிலத்தில் வேண்டாம் என்பது நியாயமா? - விஜயகாந்த் ( சார் இது சினிமா இல்லை அரசியல் )

தமிழக காங்கிரஸýக்கு புதிய தலைவர் - செய்தி ( எந்த காங்கிரஸுக்கு ? )

""வெள்ளரிப்பழத்தை வெள்ளிப் பூட்டு போட்டு பூட்டி வைத்தாலும், அது வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. அதுபோல் தி.மு.க., கூட்டணியும் நிச்சயம் உடையும். இதை யாராலும் தடுக்க முடியாது...' - காளிமுத்து ( சார் உங்களுக்கு தனியாக ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்)

திருடர்கள் வந்தாலும் அ.தி.மு.க., கதவு திறந்தே இருக்கும் - காளிமுத்து ( ஐயோ! )

வைகோ செல்போனில் என்னுடன் பேசியது உண்மையே - காளிமுத்து ( ஒரு ரூபாய் என்றவுடன் எல்லோருடனும் பேசரீங்க போல )

ஜோரா கை தட்டுங்க ( நன்றி தினமலர் )

* கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து நிச்சயம் வெற்றி பெறுவோம். கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கியே தீருவோம்-வைகோ (28.8.2005)

* முதல்வர் பதவி கருணாநிதிக்கு பட்டா போட்டு கொடுக்கப் பட்டுள்ளதா- வைகோ (1.5.2001)

* தமிழுக்காக மட்டுமல்ல, வரும் சட்டசபை தேர்தலிலும் திருமாவளவனுடன் இணைந்து நிற்பேன். அவரை தி.மு.க., கூட்டணியில் சேர்ப்பேன்-ராமதாஸ் (7.1.2006)

* தமிழகத்தில் ஜாதி சண்டை வர வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார். அதனால் தான் "அடங்க மறு, அத்து மீறு' என்று பேசி வரும் கும்பலுடன் (விடுதலைச் சிறுத்தைகள்) கூட்டணி வைத்துள் ளார்- ராமதாஸ் (10.4.2001).

* தமிழ்நாட்டில் பேயாட்சி நடக்கிறது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை- மணிசங்கர் அய்யர்(23.10.2005)

* அ.தி.மு.க., கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இதற்காக நான் ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டவும் தயார்- மணிசங்கர் அய்யர்(1.4.2001)

15 Comments:

யாத்திரீகன் said...

>> எந்த காங்கிரஸுக்கு ?

:-))))) Chancey Illa !!!

viswa said...

yes all are true

துபாய்வாசி said...

ராதா ரவி: இரண்டு ________ அதிமுக'வுக்கு வர காத்துக்கொண்டு இருக்கின்றன. அம்மாவுக்கு எந்த ________ எந்த எலும்பு போடவேண்டும் என தெரியும்.

இது உண்மையா? (www.thatstamil.com) லில் படித்தது.

Idly Vadai said...

யாத்திரீகன், விஷ்வா, தூபாய்வாசி - உடனே படித்து கருத்து சொன்னதற்கு நன்றி

Vaa.Manikandan said...

en ungga kaNNukku ammaa theriyamaattaanggaLaa?

Muthu said...

:-))

Idly Vadai said...

மணிகண்டன் - அம்மாவுக்கு பதில் காளிமுத்து தான் பேசுகிறார். அம்மாவிற்கு தனியாக ஒரு போட்டுத்தாக்கு விரைவில் :-)

முத்து - நன்றி

டி ராஜ்/ DRaj said...

ஜெயலலிதாவின் பல்டிகள் தினமலரின் கண்ணுக்கு தெரியாமல் போனது ஏனோ? அரசு விளம்பரங்கள் கண்ண மறைக்குதோ???

தயா said...

மதியின் கார்ட்டூன் வருவது திணமணியிலா?

தயா said...

மதியின் கார்ட்டூன் வருவது திணமணியிலா?. சரி என்றால் முன்பு உதயா என்ற பெயரில் வரைந்தவரும் அவரா?

நன்றி.

manasu said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....

எகிறு எகிறேய்..........

Idly Vadai said...

தயா - மதியின் கார்டூன் வருவது தினமணியில் தான். மற்ற பெயர்களில் ? தெரியாது

நாமக்கல் சிபி said...

நமக்கு அரசியல் அவ்வளவா தெரியாதுங்க இட்லி வடை! ஆனாலும் ரொம்ப ரசிச்சு சிரிச்சேன்!

Idly Vadai said...

நாமக்கல் சிபி,

அரசியல் தெரியவேண்டாம் சிரிக்க தெரிந்தால் போதும் !

சீனு said...

பேசாம, காளிமுத்துவிற்கு "தென்னகத்தின் லாலு" பட்டம் கொடுத்திடலாம்னு நினைக்கிறேன்.

சீனு.