விடுதலை சிறுத்தைகள் அமைப்பு இன்று அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தது. விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் இன்று அ.தி.மு.க., பொது செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து, அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்தார். விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கு 9 தொகுதிகள் வழங்கப்படும் என ஜெயலலிதா தெரிவித்தார்.
இவருக்கே 9 சீட் என்றால் வைகோவிற்கு நிச்சயம் 40 சீட் கிடைத்திருக்கும்.
- * -
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் திருமாவளவன் அ.தி.மு.க.வுடன் ஏற்பட்ட கூட்டணி குறித்து அளித்த பேட்டி:
கே. அ.தி.மு.க.வுடன் கூட்டணி மன நிறைவை தருகிறதா?
ப:- மிகுந்த மன நிறைவை தருகிறது.
கே:- உங்களுக்கு 9 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதே? எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள்.
ப:- அது 2 நாளில் முடிவாகும்.
கே:- அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதால் பா.ம.க.வுடன் உள்ள உறவு பாதிக்குமா?
ப:- பா.ம.க.வுடன் உள்ள உறவு பாதிக்காது. நட்பு தொடரும்.
கே:- உங்களை தொடர்ந்து டாக்டர் ராமதாசும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர வாய்ப்பு உண்டா? ராமதாசை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சி எடுப்பீர்களா?
ப:- அது அ.தி.மு.க. எடுக்க வேண்டிய முடிவு. அல்லது தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அணுகு முறையை பொறுத்தது.
கே:- தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அ.தி.மு.க. பக்கம் வர வாய்ப்பு உண்டா?
ப:- போகப்போகத்தான் அது பற்றி தெரிய வரும்.
( நன்றி : மாலைமலர் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, February 27, 2006
திருமாவளவன் - அதிமுக கூட்டு
Posted by IdlyVadai at 2/27/2006 02:02:00 PM
Subscribe to:
Post Comments (Atom)











24 Comments:
andha link kudunga thala
அந்த எண்ணத்தை சில மதிமுக தொண்டர்கள் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மத்தியில் விதைக்கத்தான் இந்த டீல்-ன்னு நெனக்கறேன். ஏழு கட்சி கூட்டணியில் தேர்தல் நேரத்தில் கூடயிருந்தே குழிபறிக்கும் வேலைகளும் நடக்கலாம்.
anonymous - the news is all over
www.dinamalar.com, www.dinamani.com and other english news sites like indianexpress & hindu.
அடங்க மறு...
அத்து மீறு
அதுவும் இல்லாட்டா..
அம்மா கால்ல விழு! :-)
இந்த செய்திக்கு 'கோயபல்ஸ்' தினமலர் கொடுத்த தலைப்பு "அ.தி.மு.க வில் இணைந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு"
/அடங்க மறு...
அத்து மீறு
அதுவும் இல்லாட்டா..
அம்மா கால்ல விழு! :-)
//
அடேங்கப்பா!இத சொல்லுறது 'ரஜினி' ராம்கி
திருமாவளவன் பொழைக்க தெரிந்த அரசியல்வாதி...
அடங்க மறு...
அத்து மீறு
அதுவும் இல்லாட்டா..
அம்மா கால்ல விழு! :-)
//
இது சூப்பர்......
திருமாவின் இந்த முடிவை வரவேற்கின்றேன்.
//இவருக்கே 9 சீட் என்றால் வைகோவிற்கு நிச்சயம் 40 சீட் கிடைத்திருக்கும்.
//
திருமாவிற்கு அதிமுக கூட்டணியில் வேறு யாரும் இல்லாத இந்த நிலையில் 9 இடங்கள் என்பது மிகக்குறைவு என்பதே எனது கருத்து...
//
/அடங்க மறு...
அத்து மீறு
அதுவும் இல்லாட்டா..
அம்மா கால்ல விழு! :-)
//
அடேங்கப்பா!இத சொல்லுறது 'ரஜினி' ராம்கி
//
அதானே...
அடங்கமறு அத்துமீறு என்று சொல்லி தனித்து நின்று சாக சொல்கின்றீரா?, கூட்டணி முக்கியம் அதற்காக செய்யப்படும் சமரசமும் தவிர்க்க முடியாதது, ஆனால் எதை சமரசம் செய்து என்பதும் முக்கியம், திருமா தலித் எழுச்சியையும் விடுதலையையும் நிச்சயம் சமரசம் செய்ய மாட்டார் என்றே நம்புகின்றேன்.
//திருமாவிற்கு அதிமுக கூட்டணியில் வேறு யாரும் இல்லாத இந்த நிலையில் 9 இடங்கள் என்பது மிகக்குறைவு என்பதே எனது கருத்து..//
அம்மாவின் டிரக் ரெகார்டை பார்க்கும் போது 9 எனக்கு ஆச்சரியமாக இருக்கு :-)
இத்தேர்தலில் 5% வாக்குகளைப் பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுவதே குறிக்கோள் என்று சொல்லிக்கொண்டிருந்தார் திருமா.
ஆனால் 234 தொகுதிகளில் 9 இல் மட்டும் போட்டியிட்டு 5% எப்படி பெறமுடியும்? குறைந்தபட்சம் 20 ஆவது பெற்றிருந்தால் நியாயம். போனமுறை திமுக கூட்டணியில் கொடுத்த 8 இடங்களைவிட ஒன்று கூடுதலாக கிடைத்திருக்கிறது என்பதைவிட இதில் என்ன பெரிய ஆதாயம் என்று தெரியவில்லை.
திருமா அதிமுக கூட்டணியில் சேர்ந்ததை அம்மாவின் காலில் விழுந்ததாகத் திரிப்பது ரஜினிக்கு வால் பிடிக்கும் ராம்கியின் மட்டமான மனநிலையையே பிரதிபலிக்கிறது. படத்தில் மற்றவர்கள் கண்களுக்கு புலப்படாத அம்மாவின் கால் பாபா பக்தருக்கு மட்டும் தெரிந்துவிடுவதில் ஆச்சரியமென்ன?
திருமா யார் கூட்டணியில் வேண்டுமானாலும சேரட்டும்.அது அவர் உரிமை.குழலி சொன்னமாதிரி அதற்காக அவர் தனது தலித் முன்னேற்ற கொள்கைகளை கைவிட மாட்டார் என்றெ நானும் நினைக்கிறென்.
அதே சமயம் சுந்தரமூர்த்தி கூறியது போல ஒரு தொகுதிதான் எக்ஸ்ட்ரா..இதற்காக அ.தி.மு.க கூட்டணியில் சேருவது என்ன லாஜீக்?
ராம்கி நக்கல் அடித்ததும் தவறில்லை.அது ஒரு spontaneous nakkal. that's all.இதை அவரின் ரஜினி பக்தியுடன்(?) கம்பேர் செய்வது ஏன்? ஏன்?
ஆனால் தி.மு.க கூட்டணியில் குழப்பம் நிகழ இந்த மேட்டர் காரணமாகுமா என்பது போக போக தெரியும்.ஆனால் ஒன்று
இனி திருமாவை கிண்டல் செய்வதை தினமலர் கொஞ்ச காலத்திற்கு நிறுத்திவைக்கும். சன் டிவி அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்.
சாக்கடையில் குதித்துவிட்ட பின்னர் திருமா மட்டும் சுத்தமாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. ஆனால் மிகத் துணிச்சலாக இன்னும் சொல்லப் போனால் நேர்த்தியான காய் நகர்த்தல்...
வெல்டன் ராமதாஸ்&திருமா.
தமிழக அரசியலில் இந்த இரட்டையர்கள் தங்களை நிராகரிக்கமுடியாத ஓர் சக்தியாக ஏன் சட்டாம்பிள்ளையாக உருவெடுக்கப் போகிறார்கள் என்பது உண்மை.
//படத்தில் மற்றவர்கள் கண்களுக்கு புலப்படாத அம்மாவின் கால் பாபா பக்தருக்கு மட்டும் தெரிந்துவிடுவதில் ஆச்சரியமென்ன? //
பல விஷயங்களில் மற்றவர்களுக்கு தெரியாத விஷயங்களை தனக்கும் இன்னும் ஓரிருவருக்கும் தெரிந்த மாதிரி பிதற்றி வரும் சுந்தரமூர்த்திக்கு தெரியாமல் போனதில் வியப்பில்லை தான். மீசையில் மண் ஒட்டவில்லை சுந்தரமூர்த்தி.
பாபா ரசிகருக்கு தெரியும் என்று பிதற்றியது தான் மட்டத்தின் உச்சகட்டம்.
8 தொகுதியை மீண்டும் இப்போதும் கொடுத்திருந்தால் இவர் ஏன் இங்கே வந்திருக்க போகிறார்? இந்த அடிபடை அரசியல் அறிவு கூட தெரியாமல் கருத்து சொல்ல வந்தது தான் வியப்பே.
தமிழகத் தேர்தலில் கூட்டு என்பது என்னென்ன விதமாக இதுவரை நடந்து வதுள்ளது எனபதைப் கிளறி பார்த்தால், ரஜினி ராம்கி போன்றவர்களுக்கு 'காலில் விழுவதாகத்தான்' தெரியும்.
அம்மாவின் கால்களின் விழும் நிலைமை , ரஜினி ராம்கிக்கோ, ஏன் ரஜினிக்கோ கூட வரவேண்டிய தேவை இல்லை; தேவை ஏற்படவும் ஏற்படாது, அது பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களுடைய விஷயம். தமிழகத்தேர்தலுக்கு சில பாபாக்கள் வந்தால், அவர்கள் கூட "அம்மா காலில்"தான் விழவேண்டியிருக்கும்.
ஓகே.. ஓகே.. நோ டென்ஷன். ரிலாக்ஸ் ப்ளீஸ்! கண்ணுக்கு தெரியாத விஷயத்தையெல்லாம் தெரியறதா நான் பினாத்தறதுக்கு உங்களுக்கெல்லாம் தெரியாதா விஷயமா என்ன? எனிவே, இன்னொருத்தர் பாடறது இப்போ என் காதுல விழுந்து தொலைக்குது! ( கண்ணுதான் ஓட்டை, காதாவது சரியா இருக்குமா?)
'நீ முன்னாலே போனாக்கா பின்னாலே நான் வாரேன்'
//ராம்கி நக்கல் அடித்ததும் தவறில்லை.அது ஒரு spontaneous nakkal. that's all.இதை அவரின் ரஜினி பக்தியுடன்(?) கம்பேர் செய்வது ஏன்? ஏன்?//
அதானே!
படிச்சமா சிரிச்சிட்டுப் போனமான்னு இல்லாம!
(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)
//ஓகே.. ஓகே.. நோ டென்ஷன். ரிலாக்ஸ் ப்ளீஸ்! //
ஓக்கே ராம்கி. ரிலாக்சிங் :-)
சொல்ல வந்ததை கூச்சப்படாம தலையை நிமிர்த்தி நேராகவே சொல்லலாமுன்னு உங்க நண்பர்கிட்ட சொல்லிடுங்க!
//தமிழகத்தேர்தலுக்கு சில பாபாக்கள் வந்தால், அவர்கள் கூட "அம்மா காலில்"தான் விழவேண்டியிருக்கும்.//
கூடிய சீக்கிரம் கருணாநிதி & கோவினர் 'அம்மா' காலிலே விழுவாங்கன்னு சொல்லுறிங்களோ?
//அடங்க மறு...
அத்து மீறு
அதுவும் இல்லாட்டா..
அம்மா கால்ல விழு! :-) //.
யோக்கியர் வர்றார் செம்ப எடுத்து உள்ள வைங்கிற கதையாவுல்ல இருக்கு....
இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பத்த முடியாது சைக்கிள்ல சாஞ்சிக்குட்டு குரலு வுட்ட நம்ம தலைவரு(இன்னும் நடிப்பை ரசிப்பதலே தலைவர் என்றூ சொல்லியிருக்கேன்)2004 இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன்னு சொன்னதவிட இது ஒன்னும் கேவலம் இல்லை ராம்கி( அன்னைக்கு அவரை தூக்கி எறிஞ்ச ரசிகர்களில் நானும் ஒருவன்) ...
ரஜினி உடைச்சா பொன்குடம்
திருமா உடைச்சா மண்குடமா
அட போங்கப்பா
//2004 இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன்னு சொன்ன அன்னைக்கு அவரை தூக்கி எறிஞ்ச ரசிகர்களில் நானும் ஒருவன்//
அப்போ ரஜினி மேல இருந்த பற்றை விட ஜெ மேல இருந்த வெறுப்புதான் ஜாஸ்தின்னு சொல்லுங்க! :(
ஒரு பெண் தலையெடுக்க விடமாட்டாங்கிறானுங்கன்னு யாராவது சொல்லிடப்போறாங்க :-)
ராம்கி,
விரைவில் ரஜினிக்கு ரசிகனின் திறந்த மடல் என்று எழுத இருக்கிறேன். அதில் உங்கள் கேள்விகளுக்கு பதில் இருக்கும் என்று நம்புகிறேன்....
எனக்கு இருக்கிற வெறுப்பு இருக்கட்டும். படையப்பா எதுக்குசாமி எடுத்தாரு?????. உண்மையான ரசிகனா இருந்தா தெருக்கோடியிலதான் நிக்கணும். ரஜினி ரசிகனுக்கும் அதான் நிலைமை
ராம்கி இனிமேல் எங்கேயவது கமெண்ட் போடறதா இருந்தா ரஜினி பேரைச் சேத்து எழுதாம போடுமய்யா. நீர் எதையாவது ரஜினிராம்கின்ற பேர்ல சொல்லிட்டுப் போயிருவீரு. அப்புறம் அதுக்காகவே காத்துக்கிட்டு இருந்தாப்பல சிலபேரு சம்பந்தாசம்பந்தம் இல்லாம ரஜினியைத் திட்டுறது. இதுவே பொழைப்பாப்போச்சு. படிக்கவே வயத்தெரிச்சலா இருக்குது. உங்களோட அரசியல்ல சும்மா இருக்கற அவரை ஏன்யா இழுத்து விடறீங்க?
அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி என்று திருமா தன் இனத்தவருக்கு உரிமை கோரும் குரலைக் கொடுத்தாரே தவிர,
அரசியல் என்ற சதுரங்கத்தில் ஆட்டம் ஆடாதே என்று சொல்லிக் கொண்டிருக்கவில்லை. இன்றைய அரசியல் எதார்த்தம் புரிந்தவர்கள்
கூட்டணி அமைப்பை ஒருவர் காலில் ஒருவர் வீழுவதாக புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். தமிழ் தேச அரசியலை முன்னெடுத்துச் செல்லும்
ராமதாசு, திருமாவளவனைப் பிரிக்கவில்லை என்றால், தன் மகனின் எதிர்காலம் அதோ கதி தான் என்று நனறாகத் தெரிந்து கொண்ட
கலைஞர் ராமதாசு திருமா உறவைப் பிரித்து தமிழ் தேச அரசியலை சற்றே பின்னடைவு செய்ய வைத்திருக்கிறார். இதில் பல ஆதாயங்கள்
கலைஞருக்கு உண்டு. தலித் இன மக்களின் அங்கீகாரம் தேடும் குரலை நெறித்திருக்கிறார். திருமா - பாமாகவை எதிரெதிர் அணியில் நிற்க
வைப்பதன் மூலம் - கலைஞர் எதிர்பார்ப்பது - ராமதாசு பலவீனப்படுவார் என்பதைத் தான். ராமதாசின் அசுர வளர்ச்சி, எழுச்சி கலைஞருக்கு
அச்சத்தைத் தான் தந்திருக்கிறது.
கலைஞரின் காய் நகர்த்தல்கள், சதுரங்க ஆட்டங்கள் எல்லாம் பிரமாதம் தான்.
ஆனால் அதற்கு தகுதியானவர் அல்ல ஸ்டாலின் என்பது தான் துயரம்.
என்ன செய்வது - ?
தந்தை அமைவது கூட சில சமயங்களில் இறைவன் கொடுத்த வரமாகி விடுகிறது.
Do all of you know why Rajini is supporting Jaya.Rajni gives his voice based on current situation.In 1996 he was against ADMK corruption and in 2004 he was against opportunistic politics of DMK. He feels துரோகிகளை(karunanidhi not supported him during Baba release) விட எதிரி (Jaya supported him)எவ்வளவோ மேல்.
In 1996 Rajni made statement that "If Jaya comes again to power, even God cannot save TN". But you see his recent statement" All lakhsmi is with you Amma and you should be very careful" Also his daughter marriage was organised in her presence.
We can easily understand how much his heart was wounded by Karunanidhi.
Post a Comment