பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 27, 2006

கூட்டணி எதற்கு - கல்கி தலையங்கம்

வைகோ சொல்வது ரொம்ப வேடிக்கைதான்!"ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகும் எண்ணம் எனக்கு ஒருபோதும்
இருந்ததில்லை" என்கிறார். கூடவே, "என் தாயார் என்னைப்
பெரியவர் (கருணாநிதி) கட்சியுடன் தொடரும்படி
அறிவுறுத்தியிருக்கிறார்" என்கிறார்! "அம்மா வற்புறுத்தவில்லை;
அறிவுறுத்தினார்" என்பது வைகோ கூற்று! அப்படியானால், அந்த
அறிவுரைக்கு ஓர் அவசியம் இருந்தது; அதாவது தி.மு.கவுடன் ம.தி.மு.கவுக்கு உறவுச் சிக்கல் ஏற்பட்டிருந்தது. அது தெரிந்துதானே வைகோவின் அம்மா பேசியிருக்கிறார்!

ம.தி.மு.கவின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத், கூட்டணித் தலைவரான கருணாநிதியை ஏசிப் பேசுகிறார். இந்த ஏச்சுப் பேச்சுக்கு அவர் பேரில் ம.தி.மு.க. தலைமை கண்டனம்
தெரிவிக்கவுமில்லை; நடவடிக்கை எடுக்கவுமில்லை. ஆனால், வைகோ அவர் சார்பில் மன்னிப்புக் கேட்கிறார்! கூடுதல் இடங்களுக்காக தி.மு.க. தலைமையுடன் ம.தி.மு.க பேரம் பேசி வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். பேரம் படியாத நிலையில் எழுந்த பரஸ்பர மனக்கசப்பில் கட்சிகளின் அடிநிலைத் தொண்டர்கள் அவசரப்பட்டுப் பேசினால், மூத்த தலைவர்கள்தான் அவர்களுக்கு அறிவுரை கூறி பொறுமை காக்கும்படி வலியுறுத்த வேண்டும். ஆனால் ம.தி.மு.கவிலோ மூத்த தலைவர்களே பொறுமையிழந்து கடுமையாகப்
பேசியிருக்கிறார்கள்.

தி.மு.க. தலைவர், தாம் பலமுறை வைகோவுடன் தொடர்பு கொண்டு சமரசத்துக்கு முயன்றதாகவும் அவர் பிடிகொடுக்கவே இல்லை என்றும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதையும் வைகோ மறுக்கவில்லை; தமது கட்சியினரிடையே தொகுதிப் பங்கீடு குறித்து அதிருப்தி
நிலவியதையும் அவர் மறுக்கவில்லை!

ஆனால் திடீரென்று, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை விட்டு
விலகும் நோக்கமே தமக்கு இருந்ததில்லை என்கிறார்! அப்படியெனில், "நாங்கள் ஜ.மு கூட்டணியில் தொடருவோம்" என்று வைகோ ஓர்
அறிக்கை விடவேண்டிய அவசியம் என்ன!

ஆக, வைகோ எவ்வளவுதான் மூடி மறைத்தாலும் உரசல்கள் இருந்ததும் உண்மை; தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர் தி.மு.கவுக்கு அழுத்தம் கொடுத்ததும் உண்மை... அந்த ‘விருப்பம்’ என்ன? அது எந்த அளவுக்கு நிறைவேறியது? அதற்காக யார், எதை
விட்டுக் கொடுத்தார்கள் என்பனவெல்லாம் இப்போது நமக்குத்
தெரியாது. ஆனால், இக் கூட்டணியில் தி.மு.க. - ம.தி.மு.க. நட்பு மீண்டும் சோதனைக்குள்ளானால் அத்தனை திரை மறைவு சங்கதிகளும் அம்பலமாகிவிடும்.

அப்படியெல்லாம் நடக்காமலிருக்க வேண்டுமானால், வரவிருக்கும் தேர்தலைப் பற்றிய தெளிவு ம.தி.மு.கவுக்கும் இருக்கவேண்டும்; தி.மு.கவுக்கும் இருக்க வேண்டும்.

ஆட்சியைப் பிடிப்பது மட்டுமா குறிக்கோள்? குறிக்கோள் அதுவாயின், மிகக் குறுகலான அந்த நோக்கில், அடிப்படையான கொள்கை மாய்ந்துபோகும்! யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக்கொள்ளத் துணிவு பிறக்கும்.

மக்களையும் எதிர்கட்சிகளையும் ஒடுக்கும் ·பாஸிஸ போக்குக்கு முடிவுகட்ட வேண்டும். அதிகார துஷ்பிரயோகம்; ஆதிக்கப் போக்குக்கு இடங்கொடுக்கலாகாது...

இதுபோன்ற நெகடிவ் சிந்தனைகளுடன், நல்லாட்சி அமைவது குறித்த பாஸிடிவ் கொள்கைகளும் தேவை. அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் ஏற்கத்தக்கதான குறைந்த பட்ச செயல் திட்டத்துடன் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தேர்தல் களத்தில் இறங்குமானால், அதில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்கள் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து ஒத்துழைப்பார்கள்; ஒத்துழைக்க வேண்டும்! அப்போதுதான் தொண்டர்களும் ஒருங்கிணைந்து உழைப்பார்கள்.

வைகோவுக்கு ஸ்டாலினை ஏற்க முடியாமல் இருக்கலாம்; அதற்காக ம.தி.மு.கவின் எதிர்காலத்தையே அவர் விட்டுக்கொடுக்கத்
தயாராயிருக்கலாம்... ஆனால் தமிழக மக்களின் எதிர்காலத்தை அவர் அபாயத்துக்கு உள்ளாக்குவது என்ன நியாயம்?

இப்போது மலர்ந்துள்ள நல்லெண்ணம், அனைத்துக் கூட்டணிக்
கட்சிகளிடையேயும் சுமுகமான, நியாயமான தொகுதிப் பங்கீடாகக் கனியட்டும்.

நன்றி: கல்கி

14 Comments:

சுதர்சன் said...

அருமையான தலையங்கம்.

ராம்கி said...

வைகோ சும்மாவே அழுதுடுவார்.. இப்போ (ஒரிஜினல்) அம்மா பேரை சொல்லி... சொல்லி... :-)

ஜோ / Joe said...

ஏன் இந்த மாயவரம் காரங்களுக்கெல்லாம் இவ்வளவு வயித்தெரிச்சல்னு தெரியல்ல .

Idly Vadai said...

வைகோ சிரிக்க வேண்டும் என்றால் ஒரே வழி தான் இருக்கிறது அது - ரஜினி வாயிஸ் கொடுக்க வேண்டும்

பாரதி said...

கருத்துப் படத்தில் வை.கோ. இடத்தில் கலைஞரும், கலைஞர் இடத்தில் வை.கோவும் இருப்பதுதான் சரி. வாசகங்களை மாற்றாமல்...

manasu said...

நடிகர் ரஜினிகாந்தின் "வாய்ஸ்' கேட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மீண்டும் "சிவாஜி' படத்தின் மூலம் தான் ரஜினியின் "வாய்ஸ்' கேட்க வாய்ப்பு கிடைக்கும் போலிருக்கிறது என்று ரஜினியை கிண்டலடித்தார் இளங்கோவன்.

கடந்த சில தேர்தல்களாக, தேர்தலுக்கு ஒரு கட்சி என்ற வகையில் மாற்றி மாற்றி வாய்ஸ் தந்தார் ரஜினி. அதில் பெரும்பாலும் அவர் வாய்ஸ் கொடுத்த கட்சிக்கு தோல்வியே கிடைத்தது என்பது நினைவுகூறத்தக்கது.
நன்றி thatstamil.com

ரஜினி ராம்கி அடிக்கபோறார்

Haranprasanna said...

அ.தி.மு.க.வையும் பா.ஜ.க.வையும் எதிர்த்தே தலையங்கம் எழுதும் கல்கி. இது தெரிந்த விஷயமே. இப்போதும் அதே பயணத்தைத் தொடர்ந்திருக்கிறது. அதிகத் தொகுதிகள் எதிர்பார்த்து வைகோ அடித்த ஸ்டண்டை உடைத்தார் கருணாநிதி அதே போன்ற இன்னொரு ஸ்டண்ட்டால். அதை மழுப்ப ஒரு காரணம் வைகோ சொன்னது அவரது தாய் சொன்னதாக - நல்ல காமெடி. எனக்கென்னவோ பல்டி - அந்தர் பல்டியைத் தொடர்ந்து வைகோவிடமிருந்து இன்னொரு பல்டி வருமென்று தோன்றுகிறது.

Haranprasanna said...

<<<
வைகோ சிரிக்க வேண்டும் என்றால் ஒரே வழி தான் இருக்கிறது அது - ரஜினி வாயிஸ் கொடுக்க வேண்டும்
>>>

வைகோ சிரிப்பார்; ஆனால் ரஜினி????

Idly Vadai said...

manasu - இளங்கோவனுக்கு நடிகர்கள் மேல் ரொம்ப கரிசனம் என்று நினைக்கிறேன். இன்று விஜயகாந்த் பற்றி

"நடிகர் விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தினால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. அவர் நல்ல நடிகர். தொடர்ந்து படங்களில் நடித்து இருக்கலாம். அதைவிடுத்து தவறான பாதைக்கு வந்துவிட்டார். தமிழ்நாடு ஒரு நல்ல நடிகரை இழந்துவிட்டது."

BALAJI said...

இப்படி போட்டி போடும் கட்சிகள்...

மக்கள் நலனுக்காக போட்டி போட்டு கொண்டு வருவார்களா....

இல்லை மக்கள் போட்டியை எடுப்பார்களா என பொருதிருந்து பார்ப்போம்.....

Anonymous said...

//வைகோ சிரிக்க வேண்டும் என்றால் ஒரே வழி தான் இருக்கிறது அது - ரஜினி வாயிஸ் கொடுக்க வேண்டும் //

வைகோவின் எதிர்த்தரப்புக்கு வாய்ஸ் கொடுத்தால் வை.கோ சிரிப்பார் என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?
அதென்னவோ சரிதான் போலுள்ளது.

Idly Vadai said...

anonymous - வாய்ஸ் கொடுத்தால் கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோரும் சிரிக்கலாம் :-)

தயா said...

ஆச்சரியமாக இருக்கிறது. கல்கியின் தலையங்கம் ஒரளவு நியாயமாக இருக்கும். இந்த தலையங்கமோ ஒரு சார்புடையதாக இருக்கிறது. அவர்களின் எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டுமே இதில் வைகோ குட்டையை குழப்புகிறாரே என திமுகவின் குரலை எழுப்புவதுற்கு கல்கி எதற்கு?

தமிழக பத்திரிக்கைகள் பொதுவாகவே தாங்கள் தலையங்கம் எழுதுகிறோம் என்ற போர்வைக்குள் சார்பு நிலை எடுக்கிறார்கள். அதற்கு அவர்கள பேசாமல் இருக்கலாம்.

ராம்கி said...

//மாயவரம் காரங்களுக்கெல்லாம் இவ்வளவு வயித்தெரிச்சல்னு


சிரிக்க வேண்டும் ...சிரிக்க வேண்டும் ... :-)